Sunday, July 30, 2017

ஆத்தூர் வேத பாடசாலை


எனக்கும் என் கணவருக்கும் நேற்று (30.07.2017) செங்கல்பட்டிற்கு அருகில் இருக்கும் ஆத்தூர் கிராமத்தில் திரு காமகோடி அவர்கள் 2011ம் ஆண்டில் இருந்து ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மகா பெரியவாளின் ஆசியுடன் நடத்திக் கொண்டிருக்கும் ஸ்ரீ சதுர்வேத வித்யா கணபதி வேதாஸ்ரமத்திற்குச் செல்லும் ஒரு அறிய, அருமையான வாய்ப்பு கிடைத்தது.  அத்துடன் நேற்று என் தாயார் இறந்த நாள்.  அதனால் இந்த நாளில் இந்த வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இந்த வாய்ப்பு கிடைக்கக் காரணமாக இருந்த முகநூல் நண்பர்களுக்கு ஒரு சிரம் தாழ்ந்த நன்றி.  சொகுசு வாகனப் பயணம், செங்கல்பட்டு தாண்டியவுடன் காலை சிற்றுண்டி (இட்லி, வடை, உப்புமா, சட்டினி, சாம்பார்). வேதாஸ்ரமத்திற்குள் நுழைந்தது முதல் அங்கிருந்து கிளம்பும் வரை ஒவ்வொரு நொடியும் ஒரு சுகானுபவம்.   மேலும் போனசாக என்னுடன் பணி புரிந்த திரு கைலாச மூர்த்தி அவர்களை 15 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்தேன். 
திரு காமகோடி அவர்கள் புதிதாக சென்றிருந்த எங்களைப் போன்றவர்களுக்கு வேதாஸ்ரமத்தை சுற்றிக் காட்டினார்.  
பிறகு கோபூஜை, பின் கணேச சர்மா மாமாவின் உபன்யாஸமும், திப்பிராஜபுரம் மோகன் ராம் தீக்ஷிதர் அவர்களின் அருமையான உபன்யாசம்.  .  கூட்டு, கறி, பாயசம், பச்சடி, சாம்பார், ரசம், மோர், ஊறுகாயுடன்  அமிர்தமான திவ்யப் பிரசாதம்.


பாடசாலையைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ள தயவு செய்து http://www.athurvedapatasala.com/ இந்தத் தளத்திற்குச் செல்லுங்கள்.   
ஆத்தூர் பாடசாலை முகவரியும் வங்கி விபரங்களும்

SHRI CHATURVEDA VIDYAGANAPATHI VEDASHRAMAM
28, SRI MAHADEVAM, KRISHNA GARDEN LAYOUT
AATHUR VILLAGE, CHENGALPET 

KANCHIPURAM DIST 
TAMILNADU – 603101
SCVG TRUST, SB account no. 6134392479, INDIAN BANK, Saidapet branch, Chennai.
IFS Code IDIB000S004.
Contact person : Sri R. Kamakoti
Phone : 98844 02624

 வேதம் கற்கும் குழந்தைகள்


கோ பூஜை
ஒவ்வொரு வித்யார்த்திக்கும் ஒரு ட்ரங்க் பெட்டி.  அவர்களின் எளிய உடைமைகளை வைத்துக் கொள்ள.  நம் வீடுகளில் பீரோ நிறைந்து வழிந்து கொண்டிருக்கும் ஒவ்வொருவரின் துணி மணிகளால். அப்படியும் வெளியே செல்லும் போது எதைப் போட்டுக் கொள்வது என்று குழம்புவோம்.  
  வகுப்பறை. வித்யார்த்திகளுக்கு ACADEMIC கல்வியும் கற்றுத் தருகிறார்கள். 


ஸ்ரீ ஸ்ருதி காமாட்சி அம்பாள் சன்னதி,  சதுர்வேத வித்யா கணபதி, 
பால சுப்பிரமணியர்,  
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மகா பெரியவா.


உபன்யாசம் செய்யும் 
திரு கணேச சர்மா மாமாவும்,
 திரு திப்பிராஜபுரம் மோகன் ராம் தீக்ஷிதர் அவர்களும்.  
உபன்யாசம் கேட்டு விட்டு வேத பாராயணம் செய்ய காத்திருக்கும் வித்யார்த்திகள்.


எங்களுடன் வந்திருந்த திரு சுதன் அவர்கள் வரைந்த ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மகா பெரியவாளின் திரு உருவம்.  திரு சுதன் அவர்கள் நிறைய படங்கள் வரைந்திருக்கிறார்.  அவர் அனுமதியுடன் இனி குரு வார ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகா பெரியவாளின் பதிவுகளில் வெளியிடுகிறேன்.
கோசாலையை அலங்கரிக்கும் ரிஷபம்.
கோசாலையின் அழகிய கன்றுக் குட்டிகள்

இடது கோடியில் நிற்பவர்தான் திரு கைலாச மூர்த்தி.திரு காமகோடி அவர்களுடன் (பவ்யமாக கட்டிக் கொண்டு இருப்பவர்.  நிறை குடம் தளும்பாது அல்லவா) நாங்கள்.

நிறைவான நெஞ்சத்துடன் வீடு திரும்பினோம்.  இது போல் அடுத்த பயணத்தை எதிர்பார்த்துக்கொண்டே.


26 comments:

 1. வாவ் சூப்பர்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு மிக்க நன்றி கிருஷ்ணன் ஜி

   Delete
 2. ஆத்தூர் வேதபாடசாலை பற்றிய தகவல்கள் அறியத்தந்தது மிகவும் அருமையாக உள்ளது.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கோபு அண்ணா. மிக்க நன்றி.

   Delete
 3. அதுவும் தங்களின் தாயாரின் நினைவு நாளில் சென்றுவந்தது மேலும் சிறப்பு

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் கோபு அண்ணா. இதுக்கெல்லாம் முகநூல் நண்பர்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் நான்.

   Delete
 4. திப்பிராஜபுரம் மோகன் ராம் தீக்ஷதர் அவர்களின் அருமையான உபன்யாசத்துடன், திவ்யப் பிரஸாதங்களான கூட்டு, கறி, பாயசம், பச்சடி, சாம்பார், ரசம், மோர், ஊறுகாயுடன் அமிர்தமான சாப்பாடு சாப்பிட்டது எல்லாவற்றையும் விட அழகோ அழகாக, ருசியோ ருசியாக என் வயிறும் முட்டியதுபோல உள்ளது !

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அண்ணா. மனதும், வயிறும் நிறைந்து தான் போயிற்று.

   Delete
 5. ஆஹா .... பாடசாலைக்குழந்தைகள் திவ்ய தேஜஸுடன் வாமன மூர்த்தி போலவும், ஸ்ரீ கிருஷ்ணர் போலவும் ஸ்ரீ கிருஷ்ணனின் சஹாக்கள் போலவும் அழகாக உள்ளனர்.

  >>>>>

  ReplyDelete
 6. ஆஹா ..... அந்த கோபூஜை மிகச்சிறப்பாக உள்ளது !

  பசுமாட்டின் உடம்பு முழுவதும் அனைத்து தேவதைகளும் வாசம் செய்வதாகச் சொல்லுவார்கள்.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. நல்ல வேளை. நாம இப்ப தான் நவ கைலாய யாத்திரை முடிந்து வந்திருக்கிறோம். நீ முடிந்தால் வந்தால் போதும் என்று இவர் சொன்னார். நான் பிடிவாதமாக நானும் வருவேன் என்று சென்றேன். போகாவிட்டால் அருமையான ஒரு வாய்ப்பை இழந்திருப்பேன்.

   Delete
 7. //ஒவ்வொரு வித்யார்த்திக்கும் ஒரு ட்ரங்க் பெட்டி. அவர்களின் எளிய உடைமைகளை வைத்துக் கொள்ள.//

  அந்தக்காலத்தில், (இப்போதிலிருந்து ஒரு 40 ஆண்டுகளுக்கு முன்பு வரைகூட) கல்யாணம் ஆகி புகுந்த வீடு செல்லும் பெண்ணுக்கு தகரத்தில் ட்ரங்க் பெட்டி கொடுத்து அனுப்புவதுதான் வழக்கம்.

  நாகரீகமான சூட்கேஸ், பீரோ போன்றவையெல்லாம் பிறகு வந்தவை மட்டுமே.

  //நம் வீடுகளில் பீரோ நிறைந்து வழிந்து கொண்டிருக்கும் ஒவ்வொருவரின் துணி மணிகளால். அப்படியும் வெளியே செல்லும் போது எதைப் போட்டுக் கொள்வது என்று குழம்புவோம்.//

  வீட்டில் துணிமணிகள் நிறைய இருந்தாலே குழப்பம்தான். வெறுத்துப்போய் விடும்.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. //வீட்டில் துணிமணிகள் நிறைய இருந்தாலே குழப்பம்தான். வெறுத்துப்போய் விடும்//

   ஆமாம். நான் ரிடையர் ஆன பின்பு முடிவு செய்து விட்டேன். புடைவையே இனி வாங்கக் கூடாது என்று.
   அத்துடன் இந்த வேத பாடசாலைக்குச் சென்ற பின் முடிந்தவரை தேவை இல்லாத தேவைகளைக் குறைத்து சத் காரியங்களில் ஈடுபட வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்.

   Delete
 8. வகுப்பறையின் தரை நன்றாக பளிச்சென்று உள்ளது. வித்யார்த்திகளுக்கு ACADEMIC கல்வியும் கற்றுத் தருகிறார்கள் என்பது கேட்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. ஆமாம். அந்தக் கல்வியும் தேவை தானே.

   Delete
 9. திரு. சுதன் அவர்கள் வரைந்துள்ள ஓவியம் சூப்பராக உள்ளது.
  அவருக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள்.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. அடுத்த முறை சந்திக்கும் போது அவரிடம் உங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்து விடுகிறேன்.

   Delete
 10. கன்னுக்குட்டி என் செல்லக் கன்னுக்குட்டிகளைப் பார்க்க மிகவும் பரவஸமாக உள்ளது.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. அழகோ அழகு கன்னுக்குட்டிகள்.

   Delete
 11. கொம்பு இல்லாத ரிஷபமும் மற்ற படங்களும் மிகவும் அழகாக சிரத்தையுடன் எடுத்துள்ளீர்கள்.

  வித்யாசமான பதிவாகக் கொடுத்து அசத்தி விட்டீர்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

  -=-=-=-=-=-

  ReplyDelete
  Replies
  1. நீங்களும் உங்கள் பாணியில் பின்னூட்டங்கள் கொடுத்து அசத்தி விட்டீர்கள்.

   நெஞ்சார்ந்த நன்றிகள் அண்ணா.

   Delete
 12. எனக்கு இந்த இனிய அனுபவத்தை சுவைக்க குடுத்துவைக்கவில்லை இருப்பினும் இதை படிக்கும்பொழுது ஒரு சுகானுபாவம் ராம்ராம்

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கு மிக்க நன்றி விச்சு ஐயர் அவர்களே. உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது என் மற்ற பதிவுகளையும் படியுங்கள்.

   மிக்க நன்றி.

   Delete
 13. என்னை பற்றி ஒன்னுமே சொல்லலையே.

  ReplyDelete
  Replies
  1. உங்களைப் பற்றி இப்படி பொத்தாம் பொதுவாக சொல்ல முடியாது. உங்களுக்கென்று தனி பதிவு போடப் போகிறேன். ஆனால் கொஞ்சம் நாள் பிடிக்கும்.

   வருகைக்கு மிக்க நன்றி.

   Delete