Tuesday, January 26, 2016


 என் கணவரின் நெடு நாள் ஆசை, எந்த ஊருக்குச் சென்றாலும் இது போல் காமதேனு சிலை இருக்கிறதா என்று ஒவ்வொரு கடைக்கும் சென்று பார்ப்பார்.  பொதுவாக ஒரு பக்கம் லட்சுமியும், மற்றொரு பக்கம் விநாயகரும் இருக்கும் சிலைகள்தான் கிடைக்கும்.

  என்னை BOOK FAIRக்குத்தான் அழைத்துச் செல்லவில்லை.  இன்று மயிலை கபாலி கோவிலுக்குச் சென்றுவிட்டு அப்படியே GIRI TRADERS ல் ஏதாவது புத்தகங்கள் வாங்கிக்கொண்டுவருவோம் என்று  கட்டாயப்படுத்தி அவரை அழைத்துச் சென்றேன்.  என்ன ஆச்சரியம், GIRI TRADERSல் அவர் ஆசைப்பட்ட சிலை கிடைத்தது.   வாங்கி வீட்டுக்குக் கொண்டு வந்து சந்தனம், குங்குமம் இட்டு, ஆராதித்தாயிற்று.   இன்று அவருக்கு ரொம்பவும் மகிழ்ச்சி.





காமதேனு காயத்ரி மந்திரம்

ஓம் சுபகாயை வித்மஹே காமதாத்ரியை சதீமஹி தந்தோ தேனு: ப்ரசோதயாத்.
பசு காயத்ரி மந்திரம்:-
 
ஓம் பசுபதயேச வித்மஹே மகா தேவாய தீ மஹி தந்தோ பசுதேவி: ப்ரசோதயாத்.




பசுவானவள் பரமேஸ்வரனுக்குத் தாயாகவும், வசுக்களுக்கு பெண்ணாகவும் ஆதித்யர்களுக்கு சகோதரியாகவும் நாபியில் அமிர்தத்தை வைத்துக் கொண்டவளாகவும், இருக்கிறாள். பசுவை அடிக்கவோ, விரட்டவோ கூடாது. பூஜிக்க வேண்டுமென வேதம் சொல்கிறது. தேவிபாகவதம், பிரும்ம வைவர்த்தம் போன்ற புராணங்கள் ஸுரபி உபாக்யானம் மிக அழகானது. பிரும்ம சிருஷ்டியில் உலகம் உய்ய முதலில் பசுவைப்படைத்து அதன் உடலில் பதினான்கு உலகையும் முப்பத்து முக்கோடி தேவர்களையும் இருக்கச் செய்தான். அதில் முதலில் வந்தவர்களான தர்மராஜனும் காலதேவனும்தான் முகத்தில் இருந்தனர். மற்றவர்கள் உடல் எங்கும் குடியேறினார்கள். இதில் இரண்டு பேர்கள் தாமதமாக வந்தார்கள். அவர்கள் மஹாலட்சுமியும் கங்கையும். பசுவின் உடலில் இவர்களுக்கு இடம் இல்லை.



லட்சுமியும் கங்கையும் பசுவை மிகவும் வேண்டினார்கள். எங்கேயாவது இருக்க ஓர் இடம் கொடுத்தால் போதும் என்று கெஞ்சினார்கள். பசுவும், தாய்மார்களே, உங்கள் மீது எனக்கு அனுதாபம் இருக்கிறது. ஆனால் இடமே இல்லையே, ஒன்று வேண்டுமானால் செய்யுங்கள், என் உடலிலிருந்து வரும் சாணம், கோமூத்ரம் இரண்டும் யாருக்கும் சொந்தமாகவில்லை. நீங்கள் விரும்பினால் அதில் இருக்கலாம் என்று சொல்ல லட்சுமியும் கங்கையும் மிகுந்த சந்தோஷத்துடன் அந்த இடத்தில் வாஸம் செய்ய ஆரம்பித்தார்கள். அதனால் இன்றைக்கும் பசுவின் பின் புறத்தில் லட்சுமியும், கங்கையும் இருப்பதாக சாஸ்திரம். அதனால் பசுவின் சாணமும், கோமூத்ரமும் சகல பாபங்களையும் போக்கி லட்சுமி கடாட்சம் அளிக்கக் கூடியது என்கிறது சாஸ்திரம்.



வைகுண்டம், ஸத்யலோகம் போன்று கோலோகம் என்று உள்ளது. அதில் ராதிகையுடன் ஸ்ரீகிருஷ்ணன் பக்த ரக்ஷகனாக இருக்கிறார். அங்கு காமதேவனைப் படைத்து அதன் கன்றுகளை கோலோகம் முழுவதும் வைத்து கிருஷ்ணனும் ராதையும் பூஜை செய்வதாக தேவி பாகவதத்தில் இருக்கிறது. இந்திர பூஜையை விட கோ பூஜையே மேலானது என்று ஸ்ரீ கிருஷ்ணன் சொல்லியிருக்கிறார். கோமவை லட்சுமியாக பாவித்து வேதோக்த்த ஸ்ரீஸுக்தத்தினால் ஓம் ஸுரப்யை நம: என்னும் மந்திரம் சொல்லி ஆவாஹனாதி தூபதீப நைவேத்யம் முதலானவைகளுடன் ஸ்ரீகிருஷ்ணன் பூஜை செய்ய மற்றும் பிரும்ம தேவன் சரஸ்வதியுடனும் இந்திரன் இந்திராணியுடனும் பூஜை செய்தார்கள்.





நமோ தேவ்யை மஹா தேவ்யை ஸுரப்யை நமோ நம

கவாம் பீஜஸ்வ ரூபாயை நமஸ்தே ஜகதம்பிகே

நமோ ராதாப் பிரியாயைச பத்மாம் சாயை நமோ நம

நம: கிருஷ்ணப் பிரியாயை கவாம் மாத்ரே நமோ நம

கல்ப விருக்ஷஸ்வ ரூபாயை ஸர்வேஷாம் ஸந்ததம் பரம்

ஸ்ரீதாயை தன தாயை வ்ருத்தி தாயை நமோ நம

சுபதாயை ப்ரஸன்னாயை கோப தாயை நமோ நம

யசோதாயை கீர்த்தி தாயை தர்மக்ஞாயை நமோ நம

இதம் ஸ்தோத்ரம் மஹத் புண்யம் பக்தி

யுக்தச்ச : படேத்

ஸகோ மான் தனவான்ச் சைவ கீர்த்திமான்

புத்ர வான் பவேத்



இந்த ஸ்லோகத்தை கூறி கோபூஜை, பிரதட்சிணம் செய்தால் எல்லா பாக்கியங்களும் கிடைக்கும்.



  1.  பசுவின் கொம்புகளின் அடியில் - பிரம்மன், திருமால்
  2. கொம்புகளின் நுனியில் - கோதாவரி முதலிய புண்ணிய தீர்த்தங்கள்,சராசை உயிர் வர்க்கங்கள்
  3. சிரம் - சிவபெருமான்
  4. நெற்றி நடுவில் - சிவசக்தி
  5. மூக்கு நுனியில் - குமரக் கடவுள்
  6. மூக்கினுள் - வித்தியாதரர்
  7. இரு காதுகளின் நடுவில் - அசுவினி தேவர்
  8. இரு கண்கள் - சந்திரர், சூரியர்
  9. பற்கள் - வாயு தேவர்
  10. ஒளியுள்ள நாவில் - வருண பகவான்
  11. ஓங்காரமுடைய நெஞ்சில் - கலைமகள்
  12. மணித்தலம் - இமயனும் இயக்கர்களும்
  13. உதட்டில் - உதயாத்தமன சந்தி தேவதைகள்
  14. கழுத்தில் - இந்திரன்
  15. முரிப்பில் - பன்னிரு ஆரியர்கள்
  16. மார்பில் - சாத்திய தேவர்கள்
  17. நான்கு கால்களில் - அனிலன் எனும் வாயு
  18. முழந்தாள்களில் - மருத்துவர்
  19. குளம்பு நுனியில் - சர்ப்பர்கள்
  20. குளம்பின் நடுவில் - கந்தவர்கள்
  21. குளம்பிம் மேல் இடத்தில் - அரம்பை மாதர்
  22. முதுகில் - உருத்திரர்
  23. சந்திகள் தோறும் - எட்டு வசுக்கள்
  24. அரைப் பரப்பில் - பிதிர் தேவதைகள்
  25. யோனியில் - ஏழு மாதர்கள்
  26. குதத்தில் - இலக்குமி தேவி
  27. வாயில் - சர்ப்பரசர்கள்
  28. வாலின் முடியில் - ஆத்திகன்
  29. மூத்திரத்தில் - ஆகாய கங்கை
  30. சாணத்தில் - யமுனை நதி
  31. ரோமங்களில் - மகாமுனிவர்கள்
  32. வயிற்றில் - பூமாதேவி
  33. மடிக்காம்பில் - சகல சமுத்திரங்கள்
  34. சடாத்களியில் - காருக பத்தியம்
  35. இதயத்தில் - ஆசுவனீயம்
  36. முகத்தில் - தட்சிணாக்கினி
  37. எலும்பிலும், சுக்கிலத்திலும் - யாகத் தொழில் முழுவதும்
  38. எல்லா அங்கங்கள் தோறும் - கலங்கா நிறையுடைய கற்புடைய மாதர்கள் வாழ்கிறார்கள்




30 comments:

  1. ஆஹா, இந்த காமதேனு மிகவும் அழகாக உள்ளது. இதுவரை இதுபோல நான் ஒன்றைப் பார்த்ததே இல்லை. இதைப் பார்த்ததும் மயங்கி அப்படியே சொக்கிப்போனேன்.

    தங்கள் ஆத்துக்காரரின் ரசனையே ரசனை. அவருக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகளைச் சொல்லவும்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோபு அண்ணா
      ரொம்ப அழகுதான் இந்த காமதேனு.
      காலையில் எழுந்ததும் இந்தக் காமதேனுவைத்தான் முதலில் பார்க்கிறேன்.

      அவர் ரசனைக்கு என்ன குறைச்சல். உங்கள் பாராட்டுக்களை அவரிடம் சொல்லி விட்டேன்.

      Delete
  2. //GIRI TRADERSல் அவர் ஆசைப்பட்ட சிலை கிடைத்தது. வாங்கி வீட்டுக்குக் கொண்டு வந்து சந்தனம், குங்குமம் இட்டு, ஆராதித்தாயிற்று. இன்று அவருக்கு ரொம்பவும் மகிழ்ச்சி.//

    கிரிதர கிருஷ்ணனின் க்ருபையினால் அவரின் நெடு நாள் ஆசை பூர்த்தியாகி உள்ளது. வேறு எதற்கோ அவரை அங்கு அழைத்துச்சென்ற, பானை பிடித்த பாக்கியசாலியான, ஜெயாவின் க்ருபையும் இதில் கூடவே சேர்ந்துள்ளது. :)

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. ஆஹா, தன்யனானேன்.
      இன்றைய காலகட்டத்தில் குக்கர் பிடித்த எல்லா பெண்களுமே பாக்கியசாலிகள்தான்.

      Delete
  3. ’காமதேனு காயத்ரி மந்திரம்’ கொடுத்துள்ளது படிக்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  4. //பசுவை அடிக்கவோ, விரட்டவோ கூடாது. பூஜிக்க வேண்டுமென வேதம் சொல்கிறது.//

    வேதம் சொல்வது யாவும் மிகவும் நன்மை தரக்கூடியது. தாங்கள் இங்கு சொல்லியுள்ளதே வேதவாக்கு என நினைக்கத்தோன்றுகிறது, எனக்கு.

    ReplyDelete
    Replies
    1. எந்த உயிரையும் அடிக்கவோம், துன்புறுத்தவோ கூடாதுதான். இந்த கொசு கூட இப்படி கடிச்சு, தினுசு, தினுசா வியாதியை பரப்பாம இருந்தா அதைக்கூட நாம கொல்ல் மாட்டோம்.

      Delete
  5. //அதனால் பசுவின் சாணமும், கோமூத்ரமும் சகல பாபங்களையும் போக்கி லட்சுமி கடாட்சம் அளிக்கக் கூடியது என்கிறது சாஸ்திரம்.//

    பசுஞ்சாணி, கோமூத்ரம், பால், தயிர், நெய் ஆகிய இவை ஐந்தும் கலந்து செய்யும் பஞ்சகவ்யம் தான் நம் உடலையும், உள்ளத்தையும் சுத்தம் செய்யக்கூடிய பவித்ரமான வஸ்துவாகும்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. முன்பெல்லாம் புண்ணியாசனத்தன்று பிள்ளை பெற்ற பெண்ணிற்கு பஞ்சகவ்யம் கொடுப்பார்கள். இப்ப எல்லாம் செய்கிறார்களா என்று தெரியவில்லை.

      Delete
  6. //இந்திர பூஜையை விட கோ பூஜையே மேலானது என்று ஸ்ரீ கிருஷ்ணன் சொல்லியிருக்கிறார்.//

    ஆஹா, அந்த கோபாலகிருஷ்ணனே இதைச் சொல்லிவிட்ட பிறகு அப்பீலே இல்லைதான். :)

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. ஆஹா, அந்த கோகுல கிருஷ்ணன் சொன்னதை இந்த கோபால கிருஷ்ணன் ஆமோதித்தபின்........... ஆட்சேபணையே கிடையாது.

      Delete
  7. எல்லா பாக்கியங்களும் கிடைக்க, கோபூஜையில் கூறி பசுவைப் பிரதக்ஷணம் செய்ய வேண்டி கொடுத்துள்ள ஸ்லோகங்கள் மிகவும் பயனுள்ளவைகளாகும்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. நான் அலை ஓய்ந்து எப்ப தான் சமுத்திர ஸ்நானம் செய்யப் போகிறேனோ தெரியவில்லை.

      உங்களின் ஒரு பதிவில் கவிதையாக நான் எழுதியது போல் இட்டலிகளும், தோசைகளுமாக வார்த்துக் கொண்டிருக்கிறேன்.

      இது கர்ம யோகம் என்று நினைத்து திருப்தி பட்டுக் கொள்கிறேன்.

      Delete
  8. பசுவின் 38 விதமான அங்கங்களைக்கூறி அதில் இடம்பெற்றுள்ள தேவதைகளின் பெயர்களையும் கூறியுள்ளது வியப்போ வியப்பாக உள்ளது.

    சமஸ்த தேவதைகளும் ஒரே இடத்தில் உள்ள பசுவை நாம் முடிந்தபோதெல்லாம் பிரதக்ஷணம் செய்து வாலின் மேல் பகுதியைத் தொட்டுக் கும்பிட்டு, அகத்திக்கீரை + பழங்கள் முதலியன அதற்கு வாயில் ஆகாரமாக ஊட்டி மகிழ்வோம்.

    பயனுள்ள பகிர்வுக்கு மிக்க நன்றி, ஜெயா. பாராட்டுகள். வாழ்த்துகள்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. நன்றிக்கும், பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் தலை வணங்குகிறேன்.

      Delete
  9. இந்த காமதேனு விக்ரஹம் ஆத்துக்கு வந்து அதனை பூஜிக்கும் நல்லவேளையில், நம் ஜெயா தம்பதியினருக்கு இந்த மன்மத ஆண்டில் ஒரு பேரனும், துன்முகி ஆண்டில் ஒரு பேரனும் பிறந்து, மேலும் மேலும் சகல செளபாக்யங்களும் பெற்று குடும்பத்தார் அனைவரும் மகிழ்ச்சிக்கடலில் மூழ்க வேண்டும் என நானும் பிரார்த்தித்துக்கொள்கிறேன்.

    பிரியமுள்ள கோபு அண்ணா

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ஆசீர்வாதத்தில் எல்லாம் நன்றாகவே நடக்கும். இன்னும் ஒரு இரண்டு மாதத்தில் லயாவுக்கு தம்பியோ, தங்கையோ வந்து விடும்.

      Delete
  10. காமதேனுவுக்கு அடியில் உள்ள ’கன்னுக்குட்டி என் செல்லக் கன்னுக்குட்டி’ யும் மிக அழகாகக் குட்டியூண்டாக (லயாக்குட்டி போல) உள்ளது.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அண்ணா.
      அவள் தினமும் கேட்கும் கேள்வி “ஏன் இந்த கன்னுக்குட்டிக்கு கொம்பு இல்லை” தினமும் நான் “அது பெரிசானதும் கொம்பு வந்துடும்” என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

      Delete
  11. காமதேனுவின் படமாக இரண்டு படங்கள் காட்டியுள்ளீர்கள். இரண்டுமே இடதுபுறம் வாலுடனும், வலதுபுறம் கொம்புடனும் உள்ளபடியே காட்டியுள்ளீர்கள். ஏதேனும் ஒன்றையாவது மாற்றிக்காட்டியிருந்தால் அடுத்த பகுதியில் உள்ள தேவதைகளையும் நாங்கள் தரிஸிக்க முடிந்திருக்குமே, ஜெயா.

    முடியுமானால் வேறு ஒரு போட்டோ எடுத்து முகம் இடது புறமும் வால்பகுதி வலதுபுறமும் வருமாறு இதே பதிவினில் இணைத்து விடவும்.

    அன்புடன் கோபு

    ReplyDelete
    Replies
    1. DONE. இவ்வளவு ஆர்வமாக உங்களைத் தவிர யார் கேட்பார்கள்.

      Delete
  12. ஆஹா, என் ஆசைக்காக காமதேனு திரும்பி போஸ் கொடுத்துள்ளது. மிக்க மகிழ்ச்சி. இதில் காமதேனு முகம் தெரியாவிட்டாலும், ’கன்னுக்குட்டி என் செல்லக்கன்னுக்குட்டி’ இன் முகம் முழுவதும் வித்யாசமாகத் தெரிகிறது. சந்தோஷம். மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வேண்டுகோளுக்கு அந்த காமதேனுவை செவி சாய்த்து விட்டதே. ‘சற்றே விலகி இரும் பிள்ளாய்’ என்று கேட்டதற்கேற்ப நந்தி விலகியது போல் இந்த காமதேனுவும் உங்களுக்காக திரும்பி போஸ் கொடுத்துள்ளது.

      Delete
  13. ஒரு மாட்டை வளர்த்து அதுக்குத் தீனி
    மூத்திரம் சாணியெல்லாம் அள்ளி
    பாடுபடுகிறவனுக்கே கிடைக்காத பாக்கியமெல்லாம் இந்தக் காமதேனுவை
    பூஜிப்பவனுக்குக் கிடைக்கிறது என்ற
    வார்த்தை ரொம்ப அநியாயம் மேடம்.

    ReplyDelete
  14. காமதேனு பார்க்க பார்க்க கொள்ளை அழகு.ஸ்லோங்களுடன் பகிர்வு அமர்க்களமா இருக்கு.உங்க அருமை அண்ணாவிடம் ஒரு முக்கியமான விசயம் சொல்லணும்னு தேடினா ஆளயே காணோம். இங்க வந்து காமதேனு பால் பொழியராப்ல 11--பின்னூட்டங்கள் போடுவதில் பிஸியா இருக்காங்களா. வரட்டும். ஒரு கை பாத்துக்கறேன்

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் January 26, 2016 at 10:49 PM

      //உங்க அருமை அண்ணாவிடம் ஒரு முக்கியமான விசயம் சொல்லணும்னு தேடினா ஆளயே காணோம்.//

      ஆஹா, என்னைத் தேடவும் இந்தப் பூவுலகில் பூந்தளிர் என்ற ஒரு பெண்மணியாவது இருப்பதை நினைக்க என் மனதுக்குக் கொஞ்சம் ஆறுதலாக உள்ளது.

      // வரட்டும். ஒரு கை பாத்துக்கறேன் //

      மிகவும் பயமாக்கீதூஊஊஊஊஊ.

      அதனால் நான் இனி மாட்டமாட்டேன். :)

      பிரியமுள்ள கோபு

      Delete
    2. வாம்மா பூந்தளிர்.
      வருகைக்கு வாழ்த்துக்களும், நன்றிகளும்

      //இங்க வந்து காமதேனு பால் பொழியராப்ல 11--பின்னூட்டங்கள் போடுவதில் பிஸியா இருக்காங்களா. வரட்டும். ஒரு கை பாத்துக்கறேன்//

      ஆத்தா, இது நியாயமா? அவரு ஒருத்தருதான் எனக்கு ரெகுலர் விசிட்டர்.

      Delete
  15. அண்ணாவும் தங்கையுமா சேந்து என்னை பந்தாடறேளா. ஆனைக்கு ஒரு காலம் வந்தா இந்த பூ....னைக்கும் ஒருகாலம் வராமயா போகும் அப்ப வச்சிக்கறேன் என் கச்சேரிய.........

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் February 3, 2016 at 10:31 PM

      வாம்மா, என் சொப்பன சுந்தரி ! ஸாரி ...
      வாம்மா, என் சிவகாம சுந்தரி !!

      //அண்ணாவும் தங்கையுமா சேந்து என்னை பந்தாடறேளா. //

      நானும் ஜெயாவும் இரண்டுபேருமா சேர்ந்து பந்தாட ஆரம்பித்தால் பந்து கிழிந்தே போய் விடுமாக்கும். ஜாக்கிரதை. :)

      //ஆனைக்கு ஒரு காலம் வந்தா இந்த பூ....னைக்கும்//

      பூ....ந்தளிர் என்பதை அழகா பூ....னைக்கும்ன்னு சொல்லி இருப்பது கோ....பூ வுக்கும் புரிகிறதூஊ. :)

      //ஒருகாலம் வராமயா போகும் அப்ப வச்சிக்கறேன் என் கச்சேரிய.........//

      ஆவலுடன் காத்திருக்கிறேன் ... எப்போ வெச்சுப்பீங்களோன்னு .... :)

      (உங்கக் கச்சேரியைத்தான் நானும் சொல்றேன்)

      Delete