Thursday, October 5, 2017

இத்தனை விஷயங்களா? என்று நம்மை மலைக்க வைக்கும் !  ஸர்வஜ்ஞரான மஹா பெரியவா நடராஜா பற்றிச் ​சொன்னது.

Image may contain: 3 people, drawing


                                          PICTURE COURTESY: SRI SUDHAN KHALIDAS





சிவன் கோவில்ல எல்லாம் "வ்யாகரண தான மண்டபம்"ன்னு ஒரு மண்டபம் இருக்கும். "வக்காணிக்கும் மண்டபம்" ன்னு திரிச்சு சொல்லுவா. நன்னா வக்கணையா பேசுன்னு சொல்றதே "இலக்கண சுத்தமா"பேசறதுன்னு அர்த்தம். திருவொற்றியூர்ல கூட இந்த மண்டபம் இருக்கு. சிவன் கோவில்ல மட்டும் ஏன் இப்டி ஒரு மண்டபம் இருக்கு? விஷ்ணு கோவில்ல ஏன் இல்லை? ஸிவனுக்கும் பாஷைக்கும் என்ன ஸம்பந்தம்? பேச்சே இல்லாத தக்ஷிணாமூர்த்தியா இருக்கறவராச்சே பரமேஸ்வரன்? ஒரு ஸ்லோகத்ல, பேசாத சிவன் ஆடாம அசங்காமத்தான் இருப்பார். ஆனா, அவரே ஒரே ஆட்டமா ஆடறப்போ தான் பாஷா சாஸ்திரமே பொறந்ததுன்னு சொல்லியிருக்கு. ஆடகின்ற சிவனுக்கு நடராஜான்னு பேர். 'மஹாகாலோ மஹாநட:'ன்னு அமரகோசம் சொல்றது. அம்பலக்கூத்தாடுவான் பட்டன் ன்னு ப்ராஹ்மணாளும் ஆதியில நல்ல தமிழ் பேராத்தான் வெச்சிண்டிருந்திருக்கா. பம்பாய்ல ஒரு பிரிண்டிங் ப்ரஸ்ல [நிர்ணயஸாகரா பிரஸ்] பழைய காலத்து ஸம்ஸ்க்ருத ஸாஸனங்களை ஆராய்ச்சி பண்ணின புஸ்தகம் "ப்ராசீன லேகமாலை"ன்னு ஒண்ணு இருக்கு. அந்த ஸாஸனங்கள்ள வேங்கி நாட்டோடது ஒண்ணு இருக்கு. க்ருஷ்ணா நதிக்கும், கோதாவரிக்கும் நடுவுல இருக்கறது தான் வேங்கிநாடு. அந்த நாட்ல கெடச்ச தாம்ர [காப்பர்] ஸாஸனம் ஒண்ணை புஸ்தகத்ல போட்டிருக்கா. தெலுங்கு சீமைல ராஜ்யம் பண்ணிண்டிருந்த கீழை சாளுக்ய ராஜாக்களுக்கும், நம்ம தஞ்சாவூர் சோழ ராஜாக்களுக்கும் விவாஹ ஸம்பந்தம் இருந்துது. ப்ருஹதீஸ்வரர் கோவிலைக் கட்டின ராஜராஜ சோழனோட புத்ர வம்ஸம், பௌத்ரர்களோடேயே முடிஞ்சு போய்டுத்து. அவனோட தௌஹித்ரி [பெண்வழிப் பேத்தி] அம்மங்கா தேவி, ராஜராஜ நரேந்த்ரன்….ங்கற கீழைச் சாளுக்ய ராஜாவுக்குத்தான் வாக்கப்பட்டிருந்தா. அவாளோட புள்ளை குலோத்துங்க சோழன்தான் அப்றம் சோழ நாட்டுக்கு ராஜா ஆனது. அவன் தான் ஆந்த்ர தேஸத்ல வேதாத்யயனம் வ்ருத்தியாகணும்னு, தமிழ்நாட்டுலேர்ந்து 500 ப்ராஹ்மணாளைக் கொண்டு போய் வேங்கிநாட்டுல குடியமத்தினான். ஆந்த்ரால "த்ராவிடலு" ன்னு இன்னிக்கும் இருக்கறவா எல்லாருமே இந்த 500 ப்ராஹ்மணாளோட வம்ஸாவளிதான். நடராஜாவைப் பத்தி சொல்லிண்டிருந்தேன்.. நாமெல்லாம் ஆட வேண்டிய கூத்தையெல்லாம் சேர்த்து வெச்சு அவர் ஆடறார். நடராஜ விக்ரஹத்தோட தலேல படர்ந்தா மாதிரி ஒண்ணு இருக்கும். ரெண்டு பக்கமும் நீண்டுண்டு இருக்கும். அதுல சந்த்ரன், கங்கை ரெண்டுமே இருக்கும். என்னது அது? 

அதுதான் நடராஜாவோட ஜடாபாரம். இந்தக் காலத்ல photo எடுக்கறச்சே. "snap shot "ன்னு ஒண்ணு உண்டு. ஒரு வஸ்து சலனத்ல [movement] இருக்கறப்போ, திடீர்னு ஒரு அவஸரத்ல [pose] போட்டோ எடுக்கறதுதான் அது. நடராஜா ரொம்ப வேகமா நர்த்தனம் பண்றார். பண்ணி, அப்டி நிறுத்தப்போற ஸமயத்ல அவரோட ஜடாபாரம் ரெண்டு பக்கமும் நீட்டிண்டு இருக்கும். அந்த அவஸ்தையை [கோலத்தை], அந்தக் காலத்து ஶில்பி, மனஸ்ல எடுத்த "ஸ்நாப் ஷாட்"தான் அந்த ஸ்வரூபம். நடராஜாவோட கையில உடுக்கு இருக்கு. அது குடுகுடுப்பாண்டி வெச்சிருக்கறதை விடப் பெருஸ்ஸு, மாரியம்மன் கோவில் பூஜாரி வெச்சிண்டு இருக்கறதை விட சின்னது. அதுக்கு டக்கான்னும், டமருகம்ன்னும் பேர் உண்டு. பாதத்தோட தாளத்தை அனுஸரிச்சு, அந்த டமருவோட தாளமும் இருக்கும்.



Image may contain: 1 person, drawing
                                                 PICTURE COURTESY: SRI SUDHAN KHALIDAS


வாத்யங்கள்ள மூணு வகை. சர்ம வாத்யம் [டக்கா, மேளம், கஞ்சிரா, ம்ருதங்கம் மாதிரி தோல் வாத்யங்கள்], தந்த்ரி வாத்யம் [வீணை, பிடில் மாதிரி தந்தி [கம்பி] போட்டது] வாயுரந்த்ர வாத்யம் [நாயனம், புல்லாங்குழல் மாதிரி ஓட்டை போட்டு, காத்துனால ஊதற வாத்யம்]. 

இதுல சர்ம வாத்யம் தண்டத்தாலேயோ, ஹஸ்தத்தாலேயோ[கைகள்] அடிப்பா. அந்த வாத்யத்தை நிறுத்தறச்சே, சாப்பு குடுக்கறது, அப்டீன்னா… சேர்ந்தாப்ல சில அடி அடிக்கறது வழக்கம். அது மாதிரி நடராஜாவோட டமருகத்ல டான்ஸ் முடியற காலத்ல "ந்ருத்த அவஸானே" ன்னு ஒரு சாப்பு த்வனி உண்டாச்சு.

நடராஜா ந்ருத்யம் பண்றார். ஸனகாதிகள், பதஞ்ஜலி, வ்யாக்ரபாதர் எல்லாரும் அவரைச் சுத்தி நிக்கறா. அவாள்ளாம் மஹா தபஸ்விகள். அதுனால நடராஜாவோட ந்ருத்தத்தை கண்ணால பாக்க முடிஞ்சுது. ஞான நேத்ரம் இருக்கறவாதான் அவரோட நடனத்தைப் பாக்க முடியும். க்ருஷ்ணனோட விஸ்வரூபத்தை தர்ஸனம்  பண்ற சக்தியை  பகவானே அர்ஜுனனுக்குக் குடுத்தார். அதே  சக்தியை வ்யாஸாச்சார்யாள் ஸஞ்சயனுக்கும் குடுத்து அவனையும் பகவானோட விஸ்வரூபத்தை தர்ஸனம் பண்ணி த்ருதராஷ்ட்ரனுக்கு வர்ணிக்கப் பண்ணினார். நடராஜாவோட டான்ஸ் கச்சேரில விஷ்ணு மத்தளம் கொட்டிண்டிருக்கார்; ப்ரஹ்மா தாளம் போட்டுண்டிருக்கார். இப்டியா…. ந்ருத்தம் முடியப் போற ஸமயத்ல, டமருகத்ல சாப்பு, கிடுகிடுன்னு 14  சப்தங்களா விழுந்துது. அந்த  சப்தங்களோட கணக்கு மாதிரியே வித்தைகளோட கணக்கும் பதினாலாத்தான் இருக்கு! ஹிந்து மதத்துக்கு ஆதாரம் சதுர்தஸ வித்யா [14] ன்னா….. நடராஜாவோட சாப்பும் 14 சப்தத்தையே குடுத்துது! அப்போ அங்கே இருந்தவாள்ள பாணினி மஹரிஷிங்கறவர் அந்த 14  சப்தங்களையும், 14 ஸூத்ரங்களா வ்யாகரணத்துக்கு மூலமா வெச்சுண்டு "அஷ்டாத்யாயி" ங்கற இலக்கண மூல புஸ்தகத்தை எழுதினர். இந்த பதினாலு ஸூத்ரங்களையும் ஆவணியாவிட்டம் பண்றவா கேட்டிருப்போம். மஹேஸ்வரனோட டமருலேர்ந்து வந்ததால அதுக்கு மஹேஸ்வர ஸூத்ரம்ன்னு பேர் வந்தது.

அ இ உண்
ருலுக்
ஏ ஒங்
ஐ ஔச்
ஹயவரட்
லண்
ஞம ஙண நம்
ஜ ப ஞ்
க ட த ஷ்
ஜ ப க ட த ​ஸ் ​
க ப ச ட த சடதவ்
கபய்
சஷஸர்
ஹல்

ஆவணியாவிட்டத்ல இதை சொல்றப்போ வேடிக்கையா எல்லாரும் சிரிச்சிண்டே கேட்டிருப்பேள்… இது எதைப் பத்தினதுன்னு தெரியாமலேயே சும்மா ஒப்பிச்சிருப்பேள்… பரமேஸ்வரன் உடுக்கை அடிச்சுண்டு கிர்ர், கிர்ர்ன்னு சுத்தி ஆடி முடிச்சப்போ குடுத்த சாப்புகள்தான் இதெல்லாம்.
No automatic alt text available.

                                                   PICTURE COURTESY: SRI SUDHAN KHALIDAS 



​ஜய  ஜய  சங்கர      ஹர ஹர சங்க

                                      
ஜய  ஜய  சங்கர      ஹர ஹர சங்கர

Thursday, September 21, 2017





ஸ்ரீ காமாக்ஷி தாசன் 
**********************************

சென்னை- புதுப்பெருங்களத்தூரில், மணிமேகலை தெரு, ஸ்ரீலிங்கம் குடியிருப்பில் வசிக்கிறார் காமாட்சிதாசன் சீனிவாசன். சொந்த ஊர்- தஞ்சை மாவட்டம் உத்தமதானபுரம். இவரின் தகப்பனார் வெங்கட்ராமய்யர், காஞ்சி மடத்தில் (1901-1966) கார்வாராக கைங்கரியம் செய்து வந்தவர்.

தன்னை, ‘பெரியவாளின் அடிமை’ என்று பெருமிதத்துடன் கூறிக்கொள்ளும் காமாட்சிதாசன் சீனிவாசன், தனது 18-வது வயதில், முதன்முதலாக காஞ்சி மகாப் பெரியவாளைச் சந்தித்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

”மகா பெரியவா பீடாதிபதியா வர்றதுக்கு முன்னா டியே, மடத்துல கைங்கரியம் பண்ணிட்டிருந்தவர் என் அப்பா. அதனால, அவர்கிட்டேதான் சில விஷயங்களைக் கேட்டுத் தெரிஞ்சுப்பாராம் பெரியவா.

அப்பாவிடம் ரொம்பச் சிநேகமா இருப்பார்.

அப்பா ஊருக்கு வரும்போதெல்லாம், என்னைப் பெரியவாகிட்ட அழைச்சிட்டுப் போகணும்னு சொல்லிட்டே இருப்பேன். அதுக்கான வேளை வரலே! இன்னிக்கு நாளைக்குன்னு தள்ளிப்போட்டுட்டே இருந்தார் அப்பா.
Image may contain: drawing



PICTURE COURTESY: SRI SUDHAN KHALIDAS

அது, 1958-ஆம் வருஷம். ஒரு நாள், பாதி ராத்திரில திடீர்னு விழிப்பு வந்தது எனக்கு. ஒருவித தெய்வீக அருள் வந்த மாதிரி உணர்வு. காமாட்சியம்மன் ஆயிரம் அகவல்னு சொல்ல ஆரம்பிச்சு, அப்படியே வரிவரியா எழுதவும் ஆரம்பிச்சுட்டேன். ஒரு மணி நேரத்துல, ஏதோ மழை பொழிஞ்ச மாதிரி… மெய்ம்மறந்த நிலையில, ஆயிரம் அகவலையும் எழுதி முடிச்சுட்டேன். இது எப்படி நடந்ததுன்னு எனக்கே தெரியலை. அம்மாகிட்ட போய்ச் சொன்னேன். பாவம், அவளுக்கும் ஒண்ணும் புரியல! ‘உடனடியா அப்பாவுக்குக் கடிதம் எழுதிப்போடு. பெரியவாகிட்ட இதைச் சொல்லட்டும்’னு சொன்னா.

அந்த நேரத்துல, சென்னை சம்ஸ்கிருத காலேஜ்ல முகாம் போட்டிருந்தார் பெரியவா. அவரிடம் இந்த விஷயத்தை அப்பா சொன்னதும்,  ’சீனிவாசனை இங்கே வரச் சொல்லு!’ன்னு பெரியவாகிட்டேருந்து உத்தரவாச்சு. நானும் உடனே கிளம்பி, சென்னை வந்தேன்.

காலேஜ்ல ஜேஜேன்னு கூட்டம். கி.வா.ஜ., கிருபானந்தவாரியார்னு பெரியவங்கள்லாம் இருந்தாங்க. பெரியவா முன்னாடி போய் பவ்வி யமா நின்னேன். ‘படிடா சீனிவாசா!’ன்னு பெரியவா சொன்னதும், கடகடவெனப் படிக்க ஆரம்பிச்சுட்டேன். ஓர் இடத்தில்… ’64-வது பீடத்து அரசியே போற்றி!’ன்னு படிக்கும்போது, ‘நிறுத்து’ன்னார் பெரியவா. அறையின் கதவைச் சாத்தவும் உத்தரவிட்டார். பிறகு, பூர்ணபலம் (உரித்த தேங்காய்), மேருவில் பதித்திருந்த சந்தன உருண்டை, குருவின் பாதுகை, ஒரு ஸ்ரீசக்ரம் வைத்து, வில்வத்தையும் போட்டு, ‘பஞ்சாயதன மூர்த்திகள்… பூஜைக்கு வெச்சுக்கோ. எடுத்துட்டுப் போ!’ன்னார் பெரியவா.

நான் புரியாமல் விழிச்சேன். ‘நான் என்ன பண்ணணும்? எப்படிப் பூஜை பண்ணறதுன்னு எனக்கு நியமங்கள் எதுவும் தெரியாதே’ன்னு தயக்கத்துடன் பெரியவாளிடம் கேட்டேன். பெரியவா சிரிச்சார். ஒண்ணும் தெரியாதவன் கிட்டே எப்படிப் பதில் சொல்லணும்னு அவருக்குத் தெரியாதா என்ன? அவர் கேட்டார்…

‘போற்றி அகவல், எப்படி எழுதினே?’

‘நான் எழுதலை. தானா வந்தது, பெரியவா!’


Image may contain: 2 people, drawing

PICTURE COURTESY: SRI SUDHAN KHALIDAS

‘அப்படிப் பூஜா முறையும் தானாவே வந்துடும் உனக்கு. எடுத்துண்டு போ!’ என்றவர், பூர்ண அனுக்கிரகம் பண்ணுவது மாதிரி ஆசீர்வாதம் பண்ணினார். ‘லோக க்ஷேமார்த்தமா பூஜை பண்ணிண்டு வா! எல்லாரும் நன்னா இருக் கணும்னு வேண்டிண்டு பூஜை பண்ணு!’ என்றும் அறிவுரை தந்தார். எவ்வளவு பெரிய பாக்கியம் எனக்கு!” – கண்கள் பனிக்க, நெஞ்சில் கைவைத்துச் சொன்ன சீனிவாசன், ஒருமுறை மகா

பெரியவாளே வீடுதேடி வந்து அனுக்கிரகம் செய்த சம்பவத்தையும் சிலிர்ப்புடன் விவரித்தார்.

”பெரியவா சொன்ன மாதிரியே பூஜைகள் செய்து வந்தேன். மூணு வருஷம் ஓடிப்போச்சு! 61-வது வருஷம் பிப்ரவரி 22-ஆம் தேதி. முன்னறிவிப்பு எதுவும் இல்லாம, உத்தமதானபுரம் வீட்டுக்கே வந்துட்டார் பெரியவா. வீட்டில்- மரத்தால் பண்ணின சின்ன கோயில்; அதுலதான் பெரியவா தந்ததையெல்லாம் வெச்சு பூஜை பண்ணிட்டிருந்தேன். பக்கத்திலேயே இருந்த பீரோ மீது சாய்ந்து உட்கார்ந்துண்டார் பெரியவா. பூஜையை அவருக்கும் சேர்த்துப் பண்ணினேன். அம்பாள் பேரிலேயும், பெரியவா பேரிலேயும் பூக்களைப் போட்டுண்டே இருந்தேன். மனசு நிறைஞ்சுபோச்சு.

அதுமட்டுமா? பூஜைக்குப் பால் தேவைன்னு தெரிஞ்சுண்டு, மணப்பாறையிலிருந்து  ஒரு பசு மாட்டை வாங்கிக் கொடுத்தார் பெரியவா!” என்ற சீனிவாசனின் முகத்தில் அப்படியரு பரவசம்.

”மகாபெரியவா கொடுத்த சந்தனம் வளர்ந்துண்டே இருக்கு. அவர் கொடுத்த தேங்காய், உள்ளே இளநீருடன் அப்படியே இருக்கு. என் வீட்டுக்கு ஸ்ரீகாமாட்சி பூஜையைத் தரிசிக்க வரும் அன்பர்கள், தங்களது பிரார்த்தனையையும், வழிபாட்டால் கிடைத்த பலன்களையும், சந்தோஷத்தையும் மனம் விட்டுப் பகிர்ந்துக்கும்போது மனம் பூரிச்சுப்போகும். எல்லாம் காஞ்சி மகானின் கருணை!

அன்னிக்குப் பெரியவா, ‘நீ உலகில் இதற்காகவே பிறந்த காமாட்சிதான். இப்படியே அருள் நிலையில் எழுதிக் கொண்டே இருப்பாய்!’னு ஆசி வழங்கி வாழ்த்தினார். அவர் சொன்னதுபோலவே, பூஜை செய்யும்போது ஏற்படும் அருள் நிலையில்… பாமாலைகள், சதகங்கள், ஸ்லோகங்கள், அருள் மொழிகள்… இப்படி 5,000 பக்கங்கள் எழுதியாச்சு!” என்று நெக்குருக விவரித்தவர், ”நான் ஸ்ரீமடம்  போய்விட்டாலே, நான் எழுதியதை வாசிக்கச் சொல்லி மெய்ம்மறந்து கேட்டுண்டே இருப்பார் மகாபெரியவா. இதனாலேயே மடத்தில், ‘சீனு வந்துட்டானா? இனிமே பெரியவாளோட பூஜை, பிட்சாவந்தனம் எல்லாமே சீனுவுக்குப் பிறகுதான்’னு வேடிக்கையா சொல்வா!”

மலரும் நினைவுகளில் மூழ்கியவர், சற்று நேரம் கழித்து ஏதோ ஞாபகம் வந்தவராக, மீண்டும் தொடர்ந்தார்…

”நான் 58-ல் அவரைப் பார்த்துட்டு ஆயிரம் அகவல் பாடின சமாசாரம் சொன்னேன், இல்லையா? அதே வருஷம் தேவகோட்டையிலே ஒரு கல்யாணம். என்னைக் கூப்பிட்டுப் பிரசாதம் எல்லாம் கொடுத்து, அந்தக் கல்யாணத்தை நடத்துகிற செட்டியாரிடம் கொடுக்கணும்னார் பெரியவா. எனக்குத் தயக்கம். அப்ப, எனக்கு 18- 19 வயசுதான்! ‘நீ தனியா போகவேண்டாம். உன்கூட ஏழெட்டுப் பேர் வருவா’ன்னார் பெரியவா.

சிவப்புக் குஞ்சலம் கட்டின ஸ்ரீமுகப் பிரம்பு,  பிரசாதம் எல்லாம் எடுத்துண்டு போனோம். செட்டியாருக்குச் சந்தோஷம். ஆசார- உபசாரம் பண்ணிட்டார்.

தன் வீட்டுக் கல்யாணத்துக்கு மடத்துலேருந்து பெரியவா ஸ்பெஷலா பிரசாதம் அனுப்பி, ஆசீர்வாதம் பண்ணினதுல ரொம்பக் குளிர்ந்து போயிட்டார் அவர். எங்க எல்லாருக்கும் சாப்பாடெல்லாம் பிரமாதமா போட்டு, 108 ரூபாய் சன்மானமும் கொடுத்தார். அப்புறம், சென்னைக்கு வந்து பெரியவாகிட்டே  செட்டியார் சந்தோஷப்பட்டதையும், 108 ரூபாய் கொடுத்ததையும் சொன்னேன்.

‘நீயே வச்சுக்கோ!’ன்னு சொன்ன பெரியவா,

‘உன்னை எதுக்காகப் போகச் சொன்னேன், தெரியுமா?’ன்னு கேட்டார். நான், ‘தெரியாது’ன்னேன். உடனே, ‘செட்டியாருக்கு ரொம்ப வருஷமா குழந்தையே இல்லை. காமாட்சியைப் பிரார்த்தனை பண்ணிக்கச் சொன்னேன். குழந்தையும் பிறந்தது. அதுக்கு காமாட்சின்னு பெயர் வைக்கச் சொன்னேன். நீதான் காமாட்சி பேர்ல அகவல் ஆயிரம் பாடி இருக்கியே! அதான், உன்னை அவர்கிட்டே அனுப்பினேன்!’ என்றார் பெரியவா.

‘காமாட்சிதான் எனக்கும் கருணை காட்டி னாள். செட்டியாருக்கும் அதே காமாட்சிதான் கருணை செய்தாள். இதை எனக்குப் புரிய வைக்கிறதுக்கு வாய்ப்பா ஒரு சம்பவம் பெரியவா ளுக்குக் கிடைச்சுதே… அதுதான் ஆச்சரியம்!” என்று கைகூப்பி வணங்கிய 72 வயது முதியவர் காமாட்சிதாசன் சீனிவாசன், 1989 முதல் குடும்பத்துடன் சென்னை- பெருங்களத்தூரில் குடியேறிவிட்டாராம்.

இங்கு ஒரு வாடகை வீட்டில், இன்றும் தொடர்கிறது அவரது காமாட்சி பூஜை!


Image may contain: 1 person, drawing


PICTURE COURTESY: SRI SUDHAN KHALIDAS


Thursday, September 14, 2017

ஆதிசங்கரரின் மறு அவதாரமான நம் பெரியவா
என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தவர்
ஸ்ரீலக்ஷ்மிநாராயணன் என்ற பக்தர்.
Image may contain: 1 person, drawing

PICTURE COURTESY: SRI SUDHAN KHALIDAS

ஸ்ரீலக்ஷ்மி நாராயணனின் அப்பாதாத்தா இவர்கள் நல்ல நிலைமையில் இருந்தவர்கள்தான்.ஆனாலும்விதிவசத்தினால் நொடித்தனிலையில் லக்ஷ்மிநாராயணன் மனம் மிகவும் வறுமையின் கொடுமையால் வாடியிருந்தார்.  க்ரோம்பெட் MIT கல்லூரியில் Lab engineer ஆக இருந்த இவருக்கு மாசம் 108 ரூபாய்தான் வருமானம். இவர் வருவாயில்
18 ஜீவன்கள் காலக்ஷேபம் நடந்தாக வேண்டும். இவர் தந்தையும் பெரிய
உத்யோகத்தில் இல்லை. சில வருஷங்கள் ஸ்ரீமடத்தில் இவர் அப்பா  ஒரு பதவியில் கைங்கர்யம் செய்தது மட்டுமேஆனால் தினந்தோறும் சிவ பூஜையைக் கைவிட்டதில்லை.

வயதான தந்தை, மனைவி குழந்தைகளோடு சொற்ப வருமானத்தில் அரை வயிறு கஞ்சி சாப்பிட்டுக் காலம்கடத்தி வந்தார். நேரம் கிடைக்கும்போதெல்லாம் பார்ட் டைம் வேலைகளுக்கும் சென்று வந்தார். ஆனாலும் குடும்பத்தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியவில்லை. அதனால்கடவுள் நம்பிக்கையே அறவே இல்லாமல் இருந்தார்.
அதனால் கடின சித்தம் கொண்டவராக மாறியிருந்தார்.தந்தை விடாமல் சிவ  பூஜை செய்வது கண்டு ''இப்படிகஷ்டப்படரது உன் ஸ்வாமிக்குத் தெரியவில்லையே பின் எதற்கு இந்தப் பூஜையெல்லாம்?''என்று கோபப் படுவதுண்டு.

இந்நிலையில் பெரியவா இவரைத் தடுத்தாட்கொள்ளவே மாம்பலம் ராமேஸ்வரம் தெருவில் குடி கொண்டு அருள வந்தார்.ஆனால் பெரியவா தரிசனத்துக்கு நேரம் இல்லாததோடு, இவ்வளவு கஷ்டப்படும் நமக்கு அருளாத இவர் தரிசனம் நமக்கு எதற்கு என்று அப்பாவிடம்
வாதாடவும் செய்வார். ''உன் பெரியவாளை நம்மளைக் காப்பாத்தச் சொல்லேன்'' என்று அப்பாவிடம் விதண்டவாதம் செய்வார். இவர் எட்டு வயதாக இருந்தபோது பெரியவா இவர் கிராமத்துக்கு வருகை புரிந்திருக்கிறார். அந்த சமயம் அப்பாவுடன் தினம் பெரியவா தரிசனத்துக்குப் போனதுண்டு. பெரியவாளுக்கும் இவர்களுடைய அன்றைய செல்வச் செழிப்பான நிலை தெரியும். அப்பா பெரியவா கைங்கர்யம் செய்திருந்ததால் மாம்பலம் காம்ப்பில் வாஞ்சையோடு குடும்ப நிலை பற்றியெல்லாம் விஜாரித்ததோடு, ''நாளை வெள்ளிக் கிழமை நான் உங்காத்துக்கு வரேன்'' என்று சொல்ல அப்பாவுக்கு அளவிடமுடியா
சந்தோஷம்! பிள்ளை வேலையிலிருந்து வரும் வரை இரவு காத்திருந்து ''நாளை பெரியவா ஆத்துக்கு வரார், நீ காலேஜ்லேர்ந்து நேரா ஆத்துக்கு வந்துடு, வேற வேலைக்குப் போக வேண்டாம்'' என்று சொன்னார். ''எதுக்காக அவர் நம்மாத்துக்கு வரணும்'' என்று 
அலக்ஷியமாகக் கேட்டுவிட்டு சென்றுவிட்டதோடு, மறு நாள் காலேஜ்லேர்ந்து வீட்டுக்கு வராமல் பார்ட் டைம் வேலைக்கும் சென்றுவிட்டார். தெய்வம் குறிப்பிட்டபடி அவர் அகத்துக்கு மறு நாள் நுழைந்துவிட்டது! சாக்ஷாத் மாஹாலக்ஷ்மி போன்று அங்கு வந்து பூஜை அறையில் ஸ்ரீசக்ரத்தை அந்த வீட்டுப் பூஜா க்ருஹத்தில் வைத்து, அனைவரையும் ஆசீர்வதித்து அளவில்லா ஆனந்தம் அடையச் செய்தார்!

ஆதங்கம், கோவத்துடன் தாந்தை இவர் வருகைக்கு காத்திருந்தார். ''மஹா பாவி..இப்படியா அலக்ஷ்யம் செய்வே, எப்படிப்பட்ட மஹான் நம் அகத்துக்கு வந்திருக்கா, நான் நேத்து அத்தனை சொல்லியும் எத்தனை திமிர் இருந்தா இப்படிப் பண்ணுவே'' என்று அடக்க மாட்டாத
கோபத்துடன் கத்தினார்.லக்ஷ்மினாராயணன் நெஞ்சமும் அன்று அந்த சுடு சொற்கள் கேட்டு மனம் கரைந்து கண்களில் நீருடன் உரங்கச் சென்றுவிட்டார்.

மறு தினம் அப்பா தன் மகனின் நிலைமையைக் குற்ற உணர்வுடன் பெரியவா சன்னிதியில் முறையிட்டார்.

''அவனை நாளைக்கு அழைச்சிண்டு வா""
ஞாயிறன்று லக்ஷ்மி நாராயணனுக்குப் பெரியவா தரிசனத்தைத் தவிர்க்க இயலவில்லை.பூஜை முடிந்து எல்லாருக்கும் தீர்த்த ப்ரஸாதம் 
வழங்கிக் கொண்டிருக்கும்போது இவரும் வேண்டா வெறுப்பாக அப்பாவுடன் க்யூவில் போய் நின்றார். இவர் முறை வந்த போது தீர்த்தம் கொடுக்காமல் சைகையால் ஒரு பக்கம் தள்ளை நிற்குமாறு சைகை செய்தார் பெரியவா. மத்தவாளுக்குத் தீர்த்தம் வழங்கியபடியே இவரிடம் பேச ஆரம்பித்தார் ''என்னை ஞாபகம் இருக்கா மண்டு''என ஆரம்பித்தார்.

எட்டு வயசில் பெரியவா தரிசனத்தின் போது மண்டு என்று கூப்பிட்டது அப்போது ஞாபகம் வந்தது.

''ஆமா அப்பா என்னவோ சொல்றாரே..நீ ஏன் இப்படி
இருக்கே?'' ''சரி நீ எங்கே வேலை பண்றே , எத்தனை  மணிக்கு வரே?''

மெதுவாக தன் நிலை பற்றிச் சொன்னார். ஏன் நாங்க இப்படி கஷ்டப்படறோம்?''
''கர்மம் டா ''

அதுவரை எதிர்த்து ஒன்ரும் சொல்லாதவர் ''அப்படின்னா?'' என்று எதிக் கேள்வி கேட்டார்.
''கர்மான்னா என்னன்னா கேக்கறே? அதைச் 
சொன்னாலும் புரியாது,சொல்லவும் தெரியாது''

ஆதி சங்கர பகவத் பாதாள் குழந்தையா பிக்ஷை எடுக்கச் சென்ற போது ஒரு அம்மாவாத்து வாசல்லே நின்று பவதி பிக்ஷாம் தேஹி'' என்று கேட்டார். அன்று த்வாதசி. வீட்டில் ஒரு மணி அரிசி இல்லை பிக்ஷயிட ஆனால் ஒரு காய்ந்த நெல்லிக் கனி மட்டும் இருந்தது. வேறு வழியில்லாமல் குழந்தை சங்கரனுக்கு அதனை பிக்ஷையிட்டாள் அந்த அம்மா.குழந்தை சங்கரன்  ;;இந்த அம்மா இவ்வளவு கஷ்டப்படறா, ஆனால்  இருந்த ஒரு நெல்லிகாயையும் எனக்கு பிஷை போட்டுவிடாள். ''அம்மா மஹாலக்ஷ்மி இவள் தரித்ரத்தை கர்மவினையானாலும் நீ போக்கிவிடம்மா'' என்று கனகதாரா ச்லோகத்தைப் பாட
தங்க நெல்லிகனியாகவே மழை பொழிந்தது! லோகமாதா காலைப் பிடிச்சுக்கோ..அம்பாளை உங்காத்தில் கொண்டு வெச்சுருக்கேன், அவளைக் கெட்டியா புடிச்சுக்கோ..தாயாட்டமா உன்னைக் காப்பாத்துவா..'' 


Image may contain: 1 person, drawing

                  PICTURE COURTESY: SRI SUDHAN KHALIDAS


இப்படியாக1 1/2 மணி நேரம் தீர்த்தம் கொடுத்துக் கொண்டே
அருளாசி வழங்கினார் பெரியவா!
(எத்தகைய பாக்யம்!)


அப்போதும் லக்ஷ்மி நாராயணனுக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் அவர் மனைவி மரைமுகமாக கனகதாரா ச்லோகத்தைப் பெரியவா உபதேசம் செய்ததாகவே நினைத்தால். ஆனால் இவர் அதை லக்ஷ்யம் செய்யவில்லை. மூன்று வாரம் சென்றது. ஒரு நாள்  வழக்கம் போல் 10 மணிக்கு வீடு திரும்பியவர் சட்டையை மட்டும் கழற்றிவிட்டு கைகால் கூட அலம்பாமல் கனகதார ஷ்லோகத்தைச் சொல்ல ஆரம்பித்தார்! ஆடுத்த நாளே அதன் மகிமை தெரிந்தது! ஆதி சங்கரரின் அவதாரமான பெரியவா உபதேசம் செய்ததாச்சே!

ஆடுத்த நாள் இவர் மேலதிகாரி அயல் நாடு யுனிவர்சிடிக்கு வேலை மாற்றம் ஆகி சென்ரார். விமான நிலையத்தில் ஒரு கவரை இவரிடம் கொடுத்து.அதை டைரக்டரிடம் கொடுக்குமாறு சொன்னார். எப்போதும் போல் அலக்ஷியமாக அந்தக் கவரை தூக்கி எறிந்துவிட்டு மூன்றாம் நாள் அந்தக் கவரை டைரக்டரிடம் கொடுத்து தயக்கத்துடன் நின்றார்.

கவரைப் பிரித்துப் படித்த டைரக்டர் ''உட்காருங்கள்..உங்களைப் பற்றி இந்திரன் சந்திரன் என்றெல்லம் அந்த அயல் நாட்டுக்காரர் எழுதியிருக்கார்; உங்க சம்பளத்தைஎட்டு மடங்கா உயர்த்தச் சொல்லி எனக்கு ஆர்டர் போட்டிருக்கார்'' என்று இவரை திகைக்கச் செய்தார்.

ஸ்ரீமஹாபெரியவாளின் அனுக்ரஹம் அன்றிலிருந்து கொட்ட ஆரம்பித்துவிட்டதாம்!
மஹாலக்ஷ்மி கொட்டு கொட்டுன்னு கொட்றா! என்று இவர் பூரிக்கும் அளவுக்கு இவர் தொட்டதெல்லாம் பொன்னாகி ஒரு எலெக்ரானிக் உபகரணத் தொழில் செய்து இவரை கோடீஸ்வரராக ஆக்கிவிட்டது!!

ப்ரத்யக்ஷ பரமேச்வரன் சாக்ஷாத் ஆதி சங்கர அவதாரம் நம் பெரியவா!

Image may contain: drawing


               PICTURE COURTESY: SRI SUDHAN KHALIDAS

ஜெய ஜெய சங்கர
ஹர ஹர சங்கர