Thursday, June 29, 2017தினமும்  ராமாயணம் முழுவதும்  படித்தால்  எவ்ளோ புண்யம் ? 
எவ்ளோ பலன்  ?  
எவ்ளோ நல்லது ? 

ஆனால் நம்மால்  தினமும் ராமாயணம் முழுவதும் தினமும் படிக்க முடியுமா ?

என்றால் ...


நிச்சயம் முடியும் எப்படி ?

காஞ்சி பெரியவரால்  அருளி செய்யப்பட மிக  எளிய அற்புதமான கிடைத்தார்  கிடைத்தற்கரிய  பொக்கிஷமான  வெறும் ஒன்பது  வரிகளை  மட்டுமே கொண்ட 30 வினாடிகளில்  சொல்லி முடித்து  அனைத்து பலன்களையும்  பெற்று  தரக்கூடிய  அந்த *ஒன்பது* வரிகளை மட்டுமே உடைய ராமாயணம் உங்களுக்காக , உலக 
நன்மைக்காக


இதோ  .....

ஸ்ரீ ராமம்  ரகுகுல  திலகம்  

சிவதனு சாக்ரிஹத


சீதா ஹஸ்தகரம்  

அங்குல்யா பரண சோபிதம்  

சூடாமணி தர்சனகரம்

ஆஞ்சநேய மாஸ்ரயம்  

வைதேஹி மனோகரம்

வானர சைன்ய சேவிதம்

சர்வமங்கள


கார்யானுகூலம்

சததம் 
ஸ்ரீ ராமச்சந்திர
பாலயமாம்

ஸ்ரீராம் ஜெய்ராம்  
ஜெய்ஸ்ரீராம்

இவ்ளவு தான் ஸ்வாமி ஸ்லோகம்

முழு ராமாயணமும்   படித்து  முடித்தாகி  முடித்தாகி விட்டது  

நல்லதுன்னு
நினைத்தால் நாலு பேருக்கு இல்ல கோடி பேருக்கு சொல்லுங்க உங்க வம்சம் ராம நாமத்தால்  வளரும்..........இது  சத்ய வாக்கு  *மகா பெரியவா*  சொன்னது

Image result for Ramayanam in one picture


ராமாயணம் ஒரே படத்தில்


Related image   Related image

Thursday, June 22, 2017

டாக்டர் தியாக. சத்தியமூர்த்தி, தமிழகத்தின் தலைசிறந்த தொல்லியல் ஆய்வாளர்களுள் ஒருவர். தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், குஜராத், டெல்லி, ராஜஸ்தானம் என இந்தியாவின் பல பகுதிகளில் தொல்லியல் ஆய்வுகளை நிகழ்த்தியவர். இந்தியத் தொல்பொருள் கள ஆய்வுத் துறை மூலம் இவர் ஆற்றிய பணிகள் குறிப்பிடத்தக்கன. தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், மகாபலிபுரம் போன்ற இடங்களில் இவர் செய்த ஆய்வுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.
அவர் சொல்கிறார்:
சிறு வயதிலிருந்தே அவரை தரிசித்திருக்கிறேன். தொல்லியலாளரான பின்னர் அவரைப் பார்க்கப் போனபோது, “நீ என்ன வேலை பார்க்கிறாய்?” என்று கேட்டார். அப்போது கோவில்கள் திட்டப்பணியில் தொல்லியல் துறையில் செய்யும் பணிபற்றிச் சொன்னேன். “நீ மகாபலிபுரம் போயிருக்கிறாயா? அங்கு என்ன பார்த்தாய்?” என்று கேட்டார். நான் பஞ்சபாண்டவர் ரதம், மகிஷாசுரமர்த்தினி என்றெல்லாம் சொன்னேன்.
“அங்கு பல்லவர்களுடைய கடிகாரம் ஒன்று இருக்கிறதே, அதைப் பார்த்திருக்கிறாயா?” என்று கேட்டார். ஏதோ விளையாட்டுக்குச் சொல்கிறார் என்று நினைத்து, “பல்லவா காலத்தில் ஏது பெரியவா கடிகாரம்?” என்று கேட்டேன். “இருக்கு. இருக்கு. நீ அடுத்தவாட்டி போறப்போ நல்லா பார்த்துட்டு வா!” என்றார்.
மறுமுறை போனபோது, “கடிகாரம் பார்த்தாயா?” என்று கேட்டார். “இல்லை பெரியவா, எனக்குத் தெரியவில்லை” என்றேன். “அர்ஜுனன் தவம் பார்த்தியா?” என்று கேட்டார். “பார்த்தேன்” என்றேன். “அந்த அர்ஜுனன் தபஸ் சிற்பத்திற்குக் கீழே நதி ஒன்று ஓடிக் கொண்டிருக்கும். சின்ன விஷ்ணு கோயில் ஒன்று இருக்கும். பக்கத்தில் ரிஷி ஒருவர் உட்காந்து கொண்டிருப்பார். கீழே அமர்ந்து சிலர் வேதம் சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஒருவர் ஆற்றில் நனைத்த துணியைப் பிழிந்து கொண்டிருப்பார். மற்றொருவர் நின்று கொண்டு மாத்யான்னிஹ வந்தனை செய்து கொண்டிருப்பார். (அதில் ஒருவர் இரண்டு கைகளையும் கோர்த்து விரலிடுக்கால் உச்சியிலிருக்கும் சூரியனைப் பார்க்கிறார்) பனிரெண்டு மணிக்கு இந்த விஷயம் நடந்தது என்பதைச் சிற்பி தெரிவிக்கிறார். அதைத்தான் ‘பல்லவ கடிகாரம்‘ என்று சொன்னேன்” என்று பெரியவர் சொன்னார்.
பெரியவரின் நுணுக்கமான பார்வையைக் கண்டு எனக்கு பிரமிப்பு ஏற்பட்டது.

Image may contain: 9 people
Image result for பல்லவ கடிகாரம்
Image result for பல்லவ கடிகாரம்

Image may contain: 1 person, foodRelated image

Sunday, June 18, 2017

Related image


ஒரு நாள் ஒரு கிணறு அருகில் ஒரு கோபிகை ஸ்த்ரீ தண்ணீர் குடத்தை யாராவது தூக்கிவிடுவார்களா என எதிர்பார்த்து  காத்துக் கொண்டிருந்தாள்.

அப்போது அங்கே சிறுவனான ஸ்ரீகிருஷ்ணன் வந்து கொண்டிருந்தான்.
கிருஷ்ணனைப் பார்த்த அந்த கோபிகை  தண்ணீர் குடத்தை தூக்குவதற்காக கிருஷ்ணனை கூப்பிட்டாள்.
ஆனால் கிருஷ்ணனோ கூப்பிட்ட குரல் கேட்காதது போல சிறிதும் கவனிக்காமல் போய்க்கொண்டிருந்தான்.
கோபிகையோ கிருஷ்ணனை கூப்பிட்டு கூப்பிட்டு தொண்டை வரண்டு விட்டது.
கிருஷ்ணனோ திரும்பிகூட பாராமல் போய்விட்டான்.ஒருவழியாக கோபிகை நீர் நிறைந்த குடத்தை தலையில் சுமந்தபடி தன் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
தன் வீடு வந்தவள் அதிர்ந்தாள்.
அங்கே ஸ்ரீகிருஷ்ணன் அவள் வீட்டு வாசலில் அவளுக்காக காத்திருந்தான்.கோபிகை வாசல் அருகே வந்ததும்  தானே முன்வந்து நீர் நிறைந்த குடத்தை கீழே இறக்கி வைத்தான்.
உடனே கோபிகை 
”கிருஷ்ணா குடத்தை தூக்குவதற்காக உன்னை அழைத்தபோது நீ திரும்பிகூட பாராமல் சென்றுவிட்டாய்.ஆனால் இப்போது கூப்பிடாமல் குடத்தை இறக்கி உதவி செய்தாயே  ஏன்” என்று கேட்டாள்.
அதற்கு ஸ்ரீகிருஷ்ணன் தன் மந்தகாச இனிமையான புன்சிரிப்போடு மெதுவாக கோபிகையிடம் இப்படி கூறினான்.

*" நான் பாரத்தை இறக்கி வைப்பவன் ஏற்றுபவனல்ல."*
Image result for krishna with gopis

Image result for krishna with flute and peacock
Image result for krishna with gopika

Saturday, June 17, 2017


சந்தோஷத்தை நாளும் வழங்கும் 
சனி பகவான் கவசம்

Related image


கருநிறக் காகம் ஏறி 
காசினி தன்னை காக்கும் 
ஒரு பெரும் கிரகமான 
ஒப்பற்ற சனியே! உந்தன் 
அருள் கேட்டு வணங்குகின்றேன் 
ஆதரித் தெம்மை காப்பாய்! 
பொருளோடு பொன்னை அள்ளி 
பூவுலகில் எமக்குத் தாராய்! --------- (1)

 
ஏழரை சனியாய் வந்தும். 
எட்டினில் இடம் பிடித்தும். 
கோளாறு நான்கில் தந்தும். 
கொண்டதோர் கண்ட கத்தில் 
ஏழினில் நின்ற போதும் 
இன்னல்கள் தாரா வண்ணம் 
ஞாலட்தில் எம்மைக் காக்க 
நம்பியே தொழுகின்றேன் நான்! --------- (2)

பன்னிரு ராசி கட்கும் 
பாரினில் நன்மை கிட்ட 
எண்ணிய எண்ணம் எல்லாம் 
ஈடேறி வழிகள் காட்ட 
எண்ணெயில் குளிக்கும் நல்ல 
ஈசனே உனைத்துதித்தேன் 
புண்ணியம் எனக்கு தந்தே 
புகழ்கூட்ட வேண்டும் நீயே! --------- (3)

கருப்பினில் ஆடை ஏற்றாய்! 
காகத்தில் ஏறி நின்றாய்! 
இரும்பினை உலோகமாக்கி 
எள்தனில் பிரியம் வைத்தாய்! 
அரும்பினில் நீல வண்ணம் 
அணிவித்தால் மகிழ்ச்சி கொள்வாய்! 
பெரும் பொருள் வழங்கும் ஈசா 
பேரருள் தருக நீயே! --------- (4)

சனியெனும் கிழமை கொண்டாய்
சங்கடம் விலக வைப்பாய் 
அணிதிகழ் அனுஷம் , பூசம் 
ஆன்றதோர் உத்ரட்டாதி.
இனிதே உன் விண்மீ னாகும்
எழில் நீலா மனைவியாவாள்
பணியாக உனக்கு ஆண்டு
பத்தொன்போதென்று சொல்வார்! --------- (5)

குளிகனை மகனாய் பெற்றாய்!
குறைகளை அகல வைப்பாய்!
எழிலான சூரியன் உன்
இணையற்ற தந்தை யாவார் 
விழிபார்த்து பிடித்து கொள்வாய்!
விநாயகர், அனுமன் தன்னை
தொழுதாலோ விலகிச் செல்வாய்
துணையாகி அருளை தாராய்!  --------- (6)

அன்னதானத்தின் மீது
அளவிலா பிரியம் வைத்த
மன்னனே!  சனியே!  உன்னை
மனதார  போற்றுகின்றோம்!
உன்னையே சரணடைந்தோம்!
உயர்வெல்லாம் எமக்குத்தந்தே.
மன்னர் போல் வாழ்வதற்கே
மணியான வழிவகுப்பாய்!  ---------  (7)

மந்தனாம் காரி , நீலா
மணியான மகர வாசா!
தந்ததோர் கவசம் கேட்டே
சனியென்னும் எங்கள் ஈசா
வந்திடும் துயரம் நீக்கு
வாழ்வினை வசந்தம் ஆக்கு!
எந்த நாள் வந்த போதும்
இனிய நாள் ஆக மாற்று!  ......... (8)
Displaying IMG-20170507-WA0007.jpg


 Image result for 9 கோள்களின் தமிழ்ப் பெயர்கள்

Friday, June 16, 2017

முக்திநாத் யாத்திரை - 5

குஹேஸ்வரி கோவில்

பசுபதி நாதரை தரிசித்த எங்களை பேருந்தில் குஹேஸ்வரி கோவில் (64 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று). வாசலில் இறக்கி விட்டு தரிசனம் முடிந்ததும் அருகில் இருந்த நாங்கள் தங்கி இருந்த HOTELக்கு வரச் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார் பேருந்தின் சாரதி.  (அட இது முன்பே தெரிஞ்சிருந்தா நாங்களே ஒரு எட்டு போய் அந்த சக்தி தேவியை தரிசித்திருப்போம்).  என்ன செய்ய இந்த TRAVEL AGENCY GUIDE சொல்வதைத் தானே கேட்க வேண்டி இருக்கிறது.  


(பார்வதி தேவியின் உடல் பாகம் விழுந்த இடம்பிரதாப் மல்லா என்ற
அரசம் 17ம் நூற்றாண்டில் கட்டிய கோயில் தட்சனின் மகளான தாட்சாயணி ஈசனை மணக்கிறாள். தட்சனுக்கு மருமகன் எல்லாம் வல்லவர் என்று அறிய முடியாமல் மாயை மறைக்கிறது. அகங்காரத்தில் இருக்கும் தட்சன் ஒரு யாகம் செய்ய ஏற்பாடு செய்கிறான். அந்த யாகத்தில் எல்லா தேவர்களுக்கும் அவரவருக்கு உரிய அவிர்ப் பாகத்தைக் கொடுக்கிறான் தட்சன் ஈசனைத் தவிர. ஈசனை யாகத்துக்கு அழைக்கவும் இல்லை. யார் பேச்சையும் செவிமடுக்காத தட்சன் யாகத்தை தொடரும்போது அழைப்பில்லாமல் பிறந்தகம் தானேனு நினைத்துக் கொண்டு வருகிறாள் தாட்சாயணி. அவளை மகள் என்றும் மதிக்காமல் அலட்சியம் செய்கிறான் தட்சன். தாட்சாயணி அவனுக்கு எடுத்துச் சொல்லியும் அலட்சியம் செய்கிறான் தட்சன்.


மனவேதனையுடன் அந்த யாகத் தீயில் விழுந்து உயிர் விடுகிறாள் தாட்சாயணிதன் சக்தியை இழந்த சிவனின் உக்கிரத்தை அடக்க முடியவில்லைதட்சனை அழித்து விட்டு சதியின் உடலைத் தோளில் போட்டுக் கொண்டு ருத்ர தாண்டவம் ஆடத் தொடங்க அவர் கோபத்தைத் தணிக்கும் பொருட்டு மஹாவிஷ்ணு தன் சுதர்சன சக்கரத்தால் அன்னையின் உடலைத் துண்டு துண்டாக்க அது பாரத தேசம் எங்கும் ஒவ்வொரு பாகமும் போய் விழுகிறதுஅம்மாதிரி விழுந்த இடங்களைஸ்ரீமஹாசக்தி பீடம்என்று சொல்கிறார்கள்நேபாளத்தில் அம்மாதிரி அன்னையின் ஒரு மார்புப் பகுதி விழுந்த இடம்தான் குஹேஸ்வரி கோவில்நேபாளிகள் இந்தக் கோயிலைக் குயேஸ்வரி மந்திர் என்று அழைக்கிறார்கள்.

ஆற்றுப் பாலத்தைக் கடந்ததும்சற்று மேலே படிகள் ஏறிக் கோயிலை அடைய வேண்டும்  உள்ளே குகை போன்ற அறைக்குள் போனதும் ஒரு பள்ளத்தில் அருவமாக அன்னை வீற்றிருக்கிறாள்பிண்டி ஸ்வரூபமாக இருக்கும் அந்த அருவுருவம் தான் அன்னையின் மார்பாகக் கருதப்பட்டுப் பூஜைகள்அலங்காரங்களநைவேத்யங்கள் முதலியன அதற்குச் செய்யப் படுகின்றனபூஜை செய்வது எல்லாம் நேபாளப் பெண்களே.

குஹேஸ்வரி கோவிலின் பிரகாரத்தில் என் கணவர்கோவில் வளாகத்தில் நடந்து கொண்டிருந்த பூஜை


ஒரு பெண்மணி சுற்றுப் பிரகாரத்தில் 108 விளக்குகள் ஏற்றிக் கொண்டிருந்தார்.

அப்பொழுது தான் அந்தக் கோவிலில் ஒரு திருமணம் நடந்து முடிந்திருந்தது.  மிகவும் எளிமையான திருமணம்.  பெண், மாப்பிள்ளையை புகைப்படம் எடுப்பதற்குள் அவர்கள் கிளம்பிச் சென்று விட்டார்கள். 


தொடரும் ...........