Wednesday, June 7, 2017


Image may contain: 1 person, closeup

திண்டிவனம் பக்கத்துலே ஒரு பத்தாவது கிலோமீட்டரில் இருக்கிற நல்லாம்பூர் அப்படீங்கற ஒரு சின்ன கிராமம். இந்த ஊர்ல தான் நான் பிறந்தேன். என்னுடைய தகப்பனாரோட தகப்பனார்,   அதாவது என்னுடைய தாத்தாவும், மகா பெரியவாளோட பூர்வாசிரம தகப்பனாரும் ரொம்ப நெருங்கின சிநேகிதாளா இருந்தவா.   ஒரு சமயம் பெரியவாளோட தகப்பனார் என்னுடைய தாத்தாவிடம், “கிருஷ்ணசாமி, உனக்கு இவ்வளவு நில புல சொந்தம் எல்லாம் இருக்கே, இதெல்லாம் எப்பவும் ிரந்தரமா இருக்கும்னு நினைச்சிண்டு இருக்கியா? இதெல்லாம் காணாமப் போயிடும் ஒரு நாள். இதெல்லாம் இருந்ததுன்னே தெரியாமப் போயிடும். அப்படி ஆயிடும். ஆனா என்னென்னிக்கும் இருக்கக் கூடிய ஒரே ஒரு விஷயம் மட்டும் உண்டு. அது கல்வி. அதனால ஒரு சின்ன ஸ்கூல் ஒண்ணு இங்கே நீ ஆரம்பிக்கணும். அதுக்கு உனக்கு என்ன வேணுமோ என்னாலான உதவியை நான் கட்டாயமா செய்கிறேன்என்று சொல்லியிருக்கிறார்.   அவர் Education Department – ல் Inspector of Schools ஆக இருந்தவர்.
Related image

1903-ல்நல்லாம்பூர் துவக்கப் பள்ளிஅப்படீங்கற பேரில் என் தாத்தா ஒரு பள்ளியை ஆரம்பித்தார். 1905-ல் அந்தப் பள்ளிக்கு recognition – ம் கிடைத்தது. அந்த மாவட்டத்திலேயே முதன் முதல் recognition கிடைத்த பெருமையும் அந்தப் பள்ளிக்கு உண்டு. அதன் பின்னர் பல வருடங்கள், அந்தப் பள்ளி Inspection – க்கு மஹா பெரியவாளின் தந்தை வந்திருக்கிறார். எங்கள் ஆத்தில் எல்லாம் தங்கியிருக்கிறார். அதை நாங்கள் மிகவும் பெருமையாக நினைக்கிறோம். எங்கள் தாத்தா காலத்திற்குப் பிறகு எங்க அப்பாவின் management – ல் இந்தப் பள்ளிப் பணி continue ஆகிக் கொண்டிருந்தது.

ஒரு காலக் கட்டத்தில் எல்லாப் பள்ளிகளையும் பஞ்சாயத்துக்குக் கொடுத்து விட வேண்டும் அப்படீன்னு ஒரு ரூல் கொண்டு வந்தா. அந்த காலக் கட்டத்தில் private management – ல் இருந்த பல ஸ்கூல்கள் மீது பல complaints வந்த காரணத்தால் அரசு இந்த ரூலைக் கொண்டு வந்தது. இந்த ஆணை பற்றிக் கேள்விப்பட்டவுடன் எனது அப்பாவுக்கு மிகவும் மனக் கஷ்டமாகி விட்டது. உடனே என் அப்பா என்னையும் அழைத்துக் கொண்டு, பெரியவாளை தரிசனம் செய்து விட்டு வரக் கிளம்பி விட்டார். எனக்குப் பனிரெண்டு வயதிருக்கும் அப்போது பெரியவா அப்பாவிடம், “சிவன் சாரோட தகப்பனார் உன்னோட வீட்டில் தங்கியிருந்து ஆகாரம் எல்லாம் பண்ணியிருக்கிறாரே, உனக்குத் தெரியுமா ?” என்று கேட்டார்.

எனது தகப்பனாரும், “அமாம், தெரியும்என்று கூறியிருக்கிறார். “சரி, என்ன விஷயமா வந்திருக்கே?” என்று பெரியவா கேட்டார். என் அப்பா விஷயத்தைக் கூறியவுடன், ” சரி, எழுதிக் கொடுத்துடு. ஒண்ணும் ஆகாதுஎன்று சொல்லி பிரசாதம் கொடுத்து ஆசி வழங்கி அனுப்பி வைத்து விட்டார். பெரியவா பேச்சுக்கு மறுப்பேது? பஞ்சாயத்துக்கு எங்கள் பள்ளியைக் கொடுக்க சம்மதிக்கிறோம் என்று எழுதிக் கொடுத்து விட்டார் என்னுடைய அப்பா. இது நடந்து சில நாட்களுக்குப் பிறகு ஒரு ஆர்டர் வந்தது. அதைப் படித்தவுடன், சந்தோஷத்தில் குதிக்கிறார் என்னுடைய அப்பா. ஒன்றும் புரியவில்லை எங்களுக்கெல்லாம். கடைசியில் என்னவென்று பார்த்தால் அதில் கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தது.

“There are lot of complaints on the schools in this district. But, this particular school, “Nallambur Aided Elementary School” which was started in 1903 and got recognized in 1905 that is currently run by the son of the founder. There is not even a single complaint on this school. Hence this school can be continued to run under the present management. Rest of the schools in this district can be given to Panchayat.”

இந்த ஆர்டரைப் பார்த்த சந்தோஷத்தில் உடனே என்னையும் அழைத்துக் கொண்டு காஞ்சீபுரம் கிளம்பி விட்டார் என்னுடைய அப்பா. பெரியவாளை நமஸ்காரம் செய்தோம். “பெரியவா அனுக்ரஹத்தில் எல்லாம் நல்ல படியாக முடிந்ததுஎன்று கூறினார் அப்பா.    அதற்கு பெரியவா சிரித்துக் கொண்டே, “காமாட்சி அப்படிப் பண்ணிட்டாளாக்கும்!” என்று  கேட்டார். என் அப்பா, “பெரியவா, நீங்க எழுதிக் கொடுத்துடு, ஒண்ணும் ஆகாது அப்படீன்னு சொன்னப்ப நிஜமாவே எனக்கு ஒண்ணும் புரியலேஎழுதிக் கொடுத்துடுஒண்ணும் ஆகாது-ன்னா எப்படி அது அப்படீன்னு நினைச்சுண்டிருந்தேன்.

ஆனா பெரியவா சொல்றாநாம பண்ணிடணும்னு அப்படியே பண்ணிட்டேன். இப்பதான் எனக்கு அதுக்கு அர்த்தம் புரிகிறதுஎன்று கண்களில் ஜலம் மல்க நமஸ்காரம் செய்தார்.

இந்த மாதிரி பனிரெண்டு வயது சிறுவனாக நான் இருந்த காலத்திலேயே , “எல்லாமே நான் தான்!” என்று என்னை ஆட்கொண்டு விட்டார் மஹா பெரியவா!”

சொன்னவர்
விசுவின் அரட்டை அரங்கத்தில் வரும் ஸ்ரீதர்.




Image may contain: one or more people

13 comments:

  1. இன்று வைகாசி அனுஷம். ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் அவதார தினம். ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளுக்கு அடியேனின் பலகோடி சாஷ்டாங்க நமஸ்காரங்களைக் கூறிக்கொண்டு விடைபெறுகிறேன்.

    மீண்டும் 2-3 நாட்கள் கழித்து வந்து மட்டும் இந்தப்பதிவினைப்
    பொறுமையாகப் படித்துப் பார்ப்பேன். இன்று முதல் அடுத்த 2-3 நாட்கள் நான் மிகவும் பிஸியாக்கும்.

    10.06.2017 சனிக்கிழமை என்னைப்பெற்ற மகராஜி என் ஆசை அம்மா வருகிறாள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வாங்கோ கோபு அண்ணா

      //10.06.2017 சனிக்கிழமை என்னைப்பெற்ற மகராஜி என் ஆசை அம்மா வருகிறாள்.//

      அம்மா என்றதுமே அம்மாவின் வெள்ளித் தட்டு காணாமல் போனது, நீங்கள் சமயோசிதமாக செயல் பட்டு திரும்பி வாங்கி வந்ததுதான் என் மனக்கண்ணில் தோன்றுகிறது.

      Delete
    2. http://gopu1949.blogspot.in/2013/04/6.html

      ஜெயாவுக்கு ஞாபக சக்தி மிகவும் அதிகம்.

      இதோ அந்தப்பதிவுக்கு ஜெயா கொடுத்துள்ள பின்னூட்டம்:

      JAYANTHI RAMANI April 6, 2013 at 9:54 PM

      படித்த உடன் மனது கனமாகி விட்டது.
      நம்ப காலத்துல எல்லாம் நம்ப அம்மாக்கள் நிறைய கஷ்டப்பட்டிருக்கார்கள். கண்டிப்பாக நாங்கள் எல்லாம் அந்தக் கஷ்டங்கள் படவில்லை. கணவன், குடும்பம் இதே அவர்களின் எல்லாமாகவே இருந்த காலம். முதல் பாராவைப் படித்ததும் என் அம்மாவின் நினைவு வந்து விட்டது. அடுத்த வாரமாவது போய் பார்க்க வேண்டும்.

      தட்டு தொலைந்து கிடைத்ததை நீங்கள் எழுதி இருப்பது ஒரு கதை போலவே உள்ளது. உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்வது சிலருக்கு மிகவும் சுலபமாக உள்ளது. நல்ல வேளைக்கு அந்தப் பெண்ணின் கணவனாவது நல்லவராக இருந்தாரே.

      //என் தாயார் தன் வாழ்க்கையில் பல கஷ்டங்களை அனுபவித்தவர்கள். அவர்கள் தன் வாழ்நாளில் சந்தித்த பல அனுபவங்களை என் கீழ்க்கண்ட மிகப்பெரிய பதிவினில் ஓரளவு விளக்கியுள்ளேன். //

      இப்படி ஒரு அருமையான மகன் கிடைத்ததை நினைத்து கண்டிப்பாக கவலைகளை மறந்திருப்பார்கள்.

      பொக்கிஷங்களின் சிகரம் இந்தப் பதிவு.

      உங்கள் சுவாரசியமான பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்.

      Delete
  2. மேலும் பிறந்தாத்துப்பக்கமே பல மாதங்களாக எட்டிப்பார்க்காத ஜெயா மேல் கடும் கோபத்தில் இருக்கிறார், கோபு அண்ணா.
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :(

    ReplyDelete
    Replies
    1. // அந்த பிறந்தாத்து பக்கம் போனதாலதான் இந்த பிறந்தாத்து பக்கம் எட்டிப் பார்க்க முடியல. போறாத்துக்கு தம்பியும், தம்பி பொண்டாட்டியும் பொண்ண புக்காத்துல கொண்டு விட போய் இருக்கறதால அப்பாவ இங்க அழச்சுண்டு வந்திருக்கேன். முந்தா நேத்து தான் வந்தேன். நீங்க 2-3 நாள் கழிச்சு வரதுக்குள்ள வந்துடறேன்.//

      மெயிலில் உங்களுக்கு நான் கொடுத்த பதில். மீண்டும் பதிகிறேன்.

      Delete
  3. மூன்று படங்களும் மிகவும் அருமையாக உள்ளன.

    ReplyDelete
    Replies
    1. அதிலும் எனக்கு பிடித்தது அந்த மூன்றாவது படம். பழுத்த பழமாக (சிவப் பழமாக) மகா பெரியவா இருக்கும் படம்.

      Delete
  4. விசுவின் அரட்டை அரங்கத்தில் பங்குகொண்ட ஸ்ரீதர் அவர்கள் தன் 12-வது வயதில் நடந்துள்ளதோர் அருமையான நிகழ்ச்சியினை நன்கு நினைவில் வைத்துக்கொண்டு சொல்லியுள்ளது கேட்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. சில பேர் LKG TEACHER பேரைக்கூட ஞாபகம் வெச்சிண்டிருப்பா உங்கள மாதிரி. ஸ்ரீதரும் உங்களைப் போல ஞாபக சக்தியில் யானை போல் இருக்கிறது.

      நமக்கும் பெரியவாளைப் பற்றிய அருமையான நிகழ்ச்சி பற்றி தெரிய வந்தது.

      ஜெய ஜெய சங்கர, ஹர, ஹர சங்கர

      Delete
  5. //இந்த ஆர்டரைப் பார்த்த சந்தோஷத்தில் உடனே என்னையும் அழைத்துக் கொண்டு காஞ்சீபுரம் கிளம்பி விட்டார் என்னுடைய அப்பா. பெரியவாளை நமஸ்காரம் செய்தோம். “பெரியவா அனுக்ரஹத்தில் எல்லாம் நல்ல படியாக முடிந்தது” என்று கூறினார் அப்பா.

    அதற்கு பெரியவா சிரித்துக் கொண்டே, “காமாட்சி அப்படிப் பண்ணிட்டாளாக்கும்!” என்று கேட்டார்.

    என் அப்பா, “பெரியவா, நீங்க எழுதிக் கொடுத்துடு, ஒண்ணும் ஆகாது அப்படீன்னு சொன்னப்ப நிஜமாவே எனக்கு ஒண்ணும் புரியலே… எழுதிக் கொடுத்துடு… ஒண்ணும் ஆகாது-ன்னா எப்படி அது அப்படீன்னு நினைச்சுண்டிருந்தேன்.

    ஆனா பெரியவா சொல்றா… நாம பண்ணிடணும்னு அப்படியே பண்ணிட்டேன். இப்பதான் எனக்கு அதுக்கு அர்த்தம் புரிகிறது” என்று கண்களில் ஜலம் மல்க நமஸ்காரம் செய்தார்.//

    படிக்கும் போதே நமக்கு மிகவும் த்ரில்லிங்காக உள்ளது. இதில் சம்பந்தப்பட்ட அவர்களுக்கு எப்படி சந்தோஷமாக இருந்திருக்கும்.

    மஹான்கள் மஹான்கள் தான். அவர்கள் வாக்கு அப்படியே பலித்துவிடும்.

    சோதனையிலும், அந்தப்பள்ளி நிர்வாகத்தின் சாதனை மட்டுமே நிரூபிக்கப் பட்டுள்ளது.

    பகிர்வுக்குப் பாராட்டுகள் + நன்றிகள், ஜெயா.

    ReplyDelete
    Replies
    1. //மஹான்கள் மஹான்கள் தான். அவர்கள் வாக்கு அப்படியே பலித்துவிடும். //

      அதிலும் மகா பெரியவா வாழ்ந்த காலத்தில் நாமும், பிறந்து வளர்ந்து, வாழ்ந்ததே மிகப் பெரிய கொடுப்பினை நமக்கு.

      Delete
  6. Replies
    1. புதிய செய்தியை உங்களுக்கு தெரியப்படுத்தியதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

      Delete