Wednesday, May 31, 2017

பெரியவா சரணம் !!!

!! பெரியவா என்ன ப்ரஸாதம் குடுத்திருப்பார்...ன்னு சொல்லுங்கோ!!

பெரியவாளே கதி! என்றிருக்கும் பல குடும்பங்களில் ஒன்றான ஒரு டெல்லி வாழ் குடும்பத்தில் மனைவிக்கு நெடுநாட்களாக ஏதோ உடலில் கோளாறு. என்ன சாப்பிட்டாலும் வாந்தி வந்து விடும். வெறும் ஹார்லிக்ஸை கரைத்துக் குடித்தபோது அதுவும் வாந்தியாக வெளியே வந்து அந்த அம்மா மயக்கம் அடைந்ததும், கணவர் பதறி அடித்துக் கொண்டு ஹாஸ்பிடலில் சேர்த்தார்.

இரவு முழுதும் I C U வில் இருந்தாள். நிஜமாகவே ரொம்ப ரொம்ப நல்ல டாக்டர் வந்து " ஒங்க மனைவிக்கு உடல்ல எந்த கோளாறும்
இல்லே......இந்த டெஸ்ட் அந்த டெஸ்ட்...ன்னு அனாவச்யமா பணம் பிடுங்குவா .......அதுனால, இப்பவே டிஸ்சார்ஜ் பண்ணிண்டு பேசாம ஆத்துக்கு போங்கோ" என்று சொன்னார். இவரும் பணத்தை செட்டில் பண்ணிவிட்டு மனைவியை பார்க்கச் சென்றார்.

அவள் சொன்னாள்..."நான் நேத்திக்கு ஆத்ல மயக்கமா விழுந்ததும், எனக்கு என் முன்னால பெரியவா நின்னுண்டு இருந்தா மாதிரி இருந்துது........ஒனக்கு எல்லாம் செரியாயிடும்.....நாளைலேர்ந்து காலமே பல் தேச்சதும், ஒரு வில்வத்ல கொஞ்சம் விபூதி வெச்சு மொதல்ல சாப்டு....நாப்பத்தஞ்சு நாள்ல எல்லாம் செரியாப்
போய்டும்....ன்னு சொன்னார்"

வீட்டுக்கு போன மறுநாளே விடிகாலை வில்வமும் விபூதியும் சாப்பிட ஆரம்பித்தாள். வாந்தி என்ற வார்த்தையையே மறந்து விட்டாள்.

சரியாக 43 ஆம் நாளில், ஏதோ ஞாபகமறதியால் வில்வம் சாப்பிடாமல், காப்பியைக் குடித்துவிட்டாள். அவ்வளவுதான்! சாயங்காலம் கணவர் ஆபீசிலிருந்து வந்ததும் வாந்தியும் ஆரம்பித்தது. ஆனால், இம்முறை அதில் ரத்தம் தெரிந்தது!

அரண்டு போய் டாக்டரிடம் காட்டி, T B யாக இருக்குமோ என்று கேட்டார். ஹாஸ்பிடல் போகும்போதே மனஸில் " ப்ரபோ! ரெண்டு நாள் பாக்கி இருக்கறச்சே...வில்வம் சாப்டாம, காப்பி குடிச்சுட்டா........தெரியாம பண்ணிட்டா...மன்னிச்சிடுங்கோ! அனுக்ரகம் பண்ணுங்கோ" என்று மன்றாடினார்.

டாக்டரும் TB இல்லை வெறும் பலஹீனம்தான் என்று சொல்லிவிட்டார்.

அன்று சாயங்காலம் வீட்டுக்கு வந்தபோது, ஆச்சர்யமாக அவர் மனைவி ரொம்ப ரொம்ப தெம்போடு அவரை வரவேற்றாள். அவள் சொன்னது.........."மத்யானம் பக்கத்தாத்து மாமி இங்க வந்தா.....நேத்திக்கு அவாத்து பிள்ளையோட கல்யாணம்
மெட்ராஸ்ல நடந்தப்புறம் இளையாத்தன்குடி போய் பெரியவாளை தர்சனம் பண்ணப் போனாளாம்......அப்போ மாமி பெரியவாகிட்ட, "நான் டெல்லிலேர்ந்து வரேன்.....எங்காத்துக்கு பக்கத்ல இருக்கற என் ஸ்நேகிதிக்கு ஏதோ உடம்பு படுத்திண்டே இருக்கு .........பெரியவாதான் அனுக்ரகம் பண்ணணும்" ன்னு சொன்னாளாம்.

அதுக்கு பெரியவா, " என்னது! ஒன்னோட friend ஆ! பெரிய உபகாரியா? அடிக்கடி வாந்தி எடுக்கறாளாக்கும்?......எல்லாம் செரியாயிடும்" ன்னு சொல்லிட்டு, ப்ரஸாதம் குடுத்தாராம். மாமி அதை பிரிக்காம எங்கிட்ட குடுத்தா.......அதுல பெரியவா என்ன ப்ரஸாதம் குடுத்திருப்பார்...ன்னு சொல்லுங்கோ!" என்றாள்.

பக்தர் கல்கண்டு, திராக்ஷை, குங்குமம், விபூதி என்று
சொன்னார். கொண்டு வந்து காட்டினால்.......ஒரு சின்ன இலையில், ரெண்டே ரெண்டு வில்வ இலைகள்!

45 நாட்களுக்கு ரெண்டு நாள் இருக்கும் போது மறந்துபோய் காப்பி
குடித்ததால், விட்டுப் போன ரெண்டு நாட்களுக்காக ரெண்டே ரெண்டு வில்வ இலைகள்!"

நீ கண்டது கனவல்ல...நிஜம்" என்று நிருபித்த அழகு மகான்களுக்கே
முடியும்!--

------------------------------------------------------
பெரியவாள் வாழும் காலத்திலே நாமும் வாழ்கிறோம் என்பதுதான் எத்தனை பெரிய பாக்யம் !

அவரைப் பார்ப்பதற்கும் அவரது அருள் வாக்கைக் கேட்பதற்கும் என்ன தவம் செய்தோமோ?.

காமகோடி தரிசனம்

காணக்காணப் புண்ணியம்

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர
&&&&&&&&&_


Thursday, May 25, 2017

"ஒங்களுக்கும் ஒரு குச்சி ஐஸ் வாங்கித் தரட்டா?"-பெரியவாளிடம் ஒரு குழந்தை

"நான் சொல்ற ரெண்டு குழந்தைகளுக்கு நீ குச்சி ஐஸ்வாங்கித் தர்றியா?" (பணியாளரின் குழந்தைகளுக்குக் காட்டிய பரிவு)


கட்டுரையாளர்-பி.சுவாமிநாதன்
தட்டச்சு வரகூரான் நாராயணன்





குழந்தைகள் என்றாலே மகா பெரியவாளுக்கு அத்தனை இஷ்டம். அவர்களைத் தன் அருகே காந்தம் போல் இழுத்து, அவர்களுடன் நகைச்சுவையாகப் பேசிக் கவர்ந்து விடுவார்.

அந்தத் தெய்வத்திடமும் குழந்தைகள் மயங்கிப் போய் விடும். குழந்தைகளுக்குக் கொடுப்பதற்கென்று மகா பெரியவாளிடம்எப்போதும் கல்கண்டு ஸ்டாக் இருந்து கொண்டே இருக்கும்.

ஒரு முறை மகா பெரியவா காமாட்சி அம்மனைத் தரிசித்துவிட்டு காஞ்சி ஸ்ரீமடத்துக்குள்  நுழைந்து கொண்டிருந்தார்.

அப்போது ஸ்ரீமடத்தின் வாசலில் பணக்காரக் குடும்பத்தைச்சேர்ந்த சிறு குழந்தை (நாலைந்து வயது இருக்கலாம்) ஒன்று குச்சி ஐஸைக் கையில் வைத்துக்கொண்டு ரசித்து சுவைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தது.

ஸ்ரீமடத்தின் உள்ளே நுழையப் போன மகா பெரியவா, வாசலில் நின்று கொண்டு இந்தக் குழந்தை குச்சி ஐஸ்சாப்பிடும் அழகைப் பார்த்து மேலும் நகராமல் அப்படியே நின்று விட் டார். ஆனால் குழந்தை வேறு எங்கோ பார்த்தபடி ஐஸை நக்கிக் கொண்டிருந்தது.

ஒரு சொடக்குப் போட்டுக் குழந்தையின்  பார்வையைத்தன் பக்கம் திருப்பிய மகா பெரியவா, "என்ன,ஐஸ்சாப்பிடறியா" என்று மழலை பாஷையில் கேட்டார்.

"ஆமா...." என்று மழலையில் துடுக்கத்தனமாகப் பதில்சொன்ன குழந்தை, "இருங்கோ...ஒங்களுக்கும் ஒரு ஐஸ்வாங்கித் தரட்டா?" என்று ஆர்வ மிகுதியில் கேட்டு விட்டது.

மகா பெரியவாளின் கைங்கர்யத்தில் இருந்த சிப்பந்திகளும்மகானைத் தொடர்ந்து வந்த ஒரு சில பக்தர்களும் அந்தக்குழந்தையை அடக்கும் வகையில் ஏதோ சொல்ல வாய் திறக்க.. அவர்கள் அனைவரையும் கை தட்டி 'ஸ்ஸ்ஸ்..' என்று அடக்கி விட்டார் மகா பெரியவா.

தான் கேட்ட கேள்விக்கு மகா பெரியவா ஏன் இன்னும் பதில்சொல்லாமல் இருக்கிறார் என்று யோசித்த குழந்தை,

தான் குச்சி ஐஸ்வாங்கித் தந்தால் மகாபெரியவாசாப்பிடமாட்டார்போலிருக்கிறது என்று தீர்மானித்து விட்டது. உடனே, மகா பெரியவா மேல் கோபம் கொண்டு முகத்தை வேறு பக்கம்திருப்பிக் கொண்டது. ஆனாலும் ஐஸை சாப்பிடுவதை மட்டும் நிறுத்தவில்லை.

இந்த ரசமான காட்சிகளை மகா பெரியவா உட்பட அங்கு கூடி இருந்த அன்பர்கள் பலரும் ரசிக்கத்தான் செய்தார்கள்.

மீண்டும் ஒரு சொடக்குப் போட்டுக் குழந்தையின் பார்வையைத்திருப்பி, "என்ன குழந்தே... கோபமாயிட்டே போலிருக்கு... நான் எனக்குதான் வேண்டாம்னுதான் சொன்னேன்.சரி....நான் சொல்ற ரெண்டு குழந்தைகளுக்கு நீ குச்சி ஐஸ்வாங்கித் தர்றியா?"என்று மிகவும் சாந்தமான குரலில் அந்தக்குழந்தையின் முகம் கோணாத வகையில் அமைதியாகக்கேட்டார் மகா பெரியவா.

இந்தக் குழந்தையின் பெற்றோர் அநேகமாக,ஸ்ரீமடத்துக்குள்மகா பெரியவா தரிசனத்துக்காகக்காத்திருக்கிறார்கள்போலிருக்கிறது. குழந்தை ஐஸ் கேட்டதால், கையில் காசை கொடுத்து அனுப்பிவிட்டார்கள். போலிருக்கிறது. தனக்கு ஐஸ்வாங்கியது போகக்கையில் கொஞ்சம் காசும் மிச்சம் வைத்திருந்தது.

மகா பெரியவா கேட்டதும் அந்தப் பெண் குழந்தையின் முகத்தில் ஒரு சந்தோஷம். "சொல்லுங்கோ...நானே வாங்கித் தர்றேன்" என்றது.

உடனே ஸ்ரீமடத்தில் அப்போது பணியில் இருந்த மேலே

சொன்னபணியாளரின் இரண்டு பெண் குழந்தைகளையும் அழைத்து வரச்சொன்னார். ஒரு சிப்பந்தி ஓடிப் போய், ஸ்ரீமடத்தின் உள்ளிருந்துஅந்த இரு பெண் குழந்தைகளையும் சட்டென்று அழைத்து வந்தார்.

மகா ஸ்வாமிகள் அருகே அவர்கள் வந்தவுடன், ""தோ...இந்த ரெண்டு பேர்தான் நான் சொன்னவா. இவர்களுக்கும்குச்சி ஐஸ் வாங்கிக் கொடேன், சாப்பிடட்டும்" என்று சொல்ல...அந்தப் பணக்கார வீட்டுப் பெண் குழந்தை வாசலின் அருகே நின்று கொண்டிருந்த ஐஸ் வண்டிக்கு அருகே ஓடிச் சென்றுவாங்கிக்கொண்டு வந்து கொடுத்தது.

பணியாளரின் இரண்டு குழந்தைகளும் முகத்தில் மகிழ்ச்சி பொங்கஅந்தக் குச்சி ஐஸை வாங்கிச் சப்பி சாப்பிட ஆரம்பித்தன.

மகா பெரியவா முகத்தில் அப்படி ஒரு ஆனந்தம். பணக்கார வீட்டுக் குழந்தையும்,ஏழையின் இரண்டு குழந்தைகளும்ஒருசேர ஐஸ் சாப்பிடும் அழகை ஒரு சில நிமிடங்களுக்கு நின்று வேடிக்கைப் பார்த்தார் மகா பெரியவா.



"பாவம்...இந்த வேலைக்காரனோட குழந்தை எல்லாம்குச்சி ஐஸைப் பாத்திருக்குமா...இல்லே, இது போன்ற தின்பண்டங்களைத்தான் வாங்கிச் சாப்பிட்டிருக்குமா?" என்று ஸ்ரீமடத்தின் சிப்பந்திகளைப் பார்த்துச் சொல்லி விட்டு, விடுவிடுவென ஸ்ரீமடத்தினுள் நுழைந்தார்.

'ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர' என்ற கோஷம் முழங்க பக்தர்கள் கூட்டம் அவரைப் பின் தொடர்ந்து உள்ளே சென்றது.






Wednesday, May 24, 2017

முக்திநாத் யாத்திரை - 3

  

அடுத்த நாள் (5.4.2017) அன்று காலை நாங்கள் தரிசிக்கச் சென்றது ஜல நாராயணர் கோவில்.   அன்று ஸ்ரீ ராம நவமி வேறு.  எங்கள் மகிழ்ச்சிக்குக் கேட்கவும் வேண்டுமா?  மேலும் அன்று எங்கள் இரண்டாவது பேத்தி தியாக்குட்டியின் ஆங்கிலப் பிறந்த நாள் வேறு. எனவே அவளுக்காக பசுபதி நாதர் கோவிலில் ருத்ராபிஷேகம் ஏற்பாடு செய்திருந்தோம். 



ஜல நாராயணர், பசுபதி நாதர், குஹேஸ்வரி ஆகியோரை தரிசிக்க தயாராகி விட்டோம்.





நேபாள தலைநகர் காத்மண்டுவில் உள்ள மிகவும் பிரபலமான ஆலயம் ஸ்ரீ அனந்த சயன நாராயணர் ஆலயமாகும்இது புத்த நீலகண்டர் ஆலயம் மற்றும் ஜல் நாராயணர் ஆலயம்   என்றும் இங்குள்ள மக்களால் அழைக்கப்படுகிறதுஇவ்வாலயத்தில் மகாவிஷ்ணு ,  குளத்தின் மையப் பகுதியில் பின்னி பிணைந்த நிலையில் உள்ள 11 தலை ஆதி சேஷனில்   சயன கோலத்தில் காட்சி அளிக்கிறார்இயற்கை நீரூற்றின் மீது துயில் கொள்ளும் அனந்த சயன நாராயணர் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு மனதில் அமைதியை வழங்குவதற்காக இவ்வாறு காட்சி அளிப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர்
காத்மண்டுவில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் சிவபுரி 
மலை தொடரின் அடிவாரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது
இக்கோயிலின் மையப் பகுதியில் அமைந்துள்ள பிரம்மாண்ட குளத்தில் 5 மீட்டர் நீளமுள்ள கருங்கல்லால் ஆன பாம்புகளின் மீது புத்தநீலகண்டர் சேவை சாதிக்கின்றார்இந்த மகாவிஷ்ணு சிலை ஒரே கருங்கல்லால் 
வடிவமைக்கப்பட்டதாகும்

ஒரு சமயம் வயதான கணவன் மனைவி இருவரும் தங்களின் விவசாய நிலத்தில் உழுது கொண்டிருந்த போது பூமிக்கு அடியில் இருந்து இந்த 
பிரம்மாண்ட சிலை வெளிப்பட்டுள்ளதுஊர்காரர்களை அழைத்து வந்து காட்ட முயன்ற போது அச்சிலை மாயமாக மறைந்து விட்டதாம்பின்னர் சிறிது நாட்களுக்கு பிறகு மீண்டும் அந்த விவசாயி தனது நிலத்தை 
உழுது தொண்டிருந்த போது மீண்டும் பூமிக்கு அடியில் இருந்த 
வெளிப்பட்ட சிலையில் இருந்து ரத்தம் வழியத் துவங்கியதாக 
இக்கோயில் குறித்த வரலாறு கூறப்படுகிறதுஇருப்பினும் 
இக்கோயிலில் அமைந்துள்ள மகாவிஷ்ணு சிலை சுமார் 1000 ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் என நம்பப்படுகின்றதுஇவ்வளாகத்தில் 
ருத்ராக்ஷ மரமும் உள்ள\து

மகாவிஷ்ணு சிலை,13 மீட்டர் நீளமுள்ள குளத்தில் 5 மீட்டர் நீளத்தில் 
கால்களை குறுக்காக வைத்தபடி சயன கோலத்தில் உள்ளதுநான்கு 
கைகளிலும் முறைகே சங்குசக்கரம்கதை மற்றும் தாமரை மலர் 
ஆகியன உள்ளனஇந்த சிலை சுமார் 7 அல்லது 8ம் நூற்றாண்டை 
சேர்ந்ததாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறதுசிவனைப் போன்று 
பழமையான நீல நிற கழுத்தை காணப்படுவதால் இவர் புத்தநீலகண்டர் என்ற பெயரால் அழைக்கப்படுகிறார்







இந்தியாவில் இருந்து செல்பவர்களுக்கு தனி மரியாதைதான்.  எங்களை தனியாக சிறிது நேரம் ஜலநாராயணரை தரிசிக்க வைத்தனர். 

அனந்த சயனம்






அனந்த சயனரை தரிசித்த மகிழ்ச்சியில் நானும், என் கணவரும்.  


 


ஆலய வளாகத்தில் இருந்த ருத்ராஷ மரம்





ஆலய வளாகத்தில் இருந்த ருத்ராஷ மரத்தின் கிளை









பந்தல் போட்டு சிறிய குழந்தைகளுக்கு காது குத்தி, மொட்டை அடிக்கும் விழா.  கோவிலில் செய்வார்களாம்.








பெரிய பையன்களூக்கு மொட்டை அடித்து, பூணல் போடும் விழா.  ஆலய வளாகத்தில் மூங்கிலைக் கொண்டு பந்தல் போட்டு செய்வார்களாம்.   நாங்கள் சென்ற போது நடந்த பூணூல் கல்யாணம் 






ஆலயத்தின் வெளியே வந்த போது தெரு முனையில் இருந்த சிறிய சிவன் ஆலயம். 

அங்கிருந்து அடுத்து பசுபதி நாதர் ஆலயத்திற்கு சென்றோம்.

தொடரும் 

Saturday, May 20, 2017

இன்று நம்ப உம்மாச்சி தாத்தாவின் 
ஆங்கிலப் பிறந்த நாளாம் 
(20.05.1894)

இந்த நன்னாளில் மகா பெரியவாளை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். 


Image may contain: 1 person


Image may contain: 1 person




Image may contain: 1 person


கோதூளி மகிமை - மஹாபெரியவா

அலகிலா விளையாட்டுடையான்:

திருச்சிராப்பள்ளியில் பெரியவா தங்கியிருந்த சமயம் சீதாலட்சுமி ராமஸ்வாமி கல்லூரியின் தலைவர் மஹானிடம் வந்து தங்கள் கல்லூரியில் பெரியவாளின் பொற்பாதம் பட வேண்டும், குழந்தைகளுக்கு ஆசி வழங்க வேண்டும் என்று விண்ணப்பித்தார்.

மோனகுரு பதில் ஏதும் சொல்லவில்லை. அவரும் தொடர்ந்து விண்ணப்பித்தவாறே இருந்தார்.

ஒருநாள் அவரிடம் 'நாளை காலை உன் காலேஜுக்கு வரேன். நீயும் உன் மனைவியும் ஒரு பசு மாடு, கன்றுக்குட்டியோட காத்திருங்கோ' என்றார்.

பக்தருக்கு அளவிலா மகிழ்ச்சி. அப்படியே தயாராக இருக்க மஹானும் வந்தார். பூர்ணகும்ப வரவேற்பை அங்கீகரித்தார். பக்தரிடம் 'என் பாதம் எங்கெல்லாம் படணும்னு உனக்கு ஆசையோ அங்கெல்லாம் பசுமாடு கன்றுக்குட்டியை பிடிச்சிண்டு ' நீ முன்னாடி போ, நான் பின்னாலேயே வரேன்' என்றார்.

அப்படியே எல்லா இடமும் சென்று வந்த பின், வெளியே வந்து 'திருப்தியா உனக்கு' என்று கேட்க அவர் என்ன பதில் சொல்வார்! கண்கள் கடலாக, மனம் உருகி கருணைக்கு நன்றி தெரிவிப்பதற்காக சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார். ஸ்ரீமடம் திரும்பிய மஹான் மாலை அடியார்களிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது காலையில் காலேஜுக்கு போன பேச்சும் வர, ஒருவர் 'பெரியவா ஏன் காலேஜுல பசு மாட்டு பின்னாலேயே போனா' என்று கேட்டார்.

சிரித்த மஹான் 'அவன் எங்ககிட்ட ரொம்ப பக்தியாயிருக்கான். நான் வந்தா அவன் காலேஜுக்கு ச்ரேயஸ்ன்னு நினைச்சு கூப்பிட்டான். ஆனால் அந்த காலேஜோ ஸ்த்ரீகள் படிக்கிற காலேஜ். அவா எல்லா நாளும் காலேஜுக்கு வருவா. மாதம் விலக வேண்டிய நாளும் வரலாம். அதனால் தான் யோஜனை செய்தேன்.அவன் ஆசையும் நிறைவேறணும். என் ஆசாரமும் கெடக் கூடாது. அதுக்கு ஒரே வழி, எந்த தீட்டாக இருந்தாலும் அந்த இடத்தில கோ பாததூளி பட்டுட்டா, அந்த இடம் பரிசுத்தமாயிடறதா சாஸ்த்ரத்துல இருப்பதால, பசு மாட்ட முன்னால விட்டுட்டு அது பின்னாலேயே நானும் போயிட்டு வந்தேன்' என்று சொன்னதைக் கேட்ட அனைவரும் பிரமிப்பிலிருந்து மீளவே இல்லை.

இப்படியும் தர்ம சூட்சுமமா? இப்படியும் அறம் வழுவா துறவு வாழ்க்கையா? நினைத்து நினைத்து நாமெல்லாம் ஆச்சர்யப்படலாம். வழிகாட்டி, குரு, ஆசார்யர் என்றால் இவரன்றோ! காலம் மாறிப்போச்சு, மாறிப்போச்சு என்று காலத்தின் மேல் பழிபோட்டு பழிபாவங்களுக்கு அஞ்சாதவர்கள் நிறைந்த இந்தப் பூமியில் இப்படியும் ஒரு அறநெறிச் செம்மலா! அன்பையும் அறத்தையும் அழகாக இணைக்கும் சாமர்த்தியம் காஞ்சி மஹாபெரியவாளை தவிர வேறு யாருக்கு இருக்கும்?

 


Image may contain: 1 person



Related image

Thursday, May 18, 2017




 ஜெய ஜெய சங்கர

ஹர ஹர சங்கர

Image may contain: 1 person, beard, eyeglasses and closeup


சென்னையில் தற்போது வசித்து வருபவர் சூரியகுமார். மகா பெரியவாளின் தீவிர பக்தர்.
சூரியகுமாரின் மனைவி விஜயலட்சுமி, மயிலாப்பூரில் ஒரு பள்ளியில் ஆசிரியையாக இருந்தார். இல்லறம் இனிமையாகப் போய்க்கொண்டிருந்தாலும், இந்தத் தம்பதியருக்குக் குழந்தைப் பேறு அமையவில்லை. நாட்கள் தள்ளிக் கொண்டே போயின.
சூரியகுமாருக்கு மிகவும் பழக்கமான ஆன்மிக அன்பர் ஒருவர், ‘‘மனதில் ஒரு குருவை நினைத்துக் கொள். அவரையே சரண் அடைந்து விடு. அவரிடம் உன் பிரார்த்தனையை வை. நிச்சயம் உனக்கு என்ன தேவையோ, அதை அருளுவார்’’ என்று சொல்லி இருந்தார்.
அதன்படி தன் குடும்பத்துக்கு மிகவும் இஷ்டமான காஞ்சி மகா ஸ்வாமிகளையே குருவாக மனதில் வரித்துக்கொண்டு, அவரிடம் தன் பிரார்த்தனையை வைத்தார். தினமும் மகா ஸ்வாமிகளை வணங்கினார். நாட்கள் இப்படிப் போய்க்கொண்டிருந்தன.
அன்றைய தினம் மகர சங்கராந்தி. இரவு சூரியகுமாரின் கனவில் மகா பெரியவா வந்தார். சூரியகுமாரிடம், எனக்குக் கொய்யாப்பழம் வேண்டும் என்று கேட்டார் பெரியவா. சிலிர்ப்புடன் துணுக்குற்று எழுந்தார் சூரியகுமார். பெரியவா கனவில் வந்து கொய்யாப்பழம் கேட்கிறாரே எப்படியாவது காஞ்சிபுரம் சென்று அவரிடம் சேர்ப்பித்தாக வேண்டும் என்று அந்த நள்ளிரவிலேயே மனதுக்குள் சங்கல்பம் எடுத்துக் கொண்டார். அதற்கேற்றாற்போல் அப்போது மகா பெரியவா காஞ்சிபுரத்தில்தான் இருந்தார்.
அடுத்த நாள் மாட்டுப் பொங்கல். அன்றைய தினம் சென்னை நகர் முழுதும் கொய்யாப்பழத்தைத் தேடி அலைந்தார் சூரியகுமார். அது சீஸன் இல்லாததால், எங்கேயும் கொய்யாப்பழம் கிடைக்கவில்லை. கடைசியில் ஒரு வழியாக சூரியகுமாரின் அண்ணன் ரவிகுமார் பாரிமுனையில் ஒரு கடையில் இருந்து கொய்யாப்பழங்களை எப்படியோ தேடி வாங்கி வந்து விட்டார்.
மாட்டுப் பொங்கல் அன்று காலை ரவிகுமார், சூரியகுமார்  இருவரும் தம்பதி சமேதராக காஞ்சி ஸ்ரீமடத்துக்குப் புறப்பட்டனர். பெரியவா கேட்ட கொய்யாப்பழத்தோடு வேறு சில பழங்களும் வாங்கி வைத்திருந்தனர்.
விடுமுறை தினம் என்பதால் அன்றைய தினம் காஞ்சி ஸ்ரீமடத்தில் தாங்க முடியாத கூட்டம். பெரியவாளின் சந்நிதிக்குச் சென்று திரும்புவதே சிரமம் என்பதால், சென்னையில் இருந்து வந்திருந்த பல பக்தர்களும் தொலைவில் இருந்தே மகா பெரியவாளை தரிசனம் செய்துவிட்டுத் திரும்பினார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!
இத்தனை கூட்டத்தில் நீந்திப் போய் எப்படிப் பெரியவாளிடம் சென்று, கொய்யாப்பழங்களைக் கொடுப்பது என்று சகோதரர்கள் இருவரும் யோசித்துக்கொண்டிருந்தனர். அப்போது ஸ்ரீமடத்தில் பணி புரியும் & தங்களுக்குப் பரிச்சயமான ஒரு நண்பரைப் பார்த்தார்கள். இருவரும் முகம் பிரகாசிக்க, அந்த நண்பரை நோக்கி ஒருவாறு கூட்டத்தில் புகுந்து சென்றார்கள்.
அந்த நண்பரும், இவர்களை முகம் மலரப் பார்த்துவிட்டு, என்ன? என்பதுபோல் கேட்டார்.
அதற்கு சூரியகுமார், ‘‘பெரியவா நேத்து என் கனவில் வந்து கொய்யாப்பழம் கேட்டார். அதான் வாங்கிண்டு வந்திருக்கோம். பெரியவாகிட்ட அதைக் கொடுத்துட்டு ஆசிர்வாதம் வாங்கணும்’’ என்றார்.
அந்த நண்பரின் முகம் மாறியதே பார்க்கணும். ‘‘தோ பாருப்பா நீ என் ஃப்ரெண்டுதான். அதுக்காக, பெரியவாளை உடனே பாக்கணும்கறதுக்காக என்கிட்ட கொய்யாப்பழம் வாங்கித் தரச் சொன்னார். மெட்ராஸ்லேர்ந்து வாங்கிண்டு வந்திருக்கேன்னு பொய்யெல்லாம் சொல்லாதே’’ என்று படபடவென்று பேச ரவிகுமாரும் சூரியகுமாரும் அதிர்ந்தார்கள்.
கேட்டவருக்குத் தெரியாதா, இதை எப்படி வாங்கிக்கொள்ள வேண்டும் என்று?!
ஸ்ரீமடத்து அன்பரின் முகம் போன விதத்தைப் பார்த்தால் இவர்கள் இருவரும் சொன்ன விஷயத்தை நம்பியதாகத் தெரியவில்லை. தன் தலையை இப்படியும் அப்படியும் ஆட்டினார். பிறகு, ‘‘பெரியவாளை உடனே தரிசனம் பண்ணிட்டுப் போகணும்கறதுக்காக அவர் என் கனவில் வந்தார் கொய்யாப்பழம் கேட்டார் அப்படி இப்படின்னு எல்லாம் பொய் சொல்றேளா? மகா பெரியவாளே உங்க கனவில் வந்து கொய்யாப்பழம் கொண்டு வான்னு சொன்னாரா?’’ என்று கிண்டலும் கேலியுமாகக் கேட்டார். அப்போது மகா பெரியவாளின் கைங்கர்யத்தில் இருக்கும் ஆசாமி ஒருவர், இந்த அன்பரைப் பார்த்துக் கை நீட்டி அவசரமாக அழைக்க இவர்களிடம் எதுவும் சொல்லாமலே பொசுக்கென நகர்ந்து போய்விட்டார்.

Image may contain: one or more people and eyeglasses

கனவில் பெரியவாளின் அருட்காட்சி கிடைக்கப் பெற்ற சூரியகுமார், அதிர்ந்து போனார். இன்னிக்கு எத்தனை நேரமானாலும் பரவால்லை. வரிசையில் நின்னு, இந்தக் கொய்யாவை பெரியவாகிட்ட சமர்ப்பிச்சுட்டுத்தான் மெட்ராஸ் கௌம்பப் போறோம்’’ என்று தன் அண்ணன் ரவிகுமாரைப் பார்த்துச் சொல்லிவிட்டு, பெரியவா தரிசனத்துக்காகக் காத்திருக்கும் நீண்ட வரிசையில் தன்னை இணைத்துக்கொண்டார் சூரியகுமார். அவரைத் தொடர்ந்து அவருடன் வந்த குடும்பத்தினர் அனைவரும் அதே வரிசையில் இணைந்தனர்.
பெரியவா கேட்ட கொய்யாப்பழங்களை மட்டும் பயபக்தியுடன் தன்வசம் ஒரு பையில் வைத்துக்கொண்ட சூரியகுமார், அவர் சந்நிதானத்தில் சமர்ப்பிக்கவேண்டிய மற்ற பழங்களைத் தன் அண்ணன் ரவிகுமாரிடம் கொடுத்தார்.
வரிசையில் திரளான பக்தர்கள் நின்றிருந்தாலும், அனுபவம் வாய்ந்த ஸ்ரீமடத்து அன்பர்கள் கூட்டத்தை வெகு நேர்த்தியாகக் கட்டுப்படுத்திக்கொண்டு வந்ததால், சற்று விரைவாகவே வரிசை நகர்ந்து போய்க்கொண்டிருந்தது.
மதியம் ஒண்ணரை மணி வாக்கில் பெரியவா திருச்சந்நிதி அருகே வந்துவிட்டனர் சூரியகுமாரும் ரவிகுமாரும். இருவர் முகங்களிலும் பெரியவாளை தரிசிக்கப் போகிற பரவசம். அந்த மகானின் அருகே நெருங்கிவிட்டோம் என்கிற ஆனந்தம். ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர கோஷம் எங்கும் முழங்கியபடி இருந்தது.
சர்வேஸ்வரனாக அந்த பரப்பிரம்மம் கொஞ்சமும் களைப்பே இல்லாமல் கன ஜோராகக் காட்சி தந்துகொண்டிருந்தது.
களைப்பும் கவலையும் இந்த மனித குலத்துக்குத்தானே?! மகான்களுக்கு ஏது!
பெரியவா தன் வலக் கையை உயர்த்தி, தன் முன்னால் நின்று கொண்டிருக்கும் சகோதரர்கள் இருவரையும் பார்த்து ஆசிர்வதித்தார். கனிவும் புன்னகையும் மாறா முகத்துடன் இருவரையும் தன் பார்வையால் ஏறிட்டார் பெரியவா.
கொய்யாப்பழங்கள் இருந்த பையைக் கக்கத்தில் இடுக்கிக் கொண்டு மகா ஸ்வாமிகளின் அருகே கைகட்டி, வாய் பொத்தி பவ்யமாக அவரது திருமுகத்தையே ஏக்கமாகப் பார்த்தபடி நின்றிருந்தார் சூரியகுமார். பக்திப் பரவசத்தின் வெளிப்பாடாக அவரது கண்கள் கலங்கிக் காணப்பட்டன.
‘‘பெரியவாளை எப்படியும் இன்னிக்கு தரிசனம் பண்ணியே ஆகணும்னு ஒரு சங்கல்பம்.. அதான் குடும்பத்தோட புறப்பட்டு வந்துட்டோம்’’ & சூரியகுமார் நா தழுதழுத்தபடி சொன்னார்.
‘‘கொய்யாப்பழம் கேட்டேனே கொண்டுவந்தியோ?’’ பெரியவா கேட்டதும், சூரியகுமாரும் ரவிகுமாரும் ஆடிப் போனார்கள். இருவரின் மனைவிகளும் விதிர்விதிர்த்துப் போனார்கள். இத்தனைக்கும் சூரியகுமாரின் கையில் இருக்கும் துணிப்பைக்குள் இருப்பது கொய்யா என்பதை எவராலும் பார்த்துத் தெரிந்துகொள்ள முடியாது.
கூடவே, பெரியவாளுக்கு அருகே கைங்கர்யத்துக்காக நின்று கொண்டிருந்த இவர்களின் நண்பரும் (பெரியவா தரிசனத்துக்காகப் பொய் சொல்லாதே என்று சொல்லி விட்டுச் சென்றாரே, அவர்தான்!) அதிர்ந்து போனார். இதைத்தானே முதலில் என்னிடம் சொன்னார். பெரியவா கனவில் வந்து கொய்யாப்பழம் கேட்டார். அதை அவரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றல்லவா சொன்னார்?! நான் அதைக் கிண்டலும் கேலியுமாக பரிகசித்துவிட்டு வந்தேனே என்று தனக்குள் மருகினார். என்னை மன்னிச்சிடுப்பா என்று சூரியகுமாரைப் பார்த்துச் சொல்லாத குறையாகக் கையெடுத்துக் கும்பிட்டார், மன்னிப்புக் கோரும் தொனியில்!
பெரியவாளே வாய் திறந்து கேட்டதும், துணிப்பையில் இருந்து கொய்யாப்பழங்களை பரபரப்புடன் வெளியில் எடுத்தார் சூரியகுமார். பெரியவாளின் சந்நிதிக்கு முன்னால் இருக்கிற ஒரு காலி மூங்கில் தட்டில் அவற்றை வைத்தார்.
‘‘இதை அலம்பிட்டியோ?’’ கொய்யாவைக் காட்டி சூரியகுமாரிடம் கேட்டார் பெரியவா.
சூரியகுமார் தன் அண்ணன் ரவிகுமாரின் முகத்தைப் பார்க்க அவரோ உடன் இருந்த தன் துணைவியார் மற்றும் சூரியகுமாரின் மனைவியைப் பார்க்க அனைவருமே உதடு பிதுக்கினார்கள்.
சட்டென்று சுதாரித்துக்கொண்ட சூரியகுமார், ‘‘கௌம்பற அவசரத்துல கொய்யாவை அலம்பறதுக்கு மறந்துட்டோம் பெரியவா. இதோ, இப்ப இப்பவே அலம்பிடறோம்’’ என்று கொய்யாப்பழங்களைக் கையில் எடுத்துக்கொண்டு சுற்றும்முற்றும் பார்த்தார்.
அதற்குள், பெரியவாளின் கைங்கர்யத்துக்காக நின்றிருந்த சீடன் ஒருவன் பித்தளைச் சொம்பில் தண்ணீர் எடுத்து வந்தான். அங்கேயே ஒரு ஓரமாகப் போய் கொய்யாப்பழங்களைத் தண்ணீர் விட்டு அலம்பினார் சூரியகுமார். ஈரம் சொட்டச் சொட்ட அந்தப் பழங்களை உதறியபடி எடுத்து வந்து, பழையபடி மூங்கில் தட்டில் வைத்தார்.
பெரியவாளின் திருமுகத்தையே பார்த்துக்கொண்டிருந்தனர் அனைவரும்.
அந்தப் பரப்பிரம்ம சொரூபி மூங்கில் தட்டைப் பார்த்தார். பிறகு, அதில் இருந்து ஒரு கொய்யாவைத் தன் கையில் எடுத்தார். பச்சை நிறமும் மஞ்சள் நிறமும் கலந்து நல்ல பழுத்த பழமாகக் காட்சி அளித்தது பெரியவாளின் திருக்கரத்தில் இருந்த கொய்யா. தன் வலது உள்ளங்கையில் அதை வைத்துக்கொண்டு இடது உள்ளங்கையால் அதன் மேல் ஒரு அழுத்து அழுத்தினார். அவ்வளவுதான். கொய்யாப்பழம் பொளக்கென இரண்டு சரி பாதியாக உடைந்தது.
க்ஷண நேரத்துக்குள் ஒரு பாதியைத் தன் வாய்க்குள் போட்டுக் கொண்டார் மகா பெரியவா. மற்றொரு பாதியை சூரியகுமாரிடம் கொடுத்து அவரையும் அவருடைய மனைவியையும் சாப்பிடச் சொன்னார்.
மிகுந்த பவ்யத்துடன் பெரியவா தந்த பிரசாதமான பாதி கொய்யாவை வாங்கிக்கொண்டார் சூரியகுமார். பெரியவாளின் சந்நிதியிலேயே சாப்பிடும்படி உத்தரவானது. எனவே, பாதி கொய்யாவில் ஒரு பகுதியை எடுத்துத் தன் மனைவியிடம் கொடுத்துச் சாப்பிடச் சொன்னார். மறு பாதியைத் தான் சாப்பிட்டார்.
அங்கு கூடி இருந்த அனைவரும் இந்த நிகழ்வுகள் அனைத்தையும் வேடிக்கை பார்த்து மெய்சிலிர்த்துப் போனார்கள். இந்தத் தம்பதிக்கு எப்பேர்ப்பட்ட ஆசி கிடைத்திருக்கிறதுஎன்று நெகிழ்ந்து போனார்கள்.
அதன்பிறகு கொய்யாப்பழத்தின் சிறப்பு, அதன் மருத்துவ குணம், என்னென்ன நோய்க்கு மருந்தாகப் பயன்படுத்தலாம் என்றெல்லாம் ஒரு நீண்ட உரையாற்றினார் மகா பெரியவா. சூரியகுமார் குடும்பம் உட்பட வந்திருந்த அனைவரும் இமை கொட்டாமல் இந்த உரையைக் கேட்டுக்கொண்டிருந்தனர்.
கொய்யாப்பழ படலம் முடிந்தது. மகா பெரியவா எழுந்து தன் ஜாகைக்குச் சென்றார். பக்தர்கள் கன்னத்தில் போட்டு தரிசித்துவிட்டு, அங்கிருந்து நகர ஆரம்பித்தனர்.
மதியம் ஸ்ரீமடத்திலேயே போஜனத்தை முடித்துவிட்டு சென்னைக்குத் திரும்பினர் சூரியகுமார் குடும்பத்தினர்.
அடுத்து வந்த ஒரு சில நாட்களிலேயே கர்ப்பம் தரித்தார் சூரியகுமாரின் மனைவி.
பெரியவா தந்த பிரசாதத்தின் மகிமை அதுதான்.
அதுவும் பெரியவாளே விருப்பப்பட்டுக் கனவில் கேட்டு வாங்கி, திரும்பித் தந்த பிரசாதம் ஆயிற்றே!

பெரியவாளின் பரிபூரண அனுக்ரஹத்தோடு சூரியகுமார் தம்பதிக்குத் தாமதமாகப் பிறந்த ஒரே மகளான மதுராம்பிகா, தற்போது பொறியியல் படித்து வருகிறாள்.