சாந்த நாயகி சமேத ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர் கோவில், பள்ளிகரணை
இன்று எங்கள் 34வது திருமண நாளை முன்னிட்டு நானும் என் கணவரும் பள்ளிகரணையில் உள்ள சாந்த நாயகி சமேத ஆதிபூரீஸ்வரர் கோவிலுக்குச் சென்றோம்.
இத்திருக்கோவில் மிகவும் பழமையான வரலாற்றுப் பின்னணி கொண்டது. கி.பி.1725ல் கிருஷ்ண தேவராயர் ஆட்சிக் காலத்தில் திருப்பணி செய்யப்பட்டதாக இங்கு காணப்படும் கல்வெட்டுகள் மூலம் தெரிய வருகிறது. ஸ்ரீ (சிலந்திவலை), காள (நாகப்பாம்பு), கஸ்தி (யானை) இந்த மூன்று பெயரும் சேர்ந்து ஸ்ரீகாளகஸ்தி என்று பெயர் பெற்றது. அந்தக் காலத்தில் ஸ்ரீகாளகஸ்திக்கு செல்ல முடியாதவர்கள் பரிகாரம் செய்ய சென்னை பள்ளிக்கரணையில் அமைந்துள்ள ஆதிபுரீஸ்வரர் ஸ்தலத்தில் “ராகு-கேது” பரிகாரத்தை செய்து வந்துள்ளனர். இங்கும் சிலந்தி வலை, நாகம் சிவபூஜை செய்தல், யானை பூஜை செய்தல், மயில் சிவபூஜை செய்தல், கண்ணப்பநாயனார், சிவபெருமானுக்கு இரு கண்களை கொடுத்தது போன்ற சிற்பங்கள் “ராகு-கேது” பரிகாரத்திற்காகவே அமைந்துள்ளது. ஆதியும், அந்தமும் இல்லாத ஆதிபுரீஸ்வரர் இங்கு நவகிரக நாயகராக அமர்ந்துள்ளார். ஆகவே இங்கு “ராகு-கேது” பரிகாரம் செய்தல், ஸ்ரீகாளகஸ்தியில் கிடைக்கும் சிறப்பான பலனைப் போல் இங்கும், தோஷங்கள் நீங்கி சிறப்பான பலனைப் பெற்று நல் வாழ்வு பெறலாம் என்பது ஐதீகம்.
கோவிலின் பழைய தோற்றம்.
மாசி சிவராத்திரி அன்று காலை 655க்கு சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவலிங்கத்தை ஆராதனை செய்யும் காட்சி.
மாசி மாதம் 15 நாட்கள் (மாசி 15 முதல் 30 வரை) சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவலிங்கத்தை ஆராதனை செய்யுமாம்.
இத்திருத்தலம் ராகு கேது பரிகார ஸ்தலம்.
கோவிலைப் பற்றிய மற்ற விவரங்கள்.
கிழக்கு பார்த்த ராஜகோபுரம். திருக்குளம் கோவிலுக்கு எதிரே உள்ளது. சமீபத்தில் செப்பனிடப்பட்டு அழகாக உள்ளது.
ராஜகோபுரத்தின் உள்ளே நுழைந்ததும் பலிபீடம், த்வஜஸ்தம்பம் மற்றும் நந்தி உள்ளது. சூரியர், சந்திரன் இருபக்கமும் வீற்றிருக்கின்றனர்.
வெளிப் பிரகாரத்தில் சிவ ஆஞ்சநேயர், மகா கணபதி. வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர், நவக்கிரகங்கள், சண்டிகேஸ்வரர், ராகு, கேது, சொர்ண ஆகர்ஷண பைரவை, சரபேஸ்வரர், வியாக்ரபரதர் ஆகியோருக்கு தனி சன்னதிகள் உள்ளன.
மையத்தில் ஆதிபுரீஸ்வரர் கிழக்கு நோக்கியும், சாந்த நாயகி அன்னை தெற்கு நோக்கியும் அமர்ந்து அருள் பாலிக்கின்றனர். காலபைரவர் சிலையும் சன்னதியில் அமைந்துள்ளது.
வியாக்ரபாதர் இந்த ஸ்தலத்திற்கு வந்து சிவனை வழிபட்டதால் இந்த இடம் சோழர் காலத்தில் புலியூர் கோட்டத்தின் கீழ் இருந்ததாக நம்பப்படுகிறது.
இந்தக் கோவில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
வேளச்சேரி - தாம்பரம் பிரதானசாலையில் பள்ளிகரணை உள்ளது.
காலை 0700 மணி முதல் 1200 வரையிலும், மாலை 1630 முதல் 2030 வரையிலும் கோவில் திறந்திருக்கம்.
கைப்பேசியில் தொடர்பு கொள்ள 9840109495, 9444326057 மற்றும் 9884235555
பள்ளிக்கரணையிலா? ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும்.
ReplyDeleteவாங்கோ ஸ்ரீராம்
Deleteகண்டிப்பா போயிட்டு வாங்கோ. சின்ன கோவிலும் இல்லை, ரொம்ப பெரிய கோவிலும் இல்லை. ஆனால் பழங்கால கோவில் போல் இருக்கு. எனக்கு ரொம்ப பிடிச்சது. நாங்க கோவிலம்பாக்கத்தில்தான் இருக்கிறோம். முடிந்தால் அப்படியே எங்காத்துக்கும் வாங்கோ
வெற்றிகரமான 34-வது திருமணநாள் கொண்டாடும் உத்தம தம்பதியினரான திருமதி. ஜெயந்தி ரமணி + திரு. ரமணி ஸார் இருவருக்கும் எங்கள் மனமார்ந்த ஆசிகளையும் வாழ்த்துகளையும் கூறிக்கொள்கிறோம்.
ReplyDeleteஇறைவன் அருளால் இதே சந்தோஷத்துடன் மேலும் பல்லாண்டு பல்லாண்டு வாழ நாங்களும் பிரார்த்தித்துக்கொள்கிறோம்.
கோபு அண்ணா
Deleteஉங்களுக்கும் மன்னிக்கும் எங்களின் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
34 ஆண்டுகளுக்கு முன்பு (1983 December), காளகஸ்தி கோயில் சத்திரத்திலேயே ஒரு நாள் இரவு தங்கிவிட்டு, மறுநாள் அங்கேயே ஸ்நானம் செய்துவிட்டு, கோயிலை நன்கு சுற்றிப்பார்த்து தரிஸித்து விட்டு வந்துள்ளேன். அந்த ஞாபகம் எனக்கு இப்போது வந்தது. பள்ளிகரணை போனது இல்லை.
ReplyDeleteநாங்களும் காளகஸ்தி கோவிலுக்கு நிறைய முறை சென்றிருக்கிறோம். உங்களால் திருச்சியில் இருந்து பள்ளிகரணை வருவது கொஞ்சம் சிரமம் என்பதால் இந்தப் பதிவு வழியாக நீங்கள் தரிசனம் செய்ய நான் ஒரு கருவியாக இருப்பதற்கு கடவுளுக்கு நன்றி.
Deleteபழமை வாய்ந்த இந்த கோயிலின் படங்களும், ஸ்தல வரலாறுகளும் பார்க்கவும் படிக்கவும் நேரில் போய் வந்தது போன்ற உணர்வினை ஏற்படுத்துகிறது. பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteவருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி அண்ணா.
Deleteஎனக்கும் இந்தக் கோவிலுக்குச் சென்று வந்தபின் மீண்டும் செல்லவேண்டும் என்று தோன்றுகிறது.
திருமண நாள் நல்வாழ்த்துகள்.
ReplyDeleteகாளஹஸ்தி போலவே ஒரு கோவில் சென்னையில். நல்ல தகவல்! சிறு வயதில் காளஹஸ்தி சென்ற நினைவு மட்டும்....
படங்களும் அழகு.
பதிவுகள் வெளியிடும் தகவலை மின்னஞ்சல் மூலம் தெரிவித்தால்/அல்லது Follow by e-mail gadget சேர்க்க முடிந்தால் சேருங்கள்.
வாழ்த்துக்கு மிக்க நன்றி.
Deleteகண்டிப்பாக மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கிறேன்.
நீங்கள் சொன்னதுபோல் Follow by e-mail gadget சேர்க்க முயற்சி செய்கிறேன்.
நீங்கள் கோவிலம்பாக்கமா? என் ஷட்டகர் சுண்ணாம்புகொளத்தூரில் இருக்கிறார் அவரைப பார்க்கவரும்போது ஆதிபுரீசுவர்ரையும் தரிசிப்பேன். அழகான கோவில்.
ReplyDeleteஇராய செல்லப்பா நியூஜெர்சி (விரைவில் சென்னை)
ஆமாம் கோவிலம்பாக்கம் தான். நீங்கள் சென்னை வரும் பொழுது கண்டிப்பாக எங்கள் வீட்டிற்கு வாருங்கள். எனக்கு மெயில் பண்ணுங்கள். அதில் என் கைப்பேசி எண்ணை தருகிறேன்.
Delete