முக்திநாத் யாத்திரை - 3
அடுத்த நாள்
(5.4.2017) அன்று காலை நாங்கள் தரிசிக்கச் சென்றது ஜல நாராயணர் கோவில். அன்று ஸ்ரீ ராம நவமி வேறு. எங்கள் மகிழ்ச்சிக்குக் கேட்கவும் வேண்டுமா? மேலும் அன்று எங்கள் இரண்டாவது பேத்தி தியாக்குட்டியின் ஆங்கிலப் பிறந்த நாள் வேறு. எனவே அவளுக்காக பசுபதி நாதர் கோவிலில் ருத்ராபிஷேகம் ஏற்பாடு செய்திருந்தோம்.
ஜல நாராயணர், பசுபதி நாதர், குஹேஸ்வரி ஆகியோரை தரிசிக்க தயாராகி விட்டோம்.
நேபாள தலைநகர் காத்மண்டுவில் உள்ள மிகவும் பிரபலமான ஆலயம் ஸ்ரீ அனந்த சயன நாராயணர் ஆலயமாகும். இது புத்த நீலகண்டர் ஆலயம் மற்றும் ஜல் நாராயணர் ஆலயம் என்றும் இங்குள்ள மக்களால் அழைக்கப்படுகிறது. இவ்வாலயத்தில் மகாவிஷ்ணு , குளத்தின் மையப் பகுதியில் பின்னி பிணைந்த நிலையில் உள்ள 11 தலை ஆதி சேஷனில் சயன கோலத்தில் காட்சி அளிக்கிறார். இயற்கை நீரூற்றின் மீது துயில் கொள்ளும் அனந்த சயன நாராயணர் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு மனதில் அமைதியை வழங்குவதற்காக இவ்வாறு காட்சி அளிப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர்.
காத்மண்டுவில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் சிவபுரி
மலை தொடரின் அடிவாரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.
இக்கோயிலின் மையப் பகுதியில் அமைந்துள்ள பிரம்மாண்ட குளத்தில் 5 மீட்டர் நீளமுள்ள கருங்கல்லால் ஆன பாம்புகளின் மீது புத்தநீலகண்டர் சேவை சாதிக்கின்றார். இந்த மகாவிஷ்ணு சிலை ஒரே கருங்கல்லால்
வடிவமைக்கப்பட்டதாகும்.
ஒரு சமயம் வயதான கணவன் மனைவி இருவரும் தங்களின் விவசாய நிலத்தில் உழுது கொண்டிருந்த போது பூமிக்கு அடியில் இருந்து இந்த
பிரம்மாண்ட சிலை வெளிப்பட்டுள்ளது. ஊர்காரர்களை அழைத்து வந்து காட்ட முயன்ற போது அச்சிலை மாயமாக மறைந்து விட்டதாம். பின்னர் சிறிது நாட்களுக்கு பிறகு மீண்டும் அந்த விவசாயி தனது நிலத்தை
உழுது தொண்டிருந்த போது மீண்டும் பூமிக்கு அடியில் இருந்த
வெளிப்பட்ட சிலையில் இருந்து ரத்தம் வழியத் துவங்கியதாக
இக்கோயில் குறித்த வரலாறு கூறப்படுகிறது. இருப்பினும்
இக்கோயிலில் அமைந்துள்ள மகாவிஷ்ணு சிலை சுமார் 1000 ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் என நம்பப்படுகின்றது. இவ்வளாகத்தில்
ருத்ராக்ஷ மரமும் உள்ள\து.
மகாவிஷ்ணு சிலை,13 மீட்டர் நீளமுள்ள குளத்தில் 5 மீட்டர் நீளத்தில்
கால்களை குறுக்காக வைத்தபடி சயன கோலத்தில் உள்ளது. நான்கு
கைகளிலும் முறைகே சங்கு, சக்கரம், கதை மற்றும் தாமரை மலர்
ஆகியன உள்ளன. இந்த சிலை சுமார் 7 அல்லது 8ம் நூற்றாண்டை
சேர்ந்ததாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. சிவனைப் போன்று
பழமையான நீல நிற கழுத்தை காணப்படுவதால் இவர் புத்தநீலகண்டர் என்ற பெயரால் அழைக்கப்படுகிறார்.
இந்தியாவில் இருந்து செல்பவர்களுக்கு தனி மரியாதைதான். எங்களை தனியாக சிறிது நேரம் ஜலநாராயணரை தரிசிக்க வைத்தனர்.
அனந்த சயனம்
அனந்த சயனரை தரிசித்த மகிழ்ச்சியில் நானும், என் கணவரும்.
ஆலய வளாகத்தில் இருந்த ருத்ராஷ மரம்
ஆலய வளாகத்தில் இருந்த ருத்ராஷ மரத்தின் கிளை
பந்தல் போட்டு சிறிய குழந்தைகளுக்கு காது குத்தி, மொட்டை அடிக்கும் விழா. கோவிலில் செய்வார்களாம்.
பெரிய பையன்களூக்கு மொட்டை அடித்து, பூணல் போடும் விழா. ஆலய வளாகத்தில் மூங்கிலைக் கொண்டு பந்தல் போட்டு செய்வார்களாம். நாங்கள் சென்ற போது நடந்த பூணூல் கல்யாணம்
ஆலயத்தின் வெளியே வந்த போது தெரு முனையில் இருந்த சிறிய சிவன் ஆலயம்.
அங்கிருந்து அடுத்து பசுபதி நாதர் ஆலயத்திற்கு சென்றோம்.
தொடரும்
படங்கள் அனைத்தும் மிகவும் அழகாக உள்ளன.
ReplyDeleteநன்றியோ நன்றி.
Deleteகுளத்தில் சயன கோலத்தில் உள்ள புத்த நீலகண்டர் படங்கள் மிகவும் பிடித்துள்ளன.
ReplyDeleteஆமாம். அந்தக் கோவிலை விட்டு வெளியே வரவே மனமில்லை எங்களுக்கு.
Deleteகுழந்தைகளுக்கு முடியிறக்குதல் + பூணல் கல்யாண காட்சிகள் போன்றவற்றையும் விடாமல் காட்சிப்படுத்தியுள்ளது அருமை.
ReplyDeleteநல்ல வாய்ப்பு கிடைத்தது. பயன் படுத்திக் கொண்டேன். மிக்க நன்றி.
Deleteருத்ராக்ஷ மரம் நான் இதுவரை பார்த்ததே இல்லை. அதனையும் படம் பிடித்துக்காட்டியுள்ளது பார்க்க வியப்பாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது.
ReplyDeleteதன்யனானேன் அண்ணா
Deleteஸ்ரீராம நவமியும், பேத்தி தியாவின் ஆங்கிலப் பிறந்த தேதியும் ஒன்றாக சேர்ந்த தினத்தில், எங்கோ பயணம் சென்ற நாட்டில் ஸ்ரீ பெருமாள் தரிஸனம் செய்துள்ளது கேட்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
ReplyDeleteஆமாம். அன்று சிவ தரிசனமும் கிடைத்தது. பசுபதிநாதரையும் அன்று தான் தரிசித்தோம்.
Deleteமுக்திநாத் யாத்திரை தொடரட்டும். பசுபதி நாதர் ஆலயத்தில் மீண்டும் நாம் சந்திப்போம். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteமிக்க நன்றி.
Deleteஉங்கள் வருகைக்காக காத்திருக்கிறேன் என்றும்.