Saturday, May 13, 2017

முக்திநாத் யாத்திரை – 2.


காத்மாண்டு நகரின் மேற்குப் பகுதியில் ஒரு மலை மீது அமைந்துள்ளது, சுயம்புநாத் கோயில். 

மேலே கோவிலுக்குச் செல்ல இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று வலது புறமாகப் படிப்பாதையாக உள்ளது. மொத்தம் 365 படிகளாம்.  மற்றொரு பாதை கார் செல்லும்படியாக இடது புறமாகச் செல்லுகிறது.  நாங்கள் பேருந்திலேயே சுயம்புநாதர் கோவிலுக்குச் சென்றுவிட்டோம்.   365 படிகள் ஏற முதலில் உடல் நிலை கண்டிப்பாக ஒத்துழைக்காது என்று தெரியும்.   காசி சென்று விட்டு இந்த டூரில் இணைந்தவர்கள், கோரக்பூர் வரை ரயிலில் வந்து அங்கிருந்து பேருந்தில் காத்மண்டு வந்து சேர்ந்தவர்கள் என்று அனைவரையும் ஒன்று சேர்ப்பதில் இருந்த சிரமங்கள், எல்லாம் சேர்ந்து நாங்கள் மாலை முடிந்து இருள் கவிழ ஆரம்பிக்கும் நேரத்தில் சுயம்புநாதர் கோவிலுக்கு சென்றோம்.   அத்துடன் காத்மண்டுவின் ROAD TRAFFIC.  நம்ம ஊர் பிச்சை வாங்க வேண்டும்.  அத்துடன் சாலைகளும் சரியில்லை.   வழக்கம் போல் எனக்கு கோவிலைப் பார்த்த திருப்தியே இல்லை.  பார்க்கலாம்.  இறைவன் அருள் புரிந்தால் மீண்டும் ஒரு முறை தரிசனம் கிடைக்கிறதா என்று.
இக்கோயிலை குரங்குக்கோயில் என்று அழைக்கிறார்கள்.



முதலில் வஜ்ராயுதம் நம்மைக் கவர்கிறது.   தங்க நிறத்தில் மிகப் பெரியதாக இருக்கிறது.  ஒரு மேடையின் மீது வைக்கப்பட்டுள்ளது. கோயில் பரப்பின் நடுவில் மிக உயர்ந்து ஸ்தூபிவிளங்குகிறது. புத்தரின் இரு அருட்கண்கள் மேலே உள்ள சதுரப்பகுதியின் நான்கு பக்கங்களிலும் அழகாக வரையப்பட்டுள்ளது. ஸ்தூபியின் மீது மஞ்சளால் அபிஷேகம் பண்ணுகிறார்கள். ஸ்தூபியின் நான்கு புறங்களிலும் புத்தருக்கு தங்க நிறத்தில் சந்நதிகள்  உள்ளன. அங்கு விளக்குகள் ஏற்றி வழிபடுகிறார்கள். ஊதுவத்தி வைக்கிறார்கள்  மிகுந்த வேலைப்பாட்டுடன் உள்ளன. சிங்கம் போன்ற விலங்குகளின் வெண்கல உருவங்கள் உள்ளன. வெண்கலமணிகளும் நிறைய உள்ளன. இக்கோயிலின் ஒருபுறத்தில் சீதளாதேவி அம்மன் கோயில் உள்ளது. இங்கே நிறைய இந்துக்கள் வந்து வழிபடுகின்றனர். வலமாகச்சுற்றி வரும்போது புத்தருக்கான ஒரு சந்நிதி மிகப்பெரிதாக உள்ளது. பெரிய புத்தர் சிலை உள்ளது. பெளத்த பிக்ஷுக்கள் அங்கு வழிபாடு முதலியவற்றை நிர்வகித்து வருகிறார்கள். சுயம்புநாத் கோயிலில் இருந்து பார்த்தால் காத்மாண்டு நகர் கீழே அழகாகத் தெரிகிறது. தரிசனம் முடிந்து HOTEL MAHADEV சென்றடைந்தோம்.





பேருந்திலிருந்து இறங்கு 20 படிகள் ஏறி கோவிலுக்குச் சென்றோம்.  
அந்த வழியில் நானும், என் கணவரும்






புத்தர் சிலை






சுழலும் மணிகள்




புத்தரின் இரு அருட்கண்கள் வரையப்பட்ட ஸ்தூபிகள்






















சுயம்புநாதர் கோவில் இருக்கும் மலையிலிருந்து காட்மண்டு நகரின் தோற்றம். 



சுயம்புநாதர் கோவில் இருக்கும் மலையிலிருந்து காட்மண்டு நகரின் தோற்றம். 


தொடரும்

10 comments:

  1. அருமையான அழகான பயணக்கட்டுரை. படங்களெல்லாம் ஜோர் ஜோர்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. வருக, வருக தங்கள் வரவு நல் வரவாகுக.

      படங்கள் ஜோரா. சந்தியா பார்த்தா நன்னா டோஸ் விடுவா. உனக்கு போட்டோவே எடுக்கத் தெரியலைம்மான்னு.

      Delete
  2. //வழக்கம் போல் எனக்கு கோவிலைப் பார்த்த திருப்தியே இல்லை.//

    அடாடா ஏனோ?

    //பார்க்கலாம். இறைவன் அருள் புரிந்தால் மீண்டும் ஒரு முறை தரிசனம் கிடைக்கிறதா என்று.//

    கிடைக்கும். நிச்சயமாகக் கிடைக்கும்.

    //இக்கோயிலை குரங்குக்கோயில் என்று அழைக்கிறார்கள் //

    ஏன் அப்படி? இங்கு காட்டியுள்ள படங்களில் மருந்துக்குக்கூட ஒரு குரங்கையும் காணோமே.

    இங்குள்ள் சோளிங்கருக்குப் போய்ப் பார்த்துவிட்டு வாங்கோ. பெருமாள் மலையில் 1600 படிகளும், அருகேயுள்ள ஹனுமார் மலையில் ஒரு 500 படிகளும் உள்ளன. படிக்குப் பத்து குரங்குகள் வீதம் மொத்தம் சுமார் 21000 குரங்குகள் உள்ளன. :)

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. ஒரு கோவில்ன்னா ஒரு ரெண்டு மூணு விசிட் அடிச்சு ரசிச்சு, ரசிச்சு பார்க்கணும். காசிக்கு போனேன், காவடி கொண்டு வந்தேன்னு சொல்வாளே அந்த மாதிரி போகக்கூடாது. அதனால தான் அப்படி சொன்னேன்.

      Delete
    2. //இங்கு காட்டியுள்ள படங்களில் மருந்துக்குக்கூட ஒரு குரங்கையும் காணோமே. //

      அது ஓடற ஓட்டத்துக்கு போட்டோ எடுக்க விட்டா தானே. இருந்தாலும் உங்களுக்காக ஒண்ணே ஒண்ணு இப்ப add பண்ணிட்டேன்.

      Delete
    3. புதிதாக இணைத்துள்ள குரங்கார் படம் அருமை.

      கேமராவைப்புடுங்கிண்டு போயிடுமோ என பயந்துகொண்டே, குரங்காரின் பின்பக்கமாக, அதாவது வால் பக்கமாக, அந்த வாலை மட்டும் குறி பார்த்து படம் எடுத்துள்ளீர்கள் போலிருக்குது. :)

      Delete
  3. தொடரட்டும் இந்தப் பயணக்கட்டுரை. பாராட்டுகள் + வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. அழகிய இடம். அழகிய படங்கள். தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம். வரவுக்கு மிக்க நன்றி.

      தொடர்ச்சியா வாங்கோ.

      Delete