Sunday, July 30, 2017

ஆத்தூர் வேத பாடசாலை


எனக்கும் என் கணவருக்கும் நேற்று (30.07.2017) செங்கல்பட்டிற்கு அருகில் இருக்கும் ஆத்தூர் கிராமத்தில் திரு காமகோடி அவர்கள் 2011ம் ஆண்டில் இருந்து ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மகா பெரியவாளின் ஆசியுடன் நடத்திக் கொண்டிருக்கும் ஸ்ரீ சதுர்வேத வித்யா கணபதி வேதாஸ்ரமத்திற்குச் செல்லும் ஒரு அறிய, அருமையான வாய்ப்பு கிடைத்தது.  அத்துடன் நேற்று என் தாயார் இறந்த நாள்.  அதனால் இந்த நாளில் இந்த வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இந்த வாய்ப்பு கிடைக்கக் காரணமாக இருந்த முகநூல் நண்பர்களுக்கு ஒரு சிரம் தாழ்ந்த நன்றி.  சொகுசு வாகனப் பயணம், செங்கல்பட்டு தாண்டியவுடன் காலை சிற்றுண்டி (இட்லி, வடை, உப்புமா, சட்டினி, சாம்பார்). வேதாஸ்ரமத்திற்குள் நுழைந்தது முதல் அங்கிருந்து கிளம்பும் வரை ஒவ்வொரு நொடியும் ஒரு சுகானுபவம்.   மேலும் போனசாக என்னுடன் பணி புரிந்த திரு கைலாச மூர்த்தி அவர்களை 15 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்தேன். 
திரு காமகோடி அவர்கள் புதிதாக சென்றிருந்த எங்களைப் போன்றவர்களுக்கு வேதாஸ்ரமத்தை சுற்றிக் காட்டினார்.  
பிறகு கோபூஜை, பின் கணேச சர்மா மாமாவின் உபன்யாஸமும், திப்பிராஜபுரம் மோகன் ராம் தீக்ஷிதர் அவர்களின் அருமையான உபன்யாசம்.  .  கூட்டு, கறி, பாயசம், பச்சடி, சாம்பார், ரசம், மோர், ஊறுகாயுடன்  அமிர்தமான திவ்யப் பிரசாதம்.


பாடசாலையைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ள தயவு செய்து http://www.athurvedapatasala.com/ இந்தத் தளத்திற்குச் செல்லுங்கள்.   
ஆத்தூர் பாடசாலை முகவரியும் வங்கி விபரங்களும்

SHRI CHATURVEDA VIDYAGANAPATHI VEDASHRAMAM
28, SRI MAHADEVAM, KRISHNA GARDEN LAYOUT
AATHUR VILLAGE, CHENGALPET 

KANCHIPURAM DIST 
TAMILNADU – 603101
SCVG TRUST, SB account no. 6134392479, INDIAN BANK, Saidapet branch, Chennai.
IFS Code IDIB000S004.
Contact person : Sri R. Kamakoti
Phone : 98844 02624

 வேதம் கற்கும் குழந்தைகள்


கோ பூஜை
ஒவ்வொரு வித்யார்த்திக்கும் ஒரு ட்ரங்க் பெட்டி.  அவர்களின் எளிய உடைமைகளை வைத்துக் கொள்ள.  நம் வீடுகளில் பீரோ நிறைந்து வழிந்து கொண்டிருக்கும் ஒவ்வொருவரின் துணி மணிகளால். அப்படியும் வெளியே செல்லும் போது எதைப் போட்டுக் கொள்வது என்று குழம்புவோம்.  
  வகுப்பறை. வித்யார்த்திகளுக்கு ACADEMIC கல்வியும் கற்றுத் தருகிறார்கள். 


ஸ்ரீ ஸ்ருதி காமாட்சி அம்பாள் சன்னதி,  சதுர்வேத வித்யா கணபதி, 
பால சுப்பிரமணியர்,  
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மகா பெரியவா.


உபன்யாசம் செய்யும் 
திரு கணேச சர்மா மாமாவும்,
 திரு திப்பிராஜபுரம் மோகன் ராம் தீக்ஷிதர் அவர்களும்.  
உபன்யாசம் கேட்டு விட்டு வேத பாராயணம் செய்ய காத்திருக்கும் வித்யார்த்திகள்.


எங்களுடன் வந்திருந்த திரு சுதன் அவர்கள் வரைந்த ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மகா பெரியவாளின் திரு உருவம்.  திரு சுதன் அவர்கள் நிறைய படங்கள் வரைந்திருக்கிறார்.  அவர் அனுமதியுடன் இனி குரு வார ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகா பெரியவாளின் பதிவுகளில் வெளியிடுகிறேன்.
கோசாலையை அலங்கரிக்கும் ரிஷபம்.
கோசாலையின் அழகிய கன்றுக் குட்டிகள்

இடது கோடியில் நிற்பவர்தான் திரு கைலாச மூர்த்தி.திரு காமகோடி அவர்களுடன் (பவ்யமாக கட்டிக் கொண்டு இருப்பவர்.  நிறை குடம் தளும்பாது அல்லவா) நாங்கள்.

நிறைவான நெஞ்சத்துடன் வீடு திரும்பினோம்.  இது போல் அடுத்த பயணத்தை எதிர்பார்த்துக்கொண்டே.


Sunday, July 23, 2017


முக்திநாத் யாத்திரை – 6


காட்மண்டுவில் நாங்கள் தங்கி இருந்த 
HOTEL MAHADEV ல் வைக்கப்பட்டிருந்த 
மகாதேவர் சிலை.
போக்ரா விமான நிலையத்தில் நான், என் கணவர், மற்றும் உடன் வந்தவர்கள்.


பசுபதி நாதரையும், குஹேஸ்வரியையும் தரிசித்து விட்டு நாங்கள் தங்கி இருந்த HOTEL MAHADEV க்கு வந்து மதிய உணவை முடித்துக் கொண்டு CHECK OUT செய்து விட்டு பேருந்தில் POKHRA என்ற இடத்திற்குக் கிளம்பினோம்.  நேபாள சாலைகள் ரொம்பவே சுமார்.  தலை நகர் காட்மண்டுவில் இப்பொழுது தான் சாலைகளை செப்பனிட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.  அதனால் அங்கு TRAFFIC JAM ரொம்பவே இருக்கிறது.  ஒரு வழியாக பேருந்தை உருட்டிக்கொண்டு இரவு 10 மணிக்கு POKHRA போய் சேர்ந்தோம். 

இரவு HOTEL ல் தங்கி விட்டு மறுபடி காலை 7 மணிக்கு POKHRAவில் இருந்து விமானம் மூலம் JOMSOM என்ற இடத்திற்கு விமானம் மூலம் செல்ல வேண்டும்.  20 நிமிட விமானப் பயணம்.  ஆனால் ஒரு நாளைக்கு 3 அல்லது 4 முறைகள்தான் விமானங்கள் செல்கின்றன.  திடீரென்று பருவ நிலை சரியில்லை என்று விமான சேவையை நிறுத்தி விடுகிறார்கள்.  அதை விட்டு விட்டால் அம்போ கதி.  தரை வழிப் பயணம் கிட்டத்தட்ட 10 முதல் 12 மணி நேரங்கள் ஆகும்.  போகும் பொழுது எங்களுக்கு விமான சேவை கிடைத்தது.  TARA
விமானத்தில் சென்றோம்.  வரும்பொழுது (ஹ, ஹ, ஹா SUSPENSE) நாங்கள் சென்ற TARA AIRWAYS விமானம்.  இதில் விமானப் பணிப் பெண்ணையும் சேர்த்து 17 பேர் தான் அமரலாம். ஒரு இடத்தில் இரண்டு மலைகளுக்கு இடையில் விமானம் திரும்பிய போது ஒரு கணம் ஒரு ஜெர்க்.  அம்மாடி பயந்து விட்டோம்.  கீழே விழுந்தால் எலும்பு கூட தேராது.   JOMSOMல் பயங்கர குளிர்.   

ஜோம்சம் விமான நிலையத்தில்


தொடரும்...........

Thursday, July 20, 2017நூறாவது பதிவுஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மகாபெரியவா சரணம் !!

நூறாவது பதிவு மகா பெரியவாளின் பதிவாக இங்கு பதிவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.  

ஜய ஜய சங்கர  ஹர ஹர சங்கர

Image may contain: food and text


""பெரியவாளின் பாதுகை கிடைத்ததும் என் சர்வ நாடியும் அடங்கின. சர்வாங்கமும் ஒடுங்கின. மேனி புல்லரித்து, எத்தனை நேரம் உறைந்து போனேன் என்று தெரியாமல் செய்த அபார கருணை அது.""

அது 1988ஆம் வருடம். தொழிலை அபிவிருத்தி செய்ய வங்கியில் இருந்து கடன் கேட்டிருந்தோம். கொஞ்சம் உதாசீனமாகப் பதில் கிடைத்தது. இதை தந்தையிடம் சொல்லவேயில்லை.

திடீரென்று அப்பா, அம்மா இருவரும் காஞ்சிபுரம் போகலாம் என்று அழைத்த உடன் கிளம்பினேன். பெரியவாளைத் தரிசனம் செய்ய, 300க்கும் அதிகமானோர் நின்றிருக்க, நாங்கள் கடைசியில் நின்றிருந்தோம்.

திடீரெனப் பெரியவா வழிவிடச்சொல்லி கூட்டத்தை சைகை செய்தார். வழி கிட...ைத்தவுடன் கடைசியில் நின்றிருந்த எங்களை அருகில் வரும்படி அழைத்தார். மெய் பதற அவர் முன் சென்று நின்றோம்.

“என்ன வேண்டும்?” என்று இரண்டு முறை கேட்டார்.

நாங்கள், “எதுவும் வேண்டாம்” என்று, பவ்யமாகத் தலை அசைத்தோம்.

மூன்றாவது முறை கோபமாகக் கேட்டார்.

உடனே “பிரசாதம் வேண்டும்” எனக் கூறினோம்.

உடனே, தனது திருவடிகளில் அணிந்திருந்த பாதுகைகளை எடுத்து, தாமரை மலரை அதன் மேல் வைத்து எங்களிடம் கொடுத்தார்.

பரதாழ்வார், ஸ்ரீராமரின் பாதுகைகளைக் கேட்டுப் பெற்றார். அது மகா
புண்ணியம். கேட்காமலேயே – மகா பெரியவாளின் பாதுகை கிடைத்ததும் இதுதான் நினைவுக்கு வந்தது.Related imageஅந்த நொடியில் என் சர்வ நாடியும் அடங்கின. சர்வாங்கமும் ஒடுங்கின. மேனி புல்லரித்து, எத்தனை நேரம் உறைந்து போனேன் என்று தெரியாமல் செய்த அபார கருணை அது. பரவசமான நேரம்! உயிர் உள்ளவரை இறைவனது எல்லையில்லாக் கருணை என்னை ஆள வேண்டும் என்ற
இறைஞ்சுதலுடன், அந்தப் பாதுகைகளைச் சுமந்து வந்தேன்.

தேரில் தெய்வம் உலா வந்து கொண்டிருக்கும்போது, தெருவில் இறங்கி, நாம் அந்தத் தெய்வத்தை தரிசனம் செய்யப் போகும் சமயத்தில், அந்தத் தெய்வம் தேரிலிருந்து இறங்கி வந்து நம் கைகளைப் பிடித்துக்கொண்டு கருணை செய்தால் எப்படி இருக்கும்? அந்த மாதிரியான ஒரு புளகாங்கிதம் அது.

காஞ்சியில் இருந்து திரும்பி வந்த உடன், வங்கியில் இருந்து அழைப்பு
வந்தது. ‘ஏதோ ஒரு டென்ஷனில் சொல்லிவிட்டோம். எத்தனை லட்சம்
வேண்டுமானாலும் கடன் தருகிறோம். வேண்டுமானால், செக்கை அனுப்பி
வைக்கிறோம்’ என்றனர்.

இப்படி ஒன்றிரண்டு அல்ல; 20 வருடங்களுக்கும் அதிகமாக வாடாமல் அதே மலர்களுடன், சந்தனப் பேழையில் இருந்துகொண்டு, நிறையத் திருப்பங்களை, நானே எதிர்பார்க்காத அளவுக்கு நடத்தி வருகின்றன, அந்தப் பாதுகைகள்.”


Image may contain: shoes

சொல்லும் போதே அவர் குரலில் பரவசம் தெறிக்கிறது. அந்தப் பரவசம்
நமக்குள்ளும் ததும்பத்தான் செய்கிறது

நன்றி : கோவை கிருஷ்ணா ஸ்வீட் அதிபர் கிருஷ்ணன்.


Image may contain: one or more people and people sitting

----------------------------------------------------------

பெரியவாள் வாழும் காலத்திலே நாமும் வாழ்கிறோம் என்பதுதான் எத்தனை பெரிய பாக்யம் !

அவரைப் பார்ப்பதற்கும் அவரது அருள் வாக்கைக் கேட்பதற்கும் என்ன தவம் செய்தோமோ?


காமகோடி தரிசனம்


காணக்காணப் புண்ணியம்

Image may contain: one or more peopleImage may contain: 1 personMonday, July 17, 2017

புதுக்கோட்டை பகுதி 1இந்த மாதம் 13, 14, 15 மூன்று நாட்களும் புதுக்கோட்டையில் தங்கும் ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்தது என் அக்காளின் இரண்டு பேரன்களின் உபநயனத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்புடன்.   எந்த எந்த கோவில்களுக்குச் செல்ல வேண்டும் என்று ஒரு பட்டியலுடன் கிளம்பி விட்டோம்.  அத்தனை கோவில்களையும் தரிசிக்க ஆசை தான்.  ஆனால் கிடைத்த நேரத்தில் தரிசித்த கோவில்களைப் பற்றி எழுதுகிறேன்.

முதலில் நாங்கள் சென்றது அருள்மிகு பிரகதம்பாள் உடனுறை கோகர்ணேசுவரர் திருக்கோவில். 
சுவாமி : அருள்மிகு கோகர்ணேசுவரர், அருள்மிகு மகிழவனேசர்.
அம்பாள் : அருள்மிகு பிரகதம்பாள், அருள்மிகு பெரியநாயகி, அருள்மிகு மங்கள நாயகி.
தீர்த்தம் : கங்கா தீர்த்தம் (சுனை), மங்கள தீர்த்தம் (மகிழவன நாதர் திரு முன்பு).
தலவிருட்சம் : மகிழ மரம் (காமதேனுப் பசு வழிபட்டது).
தலச்சிறப்பு : இத்தலம் உருவான காலம் ஏழாம் நூற்றாண்டு(கி.பி. 600 முதல் 630 வரை) என மதிப்பிட்டிருக்கிறார்கள்.  திருகோகர்ணம் குடவரைக் கோயில் ஆகும்.  குடவரைக் கோயில்கள்  என்பவை, செயற்கையான கட்டுமானங்கள் இல்லாமல், முழுமையான பாறைப் பகுதியை  அப்படியே குடைந்து மண்டபங்கள், இறைவன் திருமேனிகள் என்று உருவாக்கப்பட்டவை.  திருகோகர்ணம் கோகர்ணேசுவரரின் கருவறை, மலைச் சரிவில் உருவாக்கப்பட்டிருக்கிறது.   நடுவில் தனி அறையில் பெரிய சிவலிங்கம் வடிக்கப்பட்டிருக்கிறது.  அதற்கு முன்னால் உள்ள  மண்டபப் பகுதியில் இடப்புறச் சுவரில் விநாயகரும், வடப்புறச் சுவர்ப் பகுதியில்  கங்காதரமூர்த்தியும் வடிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்த மண்டபப் பகுதி முழுவதும் நான்கு  தூண்களின் மீது அமைந்துள்ளது போல் குடைந்து உருவாக்கப்பட்டுள்ளது.  சந்நிதியின்  இடப்புறம் உள்ள சுவரைக் கற்பனையால் விலக்கி விட்டுப் பார்த்தால் விநாயகர் திருமேனிக்குப்  பின்புறமாகவும் பாறைச் சரிவு நீண்டிருப்பதைக் காணலாம்.  இந்தப் பாறைச்சரிவின் அடிப்புறத்தில்,  தரையோடு ஒட்டியதுபோல் ஏழு பெண் தெய்வங்களின் திருவுருவங்கள் குடைவரைக் கலையாகச்  செதுக்கப் பட்டிருக்கின்றன.  இடப்புறம் வீரபத்திரர் திருமேனியும், வலப்புறக் கோடியில் விநாயகர்  திருமேனியும் விளங்க, இடையில் ஸப்த கன்னிமார்கள் அல்லது ஸப்த மாதாக்கள் என்னும்  திருநாமத்தோடு ஏழு பெண் தெய்வங்களின் திருமேனிகள் வடிக்கப்பட்டுள்ளன.  பைரவி, இந்திராணி, மாகேஸ்வரி, நாராயணி, வராஹி, கௌமாரி, பிடாரி - என்ற இந்த ஸப்த மாதர்களின் திருமேனிகள் வெகு நுட்பமான சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளது. 
இந்தச் சிற்ப வடிவங்கள் ஏழாம் நூற்றாண்டுப் பல்லவர்களின் கலைப்பணிகளாக இருந்த போதிலும்  இந்தக் கருவறைகளை உள்ளடக்கிய மண்டபப் பகுதிகள் பதினோராம் நூற்றாண்டுச் சோழர்களின்  கலைப்பணி என நம்பப்படுகிறது.  கி.பி. 1012 இல் அரசுரிமையேற்ற பரகேசரி முதலாம் ராஜேந்திரச்  சோழன் காலத்தில் இந்த பிரகதாம்பாள் திருக்கோயில் கட்டப்பட்டிருக்கலாம் என  கருதப்படுகிறது.  
எந்தக் கோயிலிலும் இல்லாத ஒரு வியப்பாக, திருகோகர்ணம்  திருக்கோயிலில்தான் மாடிப்பகுதி என்ற மேல் தளத்திலும் தெய்வத் திருமேனிகள் இடம்  பெற்றுள்ளன.  இந்த மாடிப் பகுதியில் முதலாம் ராஜேந்திரன் காலக் கல்வெட்டு ஒன்றும்  காணப்படுகிறது.  இந்த மாடியில் முருகன் வள்ளி தேவஸேனாவுடன் எழுந்தருளியுள்ள  திருக்கோவிலுக்குத் தென்புறம் உள்ள பாறைச் சரிவில் காணப்படுகிறது.  கட்டுமானங்கள்  இல்லாமல் பார்த்தால் கோகர்ணேசுவரர், சப்த கன்னிமார் திருமேனிகள் உருவாகக்கப்பட்டுள்ள  பாறையின் மேல் பகுதியில் இக்கல்வெட்டு அமையும்.  முருகன் கோயிலை ஒட்டி வடபுறச்  சுவருக்கு அப்பால் பாறை நீண்டு உயர்ந்திருக்கிறது.  மேற்குப் புறப்பாறைப் பிளவில் சுனை, வற்றாத  நீர்வளத்தோடு விளங்குகிறது.  சுனை அருகே நான், என் கணவர், என் தம்பிமுருகன் சந்நிதியில் நானும், என் கணவரும்
இந்த கோவில் நித்யோசவம் என்று சொல்லக்கூடிய மிக பெரிய சிறப்புடையதாக இருந்தது.  நித்யோசவம் என்றால்  தினந்தோறும் திருவிழா நடத்துவதாக ஐதீகம்.  சமீப காலத்தில் 12 மாதமும் திருவிழாக்கள் நடந்த கோவில் முந்தய காலத்தில் 20  நாட்களுக்கு உள்ளேயே சுவாமி புறப்பாடும் 10 நாட்களுக்கு வெளியிலேயே திருவிழா என்று சொல்லப்படும்.  காலத்தினுடைய  நிர்பந்தத்தினால் இப்போது 12 மாத திருவிழாக்கள் எல்லாம் நின்று போய் 3 திருவிழாக்கள் தான் நடைபெறுகிறதுருத்ராட்ச லிங்கம்

 இங்குள்ள கோகர்னேஸ்வரர் கோயிலின் மேல்மாடத்தில் ஒரே கல்லில் 1008 ருத்ராட்ச லிங்கங்கள் அமைந்திருப்பது கண்கொள்ளாக் காட்சியாகும். இக்கோவில் தெற்கு  வடக்காக 680 அடி நீளத்திலும் கிழக்கு மேற்காக 190 அடி அகலத்திலும் அமைந்துள்ளது.   இக்கோவில் தெற்கு  நோக்கியும், சந்நிதிகள் கிழக்கு நோக்கியும் அமைந்துள்ளது. 
தல வரலாறு : இத்திருத்தலதிற்கு புராணக்கதை ஒன்று உள்ளது.  அதன் அடிப்படையிலேயே திரு-கோ-கர்ணம் என்ற ஊர்ப் பெயரும் அமைந்தது.  ஒருமுறை அமரருலகில் தேவர்களின் தலைவனான  இந்திரனின் அவை கூடியிருந்த போது, எல்லாரும் குறித்த நேரத்தில் அவைக்கு வந்து விட்டார்கள்.   கேட்டதையெல்லாம் வாரி வழங்கும் இயல்புடைய தெய்வப் பசுவான காமதேனு மட்டும் சற்றுக்  காலம் கடந்து வந்ததால் தேவேந்திரனுக்குக் கடும்கோபம் உண்டாயிற்று.  இதனால் காமதேனுவை,  நீ பூமியில் போய் பசுவாகப் பிறப்பாயாக என்று சாபம் தந்து விட்டார்  தேவேந்திரன்.  காமதேனுப் பசு  பூமியில் வந்து சாதாரணமான பசுவாகப் பிறப்பெடுத்து அதை மாமுனிவர் வசிட்டர் அன்போடு  பேணிப் பாதுகாத்து வந்தார். பூமியில் வந்து பிறந்துவிட்ட போதிலும் தெய்வப் பசுவுக்கு  மனிதர்களோடு பேசும் ஆற்றல் இருந்திருக்கின்றது.  அத்துடன் தன் வினையையும்,  வினைப்பயனையும் உணர்ந்த நிலையிலும் இருந்தது.
ஒரு நாள் மாமுனி வசிட்டரை வணங்கிய பசு தன்னடைய சாப விமோசனத்துக்கு ஏதேனும்  வழியுண்டா என்று கூறி அருளுமாறு வேண்டி நின்றது.  மாமுனிவர் வழி சொன்னார், பாரதத்தின்  தென்பகுதியில் வகுளாரண்யம் என்ற பெயரில் மகிழ மரங்கள் அடர்ந்த காடு ஒன்று உள்ளது.   அங்கே கபிலர் என்னும் முனிவர் ஒருவர் தவம் இயற்றுகிறார், நீ அவரைச் சென்றடைந்தால் உன்  சாபம் நீங்கும், வடமொழியில் வகுளம் என்றால் மகிழமரம் என்று பொருள்.  வகுள ஆரண்யம்  என்பது மகிழமரக்காடு.  அவ்வாறே பசுவும் வகுளாரண்யத்தை அடைந்து கபில முனிவரிடம்  சென்று வணங்கித் தன்னுடைய வரலாற்றைச் சொன்னது. பசுவின் கதையைக் கேட்டு  மனமிரங்கிய கபில முனிவர் அந்த மகிழவனத்தில் ஒரு சிவாலயம் இருப்பதாகவும் அதில்  வகுளவனேசுவரர் என்கிற திருநாமத்தோடு மகாதேவர் அருள்பாலித்துக் கொண்டிருப்பதாகவும்  சொல்லி தினமும் நீ கங்கை நீரால் வகுளவனேஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வந்தால் உன் சாபம்  அகலும் என்று வழி காட்டினார்.
அவ்வாறே தினமும் கங்கை நீரைக் தன்னுடைய காதுகளில் ஏந்திக்கொண்டு மகிழவனக்  கடவுளுக்குப் புனித நீராட்டிக் கொணடிருந்தது பசு.  இந்நிலையில் அது ஒரு கன்றையும் ஈன்று  பாலூட்டிக் கொண்டிருந்தது.  வழக்கமான இறைவன் பணியில் காதுகளில் கங்கை நீரோடு ஒருநாள்  அது மகிழ வனத்துக்கு வரும் வழியில் ஒரு வேங்கைப்புலி வழிமறித்தது, உடனே அதைத் தனக்கு  இரையாக்கிக் கொள்ளவும் முயன்றது வேங்கை.  வேங்கையிடம் மன்றாடியது பசு, நான் சிவனுக்கு அபிஷேகம் செய்வதற்காக கங்கை நீர் சுமந்து வந்து கொண்டிருக்கிறேன், என்னை இப்போது  விட்டுவிடு, அபிஷேகம் முடித்துவிட்டு என்னுடைய இளங்கன்றுக்கும் பாலூட்டிப் பசியாற்றிவிட்டுத்  தவறாமல் உனக்கு இரையாக வந்து விடுகிறேன், என்னை நம்பு.  நான் சொல் மாற மாட்டேன்....  தயவு செய்து என்னை மேலே செல்ல அனுமதித்து வழியை விடு, என்று வேண்டிக் கேட்டுக்  கொண்டது.

சிவபிரானுக்கு அபிஷேகப் பிரியர் என்கிற திருநாமம் உண்டு.  தனக்கு தினமும் கங்கை நீரால் திருமுழுக்காட்டி வரும் பசுவின் பக்தியில் மனம் பறிகொடுத்த சிவபெருமான் - வகுளவனேசுவரர்.   அதை மேலும் சோதித்து முக்தியளிப்பதற்காகவே வேங்கை வடிவெடுத்து வந்திருந்தார்,  வழிமறித்தார்.  பசுவின் விருப்பத்தை ஏற்று உடனே அதற்கு வழிவிட்டது வேங்கை.  சொன்ன  சொல் தவறாமல் இறைவனுக்கு அபிஷேகம் செய்துவிட்டுத் தன்னுடைய இளங்கன்றுக்கும்  பாலூட்டிவிட்டு வேங்கையின் முன்னால் இரையாக நின்றது பசு.  பசுவின் வாக்கு தவறாத பண்பால்  மகிழ்ச்சியடைந்த சிவபெருமான் ரிஷப ஆரூடராகத் தம் தேவியோடு காட்சியளித்து அந்தக்  காமதேனுப் பசுவுக்கு நற்கதி அருளினார்.

நுழைவு வாயில்வேங்கையாக உருமாறி சிவபெருமான் பசுவை வழிமறித்த இடம் திருவேங்கை வாசல் என வழங்கப் படுகிறது, பசு(கோ) தன்னுடைய காதுகளில் (கர்ணம்) கங்கை நீரைக் கொண்டு வந்து ஈசனுக்கு திருமுழுக்காட்டிய தலம் திரு-கோ-கர்ணம் என்று வழங்கப்படுகிறது.  அபிஷேகம் செய்தது போக  எஞ்சிய கங்கை நீரை காமதேனுப்பசு பாறையைக் கொம்புகளால் கீறி அதில் வடித்துச் சேமித்தாம்.   அது கபில தீர்த்தம் என்கிற பெயருடன் இன்றைய திருகோகர்ணம் கோகர்ணேஸ்வரர் திருக்கோவில்  மலைச் சுனையாக, வற்றாத பெருங்கருணையாய் என்றும் விளங்கிக் கொண்டிருக்கிறது, இதை  கங்கா தீர்த்தம் எனவும் வழங்குவதுண்டு.
பாடியோர் : அப்பர் சாமிகள் அவர்களால் பாடல் பெற்ற ஸ்தலம்.
 

மகிழ மரம்
பிரகதாம்பாள் மேல் உருகி அருமையாக பாடிய என் அக்காளின் கடைசி சம்பந்தி தொடரும்........