நூறாவது பதிவு
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மகாபெரியவா சரணம் !!
நூறாவது பதிவு மகா பெரியவாளின் பதிவாக இங்கு பதிவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர
""பெரியவாளின் பாதுகை கிடைத்ததும் என் சர்வ நாடியும் அடங்கின. சர்வாங்கமும் ஒடுங்கின. மேனி புல்லரித்து, எத்தனை நேரம் உறைந்து போனேன் என்று தெரியாமல் செய்த அபார கருணை அது.""
அது 1988ஆம் வருடம். தொழிலை அபிவிருத்தி செய்ய வங்கியில் இருந்து கடன் கேட்டிருந்தோம். கொஞ்சம் உதாசீனமாகப் பதில் கிடைத்தது. இதை தந்தையிடம் சொல்லவேயில்லை.
திடீரென்று அப்பா, அம்மா இருவரும் காஞ்சிபுரம் போகலாம் என்று அழைத்த உடன் கிளம்பினேன். பெரியவாளைத் தரிசனம் செய்ய, 300க்கும் அதிகமானோர் நின்றிருக்க, நாங்கள் கடைசியில் நின்றிருந்தோம்.
திடீரெனப் பெரியவா வழிவிடச்சொல்லி கூட்டத்தை சைகை செய்தார். வழி கிட...ைத்தவுடன் கடைசியில் நின்றிருந்த எங்களை அருகில் வரும்படி அழைத்தார். மெய் பதற அவர் முன் சென்று நின்றோம்.
“என்ன வேண்டும்?” என்று இரண்டு முறை கேட்டார்.
நாங்கள், “எதுவும் வேண்டாம்” என்று, பவ்யமாகத் தலை அசைத்தோம்.
மூன்றாவது முறை கோபமாகக் கேட்டார்.
உடனே “பிரசாதம் வேண்டும்” எனக் கூறினோம்.
உடனே, தனது திருவடிகளில் அணிந்திருந்த பாதுகைகளை எடுத்து, தாமரை மலரை அதன் மேல் வைத்து எங்களிடம் கொடுத்தார்.
பரதாழ்வார், ஸ்ரீராமரின் பாதுகைகளைக் கேட்டுப் பெற்றார். அது மகா
புண்ணியம். கேட்காமலேயே – மகா பெரியவாளின் பாதுகை கிடைத்ததும் இதுதான் நினைவுக்கு வந்தது.
அந்த நொடியில் என் சர்வ நாடியும் அடங்கின. சர்வாங்கமும் ஒடுங்கின. மேனி புல்லரித்து, எத்தனை நேரம் உறைந்து போனேன் என்று தெரியாமல் செய்த அபார கருணை அது. பரவசமான நேரம்! உயிர் உள்ளவரை இறைவனது எல்லையில்லாக் கருணை என்னை ஆள வேண்டும் என்ற
இறைஞ்சுதலுடன், அந்தப் பாதுகைகளைச் சுமந்து வந்தேன்.
தேரில் தெய்வம் உலா வந்து கொண்டிருக்கும்போது, தெருவில் இறங்கி, நாம் அந்தத் தெய்வத்தை தரிசனம் செய்யப் போகும் சமயத்தில், அந்தத் தெய்வம் தேரிலிருந்து இறங்கி வந்து நம் கைகளைப் பிடித்துக்கொண்டு கருணை செய்தால் எப்படி இருக்கும்? அந்த மாதிரியான ஒரு புளகாங்கிதம் அது.
காஞ்சியில் இருந்து திரும்பி வந்த உடன், வங்கியில் இருந்து அழைப்பு
வந்தது. ‘ஏதோ ஒரு டென்ஷனில் சொல்லிவிட்டோம். எத்தனை லட்சம்
வேண்டுமானாலும் கடன் தருகிறோம். வேண்டுமானால், செக்கை அனுப்பி
வைக்கிறோம்’ என்றனர்.
இப்படி ஒன்றிரண்டு அல்ல; 20 வருடங்களுக்கும் அதிகமாக வாடாமல் அதே மலர்களுடன், சந்தனப் பேழையில் இருந்துகொண்டு, நிறையத் திருப்பங்களை, நானே எதிர்பார்க்காத அளவுக்கு நடத்தி வருகின்றன, அந்தப் பாதுகைகள்.”
சொல்லும் போதே அவர் குரலில் பரவசம் தெறிக்கிறது. அந்தப் பரவசம்
நமக்குள்ளும் ததும்பத்தான் செய்கிறது
நன்றி : கோவை கிருஷ்ணா ஸ்வீட் அதிபர் கிருஷ்ணன்.
------------------------------
பெரியவாள் வாழும் காலத்திலே நாமும் வாழ்கிறோம் என்பதுதான் எத்தனை பெரிய பாக்யம் !
அவரைப் பார்ப்பதற்கும் அவரது அருள் வாக்கைக் கேட்பதற்கும் என்ன தவம் செய்தோமோ?
காமகோடி தரிசனம்
காணக்காணப் புண்ணியம்
கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்ப்பா போன்ற இனிமையான பதிவு !
ReplyDelete>>>>>
நமக்குத் தேவை அதுதானே.
Deleteவெற்றிகரமாக நூறாவது பதிவிட்ட ஜெயாவுக்கு 100க்கு 110 மார்க்குகள் தரப்படுகின்றன.
ReplyDelete>>>>>
ஆஹா நன்றியோ நன்றி. 100 பதிவு எட்ட நான் பட்ட பாடு. இப்படி 110 மார்க் கிடைக்கும்ன்னா எவ்வளவு மகிழ்ச்சி. 200 ஐ எட்ட உங்கள் ஆசிதான் தேவை.
Deleteகுருவே வணக்கம்
படத்தேர்வுகள் அனைத்தும் பார்க்கப்பார்க்க பேரானந்தத்தைத் தருவதாக உள்ளன.
ReplyDelete>>>>>
எல்லாம் அவர் அருள். உங்கள் பேரானந்தம் என் பிரம்மா(ண்ட)ஆனந்தம்.
Delete//அந்த நொடியில் என் சர்வ நாடியும் அடங்கின. சர்வாங்கமும் ஒடுங்கின. மேனி புல்லரித்து, எத்தனை நேரம் உறைந்து போனேன் என்று தெரியாமல் செய்த அபார கருணை அது. பரவசமான நேரம்! //
ReplyDeleteபடிக்கும் நம்மையும் கூடவே மேனி சிலிர்க்க வைக்கும் மிகவும் அற்புதமான வரிகளாக உள்ளன.
>>>>>
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர
Deleteபடிக்கும் நமக்கே இத்தனை ஆனந்தமாக இது உணரப்படும்போது, நேரில் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா திருக்கரங்களால் இதுபோலதொரு பாக்யம் பெற்றவர்களின் பூர்வ புண்ணிய ஸ்தானத்தை நினைத்து பூரித்துப் போகிறேன்.
ReplyDelete>>>>>
இருக்காதா பின்னே. உங்களுக்கும் ஒரு பாதுகை கிடைத்ததல்லவா அந்த மகானிடம் இருந்து
Delete//இப்படி ஒன்றிரண்டு அல்ல; 20 வருடங்களுக்கும் அதிகமாக வாடாமல் அதே மலர்களுடன், சந்தனப் பேழையில் இருந்துகொண்டு, நிறையத் திருப்பங்களை, நானே எதிர்பார்க்காத அளவுக்கு நடத்தி வருகின்றன, அந்தப் பாதுகைகள்.//
ReplyDeleteமிகவும் கொடுத்து வைத்தவர். கிடைத்துள்ளது மிகவும் பொக்கிஷம்தான். அதில் என்ன சந்தேகம்?
அதை பூஜித்து நமஸ்கரித்தால் இன்னும் கற்பக விருக்ஷம் போல நினைத்ததையெல்லாம் மிகச்சுலபமாகஅடைய முடியும்.
>>>>>
நினைத்தாலே நன்மை தரும் மகான் அவர். பாதுகையை பூஜித்து நமஸ்கரித்தால், அதுதான் அவர்கள் உயர்ந்த நிலையை அடைந்திருக்கிறார்கள்.
Delete//பெரியவாள் வாழும் காலத்திலே நாமும் வழ்கிறோம் என்பதுதான் எத்தனை பெரிய பாக்யம் !//
ReplyDeleteஇந்த வரிகளில் ஏதோ ஒரு சின்ன வழுக்கல் உள்ளது.
இதன் கீழே காட்டப்பட்டுள்ள படத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா பழுத்த பழமாக, குளக்கரையில் குளத்து நீரை ஒட்டியுள்ள படியினில் தனியாக அமர்ந்துள்ளார். அவரின் பாதங்களை வழுக்கி விடுமோ என அஞ்சி நடுங்குகிறேன்.
அதனால் ‘வழ்கிறோம்’ என்ற வழுக்கலை நன்கு தேய்த்து அலம்பிவிட்டு ‘வாழ்கிறோம்’ என மாற்றிவிடுங்கோ, ஜெயா.
>>>>>
சரி செய்து விட்டேன். சிரம் தாழ்ந்த நன்றிகள் உங்களுக்கு.
Deleteஇன்று வியாழக்கிழமைக்கு (குருவாரம்) ஏற்ற மகத்தான பகிர்வு.
ReplyDeleteபதிவுக்கும், பகிர்வுக்கும், ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அந்த பக்தரை அழைத்து தன் ஸ்ரீ பாதுகைகளைக் கொடுத்து அனுக்கிரஹித்தது போலவே, எனக்கு மெயிலில் தகவல் அனுப்பி “இன்று ஸ்ரீஸ்ரீஸ்ரீ பெரியவா பற்றிய பதிவு வெளியிட்டுள்ளேன், அண்ணா, அதுவும் அது என் வலைத்தளத்தின் 100வது பதிவாக அமைந்துள்ளது” எனச் சொல்லி என்னை அழைத்து ஆட்கொண்ட எங்கட ஜெயாவுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
அன்புடன் கோபு அண்ணா
அழைக்கும் முன் வரும் அண்ணாவை அழைத்தால் ஓடோடி வந்து விடுவீர்களே. அதனால் என்றும் முதல் அழைப்பு உங்களுக்குத்தான். வேறு யாரையும் அழைப்பதும் இல்லை.
Deleteநெஞ்சார்ந்த
சிரம்தாழ்ந்த
மனமார்ந்த
நன்றிகள்.
அருமையானபதிவு. படிக்கும்போது இந்த பாக்கியத்தைப் பெற்றவர் உங்கள் குடும்பமோ எனயோசனையும் வலுத்தது.இவரைப்பற்றி எழுதுவதும் அதற்குஸமமானதுதான்.கிருஷ்ணா ஸ்வீட் அதிபரும் கொடுத்து வைத்தவர்தான். அழகாக எழுதிவருகிறீர்கள். என்னைப்பற்றித் தப்பாக நினைக்க வேண்டாம். வயோதிகம். அன்புடன்
ReplyDelete