எளிமையான தமிழில்
இந்த விநாயகர் பாடலை படித்து ரசித்தேன். நீங்களும் ரசிக்க இங்கு பகிர்கிறேன்.
வயல்களில் பயிர்களை
பாதுகாக்க அத்தி மரத்தின் கீழ் பிள்ளையாரை வைத்து வழிபடும் வழக்கம், நம் முன்னோர்களிடம்
உண்டு. அறுவடை முடிந்தபின் குடியானவர்கள் அந்தப்
பிள்ளையாருக்குச் செய்யும் பூஜையை விவரிக்கும் பாடல்.
பூவாம் துளசி பிள்ளையாருக்கு
சாத்த
வெள்ளையரளி மாலை வேலவருக்கு
சாத்த
காசரளிமாலை காத்தவனுக்கு சாத்த
வெள்ளை பிள்ளையாருக்கு நல்லெண்ணையாம்
காப்பு.
ஓடு முச்சூடும் தேங்காய் உடைப்பேன்
பிள்ளையாருக்கு
பால், இளநி, தேங்காய் நான்
படைப்பேன் பிள்ளையாருக்கு
கொத்தோடு மாங்காய் குலை நிறைந்த
தேங்காய்
அச்சோடு வெல்லம் ஆலை வெல்லம்
நூறு
கொப்பரையாம் பாவு ஒப்புதமாம்
வேறு
தாரோடு வாழை தலை வாழை நூறு
காயோடு வாழை கரு வாழை நூறு
பூனை தலை போல பொரி உருண்டை
நூறு
எலித்தலை போல எள்ளுருண்டை
நூறு
ஆனைக்காது போல அதிரசங்கள்
நூறு
தட்டோடு மாலை தண்டமாலை நூறு
கொத்தோடு மாலை கொண்டமாலை நூறு
அத்தனையும் சேர்த்து அமோகமாம்
பூஜை
சித்தி விநாயகனும் சினம் தணிந்தே
வருவார்
முத்தி அருள்புரிவார் முச்சூடும்
வரம் கொடுப்பார்
சக்தியுள்ள எங்கள் முன்னோர்
அத்திமரப் பிள்ளையாரே!
__/\__ __/\__
ReplyDeleteவிநாயகரின் பரிபூரண அருள் கிடைக்க வாழ்த்துக்கள் ஸ்ரீராம்
Deleteஅழகான விநாயகர்.
ReplyDeleteஆஹா
Deleteஅற்புதமான முருகன்.
ReplyDeleteஓஹோ
Deleteஎளிமையான தமிழ்ப் பாடல்.
ReplyDeleteபேஷ், பேஷ். ஒற்றை வரிப் பின்னூட்டங்களானாலும் எனக்கு உங்கள் பின்னூட்டங்கள் ஒசத்தியான பின்னூட்டங்களாக்கும்.
Deleteநெய் மோதகம் செய்து, பிள்ளையாருக்கு நைவேத்யம் செய்து, ஒரு 108 மட்டும் சுடச்சுட சூடாக எனக்கு அனுப்புங்கோ. அதுதான் எல்லாவற்றையும் விட மிக முக்கியம்.
ReplyDeleteம்ம்ம்ம்ம்ம்ம். கொடுத்துட்டா போச்சு.
Deleteபதிவையும், படத்தையும், பாடல்வரிகளையுமா சாப்பிட முடியும்?
ReplyDeleteபதிவையும், பாடல் வரிகளையும், படத்தையும் ரசியுங்கள்.
Deleteமோதகத்தை சுவையுங்கள்.
நான் பணியாற்றிய BHEL Cash அலுவலகத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சாயங்காலம், ஸ்வாமி படங்களுக்கும், Cash Chest க்கும் புஷ்பம் வைத்து, ஒரு சீப்பு (டஜன்) வாழைப்பழம் நைவேத்யம் செய்து சூடம் ஏற்றி, வழிபட்டு, பூஜை நேரத்தில் அங்குள்ள அனைவருக்கு ஒவ்வொரு வாழைப்பழம் வீதம் தந்து வந்தேன்.
ReplyDeleteஅந்த செலவுகளுக்கு என்று ஒரு சிறிய தொகை அலுவலகத்திலேயே ஒதுக்கீடு செய்ய, GM (Finance) அவர்களின் Approval Order வாங்கி வைத்திருந்தேன்.
1982-இன் ஆரம்பத்தில் வாரம் ரூபாய் பத்து வீதம் என்று
Sanction Order ஆரம்பித்து, பிறகு கடைசியாக 2009-இல் ரூபாய் ஐம்பது வரை செலவழிக்க நான் Special Note put up செய்து Sanction வாங்கி வைத்துக்கொண்டேன்.
விலைவாசிகள் உயர்வால் அந்த சிறிய தொகையும் போதாமல் இருந்தபோது, நான் என் கைக்காசை செலவழித்து வந்ததும் உண்டு.
ஜீப்பை எடுத்துக்கொண்டு, திருவெறும்பூர் வரை போய் புஷ்பம், சூடம், பழங்கள் முதலியன வாங்கி வரும் என் அலுவலக உதவியாளர் ஒவ்வொரு வாரமும், எத்தனை ரூபாய்க்குப் பழம் எத்தனை ரூபாய்க்கு புஷ்பம் வாங்க வேண்டும் என, என்னிடம் சந்தேகம் கேட்டுக்கொண்டே இருப்பார். அவர் பெயர் இராஜேந்திரன் என்று நாம் வைத்துக்கொள்வோம்.
தெய்வ நம்பிக்கையில்லாத, நாஸ்திகரான ஒருவரும் என்னிடம் அப்போது பணியாற்றி வந்தார். அவர் நான் கொடுக்கும் பிரஸாதமான பழத்தை மட்டும் கேட்டு வாங்கி உரித்துச் சாப்பிடுவார். மற்றபடி பூஜை நேரத்தில் ஆபீஸிலிருந்து வெளி நடப்பு செய்து விடுவார். அவர் பெயர் துரை என்று வைத்துக்கொள்வோம்.
பொருட்கள் வாங்கி வரச் செல்லும் இராஜேந்திரன் சந்தேகம் கேட்கும் போதெல்லாம் இந்த துரை என்பவர் அவரிடம் சொல்லுவார்:
“இராஜேந்திரா, பூவையோ, சூடத்தையோ நம்மால் சாப்பிட முடியாது ..... அதனால் அவைகளை குறைவாக வாங்கிக்கொண்டு, வாழைப்பழம் தலைக்கு இரண்டு கிடைக்கும்படி நிறைய தாராளமாக வாங்கிக்கொண்டு வா” என்பார். :)
ஏனோ இப்போது எனக்கு அது நினைவுக்கு வந்தது.
ஹா, ஹா, ஹா இந்த மாதிரி விஷயங்கள் கண்டிப்பாக உங்களுக்கு ஞாபகம் வந்துடுமே. அது தெரிந்த விஷயம் தானே.
Deleteஅழகான பிள்ளையார் பாடல். நானும் படித்து ரஸித்தேன். அன்புடன்
ReplyDeleteஉங்கள் வரவுக்கு மனமார்ந்த நன்றி காமாட்சி அம்மா.
Delete