Showing posts with label தினம் ஒரு ஸ்லோகம். Show all posts
Showing posts with label தினம் ஒரு ஸ்லோகம். Show all posts

Monday, July 10, 2017

எளிமையான தமிழில் இந்த விநாயகர் பாடலை படித்து ரசித்தேன். நீங்களும் ரசிக்க இங்கு பகிர்கிறேன்.

Related image


வயல்களில் பயிர்களை பாதுகாக்க அத்தி மரத்தின் கீழ் பிள்ளையாரை வைத்து வழிபடும் வழக்கம், நம் முன்னோர்களிடம் உண்டு.  அறுவடை முடிந்தபின் குடியானவர்கள் அந்தப் பிள்ளையாருக்குச் செய்யும் பூஜையை விவரிக்கும் பாடல்.

பூவாம் துளசி பிள்ளையாருக்கு சாத்த
வெள்ளையரளி மாலை வேலவருக்கு சாத்த
காசரளிமாலை காத்தவனுக்கு சாத்த
வெள்ளை பிள்ளையாருக்கு நல்லெண்ணையாம் காப்பு.

ஓடு முச்சூடும் தேங்காய் உடைப்பேன் பிள்ளையாருக்கு
பால், இளநி, தேங்காய் நான் படைப்பேன் பிள்ளையாருக்கு
கொத்தோடு மாங்காய் குலை நிறைந்த தேங்காய்
அச்சோடு வெல்லம் ஆலை வெல்லம் நூறு

கொப்பரையாம் பாவு ஒப்புதமாம் வேறு
தாரோடு வாழை தலை வாழை நூறு
காயோடு வாழை கரு வாழை நூறு
பூனை தலை போல பொரி உருண்டை நூறு

எலித்தலை போல எள்ளுருண்டை நூறு
ஆனைக்காது போல அதிரசங்கள் நூறு
தட்டோடு மாலை தண்டமாலை நூறு
கொத்தோடு மாலை கொண்டமாலை நூறு

அத்தனையும் சேர்த்து அமோகமாம் பூஜை
சித்தி விநாயகனும் சினம் தணிந்தே வருவார்
முத்தி அருள்புரிவார் முச்சூடும் வரம் கொடுப்பார்
சக்தியுள்ள எங்கள் முன்னோர் அத்திமரப் பிள்ளையாரே!







Related image

Monday, October 17, 2016


மஹாலட்சுமியை வழிபட்டு அவள் அருளைப் பெறுங்கள் 





பத்மப்ரியே பத்மிநி பத்மஹஸ்தே
பத்மாலயே பத்மதளாய தாக்ஷி
விஸ்வப்ரியே விஷ்ணுமநோ நுகூலே
த்வத் பாத பத்மம் மயிஸந்நிதத்ஸ்வ




பொருள் : தாமரையில் பிரியம் உள்ளவளே. தாமரைக்குச் சொந்தக்காரியே. தாமரையைக் கையில் தரித்தவளே. தாமரையில் வசிப்பவளே. தாமரை போல் நீண்ட கண்களை உடையவளே. உலகத்து மக்களால் விரும்பப்படுபவளே. விஷ்ணுவின் மனத்திற்குப் ப்ரியமானவளே. உன்னுடைய தாமரை மலர் போன்ற திருவடியை என் தலைமேல் எப்போதும் இருக்கச் செய்வாயாக.




Tuesday, July 1, 2014

தினம் ஒரு ஸ்லோகம்



பத்மபத்ரே க்‌ஷணாயை ச 
பத்மாஸ்யாயை நமோ நம:

பத்மாஸனாயை பத்மின்யை 
வைஷ்ணவ்யை ச நமோ நம:





தாமரை இதழ் போன்ற அகன்ற கண்களைக் கொண்டவளே!  

தாமரை முகம் உடையவளே!  

தாமரையில் அமர்ந்திருப்பவளே! 

கையில் தாமரை மலரை ஏந்திக்கொண்டிருப்பவளே! 

விஷ்ணுவின் பத்னியான லட்சுமித் தாயே! 

உன்னை வணங்குகிறேன்.

Friday, June 13, 2014

தீயவை நீங்கி நல்லவை அடைய

தினம் ஒரு ஸ்லோகம் தெரிந்து கொள்வோமா?

இந்த ஸ்லோகங்கள் உங்களுக்குத் தெரிந்தஸ்லோகங்களாகக் கூட இருக்கலாம்.

முதலில் முழு முதற்கடவுள் தும்பிக்கையான் விநாயகனின் ஸ்லோகத்தில் ஆரம்பிப்போமே.



இந்த ஸ்லோகத்தை சதுர்த்தி நாட்களில் சொல்லி தொப்பையப்பனின் பேரருளைப் பெறுங்கள்.

***

ஓம் ஸ்ரீம் கணாதிபதயே ஏகதந்தாய 
லம்போதராய ஹேரம்பாய

நாலிகேரப்ரியாய மோதக பக்‌ஷணாய 
மமாபீஷ்ட பலம் தேஹி

ப்ரதிகூலம்மே நஸ்யது அநுகூலம்மே 
வசமாநய ஸ்வாஹா


அபீஷ்டவரத மணபதி மந்திரம்
(மகா மணபதி மந்த்ரமாலா)


பொருள்:  கணங்களுக்கெல்லாம் அதிபதியாக விளங்குபவரே, ஒரு தந்தத்தைக் கொண்டவரே, பெருவயிறு படைத்தவரே, ஹேரம்பா என் புகழப் படுப்வரே, தேங்காய், கொழுக்கட்டை போன்ற நிவேதனப் பொருட்களில் மிகவும் பிரியம் உடையவரே!  என்னுடைய எல்லா விருப்பங்களையும் பூர்த்தி செய்து, எனக்கு நேரும் துன்பங்களை அழித்து, நன்மைகளை வசமாக்கும்படி செய்வீர்களாக