தினம் ஒரு ஸ்லோகம் தெரிந்து கொள்வோமா?
இந்த ஸ்லோகங்கள் உங்களுக்குத் தெரிந்தஸ்லோகங்களாகக் கூட இருக்கலாம்.
முதலில் முழு முதற்கடவுள் தும்பிக்கையான் விநாயகனின் ஸ்லோகத்தில் ஆரம்பிப்போமே.
இந்த ஸ்லோகத்தை சதுர்த்தி நாட்களில் சொல்லி தொப்பையப்பனின் பேரருளைப் பெறுங்கள்.
***
ஓம் ஸ்ரீம் கணாதிபதயே ஏகதந்தாய
லம்போதராய ஹேரம்பாய
நாலிகேரப்ரியாய மோதக பக்ஷணாய
மமாபீஷ்ட பலம் தேஹி
ப்ரதிகூலம்மே நஸ்யது அநுகூலம்மே
வசமாநய ஸ்வாஹா
அபீஷ்டவரத மணபதி மந்திரம்
(மகா மணபதி மந்த்ரமாலா)
பொருள்: கணங்களுக்கெல்லாம் அதிபதியாக விளங்குபவரே, ஒரு தந்தத்தைக் கொண்டவரே, பெருவயிறு படைத்தவரே, ஹேரம்பா என் புகழப் படுப்வரே, தேங்காய், கொழுக்கட்டை போன்ற நிவேதனப் பொருட்களில் மிகவும் பிரியம் உடையவரே! என்னுடைய எல்லா விருப்பங்களையும் பூர்த்தி செய்து, எனக்கு நேரும் துன்பங்களை அழித்து, நன்மைகளை வசமாக்கும்படி செய்வீர்களாக
அருமையானதொரு ஸ்லோகமும் அதற்கான அர்த்தங்களும் அற்புதமான உள்ளன. ஜொலிக்கும் விநாயகர் படத்துடன் யானைப்படம் + எலிப்படம் போனஸாகக் கொடுத்துள்ளது மேலும் சிறப்பு. பாராட்டுக்கள்..
ReplyDeleteபாராட்டுக்களுக்கு மிக்க நன்றி.
Deleteஇந்த படம் ஐடியா எல்லாம் உங்க கிட்ட இருந்து கத்துக்கிட்டதுதான். உங்க ப்ளாக் மாதிரி சிறப்பா என்னுடைய ப்ளாக்கையும் ஆக்கணும்.
அடடா, அப்படியா சேதி.
Deleteஆனால் சிலர், என்னிடம் ஏன் கஷ்டப்பட்டு ஒவ்வொரு பதிவுக்கும் இவ்வளவு படங்களைச் சேர்க்கிறாய்? எங்கிருந்தோ படங்களை எடுத்து இங்கு கொண்டுவந்து சேர்ப்பதில் என்ன பெரிய பெருமை உள்ளது. வேண்டாம் படமே வேண்டாம்
உன் எழுத்துக்களுக்கு அதெல்லாம் அவசியமே இல்லாதது எனச் சொல்கிறார்கள். அப்படியே சேர்த்தாலும் ஓரிரு படம் மட்டுமே போதும் எனச் சொல்கிறார்கள்.
நீங்களானால் இப்படிச் சொல்கிறீர்கள். உலகம் பலவிதம்.
அன்புடன் கோபு
அன்பின் ஜெயந்தி ரமணீ - பதிவு அருமை - விநாயகப் பெருமாணின் படமும் பொருளுடன் கூடிய ஸ்லோகமும் அருமை - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா
ReplyDeleteஐயா, உங்கள் வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றி.
Delete