Wednesday, June 11, 2014

வைகாசி விசாகம்



இன்று 11.06.2014 புதன் கிழமை வைகாசி விசாகம்.  அழகன் முருகன் அவதரித்த நன்னாள்.


சூரபத்மனை அழிக்க தேவர்கள் சிவபெருமானை வேண்ட, அவர்களின் துயர் தீர்க்க சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகளை தோற்றுவித்தார்.  அந்த ஆறு தீப்பொறிகளையும் வாயு பகவானும், அக்னி பகவானும் சிவபெருமானின் உத்தரவுப்படி கங்கையில் கொண்டு சேர்த்தனர்.  கங்காதேவி, அந்தப் பொறிகளை சரவணப் பொய்கையில் சேர்த்தாள்.

ஆறு பொறிகளும், ஆறு தாமரைகளில் ஆறு குழந்தைகளாகத் தோன்றின.  பார்வதி தேவி ஆறு குழந்தைகளையும் ஒரு குழந்தையாக்கி, ஞானப்பால் புகட்டினார்.  இது நடந்தது வைகாசி விசாகத்தன்று.

இந்த நன்னாளில் பன்னிருகை வேலவனை தரிசித்து மகிழுங்கள்.


முருகா சரணம்
*
***
*****
***
**
*



மேலும் புத்தர் அவதரித்ததும், போதி மரத்தடியில் ஞானம் பெற்றதும் வைகாசி விசாகத்தன்றுதானாம்.


1 comment:

  1. அழகன் முருகனின் அவதாரம் பற்றிய அழகான பதிவுக்கு நன்றிகள்.

    ReplyDelete