நொடிக்கு
நொடி நன்றி கூறும் நிலையில் என்னை வைத்திருக்கும் இறைவனை வாழ்த்தி, வணங்கி இந்த வலைப்பூவை
தொடங்குகிறேன்.
ஆன்மீக
பயணங்கள், ஆன்மீக செய்திகள் தொடர்பாக ஒரு தனி வலைப்பூவைத் தொடங்க வேண்டும் என்பது என்
நெடுநாள் ஆசை.
சின்ன வயசில்
திருமயிலை கபாலீசுவரர் கோவிலே கதி என்று இருந்த எனக்கு இந்த ஆசை வந்ததில் ஆச்சரியம்
ஒன்றும் இல்லை. ஆமாம் மாலையில் பள்ளி விட்டதும்
தினமும் நாங்கள் படையெடுத்தது அங்கே தானே.
விளையாட்டு, ஸ்லோகங்கள் கத்துக்கொண்டது எல்லாமே அங்கே தானே.
அதே
போல் சிறு வயதில் திரு பரணீதரன் அவர்களின் ஆன்மீகப் பயணக் கட்டுரைகளை படித்திருக்கிறேன். அதுவும் ஆன்மீகப் பயணங்களைப் பற்றி எழுதும் ஆசைக்கு
வித்திட்டிருக்க வேண்டும்.
என்
பெண் அடிக்கடி என்னை கிண்டல் செய்வாள், “எங்கம்மா கோபுரத்தைப் பார்த்தா ஓடிப் போயிடுவா”ன்னு. ஆமாம் கோபுர தரிசனமே கோடி புண்ணியம்ன்னா, கோவிலுக்கு
உள்ள இருக்கற தெய்வத்தை தரிசித்தா………….
என்
கணவர் வேலைக்குச் சென்று கொண்டிருந்த காலத்தில் (இப்ப ரிடையர் ஆகிட்டு ஜாலியா பேத்தியைக்
கொஞ்சிண்டிருக்கார். லயாக்குட்டிக்கும் முதல்ல
தாத்தாதான். அப்புறம்தான் பாட்டி கூட) வெளியூர்
டூர் போவார். ஒரு முறை அப்படி அவர் வெளியூர்
சென்றிருந்த போது ஒரு நாள் திடீரென்று நடு இரவில் முழிப்பு வந்தது. ஏதோ சத்தம் கேட்பது போல் இருக்கிறதே என்று பார்த்தால்
என் மகன் தான் ஜன்னல் கதவைத் திறந்து வெளியே பார்த்துக் கொண்டிருந்தான். என்ன என்று
கேட்டபோது ”வெளியே ஏதோ சத்தம் கேட்டது, நாய் வேற விடாம குறைக்கிறது” என்றான்.
இதே
பையன் அவங்க அப்பா வீட்டில் இருந்தால் கும்பகர்ணனாய் தூங்குவான்.
அந்த
நேரம் நான் நினைத்தேன். “அடடா! இதே தத்துவம்தான். நாம் எப்பொழுதும் அந்த இறைவன் நம்முடன் இருப்பதால்தான்
(அவன் எப்பொழுதும் நம் அருகில் இருப்பதாய் நம்புவதால்தான்) நிம்மதியான வாழ்க்கை கிடைத்திருக்கிறது
என்று.”
எனவே
அந்த இறைவனுக்கு நன்றி கூறும் விதமாய் இந்த வலைப்பூவை ஆரம்பிக்கிறேன்.
தங்களின் புதிய வலைப்பூவுக்கு என் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
ReplyDelete>>>>>
வாழ்த்துக்கு நன்றி கோபு அண்ணா
Deleteஆரம்பமே முழுமுதற்கடவுளாம் என் அப்பன் விநாயகனுடன் துவங்கியுள்ளது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.
ReplyDelete>>>>>
தொப்பையப்பன் முழு முதற் கடவுள் அல்லவா?
Delete//ஆன்மீக மணம் வீசும்//
ReplyDeleteஎன்ற தலைப்பு அருமையாக ஆன்மீக மணம் வீசி மகிழ்விப்பதாக உள்ளது. பாராட்டுக்கள்.
>>>>>.
மிக்க நன்றி. பாராட்டுக்கு நன்றி.
Delete//நாம் எப்பொழுதும் அந்த இறைவன் நம்முடன் இருப்பதால்தான் (அவன் எப்பொழுதும் நம் அருகில் இருப்பதாய் நம்புவதால்தான்) நிம்மதியான வாழ்க்கை கிடைத்திருக்கிறது
ReplyDeleteஎனவே அந்த இறைவனுக்கு நன்றி கூறும் விதமாய் இந்த வலைப்பூவை ஆரம்பிக்கிறேன். //
புதிய வலைப்பூவினை ஆரம்பித்துள்ளதற்கு நானும் என் நன்றியினைக்கூறிக்கொள்கிறேன், தங்களுக்கு.
>>>>>
நன்றிக்கு நன்றி.
Deleteதங்களின் அறிவுக்கும், ஆற்றலுக்கும், ஆசைக்கும், சுறுசுறுப்புக்கும், எழுத்தார்வத்துக்கும் ஒன்று என்ன இரண்டு என்ன ஒன்பது வலைத்தளதளங்கள் வரை வைத்துக்கொண்டு நிர்வகித்து எழுதி அசத்தலாம் தான்.
ReplyDeleteபுதிதாகப் பிறந்துள்ள குழந்தையான தங்களின் இரண்டாவது வலைத்தளத்திற்கு சாதாரணமானவனின் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
பிரியமுள்ள கோபு
எனக்கென்ன கவலை! மோதிரக்கையால் முதல் குட்டு (ஷொட்டு) பட்டாயிற்று. அறிவும், ஆற்றலும் உங்களவிட கொஞ்சம் கம்மிதான். ஆசை வேணா அதிகம்ன்னு சொன்னா ஒத்துக்கலாம்.
Deleteஎன்னமோ ஆசையில ரெண்டு வலைப்பூ ஆரம்பிச்சுட்டேன். பார்ப்போம். ஏதோ உங்கள மாதிரி ஜாம்பவான்களின் ஆதரவும், ஆசியும் இருந்தால் சமாளிக்கலாம்.
வாழ்த்துக்கு நன்றி.
அருமை அருமை. தங்கள் பெயரை அறியலாமா :)
ReplyDeleteஅட தேன் நான் தான் ஜெயந்தி ரமணி. நாம ஒரு முறை சந்தித்திருக்கிறோம். அத்துடன் சமீபத்தில் காரைக்குடி செல்லும் முன் உங்கள் பதிவில் கேட்டிருந்தேனே. தேன் என்று சொல்லும் போதே கண்டிப்பாக புரிந்து கொண்டிருப்பீர்கள். மன்னித்துக் கொள்ளுங்கள். சரியாக ஐந்து மாதங்கள் கழித்து பதிலளிக்கிறேன்.
ReplyDelete