முக்திநாத் யாத்திரை
– 6
காட்மண்டுவில் நாங்கள் தங்கி இருந்த
HOTEL MAHADEV ல் வைக்கப்பட்டிருந்த
மகாதேவர் சிலை.
போக்ரா விமான நிலையத்தில் நான், என் கணவர், மற்றும் உடன் வந்தவர்கள்.
பசுபதி நாதரையும்,
குஹேஸ்வரியையும் தரிசித்து விட்டு நாங்கள் தங்கி இருந்த HOTEL MAHADEV க்கு வந்து மதிய
உணவை முடித்துக் கொண்டு CHECK OUT செய்து விட்டு பேருந்தில் POKHRA என்ற இடத்திற்குக்
கிளம்பினோம். நேபாள சாலைகள் ரொம்பவே சுமார். தலை நகர் காட்மண்டுவில் இப்பொழுது தான் சாலைகளை
செப்பனிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அதனால்
அங்கு TRAFFIC JAM ரொம்பவே இருக்கிறது. ஒரு
வழியாக பேருந்தை உருட்டிக்கொண்டு இரவு 10 மணிக்கு POKHRA போய் சேர்ந்தோம்.
இரவு HOTEL ல்
தங்கி விட்டு மறுபடி காலை 7 மணிக்கு POKHRAவில் இருந்து விமானம் மூலம் JOMSOM என்ற
இடத்திற்கு விமானம் மூலம் செல்ல வேண்டும். 20 நிமிட
விமானப் பயணம். ஆனால் ஒரு நாளைக்கு 3 அல்லது
4 முறைகள்தான் விமானங்கள் செல்கின்றன. திடீரென்று
பருவ நிலை சரியில்லை என்று விமான சேவையை நிறுத்தி விடுகிறார்கள். அதை விட்டு விட்டால் அம்போ கதி. தரை வழிப் பயணம் கிட்டத்தட்ட 10 முதல் 12 மணி நேரங்கள்
ஆகும். போகும் பொழுது எங்களுக்கு விமான சேவை
கிடைத்தது. TARA
விமானத்தில் சென்றோம். வரும்பொழுது (ஹ, ஹ, ஹா SUSPENSE)
விமானத்தில் சென்றோம். வரும்பொழுது (ஹ, ஹ, ஹா SUSPENSE)
நாங்கள் சென்ற TARA AIRWAYS விமானம். இதில் விமானப் பணிப் பெண்ணையும் சேர்த்து 17 பேர் தான் அமரலாம். ஒரு இடத்தில் இரண்டு
மலைகளுக்கு இடையில் விமானம் திரும்பிய போது ஒரு கணம் ஒரு ஜெர்க். அம்மாடி பயந்து விட்டோம். கீழே விழுந்தால் எலும்பு கூட தேராது. JOMSOMல்
பயங்கர குளிர்.
ஜோம்சம் விமான நிலையத்தில்
தொடரும்...........
ஹோட்டலில் மஹாதேவர் சிலை அழகாய் இருக்கிறது. தொடருங்கள்.
ReplyDeleteவருகைக்கு நன்றி ஸ்ரீராம்.
Deleteகுட்டியூண்டு பதிவாகையால் படிக்க குதூகுலமாகத்தான் உள்ளது.
ReplyDelete>>>>>
உங்களை குதூகலிக்க வைக்க இனி எல்லா பதிவுகளையும் குட்டியூண்டாகவே போடுகிறேன்.
Deleteஇந்தப்படங்களில் ஒரு பெரும்புள்ளி மாமியை .. கரும்புள்ளி டிரஸ்ஸுடன் நான்கு முறையும், ஒரு மாமாவை நாலரை முறையும் பார்க்க நேர்வதால் அவர்கள் இருவரும் மறக்கமுடியாத வகையில் என் மனதில் அப்படியே தங்கிப்போய் விட்டார்கள்.
ReplyDelete>>>>>
நெஞ்சில் நிறைந்தவர்கள் என்றும் நிறைந்திருக்க வாழ்த்துக்கள்.
Delete//காட்மண்டுவில் நாங்கள் தங்கி இருந்த HOTEL MAHADEV ல் வைக்கப்பட்டிருந்த மகாதேவர் சிலை.//
ReplyDeleteஒருவேளை அந்தச் சிலையைக் கடத்தி வந்து விட்டீர்களோ என நினைத்து பயந்தே பூட்டேன்.
போட்டோ பிடித்து வந்திருப்பீர்கள் என்பது பிறகுதான் என் மரமண்டைக்குத் தோன்றியது.
>>>>>
கட்டை விரல் அளவு குட்டி சிலையைக் கூடக் கடத்திப் பழக்கமில்லையே. இவரோ மகாஆஆஆஆ தேவர். இவரைக் கடத்த முடியுமா? அபிஷேகப் பிரியருக்கு ரெண்டு சொம்பு நீர் வீட்டு அபிஷேகம் செய்தாலே போதும். நம்பாத்துக்கு வந்துடுவாரே. எதுக்கு கடத்தணும்.
Delete//போக்ரா விமான நிலையத்தில் நான், என் கணவர், மற்றும் உடன் வந்தவர்கள்.//
ReplyDeleteஇந்த வரிகளை உடன் வந்தவர்கள் இல்லாத படத்தின் கீழே போட்டுள்ளீர்கள். நானும் உடன் வந்தவர்களைக் காணுமே எனத் தேடித்தேடிப் பார்த்து களைத்துப் போய் விட்டேன்.
பிறகு அதற்கு மேல் உள்ள படத்தில் அவர்களைக் கண்டு களித்தேன்.
இது ரொம்ப முக்கியமா எனக்கேட்டு, ஜெயா முணுமுணுப்பது
எனக்கும் புரிகிறது.
>>>>>
Deleteஇன்னும் நிறைய பேர் எங்களுடன் வந்திருந்தார்கள். நல்ல வேளை எல்லார் படங்களையும் போடவில்லை. போட்டிருந்தால் கோபு அண்ணா தேடோ தேடுன்னு தேடி களைச்சுப் போயிருப்பார்.
//தலை நகர் காட்மண்டுவில் இப்பொழுது தான் சாலைகளை செப்பனிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அதனால் அங்கு TRAFFIC JAM ரொம்பவே இருக்கிறது.//
ReplyDeleteசெப்பனிட்டு முடிந்தபிறகு மீண்டும் ஒருமுறை பாதயத்திரையாகவே போய்விட்டு வாங்கோ.
//ஒரு வழியாக பேருந்தை உருட்டிக்கொண்டு இரவு 10 மணிக்கு POKHRA போய் சேர்ந்தோம்.//
பேருந்திலிருந்து கீழே இறங்கி பின்புறமாக அதனைத் தள்ளி உருட்டிக்கொண்டு போனீர்களோ ????? :)))))
>>>>>
பாத யாத்திரை எல்லாம் போக முடியாது. மறுபடியும் விமானப் பயணம்ன்னா ரெடி. உங்கள் ஆசிக்கு நன்றி.
Deleteபேருந்தை உருட்டிண்டா? நாங்க எல்லாம் யாரு. கிராமத்துல ஒடற ரயில இடது கையால நிறுத்தறவங்க. ம்க்கும்.
//போகும் பொழுது எங்களுக்கு விமான சேவை கிடைத்தது. TARA விமானத்தில் சென்றோம். வரும்பொழுது (ஹ, ஹ, ஹா SUSPENSE) //
ReplyDeleteஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !
அந்த சஸ்பென்ஸ் தெரியாமல் என் மண்டையே வெடித்துவிடும் போலிருக்குது.
>>>>>
மண்டை வெடிக்காம கொஞ்சம் இறுக்கி புடிச்சுக்கோங்கோ. வரேன்.
Delete//நாங்கள் சென்ற TARA AIRWAYS விமானம். இதில் விமானப் பணிப் பெண்ணையும் சேர்த்து 17 பேர் தான் அமரலாம்.//
ReplyDeleteகுட்டியூண்டு விமானம் போலிருக்குது.
//ஒரு இடத்தில் இரண்டு மலைகளுக்கு இடையில் விமானம் திரும்பிய போது ஒரு கணம் ஒரு ஜெர்க். அம்மாடி பயந்து விட்டோம்.//
இதைப் படிக்கும் போது நானும் பயந்தே போனேன்.
//கீழே விழுந்தால் எலும்பு கூட தேராது.//
தயவுசெய்து, இனிமேல் இதுபோல ஏதாவது நெகடிவ் ஆகச் சொல்லாதீங்கோ, ஜெயா.
ஜெயா என்றால் ஜெயம் அதாவது வெற்றி மட்டுமே !
>>>>>
இருந்தாலும் அந்த கணம் கொஞ்சம் கலக்கி விட்டுடுத்து.
Delete//JOMSOMல் பயங்கர குளிர்.//
ReplyDeleteஅப்போ அவ்விடம் போக நினைப்பவர்கள் ஜோடி ஜோடியாகத் தான் போகணும் ...... உங்களைப்போல. :)
ஜோம்சம் விமான நிலையத்தில், நிற்கும் படத்தில் இரண்டு பக்கமும் இரண்டு கலர் ஷால் போட்டுக்கொண்டுள்ளது போலத் தெரிந்தது. போட்டோ எடுக்கப்போன அவர் கோட் ஸ்டாண்டு போல நினைத்து அவருடைய ஷாலையும் உங்கள் மேல்
போட்டுவிட்டுப் போய்விட்டாரோ என முதலில் நினைத்தேன்.
பிறகுதான் தெரிந்தது நீங்கள் போட்டிருப்பது சிகப்புக்கலர் ஃபுல் ஹேண்ட் உல்லன் ஸ்வெட்டர் என்பதும், அதன் மேல் வெள்ளை நிற ஷால் உபரியாக என்பதும்.
>>>>>
அவ்விடம் மட்டும் அல்ல. எவ்விடத்துக்கும் ஜோடியாகவே தான் போகணும்.
Deleteமிகவும் அருமையான படங்களுடன் கூடிய அழகான பதிவு. விமானப்படம் ஜோர் ஜோர்.
ReplyDeleteமுக்திநாத் யாத்திரைக்கு நானும் உங்களுடன் சேர்ந்து வந்தது போன்றதோர் மகிழ்ச்சியாக உள்ளது.
பகிர்வுக்கு நன்றிகள், ஜெயா. தொடரட்டும் .......
நன்றி, நன்றி, நன்றி.
Deleteமீண்டும் வாருங்கள்.