Showing posts with label பாடசாலை விஜயம். Show all posts
Showing posts with label பாடசாலை விஜயம். Show all posts

Sunday, July 30, 2017

ஆத்தூர் வேத பாடசாலை


எனக்கும் என் கணவருக்கும் நேற்று (30.07.2017) செங்கல்பட்டிற்கு அருகில் இருக்கும் ஆத்தூர் கிராமத்தில் திரு காமகோடி அவர்கள் 2011ம் ஆண்டில் இருந்து ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மகா பெரியவாளின் ஆசியுடன் நடத்திக் கொண்டிருக்கும் ஸ்ரீ சதுர்வேத வித்யா கணபதி வேதாஸ்ரமத்திற்குச் செல்லும் ஒரு அறிய, அருமையான வாய்ப்பு கிடைத்தது.  அத்துடன் நேற்று என் தாயார் இறந்த நாள்.  அதனால் இந்த நாளில் இந்த வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இந்த வாய்ப்பு கிடைக்கக் காரணமாக இருந்த முகநூல் நண்பர்களுக்கு ஒரு சிரம் தாழ்ந்த நன்றி.  சொகுசு வாகனப் பயணம், செங்கல்பட்டு தாண்டியவுடன் காலை சிற்றுண்டி (இட்லி, வடை, உப்புமா, சட்டினி, சாம்பார்). வேதாஸ்ரமத்திற்குள் நுழைந்தது முதல் அங்கிருந்து கிளம்பும் வரை ஒவ்வொரு நொடியும் ஒரு சுகானுபவம்.   மேலும் போனசாக என்னுடன் பணி புரிந்த திரு கைலாச மூர்த்தி அவர்களை 15 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்தேன். 
திரு காமகோடி அவர்கள் புதிதாக சென்றிருந்த எங்களைப் போன்றவர்களுக்கு வேதாஸ்ரமத்தை சுற்றிக் காட்டினார்.  
பிறகு கோபூஜை, பின் கணேச சர்மா மாமாவின் உபன்யாஸமும், திப்பிராஜபுரம் மோகன் ராம் தீக்ஷிதர் அவர்களின் அருமையான உபன்யாசம்.  .  கூட்டு, கறி, பாயசம், பச்சடி, சாம்பார், ரசம், மோர், ஊறுகாயுடன்  அமிர்தமான திவ்யப் பிரசாதம்.


பாடசாலையைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ள தயவு செய்து http://www.athurvedapatasala.com/ இந்தத் தளத்திற்குச் செல்லுங்கள்.   
ஆத்தூர் பாடசாலை முகவரியும் வங்கி விபரங்களும்

SHRI CHATURVEDA VIDYAGANAPATHI VEDASHRAMAM
28, SRI MAHADEVAM, KRISHNA GARDEN LAYOUT
AATHUR VILLAGE, CHENGALPET 

KANCHIPURAM DIST 
TAMILNADU – 603101
SCVG TRUST, SB account no. 6134392479, INDIAN BANK, Saidapet branch, Chennai.
IFS Code IDIB000S004.
Contact person : Sri R. Kamakoti
Phone : 98844 02624





 வேதம் கற்கும் குழந்தைகள்


கோ பூஜை




ஒவ்வொரு வித்யார்த்திக்கும் ஒரு ட்ரங்க் பெட்டி.  அவர்களின் எளிய உடைமைகளை வைத்துக் கொள்ள.  நம் வீடுகளில் பீரோ நிறைந்து வழிந்து கொண்டிருக்கும் ஒவ்வொருவரின் துணி மணிகளால். அப்படியும் வெளியே செல்லும் போது எதைப் போட்டுக் கொள்வது என்று குழம்புவோம்.  




  



வகுப்பறை. வித்யார்த்திகளுக்கு ACADEMIC கல்வியும் கற்றுத் தருகிறார்கள். 


ஸ்ரீ ஸ்ருதி காமாட்சி அம்பாள் சன்னதி,  சதுர்வேத வித்யா கணபதி, 
பால சுப்பிரமணியர்,  
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மகா பெரியவா.


உபன்யாசம் செய்யும் 
திரு கணேச சர்மா மாமாவும்,
 திரு திப்பிராஜபுரம் மோகன் ராம் தீக்ஷிதர் அவர்களும்.  




உபன்யாசம் கேட்டு விட்டு வேத பாராயணம் செய்ய காத்திருக்கும் வித்யார்த்திகள்.


எங்களுடன் வந்திருந்த திரு சுதன் அவர்கள் வரைந்த ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மகா பெரியவாளின் திரு உருவம்.  திரு சுதன் அவர்கள் நிறைய படங்கள் வரைந்திருக்கிறார்.  அவர் அனுமதியுடன் இனி குரு வார ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகா பெரியவாளின் பதிவுகளில் வெளியிடுகிறேன்.




கோசாலையை அலங்கரிக்கும் ரிஷபம்.




கோசாலையின் அழகிய கன்றுக் குட்டிகள்

இடது கோடியில் நிற்பவர்தான் திரு கைலாச மூர்த்தி.



திரு காமகோடி அவர்களுடன் (பவ்யமாக கட்டிக் கொண்டு இருப்பவர்.  நிறை குடம் தளும்பாது அல்லவா) நாங்கள்.

நிறைவான நெஞ்சத்துடன் வீடு திரும்பினோம்.  இது போல் அடுத்த பயணத்தை எதிர்பார்த்துக்கொண்டே.