Saturday, May 20, 2017

இன்று நம்ப உம்மாச்சி தாத்தாவின் 
ஆங்கிலப் பிறந்த நாளாம் 
(20.05.1894)

இந்த நன்னாளில் மகா பெரியவாளை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். 


Image may contain: 1 person


Image may contain: 1 person




Image may contain: 1 person


கோதூளி மகிமை - மஹாபெரியவா

அலகிலா விளையாட்டுடையான்:

திருச்சிராப்பள்ளியில் பெரியவா தங்கியிருந்த சமயம் சீதாலட்சுமி ராமஸ்வாமி கல்லூரியின் தலைவர் மஹானிடம் வந்து தங்கள் கல்லூரியில் பெரியவாளின் பொற்பாதம் பட வேண்டும், குழந்தைகளுக்கு ஆசி வழங்க வேண்டும் என்று விண்ணப்பித்தார்.

மோனகுரு பதில் ஏதும் சொல்லவில்லை. அவரும் தொடர்ந்து விண்ணப்பித்தவாறே இருந்தார்.

ஒருநாள் அவரிடம் 'நாளை காலை உன் காலேஜுக்கு வரேன். நீயும் உன் மனைவியும் ஒரு பசு மாடு, கன்றுக்குட்டியோட காத்திருங்கோ' என்றார்.

பக்தருக்கு அளவிலா மகிழ்ச்சி. அப்படியே தயாராக இருக்க மஹானும் வந்தார். பூர்ணகும்ப வரவேற்பை அங்கீகரித்தார். பக்தரிடம் 'என் பாதம் எங்கெல்லாம் படணும்னு உனக்கு ஆசையோ அங்கெல்லாம் பசுமாடு கன்றுக்குட்டியை பிடிச்சிண்டு ' நீ முன்னாடி போ, நான் பின்னாலேயே வரேன்' என்றார்.

அப்படியே எல்லா இடமும் சென்று வந்த பின், வெளியே வந்து 'திருப்தியா உனக்கு' என்று கேட்க அவர் என்ன பதில் சொல்வார்! கண்கள் கடலாக, மனம் உருகி கருணைக்கு நன்றி தெரிவிப்பதற்காக சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார். ஸ்ரீமடம் திரும்பிய மஹான் மாலை அடியார்களிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது காலையில் காலேஜுக்கு போன பேச்சும் வர, ஒருவர் 'பெரியவா ஏன் காலேஜுல பசு மாட்டு பின்னாலேயே போனா' என்று கேட்டார்.

சிரித்த மஹான் 'அவன் எங்ககிட்ட ரொம்ப பக்தியாயிருக்கான். நான் வந்தா அவன் காலேஜுக்கு ச்ரேயஸ்ன்னு நினைச்சு கூப்பிட்டான். ஆனால் அந்த காலேஜோ ஸ்த்ரீகள் படிக்கிற காலேஜ். அவா எல்லா நாளும் காலேஜுக்கு வருவா. மாதம் விலக வேண்டிய நாளும் வரலாம். அதனால் தான் யோஜனை செய்தேன்.அவன் ஆசையும் நிறைவேறணும். என் ஆசாரமும் கெடக் கூடாது. அதுக்கு ஒரே வழி, எந்த தீட்டாக இருந்தாலும் அந்த இடத்தில கோ பாததூளி பட்டுட்டா, அந்த இடம் பரிசுத்தமாயிடறதா சாஸ்த்ரத்துல இருப்பதால, பசு மாட்ட முன்னால விட்டுட்டு அது பின்னாலேயே நானும் போயிட்டு வந்தேன்' என்று சொன்னதைக் கேட்ட அனைவரும் பிரமிப்பிலிருந்து மீளவே இல்லை.

இப்படியும் தர்ம சூட்சுமமா? இப்படியும் அறம் வழுவா துறவு வாழ்க்கையா? நினைத்து நினைத்து நாமெல்லாம் ஆச்சர்யப்படலாம். வழிகாட்டி, குரு, ஆசார்யர் என்றால் இவரன்றோ! காலம் மாறிப்போச்சு, மாறிப்போச்சு என்று காலத்தின் மேல் பழிபோட்டு பழிபாவங்களுக்கு அஞ்சாதவர்கள் நிறைந்த இந்தப் பூமியில் இப்படியும் ஒரு அறநெறிச் செம்மலா! அன்பையும் அறத்தையும் அழகாக இணைக்கும் சாமர்த்தியம் காஞ்சி மஹாபெரியவாளை தவிர வேறு யாருக்கு இருக்கும்?

 


Image may contain: 1 person



Related image

10 comments:

  1. ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் நான்கு படங்களும், அந்தப் பசுமாடு + கன்னுக்குட்டி என் செல்லக்கன்னுக்குட்டி படமும் மிக அழகாக உள்ளது

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோபு அண்ணா. வரவுக்கு நன்றி.

      எனக்கும் இந்த பசு, கன்னுக்குட்டியை ரொம்ப பிடிச்சிருக்கு. கன்னுக்குட்டி தியாகுட்டி மாதிரி இருக்கு

      Delete
  2. ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளின் ஆங்கில அவதாரதினமான இன்று
    (20.05.2017) இந்தப்பதிவினை வெளியிட்டுள்ளது தனிச்சிறப்பாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  3. //அவன் ஆசையும் நிறைவேறணும். என் ஆசாரமும் கெடக் கூடாது. அதுக்கு ஒரே வழி, எந்த தீட்டாக இருந்தாலும் அந்த இடத்தில கோ பாததூளி பட்டுட்டா, அந்த இடம் பரிசுத்தமாயிடறதா சாஸ்த்ரத்துல இருப்பதால, பசு மாட்ட முன்னால விட்டுட்டு அது பின்னாலேயே நானும் போயிட்டு வந்தேன்' //

    பக்தர்கள் மனமும் வாடாமல், வேத சாஸ்திர தர்ம நெறிகளும் ஆசார அனுஷ்டானங்களுக்கும் பங்கமில்லாமல், ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா இங்கிதமாக நடந்து கொண்டுள்ளது மகிழ்ச்சியளிப்பதுடன், பசுவின் பாத தூளி மஹிமையை நாமும்
    இதனால் அறிந்துகொள்ள முடிகிறது. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. அவருக்கு இணை அவர் ஒருவரே தான்.

      Delete
  4. கோ பாததூளி மஹிமை. ஆசாரியாளின் ஆசாரமஹிமை. இப்டியெல்லாம் கேட்கும்போது அவரின் மஹிமை பலகோடி மடங்காக உயருகிறது. அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ காமாட்சி அம்மா. உங்கள் வரவுக்கு மிக்க நன்றி.

      Delete
  5. பசுவும் கன்றும் ஆஹா என்ன அழகு? அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்எனக்கும் இந்த பசு, கன்னுக்குட்டியை ரொம்ப பிடிச்சிருக்கு. .

      Delete