முக்திநாத் யாத்திரை - 5
குஹேஸ்வரி கோவில்
பசுபதி நாதரை தரிசித்த எங்களை பேருந்தில் குஹேஸ்வரி கோவில் (64 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று). வாசலில் இறக்கி விட்டு தரிசனம் முடிந்ததும் அருகில் இருந்த நாங்கள் தங்கி இருந்த HOTELக்கு வரச் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார் பேருந்தின் சாரதி. (அட இது முன்பே தெரிஞ்சிருந்தா நாங்களே ஒரு எட்டு போய் அந்த சக்தி தேவியை தரிசித்திருப்போம்). என்ன செய்ய இந்த TRAVEL AGENCY GUIDE சொல்வதைத் தானே கேட்க வேண்டி இருக்கிறது.
(பார்வதி தேவியின் உடல் பாகம் விழுந்த இடம்) பிரதாப் மல்லா என்ற
அரசம் 17ம் நூற்றாண்டில் கட்டிய கோயில். தட்சனின் மகளான தாட்சாயணி ஈசனை மணக்கிறாள். தட்சனுக்கு மருமகன் எல்லாம் வல்லவர் என்று அறிய முடியாமல் மாயை மறைக்கிறது. அகங்காரத்தில் இருக்கும் தட்சன் ஒரு யாகம் செய்ய ஏற்பாடு செய்கிறான். அந்த யாகத்தில் எல்லா தேவர்களுக்கும் அவரவருக்கு உரிய அவிர்ப் பாகத்தைக் கொடுக்கிறான் தட்சன் ஈசனைத் தவிர. ஈசனை யாகத்துக்கு அழைக்கவும் இல்லை. யார் பேச்சையும் செவிமடுக்காத தட்சன் யாகத்தை தொடரும்போது அழைப்பில்லாமல் பிறந்தகம் தானேனு நினைத்துக் கொண்டு வருகிறாள் தாட்சாயணி. அவளை மகள் என்றும் மதிக்காமல் அலட்சியம் செய்கிறான் தட்சன். தாட்சாயணி அவனுக்கு எடுத்துச் சொல்லியும் அலட்சியம் செய்கிறான் தட்சன்.
மனவேதனையுடன் அந்த யாகத் தீயில் விழுந்து உயிர் விடுகிறாள் தாட்சாயணி. தன் சக்தியை இழந்த சிவனின் உக்கிரத்தை அடக்க முடியவில்லை. தட்சனை அழித்து விட்டு சதியின் உடலைத் தோளில் போட்டுக் கொண்டு ருத்ர தாண்டவம் ஆடத் தொடங்க அவர் கோபத்தைத் தணிக்கும் பொருட்டு மஹாவிஷ்ணு தன் சுதர்சன சக்கரத்தால் அன்னையின் உடலைத் துண்டு துண்டாக்க அது பாரத தேசம் எங்கும் ஒவ்வொரு பாகமும் போய் விழுகிறது. அம்மாதிரி விழுந்த இடங்களை" ஸ்ரீமஹாசக்தி பீடம்" என்று சொல்கிறார்கள். நேபாளத்தில் அம்மாதிரி அன்னையின் ஒரு மார்புப் பகுதி விழுந்த இடம்தான் குஹேஸ்வரி கோவில். நேபாளிகள் இந்தக் கோயிலைக் குயேஸ்வரி மந்திர் என்று அழைக்கிறார்கள்.
ஆற்றுப் பாலத்தைக் கடந்ததும், சற்று மேலே படிகள் ஏறிக் கோயிலை அடைய வேண்டும். உள்ளே குகை போன்ற அறைக்குள் போனதும் ஒரு பள்ளத்தில் அருவமாக அன்னை வீற்றிருக்கிறாள். பிண்டி ஸ்வரூபமாக இருக்கும் அந்த அருவுருவம் தான் அன்னையின் மார்பாகக் கருதப்பட்டுப் பூஜைகள், அலங்காரங்கள, நைவேத்யங்கள் முதலியன அதற்குச் செய்யப் படுகின்றன. பூஜை செய்வது எல்லாம் நேபாளப் பெண்களே.
குஹேஸ்வரி கோவிலின் பிரகாரத்தில் என் கணவர்
கோவில் வளாகத்தில் நடந்து கொண்டிருந்த பூஜை
ஒரு பெண்மணி சுற்றுப் பிரகாரத்தில் 108 விளக்குகள் ஏற்றிக் கொண்டிருந்தார்.
அப்பொழுது தான் அந்தக் கோவிலில் ஒரு திருமணம் நடந்து முடிந்திருந்தது. மிகவும் எளிமையான திருமணம். பெண், மாப்பிள்ளையை புகைப்படம் எடுப்பதற்குள் அவர்கள் கிளம்பிச் சென்று விட்டார்கள்.
தொடரும் ...........
//மிகவும் எளிமையான திருமணம். பெண், மாப்பிள்ளையை புகைப்படம் எடுப்பதற்குள் அவர்கள் கிளம்பிச் சென்று விட்டார்கள். //
ReplyDeleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். அவசர அவசரமாகத் தாலி கட்டிய காதல் கல்யாணமாக இருக்குமோ?
அப்படியே உங்கள் கற்பனை குதிரையை தட்டி விடாதீர்கள். நாங்கள் கோவிலுக்குள் நுழைந்த நேரம் அவர்கள் கிளம்பி விட்டார்கள். அடுத்த கதை நேபாளக் காதல்ன்னு எழுதிடுவேளே.
Deleteபுறாக்கள் படம் அழகு.
ReplyDeleteமும்பையில் தாஜ் ஹோட்டலுக்கு எதிர்புறமாக, ‘எலஃபண்டா கேவ்’ க்கு படகில் செல்லும் கரையோரமாக, ஆயிரக்கனக்காண புறாக்கால் தெருவில் அமர்ந்திருக்கும் கண் கொள்ளாக் காட்சிகளைக் காணமுடியும்.
நாம் அருகில் சென்றாலும் அவை பறந்து ஓடாது. நிறைய பேர்கள், பொரி, பாப்கார்ன் என அவைகளுக்கு வாரி இறைப்பார்கள். அந்த நினைவு எனக்கு இப்போது வந்தது.
நேபாளத்திலும் அது போல் நிறைய புறாக்கள் இருந்தன. சில இடங்களில் புகைப்படம் எடுக்க முடியாமல் போயிற்று.
Deleteமற்ற படங்களும், புராணக்கதைகளும், பயணக்கட்டுரையும் அருமை. தொடரட்டும். பாராட்டுகள். வாழ்த்துகள்.
ReplyDeleteவரவுக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி கோபு அண்ணா
Deleteஎந்த ட்ராவல்ஸ்?
ReplyDeleteNEPAL PILGRIM TRAVELS, MYLAPORE
Deleteகொஞ்சம் சொதப்பல்கள் இருந்தன. சரி ஏதோ தரிசனங்கள் நல்ல படி கிடைத்ததால் மற்றவற்றை ADJUST செய்து கொண்டு விட்டோம்.
படங்களுடன் பகிர்ந்த விதம்
ReplyDeleteநேரடியாக தரிசிக்கிற திருப்தி தருகிறது
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
வரவுக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி. அடிக்கடி வருகை தாருங்கள்.
Delete