ஒரு நாள் ஒரு கிணறு அருகில் ஒரு கோபிகை ஸ்த்ரீ தண்ணீர் குடத்தை யாராவது தூக்கிவிடுவார்களா என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தாள்.
அப்போது அங்கே சிறுவனான ஸ்ரீகிருஷ்ணன் வந்து கொண்டிருந்தான்.
கிருஷ்ணனைப் பார்த்த அந்த கோபிகை தண்ணீர் குடத்தை தூக்குவதற்காக கிருஷ்ணனை கூப்பிட்டாள்.
ஆனால் கிருஷ்ணனோ கூப்பிட்ட குரல் கேட்காதது போல சிறிதும் கவனிக்காமல் போய்க்கொண்டிருந்தான்.
கோபிகையோ கிருஷ்ணனை கூப்பிட்டு கூப்பிட்டு தொண்டை வரண்டு விட்டது.
கிருஷ்ணனோ திரும்பிகூட பாராமல் போய்விட்டான்.
ஒருவழியாக கோபிகை நீர் நிறைந்த குடத்தை தலையில் சுமந்தபடி தன் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
தன் வீடு வந்தவள் அதிர்ந்தாள்.
அங்கே ஸ்ரீகிருஷ்ணன் அவள் வீட்டு வாசலில் அவளுக்காக காத்திருந்தான்.கோபிகை வாசல் அருகே வந்ததும் தானே முன்வந்து நீர் நிறைந்த குடத்தை கீழே இறக்கி வைத்தான்.
உடனே கோபிகை
”கிருஷ்ணா குடத்தை தூக்குவதற்காக உன்னை அழைத்தபோது நீ திரும்பிகூட பாராமல் சென்றுவிட்டாய்.ஆனால் இப்போது கூப்பிடாமல் குடத்தை இறக்கி உதவி செய்தாயே ஏன்” என்று கேட்டாள்.
அதற்கு ஸ்ரீகிருஷ்ணன் தன் மந்தகாச இனிமையான புன்சிரிப்போடு மெதுவாக கோபிகையிடம் இப்படி கூறினான்.
*" நான் பாரத்தை இறக்கி வைப்பவன் ஏற்றுபவனல்ல."*
இனிமையான கதையை இயல்பாகச் சொல்லியுள்ளது மேலும் அழகாக உள்ளது.
ReplyDeleteபடித்தேன், ரசித்தேன், பகிர்ந்தேன்
Deleteபடத்தேர்வுகள் சூப்பரோ சூப்பர் !
ReplyDeleteபின்ன. உங்கள் சிஷ்யை ஆயிற்றே. கொஞ்சமாவது ஒழுங்காக தேர்வு செய்ய வேண்டாமா?
Deleteவரவுக்கும், வாழ்த்துக்கும் நன்றி கோபு அண்ணா
கிருஷ்ணன் கிண்டல் மன்னன்!
ReplyDeleteவிஷமக்காரக் கண்ணன் ஆச்சே.
Deleteவரவுக்கு நன்றி ஸ்ரீராம்
சொன்னவிதம் மிகச் சுருக்கமாக எனினும்
ReplyDeleteமிக மிக அருமையாக
படங்களுடன் பகிர்ந்த விதம் மனம் கவர்ந்தது
வாழ்த்துக்களுடன்...
ரமணி சார். கதை யாரோ சொன்னது.
Deleteபடங்கள் மட்டுமே என் தேர்வு. அதுவும் கூகுளாண்டவர் அருள்.
Jayanthi Jaya//
ReplyDeleteபின்ன. உங்கள் சிஷ்யை ஆயிற்றே. கொஞ்சமாவது ஒழுங்காக தேர்வு செய்ய வேண்டாமா?//
மிகச் சரி
ஆனால் இன்னும் 10 விழுக்காடு கூட தேறலை நான். வருகைக்கு மிக்க நன்றி ரமணி சார்
Delete