சோழநாட்டை
அம்சத்வசன் என்ற மன்னன் ஆண்டு
வந்தான். அவனுக்கு தீர்த்த யாத்திரை செல்ல
வேண்டும் என்பது நீண்ட நாள்
ஆசை. ஆனால் ராஜ்ய பாரக்
கடமைகளால் அது நிறைவேறவில்லை. எனவே தனக்கு
பதிலாய் வேதம் அறிந்த ஓர்
அந்தணருக்கு பெரும் பொருள் உதவி
செய்து தீர்த்த யாத்திரைக்கு அனுப்பி
வைத்தான். அவர் திரும்பி வரும்
வரை அவரது குடும்பத்துக்குத் தேவையான
பொருளுதவியையும் அளித்து வந்தான்.
பல
நாள்கள் கழிந்தன. மாறுவேடம் பூண்டு நகரைச் சுற்றிப்
பார்க்கக் கிளம்பிய மன்னன் அப்படியே அந்த
அந்தணரது குடும்பம் எப்படி இருக்கிறது என்றும்
பார்க்கலாம் என்று போய்ப் பார்த்தான்.
வீட்டில் யாரோ ஒருவன் இருப்பதைக்
கண்டு அதிர்ச்சியடைந்த அரசன், கோபாவேசமாக வீட்டிற்குள்
புகுந்து அந்த நபரைக் குத்திக்
கொன்றான். அதன்பிறகே தனக்காக தீர்த்த யாத்திரை
சென்ற அந்தணர்தான் என்பதை அறிந்து திடுக்கிட்டான்.
அந்தப் பாவம் தன்னை பீடிக்குமே
என்று அஞ்சினான். அதற்கு ஏற்றாற்போல் கொலையுண்ட
அந்தணரின் ஆவி அரசனை இரவிலும்
பகலிலும் துன்புறுத்தியது. அந்தப் பாவத்தைப் போக்க தீர்த்த யாத்திரையாக
பல தலங்களுக்கும் சென்றான். இறுதியாக திருவிடைமருதூர் வந்தான். கோயிலுக்குள் உள்ள தீர்த்தத்தில் நீராடினான்.
என்ன ஆச்சரியம்..! அந்தணர் ஆவி அவனை
விட்டு நீங்கியது. அவ்வாறு அந்த ஆவி
நீங்கிய நாள் தைப்பூசத் திருநாள்.
இதையறிந்த மன்னன் அக்கோயிலில் தைப்பூசத்
திருவிழா ஆண்டுதோறும் நடைபெற பெரும் நிதியுதவி
செய்தான்.இதேபோல் இன்னொரு கதையும்
பிரபலம்.
மதுரையை
ஆண்ட வரகுண பாண்டியன் குதிரையில்
வேகமாக வந்துகொண்டிருந்தான். அப்போது வயதான பிராணமர்
ஒருவர் அந்த நேரம் தெருவைக்
கடக்க முயல, குதிரையில் அடிபட்டு
உயிரிழந்தார். அந்தப் பாவத்திலிருந்தும் ஆவியின்
பிடியிலிருந்தும் விடுபட நினைத்த மன்னன்
பல தலங்களுக்கும் சென்று வழிபட்டான். இறுதியில்
திருவிடைமருதூர் சென்று வழிபட்டால் விடிமோட்சம்
பிறக்கும் என்று கூறினர். ஆனால்
பாண்டியனுக்கு சோழநாட்டுக் கோயிலுக்குச் சென்று வழிபட மனம்
வரவில்லை. எனவே சுந்தரேஸ்வரரை வேண்டினான்.
""இன்னும் கொஞ்ச நாளில் சோழன்
பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வருவான்;
உன்னிடம் மோதுவான்; ஆனால் தோற்றுவிடுவான். திரும்பி ஓடுவான்.
நீ அவனைத் துரத்திக்கொண்டு சோழ
நாட்டிற்குச் செல். அப்போது திருவிடைமருதூர்
கோயிலுக்கும் சென்று வழிபடலாம்'' என்றார்
சுந்தரேஸ்வரர். இறைவன் சொன்னபடியே எல்லாம்
நடந்தன. சோழனைத் துரத்திய பாண்டியன்
திருவிடைமருதூர் கோயிலுக்குச் சென்றான். என்ன ஆச்சரியம்! அவன்
கோயிலுக்குள் நுழைந்து வழிபட்டதும் அவனை பிடித்திருந்த ஆவி
விலகியது. இந்த அற்புதம் நடந்ததும் தைப்பூசத்தன்றுதான்.
மயிலையில்
தைப்பூச விழா கொண்டாடியது பற்றியும்
அப்போது அன்னதானம் செய்தது பற்றியும் ஞானசம்பந்தர்
தேவாரத்தில், (சம்பந்தர் தேவாரம், திருமயிலைப் பதிகம், பா.எண்.
5)
""மைப்பூசு மொண்கண்
மடநல்லார் மாமயிலைக்
கைப்பூசு
நீற்றான் கபாலீச் சரம மர்ந்தான்
நெய்ப்பூசு
மொன்புழுக்க னேரிழையார் கொண்டாடும்
தைப்பூசங்
காணாதே போதியோ பூம்பாவாய்''
என்று
குறிப்பிடுகின்றார். தைப்பூசத் திருவிழாவைக் கண்ணாறக் கண்டு களித்தல் முக்கியமானது
என்று உணர்த்துகிறது இந்தப் பாடல்.
ஒரு
தைப்பூசத் திருநாளில்தான் திருஞானசம்பந்தர் எலும்பிலிருந்து பூம்பாவையை எழுப்பினார். இன்றும் தைப்பூசத்தன்று சென்னை
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இந்த வைபவம் தைப்பூசத்தன்று
திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.
திருவிடைமருதூர் சிவன் கோயில் பற்றிய சிறப்புக்களை வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.
ReplyDelete>>>>>
அந்தக்குளம் நிறைய நீருடன் பார்க்கவே மிகவும் அழகாக உள்ளது, ஜெ.
ReplyDelete>>>>>
//ஆவி விலகியது. இந்த அற்புதம் நடந்ததும் தைப்பூசத்தன்றுதான்.//
ReplyDeleteஆஹா, கேட்கவே சந்தோஷமாக உள்ளது, ஜெயா.
>>>>>
//இன்றும் தைப்பூசத்தன்று சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இந்த வைபவம் தைப்பூசத்தன்று திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.//
ReplyDeleteஅங்கு சென்றால் கோபு அண்ணாவுக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கோ ஜெயா.
இங்கு எங்கள் ஊரிலும், எங்கள் தெருவிலும் தைப்பூசம் மிகச் சிறப்பாகவே கொண்டாடப்படுகிறது.
விடிய விடிய ஸ்வாமி புறப்பாடு வந்துகொண்டே இருக்கும். திருச்சியில் உள்ள அனைத்து ஆலயங்களில் உள்ள புறப்பாட்டு ஸ்வாமிகளும், காவேரிக்கரைக்கு காலையில் தீர்த்தவாரிக்கு கொண்டு செல்லப்படும். அவை இரவு விடிய விடிய எங்கள் தெரு வழியாக ஒவ்வொன்றாக புறப்பட்டு வரும்.
மின்விளக்குகளுடன் அலங்காரங்கள், நாயனக்கச்சேரிகள் என தெருவே ஜகத்ஜோதியாக இருக்கும்.
பிரியமுள்ள கோபு