Monday, February 2, 2015

தைப்பூசம் பகுதி 1


 சிவன், அம்பாள், முருகனுக்கு உகந்த தைப்பூச திருநாள்






சந்திரன் கடகத்தில் தனது சொந்த வீட்டில் ஆட்சி பலத்துடன் பூச நட்சத்திரத்தில் இருந்து மகர ராசியில் இருக்கும் சூரியனை 

பார்க்கும் நாளே தைப்பூசம். சக்தியின் வெளிப்பாடும், தெய்வாம்சமும் பொருந்திய காலம் தை மாதம். தைப்பூச நாள் சிவன், அம்பாள், முருகனுக்கு உகந்த நாளாகும்.  தைப்பூசத்தின் சிறப்புகள் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் சிவபெருமான் தனியாக நடனம் புரிவார்.நடன நிலையில் உள்ள சிவனை, நடராஜர் என வணங்குகிறோம். தைப்பூசத்தன்று உமாதேவியுடன் இணைந்து நடனம் ஆடுகிறார். இந்த நிலையை உமா மகேஸ்வரர் என்றழைக்கிறோம். ஆகவே இந்த தைப்பூச திருநாள் சிவசக்திக்கு உகந்த நாளாகும். 

சிவபெருமான் தனது அம்பிகை உமாதேவியுடன்

இருந்து ஞானசபையான சிதம்பரத்தில் ஆனந்த 

நடனம் ஆடிதரிசனம் அளித்த புண்ணியத் 

திருநாள் தைப்பூசம்.

வேத ஒலியும்வாத்திய 

ஒலியும்வாழ்த்தொலியும் - ஒலிக்க 

சிவபெருமான் நடத்திய அந்த ஆனந்தத் 

திருநடனத்தைவியாக்கிர பாத 

முனிவர்பதஞ்சலி முனிவர்தில்லை 

மூவாயிரவர்தேவர்கள்பிரம்மாவிஷ்ணு 

உள்ளிட்டோர் சிவபெருமானை தரிசித்து 

ஆனந்தமடைந்தார்கள். பிறகு பதஞ்சலி 

முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க எல்லா 

ஆன்மாக்களும் உயர்வு அடைவதற்காக 

சிதம்பரத்திலேயேஎன்றும் ஆனந்த நடனக் 

கோலத்தைக் காட்டி அருள் புரிந்து 

கொண்டிருக்கிறார்.



சிதம்பரத்திற்கு வந்து அரும்பெரும் 

திருப்பணிகள் செய்துசித்சபேசனான நடராஜப் 

பெருமானைஇரணியவர்மன் என்னும் மன்னன் 

நேருக்கு நேராகத் தரிசித்தது இப்புண்ணிய 

தினத்தன்று தான். அதன் காரணமாகவே சிவன் 

கோயில்களில் தைப்பூசத்தன்று சிறப்பு 

அபிஷேகங்களுடன் பூஜைகள் 

நடத்தப்படுகின்றன.








2 comments:

  1. தைப்பூசத்தொடரினை இன்று தைப்பூசத்தன்றே வெளியிட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  2. படங்களும், பதிவும், அதில் உள்ள விஷயங்களும் மிக அருமை. பாராட்டுக்கள், வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete