Monday, February 2, 2015

தைப்பூசம் பகுதி 4

தைப்பூசமும் வள்ளலாரும்


ஆன்மிக ஜோதி வள்ளலார் அருட்பெருஞ் ஜோதியில் கலந்து மகா சமாதியான நாளும் இந்நாள்தான். தீப தரிசனம், ஜோதி தரிசனம் என்பது இந்துக்களின் முக்கிய வழிபாடுகளில் ஒன்று. தினசரி கோயிலுக்கு சென்றாலும், செல்லாவிட்டாலும் வீட்டில் காலை, மாலை இரு வேளையும் காமாட்சியம்மன் விளக்கு அல்லது குத்துவிளக்கு ஏற்றி வைத்து அந்த ஜோதியை வணங்குவது பல காலமாக உள்ள சாஸ்திர சம்பிரதாய வழக்கம். ஆலயத்தில் இறைவனை தரிசித்த பின்னர் கற்பூர ஜோதியை வணங்கி கண்களில் ஒற்றிக் கொள்வது ஆலய வழிபாடுகளின் முக்கிய அம்சம்.வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் ஜோதி தரிசனத்தையும், இறைவன் ஜோதி சொரூபியாக உள்ளான் என்பதையும், அன்னதானத்தின் மகிமையையும் உணர்த்தியுள்ளார். மேலும் மரணமில்லா பெருவாழ்வு அடைந்து மீண்டும் பிறவாமல் இருக்க போதனை செய்துள்ளார். 



25/1/1872 அன்று தைப்பூச நாளில் முதல் முறையாக ஜோதி வழிபாட்டை வடலூரில் தொடங்கி வைத்தார்.       எல்லாவற்றும் மேலாக 19ஆம் நூற்றாண்டில் வள்ளலார் நிகழ்த்திய அற்புதம் எவரையும் பிரமிக்க வைக்கும். வள்ளல் பெருமான் சித்திவளாகக் கூடத்தில் அமர்ந்திருந்த அன்பர்களை பெருங்கருணையோடு  நோக்கி, "அருட்பெருஞ்சோதி ஆண்டவரை வழிபட்டு உய்யுங்கள்'' என்று கூறிவிட்டு அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டுக்கொண்டார். பின் இரண்டரை நாழிகை அளவில் அருட் பெருஞ்சோதியாகிய  ஆண்டவனோடு ஐக்கியமாகி விட்டார். அன்றும் தைப்பூசத் திருநாளே.





 அன்று முதல் இன்று வரை தைப்பூச தினத்தன்று லட்சக்கணக்கானோர் கூடி ஜோதி தரிசனம் செய்கிறார்கள்.



1 comment:

  1. ’தைப்பூசமும் வள்ளலாரும்’ என்ற தங்களின் தலைப்பும், படங்களும். செய்திகளும் குறிப்பாகக் ‘கொல்லாமை’யை வலியுறுத்திச்சொல்லியுள்ள அவரின் போதனைகளையும் மிக அருமையாகப் பகிர்ந்துள்ளீர்கள். பாராட்டுக்கள், ஜெயா.

    ReplyDelete