Thursday, January 19, 2017

சிருங்கேரி மடம், காஞ்சி மடத்துக்கிடையே ஏதோ கசமுசா என்று சிலர் பேசுவார்களே?"சிவராஜன் வீட்டில் பலவகையான கஷ்டங்கள், எந்தக் காரியத்தைத் தொட்டாலும் தோல்வி. இன்னது என்று கண்டுபிடிக்க முடியாத சிறு சிறு நோய்கள். வீட்டில் அன்யோன்யம் குறைந்தது. ஜோஸ்யர் சொன்னார், "உங்கள் ஜாதகப்படி பெரிய குற்றம் (தோஷம்) ஏதுமில்லை.அம்பாள் க்ஷேத்திரங்கள் ஐந்து இடங்களுக்குச் சென்று தரிசனம் செய்யுங்கள்.அதுவே போதும்" காஞ்சி காமாக்ஷி,மதுரை மீனாக்ஷி, காசி விசாலாக்ஷி என்று பிரபலமாகக் கூறப்படுகின்ற அம்பிகைகளைத் தரிசனம் செய்துவிட்டார், சிவராஜன். இன்னும் இரண்டு சக்திபீடங்கள் போக வேண்டும். பெரியவாளிடம் வந்து விண்ணப்பித்துக்கொண்டார்.
"பெரியவா உத்திரவு செய்கிற க்ஷேத்திரம் போய் தரிசனம் செய்கிறேன்." தொண்டு செய்யும் சிஷ்யரைப் பார்த்தார்கள், பெரியவாள், " நீதான் ரெண்டு அம்மன் க்ஷேத்திரம் சொல்லேன்..." அவர் உடனே, "திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி, திருவொற்றியூர் வடிவுடையம்மன் (திரிபுரசுந்தரி)" என்றார்.
"ரொம்ப சரி...இந்த ரெண்டு கோயில்லேயும் ஆதிசங்கரர் தரிசனம் பண்ணியிருக்கார். நான் ரெண்டு க்ஷேத்ரம் சொல்றேன். அங்கே முதல்லே போயிட்டு வா, வந்து திருவானைக்கா திருவொற்றியூர் போகலாம் என்ன?"
"உத்திரவுப்படி..."
"சிருங்கேரி சாரதாம்பாள், கொல்லூர் மூகாம்பிகை தரிசனம் பண்ணு முதல்லே..."

சிவராஜன் திருப்தியுடன் சென்றார்.
அருகிலிருந்தவர்களுக்குத்தான் ஆச்சரியமாக இருந்தது.எவ்விதத் தயக்கம் இல்லாமல்,சிருங்கேரி சாரதாம்பாள் தரிசனம் செய்யச் சொல்கிறார்களே?.

சிருங்கேரி மடம், காஞ்சி மடத்துக்கிடையே ஏதோ கசமுசா என்று சிலர் பேசுவார்களே? அது பொருளற்ற வார்த்தை என்பதைப் பெரியவாள் சுட்டிக் காட்டி விட்டார்கள். "அந்த ரெண்டு க்ஷேத்திரத்திலும் ஆதிசங்கரர் தபஸ் பண்ணியிருக்கார். க்ஷேத்திரவாசமே ரொம்பப் புண்ணியம்" என்றார்கள்,பெரியவாள்.

சொன்னவர்ஸ்ரீமடம் பாலு தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன்நன்றிவானதி பதிப்பகம்

3 comments:

 1. வழக்கம்போல ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா படமும், சிருங்கேரி சாரதாம்பாள், கொல்லூர் மூகாம்பிகை படங்களும் மிகவும் அருமையாக உள்ளன.

  ReplyDelete
 2. //"அந்த ரெண்டு க்ஷேத்திரத்திலும் ஆதிசங்கரர் தபஸ் பண்ணியிருக்கார். க்ஷேத்திரவாசமே ரொம்பப் புண்ணியம்"//

  ஆஹா, மிகவும் அருமையான தகவல். அதுவும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா திருவாக்கினால் சொல்லியுள்ளது மேலும் சிறப்பாக உள்ளது.

  ReplyDelete
 3. பகிர்வுக்கும், தகவலுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

  இதைச்சொல்லியுள்ள ஸ்ரீமடம் பாலு அவர்கள் எனக்கு மிகவும் தெரிந்தவர். என்னுடன் அன்புடன் பிரியமாக நன்கு பழகியவர். எங்காத்துக்கு அடிக்கடி வந்து போனவரும்கூட. [ஆனால் அவர் இப்போது இல்லை. :( ]

  ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளுக்கு பல்லாண்டுகள் கைங்கர்யம் செய்துள்ளவரும், பூர்வாஸ்ரமத்தில் ராயபுரம் ஸ்ரீ பாலு என்று அனைவராலும் அழைக்கப்பட்ட பிரும்மச்சாரியுமான இவர்
  2013 மார்ச் மாதம் சந்நியாசம் பெற்றுக்கொண்டு, ஸ்ரீ ஸ்வாமிநாதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என அழைக்கப்பட்டு வந்தார்கள்.

  இவர் 19.01.2016 இரவு காஞ்சிபுரத்தில் ஸித்தியடைந்து, 20.01.2016 அங்கேயே காஞ்சிபுரத்தில் அவருக்கான பிருந்தாவனப்பிரவேஸம் நடைபெற்றுள்ளது.

  இதில் மிகப்பெரியதோர் ஆச்சர்யம் பாருங்கோ .. அவரைப்பற்றி நினைத்து இங்கு நான் பேசும்போது .. இன்றுடன் அவர் ஸித்தியடைந்து பிருந்தாவனப் பிரவேஸம் ஆகி மிகச் சரியாக ஓராண்டு ஆகின்றது. (20.01.2016 - 20.01.2017)

  மேலும் அவரின் படத்துடனான விபரங்களுக்கு:

  http://gopu1949.blogspot.in/2013/04/9.html  ReplyDelete