Sunday, January 15, 2017


காக்கா பிடி, கன்னு பிடி



கனு அன்று ,நம்மை, விட  வயதில் மூத்த பெண்மணிகளை நமஸ்கரித்து, அவர்களிடம்,நெற்றியில் மஞ்சள்  கீறி விடச்சொல்லி, கையில்  கொண்டு போகும்
பசு மஞ்சளை  கொடுப்போம் ,அவர்களும் நல்ல வார்த்தைகளை கூறிக்கொண்டே
நெற்றியில்  மஞ்சளை கீற்றி விடுவார்கள்.

அவை:---
தாயோடும், தந்தையோடும்,
சீரோடும். ,    சிறப்போடும்,   
பேரோடும்,    புகழோடும்,
பெருமையோடும், கீர்த்தியோடும
சிறுவயதில்தாலிகட்டி
பெரியவளாகி  பிள்ளைகள் பெற்று
கொண்டவன்மனம்மகிழத்
தையல்நாயகி    போலத்
தொங்கத்தொங்கத்தாலிகட்டித்
தொட்டிலும், பிள்ளையுமாக,
மாமியார்     மாமனார்  மெச்ச,
நாத்தியும்    மாமியும்  போற்ற
பிறந்தகத்தோர்பெருமை விளங்க,ப்,
பெற்ற பிள்ளைகள் , ஆயுள். ஓங்க,
உற்றார்         உறவினரோடு
புத்தாடை.   புது மலர். சூடி
புது மாப்பிள்ளை ,   மருமகளோடு,
புது. புது  சந்தோஷம்  பெருகி,
ஆல்போல். தழைத்து. அருகே போல்ஏரோடி
என்றென்றும்,   வாழணும்
எப்போதும் சிரித்த முகத்தோடுஇருக்கணும்.

என்று. சொல்லிவாழ்த்துவர்பிறகு, வீட்டிற்கு ,வந்து காக்காய் பிடி வைத்து, 
அதை ஜலம் தெளித்து,நீர்  சுற்றி  மணி அடித்து  சூடம், காண்பித்து, பிரார்த்திக்க
வேண்டும்,    காக்காய் பிடி வைத்தேன். கனுப்பிடி  வைத்தேன்,காக்காய்க்கு, எல்லாம். கல்யாணம் காக்காய் கூட்டம் பிரிந்தாலும், என். கூட்டம், பிரியாது 
இருக்கணும் என்று கூறி நமஸ்காரம், பண்ணிவிட்டு, குளித்து கலந்த சாதங்கள்,
செய்து, ஸவாமிக்கு நிவேதித்து, காக்காய்க்கு அன்ன மிட்டு பிறகு சாப்பிடுவோம்.
*----காக்காய் கூட்டம் பிரியவே பிரியாது,

என்பது  திண்ணம், அதனாலதான் , முன்னோர்களாக ,பாவிக்கிறோம்.)

நன்றி.      
வாழ்க. வளத்துடன்.

No comments:

Post a Comment