Sunday, September 4, 2016

விநாயக சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்.



விநாயகர் காயத்ரி

ஓம் தத் புருஷாய வித்மஹே

வக்ர துண்டாய தீமஹி

நந்தோ தந்தி ப்ரசோதயாத்







விநாயகர் திரு நாமங்கள்  



கணேசன்

உலக உயிர்களுக்கும், பிரம்மத்துக்கும்

தலைவன்.



ஏகதந்தன் 

ஏக எனில் மாயை; தந்தன் எனில் 

மறைந்திருப்பவன். மாயைக்கு ஆட்படாமல் 

விலகி நிற்பவன் இவன். ஏகம் என்றால் ஒன்று 

என்றும் ஒரு பொருள் உண்டு. வியாசர் 

சொல்லச் சொல்ல, மகாபாரதத்தை, தன் தந்தம் 

ஒன்றை உடைத்து எழுதியதால், எஞ்சிய ஒரு 

தந்தத்துடன் விளங்குபவர் என்றும் 

கொள்ளலாம்.  



சிந்தாமணி

சிந்தை - மனம்; மணி - பிரகாசம். பக்தர் தம் 

மனதில் அஞ்ஞான இருள் நீக்கி, ஒளி பரவச் 

செய்பவன்.



விநாயகன்

வி - நிகரற்ற; நாயகன் - தலைவன். தனக்கு

யாரும் நிகரில்லாத தலைவன்.



டுண்டிராஜன்

மோட்சத்தை அடைய விரும்புவோருக்கு 

வழிகாட்டுபவர்.



மயூரேசன்

வணங்காதவரை மாயையில் மூழ்கச் செய்தும்

பக்தர்களை மாயை நெருங்காமலும்

செய்பவன்



லம்போதரன்

உலகினையே உள்ளடக்கியிருப்பதால் 

பெரிதாகக் காணப்படும் வயிற்றினை 

உடையவன்



கஜானனன்

ஆணவம் எனும் யானையை அடக்கும் 

வல்லமை உள்ளவன்,  யானைமுகன்.



ஹேரம்பன் 

ஹே - கஷ்டப்படுபவர்கள். ரம்ப - காப்பவன் 

ஆகிய பிரம்மன். துன்பப்படுவோரைக் காத்து 

ரட்சிப்பவன்.



வக்ர துண்டன்



பக்தர் தம் வாழ்வில் வரும் தீமைகளை 

தடுப்பவன். பிள்ளையாருக்கு இப்பெயரை 

அன்னை உமாதேவி வைத்தார்.



ஜேஷ்டராஜன்

ஜேஷ்டன் - முன்னவன், அனைத்துக்கும் 

முதல்வனாக, முதற் பொருளாகத் தோன்றி

அனைத்து உயிரினங்களையும் வழிநடத்திச் 

செல்பவன்.



நிஜஸ்திதி


உலகில் உள்ள அனைத்து உயிர்களாகவும் 

இருப்பவன். 




ஆசாபூரன்


எல்லோரது ஆசைகளையும் நிறைவேறச் 

செய்பவன். இப்பெயரை கணபதிக்கு சூட்டியவர் 

புருசுண்டி முனிவர்.



வரதன்:  



வேண்டுவோர் வேண்டும் வரமளிப்பவன்.



விகடராஜன்



மாயையான உலகில், உண்மை 

பரம்பொருளாகத் திகழ்பவன்.



தரணிதரன்

பூமியை ஆபரணமாக அணிந்து எப்போதும்

காப்பவன்.



சித்தி - புத்தி பதி

சித்தி எனும் கிரியா சக்திக்கும், புத்தி 

எனும்இச்சா சக்திக்கும் இடையே அவற்றின் 

தலைவனாக இருந்து ஞானத்தை அளிப்பவன்.



பிரும்மணஸ்தபதி:  


இப்பெயர், பிரம்மாவினால் வைக்கப்பட்டது

பிரும்மம் என்றால் சப்தம். வேத சப்தத்திற்கு 

ஆதாரமாக விளங்குபவர்.



மாங்கல்யேசர்

அழியக்கூடிய உலகில், தான் மட்டும் 

அழியாமலிருந்து அனைத்தையும் 

பரிபாலிப்பவர்



சர்வ பூஜ்யர்

எங்கும் எத்தகைய பூஜைகளிலும், எல்லா 

தெய்வ வழிபாட்டின் போதும் முன்னதாக 

பூஜிக்கப்படக்கூடியவர். எல்லோராலும்


 வணங்கப்படுபவர்.



விக்னராஜன்

தன்னை வணங்கும் பக்தர்கள் அனைவரது 

வாழ்விலும் எந்த விக்னமும் ஏற்படாமல் 

காப்பவர்






அருகம்புல்

ஒரு முறை தேவர்களை கொடுமைப்படுத்திய 
அனலாசுரன் என்னும் அரக்கனுடன் விநாயகப் 
பெருமான் போர் புரிந்தார்.   அப்போது, 
அனலாசுரனை தன் வாயில் போட்டு விழுங்கி
 விட்டார்.  உள்ளே சென்ற அரக்கனின் அனல் 
காரணமாக விநாயகரால் வெப்பத்தை தாங்கிக் 
கொள்ள முடியவில்லை.  முனிவர்கள் பலரும் 
எந்த முயற்சி செய்தும் பலன் இல்லை.  பிறகு 
அருகம் புல்லை மாலையாககட்டி போட்டதும்
 அனல் குறைந்து குளிர்ச்சி ஏற்பட்டது.  அது 
முதல் விநாயகருக்கு அருகம்புல் மாலை 

அணிவிப்பது வழக்கமாயிற்று.




6 comments:

  1. ஆஹா, அனைத்தும் அருமை. மீண்டும் வருவேனாக்கும். ஜாக்கிரதை !

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ, வாங்கோ, என் வலைத்தளத்துக்கு கறிவேப்பில்லை கொத்து மாதிரி வருகை தரும் ஒரே நபர் நீங்கள் தான். வந்து கொண்டே இருந்தால் மகிழ்ச்சியில் திளைக்க மாட்டேனா?

      Delete
  2. விநாயகர் படங்கள் அனைத்தும் அருமை.

    அனைத்து ஸ்லோக வரிகளும் அவை ஒவ்வொன்றுக்குமான பொருள் விளக்கமும் அழகோ அழகு.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அண்ணா. ஏதோ உங்கள் தளத்திலிருந்து கற்ற பாடம் தான்.

      Delete
  3. அனலையே குளுமைப்படுத்தும் அருகம்புல் பற்றிய கதையும் பிரமாதமாக உள்ளது.

    பகிர்வுக்குப் பாராட்டுகள். வாழ்த்துகள். நன்றிகள்.

    தங்களுக்கும், குடும்பத்தார் அனைவருக்கும் என் இனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

      Delete