Thursday, September 8, 2016

மகா பெரியவா மகாத்மியம்




** ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் பேச்சுக்களை நேரில் கேட்கும் பாக்யம் கிடைக்காதவர்களுக்கு பயன்படும் விதமாக, அவர்கள் பேசி அருளியுள்ள அனுக்ரஹ வார்த்தைகளை [நான் பல்வேறு புத்தகங்களில் படித்தவற்றை] அவ்வப்போது சிறுசிறு பகுதிகளாக ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் அனுக்ரஹத்தைப் பிரார்த்தித்து வெளியிடலாம் என எண்ணியுள்ளேன்.**


என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்







அண்ணன் எவ்வழி, தங்கை அவ்வழி

குரு எவ்வழி, சிஷ்யை அவ்வழி.



கோபு அண்ணா, நானும் உங்களின் அடிச்சுவட்டைப் 

பின்பற்றி கொஞ்சம் மகா பெரியவாளின் 

அனுக்கிரகத்தை என் வலைத்தளத்தில் பதிய 

ஆசைப் படுகிறேன்.  ஆனால் உங்களைப் போல் ஒரு

 நாள் விட்டு ஒரு நாள் எல்லாம் பதிவது ரொம்ப 

சிரமம்.  அதனால் ஒவ்வொரு வியாழக் கிழமையும் 

வெளியிடலாம் என்று இருக்கிறேன்.      



அத்துடன் மகா பெரியவாளின் ஜென்ம 

நட்சத்திரமான அனுஷ நட்சத்திரத்தன்று 

ஆரம்பிக்கிறேன் உங்கள் ஆசியுடன்.    





ஒரு நாள் வெய்யில் கடுமையாக இருந்த

சமயம்பூஜையை முடித்துவிட்டு முன்பக்கத்தில்

மகாபெரியவா அமர்ந்திருந்தார்.

அந்தச் சமயம் வெய்யிலின் கொடுமையைத் 

தாங்காமல் வயதான ஒரு வளையல் வியாபாரி 

மடத்துக்குள் வந்து தன் வளையல் பெட்டியை 

ஒர் ஓரமாக இறக்கி வைத்துவிட்டு ஓய்ந்துபோய்

உட்கார்ந்தார். அவருடைய சோர்ந்த முகம் 

மகானின் கண்களில் பட்டது. மடத்து ஊழியர் 

ஒருவர் மூலமாக வியாபாரியை தன் அருகே


அழைத்து வரச் செய்தார். மெதுவாக 

வியாபாரியை விசாரித்தார்.





"உனக்கு எந்த ஊர்?வளையல் வியாபாரம் எப்படி

நடக்கிறது? உனக்கு எத்தனை குழந்தைகள்?" 

போன்ற விவரங்களைக் கேட்டார்.


வளையல் வியாபாரி அதே ஊரைச்

சேர்ந்தவர்தான். தன்னுடன் வயதான தனது 

தாயாரும், மனைவி மற்றும் நான்கு குழந்தைகள்

தனக்கு இருக்கிறார்கள் என்றும், கடந்த ஆறு

மாத காலமாக வியாபாரம் மிகவும் மந்தமாக 

இருப்பதால், ஜீவிப்பதே கஷ்டமாக இருக்கிறது

என்றும் யதார்த்தமாகத் தன் நிலையைச் 

சொன்னார்.


அப்போது மகாப் பெரியவாள், "இந்த வளையல் 

வியாபாரியின் பாரத்தை இன்று நாம்தான் 

ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்று சொன்னவர்

அதற்கேற்ற விளக்கமும் தந்தார்.

"இன்று வெள்ளிக்கிழமை இவரிடம் இருக்கும்

எல்லா வளையல்களையும் மொத்தமாக 

வாங்கி, மடத்துக்கு வரும் எல்லா 

சுமங்கலிகளுக்கும் பெண் குழந்தைகளுக்கும் 

கொடுத்தால் புண்ணியம். இந்த 

ஏழையிடமிருந்து வாங்கி அவர்களுக்குக் 

கொடுப்பது விசேஷமல்லவா? இந்தப் புண்ணிய

கைங்கர்யத்துக்கு அளவு கோலே கிடையாது!" 

என்று சொன்னவர், ஒரு பக்தர் மூலம் வளையல்

எல்லாவற்றையும் வாங்கச் சொன்னார்.

பிறகு அதில் ஒரு டஜன் வளையலை எடுத்து

வளையல்காரரிடமே கொடுக்கச் சொல்லுகிறார்.

அதற்கு காரணமும் சொல்கிறார்.

வெள்ளிக்கிழமையில் வளையல் பெட்டி 

காலியாக இருக்கவே கூடாது.அந்த 

வளையல்களை அவன் வீட்டுக்கு 

எடுத்துக்கொண்டு போகட்டும்.


பிறகு வளையல்காரருக்கு மடத்தின் மூலமாக

வேஷ்டி, புடவைகளைக் கொடுத்து அவருக்கு

சாப்பாடும் போட்டு அனுப்பும்படி மகான் உத்தரவு

போட்டார்.  இன்னொன்றும் சொன்னார்.

"இன்று அவனுக்கு தலைபாரமும்,மனபாரமும்

நிச்சயம் குறைந்திருக்கும் இல்லையா?"

தன்னை நாடி வருபவர்களுக்கு அவர்கள் 

எதிர்பாராத விதமாக உதவியைச் செய்து

விடுகிறார் மகான் என்று அங்கிருந்த பக்தர்கள் 

போற்றிப் புகழ்ந்தனர்.

அன்று மடத்திற்கு வந்த அவ்வளவு சுமங்கலிப் 

பெண்களுக்கும் வளையல்கள் வழங்கப்பட்டன.

அதுவும் மகானின் கையால் தொட்டுக் கொடுத்த 

வளையல்கள்.  





17 comments:

  1. ஆஹா, குருவாரமும் அனுராதா நக்ஷத்திரமும் சேர்ந்துள்ள நல்ல நாளான நேற்று 8.9.2016 ஓர் புதிய முயற்சியைத் துவங்கியுள்ளீர்கள். கேட்கவே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அண்ணா. ரொம்ப நாள் ஆசை. அதனால்தான் சிம்பிளாக இருந்தாலும் பரவாயில்லை என்று ஆரம்பித்துவிட்டேன். ’உயர, உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?’ ஏதோ உங்கள் அளவு இல்லாவிட்டாலும், சுமாராக பதிந்து விட்டேன். ஆனால் இந்த அளவுக்கு ஆர்வத்திற்குக் காரணமே நீங்கள்தான். நீங்கதான் INSPSIRATION.

      Delete
  2. ஆரம்பத்தில் என்னைப்பற்றிய படங்களுடன் கூடிய இத்தனை விளம்பரங்கள் தேவையா? இதெல்லாம் என்னை மிகவும் கூச வைக்கிறதே, ஜெயா.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. இன்னும் நன்றாக INTRODUCTION கொடுக்கணும் என்று இருந்தேன். ரொம்ப சிம்பிளாதான் கொடுத்திருக்கேன்.

      Delete
  3. பதிவினில் உள்ள எழுத்துக்கள் என் மண்டைபோலவும், என் உடம்பு போலவும் மிகப்பெரியதாக உள்ளன.

    அவற்றை உங்களைப்போல கொஞ்சம் ஸ்லிம் ஆக்கினால் பார்க்கவும் படிக்கவும் மிகவும் அழகாக இருக்குமே, ஜெயா.

    ReplyDelete
    Replies
    1. அது ஏன் அப்படி ஒரு சில பத்திகள் மட்டும் மண்டை பெருத்த மகாதேவனா ஆயிடுத்துன்னு தெரியல.

      ஈயத்த பார்த்து இளிச்சுதாம் பித்தள. நான் ஸ்லிம்மா. அந்தக்காலம் மலையேறிப் போச்சு. இப்ப ஆத்துக்காரர் குண்டு மாமின்னுதான் கூப்பிடறார்.

      Delete
  4. ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா பற்றிய என் 108 பதிவுகளில் ஐம்பதாவது பதிவினில் இந்த வளையல் வியாபாரி கதையும் இடம்பெற்றுள்ளது.

    http://gopu1949.blogspot.in/2013/09/50.html

    அதனால் பரவாயில்லை. ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா பற்றி யார் மூலம், நாம் எவ்வளவு முறை கேட்டாலும், படித்தாலும், நமக்கு அதில் பரம சந்தோஷம் மட்டுமே ஏற்படும். அலுப்பு சலிப்பே இருக்காது. மேலும் மேலும் புண்ணியமும் சேரும்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. முதல் பதிவு உங்க வலைத்தளத்தில் இருந்து காபி அடித்தது எனக்கு மகிழ்ச்சியே.

      //ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா பற்றி யார் மூலம், நாம் எவ்வளவு முறை கேட்டாலும், படித்தாலும், நமக்கு அதில் பரம சந்தோஷம் மட்டுமே ஏற்படும். அலுப்பு சலிப்பே இருக்காது. மேலும் மேலும் புண்ணியமும் சேரும்.//

      நூத்துக்கு நூறு உண்மை.

      Delete
  5. நான் வரிசையாக 108 பதிவுகள் கொடுத்துள்ளதால், அவற்றிலிருந்தும் கூட நீங்கள் அவ்வப்போது உங்களுக்கு மிகவும் பிடித்ததான சிலவற்றை தேர்ந்தெடுத்துக்கொண்டு, பதிவேற்றலாம். அதில் ஒன்றும் தப்போ தவறோ இல்லை.

    என் முதல் பதிவுக்கான இணைப்பு (28.05.2013):
    http://gopu1949.blogspot.in/2013/05/1.html

    என் 108-வது பதிவுக்கான இணைப்பு (11.01.2014):
    http://gopu1949.blogspot.in/2014/01/108.html

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. முடிந்தவரை நீங்கள் கொடுக்காத மகா பெரியவாளின் அருளை கொடுக்க முயற்சி செய்கிறேன். முடியாவிட்டால் நைசா ............................

      Delete
  6. தங்களின் இந்த புதுமுயற்சிக்கு என் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

    தொடர்ந்து நாம் வியாழக்கிழமைகள் தோறும் சந்திப்போம்.

    வழக்கம்போல் இணைப்பினை நினைவூட்டலாக எனக்கு அனுப்பி வைக்கவும்.

    அன்புடன் கோபு அண்ணா

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் சிரம் தாழ்ந்த நன்றிகள் அண்ணா.

      கண்டிப்பாக இணைப்பினை அனுப்பி வைக்கிறேன்.

      Delete
  7. அன்புடையீர்,

    அனைவருக்கும் வணக்கம்.

    பதிவுலகில் ’ஆச்சி’ என்ற புனைப்பெயர் கொண்ட நம் பதிவர் திருமதி. S. பரமேஸ்வரி, என் நெருங்கிய நட்பு வட்டத்திற்குள் உள்ளவர் என்பது உங்களில் பலருக்கும் இதோ இந்த என் பதிவுகளில் உள்ள அவர்களின் படங்கள் மூலம் தெரிந்திருக்கக்கூடும்.

    http://gopu1949.blogspot.in/2015/01/20.html

    http://gopu1949.blogspot.in/2014/06/blog-post_3053.html

    நம் பேரன்புக்குரிய ’ஆச்சி’ அவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான அணிகலன்களான, கை வளையல்கள், காதுக் கம்மல்கள், கழுத்து மாலைகள் போன்றவற்றை மிகவும் கலை நுணுக்கத்துடனும், தரமானதாகவும், விலை மலிவாகவும் செய்து, நம் தேவைக்கு ஏற்ப, நம் வீட்டுக்கே அனுப்பி வைக்கும், தனித்திறமைகள் வாய்ந்தவர்களாகும்.

    நவராத்திரி போன்ற நம் வீட்டு விசேஷங்களுக்காகவும், நம் வீட்டுக்கு அவ்வப்போது வரும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் முதலியோருக்கு பரிசளித்து மகிழவும், நம் இல்லத்துத் திருமணம், வளைகாப்பு போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு வருகை தரும் குழந்தைகளுக்குக் கொடுத்து நாமும் மகிழ்ந்து அவர்களையும் மகிழ்விக்கவும், இவற்றை நாம் நம் வீட்டில் இருந்தபடியே ஆர்டர் கொடுத்து, கொரியரில் பெற்றுக் கொள்ளலாம்.

    அவர்களின் அழகழகான படைப்புக்களின் கைவண்ணம் காண இதோ இந்த Facebook பக்கம் சென்று பாருங்கள். அப்படியே அங்குள்ள அனைத்துப் பதிவுகளிலும் ஓர் Like போட்டுவிட்டும் வாருங்கள்.

    https://www.facebook.com/Aatchis-Silk-thread-jewelery-1176184945725862/

    தங்களின் தேவைகளுக்கு அவர்களிடம் ஆர்டர் கொடுக்கவும், தங்களுக்கு ஏற்படும் மற்ற சந்தேகங்களைக் கேட்டுக்கொள்ளவும், தாங்கள் ஒருவேளை விரும்பினால், இதோ நம் ‘ஆச்சி’ அவர்களின் மின்னஞ்சல் முகவரி: bhammesree1982@gmail.com

    இவை தங்கள் அனைவரின் பொதுவானதோர் தகவலுக்காக மட்டுமே.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக பார்க்கிறேன் அண்ணா.

      Delete
    2. மிக்க நன்றி கோபு சார்.எனது கைவண்ணங்களை தெரிந்தவர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள் என்று சொன்னதற்கு உங்களுக்கே உரித்தான பெருந்தன்மையில் இங்கனம் பகிர்ந்துள்ளிர்கள்.மிக்க நன்றி.

      இங்கனம் பதிவர்கள் முடிந்தால்
      https://www.facebook.com/Aatchis-Silk-thread-jewelery-1176184945725862/
      இந்த பக்கம் வருகை தரவும்.வேண்டுமெனில் அங்கே தொடர்புகொள்ளவும்.

      நன்றி ஜெயந்தி மேம்

      Delete
    3. ஆஹா, ஆச்சி .... வாங்கோ, வணக்கம். நீங்க நல்லா இருக்கீங்களா ஆச்சி. குழந்தைகள் இருவரும் + தங்கள் அன்புக் கணவரும் செளக்யமா?

      //மிக்க நன்றி கோபு சார். எனது கைவண்ணங்களை தெரிந்தவர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள் என்று சொன்னதற்கு உங்களுக்கே உரித்தான பெருந்தன்மையில் இங்கனம் பகிர்ந்துள்ளிர்கள். மிக்க நன்றி.//

      இதெற்கெல்லாம் போய் நன்றி எதற்கு ஆச்சி? இந்த கோடீஸ்வரி ஜெயா ஒரு முரட்டு ஆர்டர் கொடுத்தாலே போதும் உங்களுக்கு.

      இவர்களுக்குத் தேவையானதை மட்டும் தயாரித்து சப்ளை செய்வதற்குள், ஜெயாவைப் போல படு ஸ்லிம் ஆகிவிடுவீங்கோ ஆச்சி. :)))))

      Delete
  8. http://gopu1949.blogspot.in/2015/02/5-of-6.html

    இதோ இந்த மேற்படி பதிவின் பின்னூட்டங்களில் ஆச்சியும், ஜெயாவும் போட்டி போட்டுக்கொண்டு எழுதியுள்ள பின்னூட்டங்களையும் அதற்கான என் பதில்களையும், மீண்டும் இருவரும் படித்துப் பார்த்து மகிழவும். :)))))

    ReplyDelete