மகா பெரியவாளின் நகைச்சுவை.
ஒரு நாள் மடத்தில் உள்ளவர்களிடம்," மகா விஷ்ணுவும் கொசுவும் ஒண்ணு, உனக்குத் தெரியுமா?"
என்றார் பெரியவா. வழக்கம்போல் தானே அந்தப் புதிரையும் விடுவிக்கிறார்.
"விஷ்ணுவின் கையில் சக்கரம் சுற்றிக்கொண்டிருக்கு, கொசுவும் சக்கரமாய் சுற்றிக்கொண்டுதான் இருக்கு. கெட்டவர்கள் விஷ்ணுவைப் பார்க்க முடியாமல் ஒதுங்கிக் கொள்வார்கள். கண் வலிக்காரர்கள் கொசுவைப் பார்க்க முடியாமல் ஒதுங்கி விடுவார்கள். ச்ருதியிடம் விளையாடுபவர் விஷ்ணு.
[ச்ருதி=வேதம்] ச்ருதி முனையில் ஙொய் என்று கத்திக்கொண்டு விளையாடும் கொசு [ச்ருதி=காது]!"
இந்த சிலேடை சொன்னதுக்குக் காரணம் மடத்தோடுஅவர்கள் இருந்த முகாமில் கொசுத்தொல்லை தாங்க முடியாது. "அனந்தசயனம் பண்ணும் பெருமாள்தான் கொசுன்னு நினைச்சுண்டேன்னா, பகவத் ஸ்மரணையோடு தூங்கலாம்!"என்று எல்லோரையும் சமாதானம் செய்வாராம். இப்படிஎந்தக் கஷ்டத்தையும் நகைச்சுவை ததும்ப சரி செய்துவிடும் அழகையும் பெரியவாளிடம் அனுபவிக்க முடியும்.
ஒரு நீண்ட உபன்யாசம் நடந்து கொண்டிருந்தது. பெரியவாளும் கேட்டார். ஒரு வழியாக உபன்யாசம் முடிந்தது.உடனே பெரியவா
"சாக்கு கிடைச்சுதுன்னு நன்னா ரொம்ப நேரம் சொன்னயா?" என்றார்:
"நீ ஒக்காந்துண்டிருந்தது ஒரு சாக்குமேலே...அந்த சாக்கைச் சொன்னேன்!"
என்று தமாஷ் பண்ணினாராம்.
ஆஹா கொசுக்கதையும் .... சாக்குக் கதையும் மிகவும் அருமை. நன்கு படித்து ரஸித்தேன்.
ReplyDeleteஅதையே சாக்காக வைத்துக்கொண்டு இங்கு பின்னூட்டம் கொடுக்க ஓடி வந்துட்டேன்.
படங்கள் அத்தனையும் அழகோ அழகு !
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளுக்கு என் நமஸ்காரங்கள்.
தரிஸனம் கொடுத்து மகிழ்வித்துள்ள ஜெயாவுக்குப் பாராட்டுகள், வாழ்த்துகள், ஆசிகள் + நன்றிகள்.
//தரிஸனம் கொடுத்து மகிழ்வித்துள்ள ஜெயாவுக்குப் பாராட்டுகள், வாழ்த்துகள், ஆசிகள் + நன்றிகள்.//
Deleteவரவுக்கும், வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் கோபு அண்ணா
மஹா பெரியவாளைப்பற்றி அருமையாக எழுதியுள்ளீர்கள். எவ்வளவு முறை கேட்டாலும் அலுக்காது. படங்களும் அருமை. அன்புடன்
ReplyDeleteஆமாம் காமாட்சி அம்மா. எழுத ஆரம்பித்ததும் எனக்கு அவரைப் பற்றிய நிறைய தகவல்கள் WHATSAPP இலும் EMAIL இலும் எனக்கு வந்துகொண்டிருக்கிறது. அதுவும் அவர் அருளே.
Delete