தெய்வ பலம் நிறைந்தும் அதைவெளிக்காட்டிக் கொள்ளாமல் அடக்கமாக நம்மில் ஒருவராக வாழ்ந்தவர் மகா பெரியவா. எத்தனையோ அபூர்வ அதிசயங்களை அசாதாரண நிகழ்ச்சிகளை தனது தபோ பல சக்தியினால் சர்வ சாதாரணமாக காதும் காதும் வைத்தாற்போல் நடத்திக் காட்டிய நடமாடும் தெய்வம். ஒரு சம்பவம் படித்த ஞாபகம் சொல்கிறேன் கேளுங்கள். இது பெரியவா காஞ்சி மடத்தில் இருந்தபோது நடந்தது.
நாள் தோறும் பெரியவா காலையில் எழுந்தவுடன் மடத்தில் இருக்கும் தொழுவத்தில் கோ தர்சனம் (பசுவை தரிசிப்பது வழக்கம்)
மாலை வேளைகளில் பசுமாடுகள் கட்டியிருந்த கொட்டகை சென்று அங்கு அமர்ந்து வேளைகளில் உரையாடுவது வழக்கம்.சுற்றியிருக்கும் மக்களைக் கொசுக்கள் பிடுங்கி எடுக்கும். அவர் கொசுவையா லட்சியம் பண்ணுவார் ? எதைப் பற்றியும் சிந்திக்காமல், தான் சொல்ல நினைத்தது எதுவோ அதை மட்டும் எல்லோருக்கும் சொல்லிக்கொண்டே இருப்பார். அவரை நேரடியாக பார்த்து அவர் சொல்வதைக் கேட்டவர்களுக்கு இனி பிறவி கிடையாது என்பது நிச்சயம்.
ஒருநாள் அவர் இவ்வாறு காலை கோதர்சனம் சாயங்காலம் அங்கு பக்தர்களோடு சம்பாஷணை செய்யும்போது அந்தக் கொட்டகையில் உள்ள ஒரு பசு நிறைமாத கர்ப்பிணியாக இருந்தது. பேறுகாலம்.அதனால் பசு வேதனைப்பட்டுக்கொண்டே இருந்ததே தவிர, அதனால் கன்றை ஈன்றெடுக்க முடியவில்லை. வைத்தியர்கள் வரவழைக்கப்பட்டனர். கால்நடைத் துறையில் சிறந்து விளங்கும் டாக்டர்கள் அவர்கள்; ஒருவர் அல்ல இருவர் அல்லர், காஞ்சிமகான் மடம் என்பதால் ஆறுபேர் வந்திருந்தனர்.
பசுவை நன்றாகப் பரிசோதித்துப் பார்த்த அவர்கள், பசு ஏன் இன்னமும் பிரசவிக்க வில்லை என்கிற காரணத்தைக் கண்டு பிடித்தனர். கன்றுக்குட்டி வயிற்றுக்குள் இறந்து போயிருந்தது. அதை வெளியே எடுக்காவிட்டால் பசுவும் இறந்துவிடும். அந்த ஆறுபேரும் ஏகோபித்து சொன்ன முடிவு அது. இதைக் கேட்ட நிர்வாகிகள்
நேராக மகானிடம் போய் மெதுவாக விஷயத்தைச் சொன்னார்கள்.
தன் இருக்கையை விட்டு எழுந்த அவர், நேராக பசு இருந்த கொட்டகைக்கு வந்தார். பசுவின் எதிரே அமர்ந்தார். அவரது பார்வை வேறு பக்கம் திரும்பவே இல்லை.கன்று வயிற்றுக்குள் இறந்து போயிற்று என்று ஏகோபித்த முடிவாகச் சொன்ன டாக்டர்கள் ஒருபக்கமாக நின்று, மகானையும், பசுவையும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டே இருந்தார்கள். இப்படியும் அப்படியுமாக நிலைகொள்ளாமல் தடுமாறிக் கொண்டிருந்த பசு..... ஓர் இடத்தில் நின்றது. சற்று நேரத்தில் அதன் வயிற்றில் இருந்த கன்றுக்குட்டி வெளியே வந்தது. துள்ளியபடி நின்றது.இறந்து போனது என்று டாக்டர்கள் சொன்ன அதே கன்றுதான் உயிரோடு வெளியே வந்தது. இறந்ததாக பெரிய பெரிய வேடேரினரி சர்ஜன்கள் அடித்து சொன்ன கன்றுக்குட்டி எப்படி உயிர் பெற்றது???
ஆறு டாக்டர்களுக்கும் இது விந்தையான நிகழ்ச்சிதான். அவர்களும் அப்போதுதான் மகானின் அருட்பார்வை எப்படிப்பட்டது என்கிற பேருண்மையைத் தெரிந்து கொண்டனர்.

வழக்கம்போல மூன்று படங்களும் மிகவும் அருமையாக உள்ளன.
ReplyDelete>>>>>
மிக்க நன்றி கோபு அண்ணா
Deleteஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா போன்ற மஹான்கள் நினைத்தால் எதுவும் ஆச்சர்யமாக நடக்கக்கூடும் என்பதற்கு இந்த அரிய பெரிய நிகழ்வே உதாரணமாகும்.
ReplyDelete>>>>>
ஆமாம். இதைப் போல் எத்தனையோ நிகழ்வுகள்.
Deleteஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா பற்றி நான் எழுதியிருந்த தொடரினில்கூட இந்த நிகழ்வினைப் பற்றி நான் சொல்லியிருந்தேன் என்ற ஞாபகம் உள்ளது.
ReplyDeleteஇணைப்பினை உடனடியாக கண்டுபிடிக்க இயலவில்லை.
இருக்கலாம். நீங்க எழுதாததை எழுதணூம்ன்னு பார்க்கறேன். பரவாயில்லை.
Deletehttp://gopu1949.blogspot.in/2013/09/54.html
Deleteஇதோ மேற்படி பதிவினில் நானும் இந்த சம்பவம் பற்றி எழுதியுள்ளது இப்போதுதான் என் கண்களில் பட்டது.
மிகச்சுவையான பசும்பால் போல மிக அழகாக இந்தப்பதிவினை
ReplyDeleteகுருவாரமாகிய நேற்றே வெளியிட்டுச் சிறப்பித்துள்ளீர்கள்.
கடந்த 2 நாட்களாகவே எனக்கு BSNL NET கிடைப்பதில் ஏராளமான பிரச்சனைகள் இருந்து வருகின்றன.
இன்று தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் இப்போதுதான் இதனைப் படிக்க நேர்ந்துள்ளது. எனினும் மகிழ்ச்சியே.
ஸ்ரீஸ்ரீஸ்ரீ பெரியவா அனுக்கிரஹம் எல்லோருக்கும் கிடைத்து இந்த ஆண்டு சுபிட்சமாக இருக்கட்டும். பகிர்வுக்கு நன்றிகள்.
நாலைந்து குரு வாரங்களூக்கு முன் கொடுத்த பின்னூட்டத்துக்கு இப்ப பதில் கொடுக்கறேன். மன்னிச்சுக்கோங்கோ.
Deleteநாலைந்து குரு வாரங்களூக்கு முன் கொடுத்த பின்னூட்டத்துக்கு இப்ப பதில் கொடுக்கறேன். மன்னிச்சுக்கோங்கோ.
Deleteகோபுசார் பதிவில் படித்த ஞாபகம் இல்லை. 108ல் ஏதேனும் மிஸ் செய்துவிட்டேனோ? நல்ல சம்பவம். மஹான்கள் செய்வது எப்படி, என்ன காரணம் - யாரே அறிவர்? - மருத்துவர்களுக்கு தெய்வத்தின் தன்மையைக் காட்டக்கூட நினைத்திருக்கலாம்.
ReplyDeleteமகா பெரியவாளின் அனுபவங்கள் ஒரு கடல் என்றால் நாங்கள் எழுதுவது ஒரு துளியிலும் ஆயிரம், கோடியில் ஒரு பங்கு.
Deleteஉங்கள் வரவுக்கு மனமார்ந்த நன்றி.
//நெல்லைத் தமிழன் May 25, 2017 at 7:28 AM
Deleteகோபுசார் பதிவில் படித்த ஞாபகம் இல்லை. 108ல் ஏதேனும் மிஸ் செய்துவிட்டேனோ? //
http://gopu1949.blogspot.in/2013/09/54.html
இதோ மேற்படி பதிவினில் நானும் இந்த சம்பவம் பற்றி எழுதியுள்ளது இப்போதுதான் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்கிரஹத்தால் அகஸ்மாத்தாக என் கண்களில் பட்டது. இது தங்களின் தகவலுக்காக மட்டுமே.
அன்புடன் கோபு