இந்த தமிழ்ப் புத்தாண்டு எனக்கு ஒரு மிகவும்
சிறப்பான ஆண்டாகும்.
இருக்காதா பின்னே. அறுபது ஆண்டுகளுக்கு
முன் நான் அவதரித்த (!!!) ஆண்டாயிற்றே. ஆக
இந்த மன்மத ஆண்டு வைகாசி மாதம் 12 ம்
நாள் பூர நட்சத்திரம் கூடிய சுபயோக
சுபதினத்தில் (26.05.2015) எனக்கு அகவை 60
முடிந்து 61 தொடங்கப் போகிறது. இப்ப
சொல்லுங்க இந்த மன்மத வருடம் எனக்கு
ரொம்ப சிறப்பானதுதானே.
புத்தாண்டு கவிதையுடனும், வருக வருக என்று
வரவேற்கிறேன்.
மீள் பதிவு.
புத்தாண்டு பிறக்குது
புத்தாண்டு பிறக்குது
முன்னே வைக்கின்றேன்
முடிந்தால் நிறைவேற்றிடு
முழு முதற் கடவுளே – முடிந்தால்
முழுவதும் நிறைவேற்றிவிடு.
மொழிச்சண்டை,
மதச்சண்டை,
ஜாதிச்சண்டை,
அண்டை, அயல் நாட்டுச் சண்டை
எல்லா சண்டைகளையும்
அறவே ஒழித்திடு.
கொலை, களவு, கற்பழிப்பு,
நம்பிக்கைத் துரோகம், தீவிரவாதம்
நச்சென்று நசுக்கி
நலம் கெட்டுப்போகவை.
நீ கொடுத்த இன்னுயிரை
தானே அழிக்கும்
தரங்கெட்ட செயலை
தப்பாமல் மாற்றிடு.
பிறர் பொருள்,
பிறர் மனை கவரும்
பேராசையை
கட்டாயம் விரட்டி விடு.
பிச்சையில்லா பாரதம்
நிச்சயம் உருவாக்கிடு
உழைப்பின் உயர்வு,
உயிரின் விலை,
புரியாதவர்களுக்குப்
புரிய வைத்திடு.
முட்டாள் மனிதனை
மூளைச் சலவை செய்தாவது
முடிந்தவரை நிறைவேற்றிடு.
அருமையான கவிதை. பிறந்த மன்மத வருஷத்தை, பிறக்கும் மன்மத வருஷத்தை ஷஷ்டியப்த பூர்த்தி கொண்டாடும் மன்மத வருஷமாக கொண்டாடப் போகும் உங்கள் ஸ,ந்தோஷத்தில் நானும் பங்கு கொண்டு உங்களைக்,உங்கள் குடும்பத்தினரை ஆசீர்வதிக்கிறேன். ஆசிகள் அன்புடன்
ReplyDeleteமன்மத ஆண்டில் மாதவம் செய்யப்பட்டு மங்கையாய் + இனிய நங்கையாய்ப் பிறந்த ’ஜெ’ மாமிக்கு என் மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள். வாழ்க !
ReplyDeleteதொந்திப்பிள்ளையாராகிய என்னிடம் தாங்கள் வைத்துள்ள பிரார்த்தனைக்கவிதை வெகு அருமையாக உள்ளது.
ReplyDeleteநிஜப்பிள்ளையாருக்கு அதனை நானும் உடனடியாக FORWARD செய்துவிட்டேன். SUBMITTED FOR YOUR KIND CONSIDERATION AND FAVORABLE EARLY ACTION PLEASE என ஓர் ENDORSEMENT போட்டுள்ளேன். என்ன செய்கிறார் என பார்ப்போம்.
புத்தாண்டுக்கு பாயஸம், போளி, வடை எல்லாம் செய்திருப்பீர்கள் !
இதற்காக சென்னை வரை என்னால் வரமுடியுமா என்ன ? என் பங்கையும் சேர்த்து, என்னை நினைத்துக்கொண்டு நீங்களும், லயா குட்டியும் சாப்பிடவும்.
அன்புடன் கோபு.