பொதுவா ராமேஸ்வரம்
செல்பவர்கள் ராமேஸ்வரம், தனுஷ்கோடி சென்று விட்டு திரும்பி விடுவார்கள். மூன்றாவது முறையாக ராமேஸ்வரம் சென்ற நான் இதுவரை பார்க்காத இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்று வலை உலகில் தேடி ஸ்ரீபாம்பன் சுவாமிகள் வாழ்ந்த இடம், சுவாமிகளுக்கு முருகப் பெருமான் அருள் பாலித்த இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்தேன்.
ராமேஸ்வரத்திலிருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது பிரப்பன் வலசை கிராமம்.
நாங்கள் முதலில் சென்றது சுவாமிகளுக்கு முருகப் பெருமான் அருள் பாலித்த இடம்
**********
முருகன் மீது தீவிர பக்தி கொண்டவரான
சுவாமிகள் தான் வழிபடும் உருவங்களில்
எல்லாம் முருகனையே காணவேண்டும் என
எண்ணம் கொண்டவர்.
முருகப்பெருமான் தனக்கு காட்சி
கொடுக்கவேண்டி முருகனிடம்
உபதேசம்பெறவேண்டி மயானமாக இருந்த இந்த
இடத்தில் கடும் தவம் மேற்கொண்டார்.
தவத்திற்கு கடும் இடையூறுகள் வந்தன.
முருகனின் அருளால் அனைத்தையும்
உடைத்தெறிந்தார்.
ஏழாம் நாள் இரவு இரண்டு முனிவர்களுடன்
அடியார் உருவத்தில் முருகன் வந்தார்.
சுவாமிகளிடம் ஒரு வார்த்தையை
உபதேசித்துவிட்டு மறைந்தார். சுவாமிகள் அந்த
சொல்லை உச்சரித்தபடியே மீண்டும் தவத்தில்
ஆழ்ந்தார். முப்பத்தைந்தாம் நாள் அவரை
தவத்தில் இருந்து எழச்சொல்லி அசரீரி
கேட்டது. எம்பெருமான் முருகன் சொன்ன
பிறகே எழுவேன் என சுவாமிகள் கூறினார்.
இது முருகனின் உத்தரவு என அசரீரி
கேட்டபிறகே சுவாமிகள் எழுந்தார். முருகன்
மயில் மீது அமர்ந்த கோலத்தில் இந்த இடத்தில்
இவருக்கு தரிசனம் கிடைத்தது. முருகன் காட்சி
கொடுத்த இடமாதலால் இங்கு முருகனுக்கு
ஆலயம் எழுப்பி வழிபாடு நடந்து வருகிறது.
.
கோவில் வளாகத்தில் இருந்த அழகிய ஆலமரம்
கோவிலை தூய்மையாக்கிக் கொண்டிருக்கும் அன்பர்.
இதுவரை அறியாத பல செய்திகளும், படங்களும், பதிவும் அருமை. மூன்றாம் முறையாக இராமேஸ்வரம் சென்று வந்துள்ளது கேட்க மகிழ்ச்சி. தங்களைப்பார்த்தாலே எங்களுக்கும் புண்ணியம். வாழ்க ! பயணக்கட்டுரைகள் தொடரட்டும்.
ReplyDelete