இந்த வருடம் ஆருத்ரா தரிசனத்துக்கு இதுவரை தரிசிக்காத (தரிசிக்காத கோவில்கள் எக்கச்சக்கம். தரிசித்தவை என்னமோ ரொம்ப குறைச்சல்) சிவன் கோவிலுக்குப் போக வேண்டும் என்று நினைத்தேன். பெரிய கோவிலம்பாக்கத்தில் ஒரு சிவன் கோவில் (யோக கங்காதீஸ்வர் கோவில்) இருப்பது தெரிந்து அங்கு சென்றோம் நானும் என் கணவரும். அழகான கோவில்.
விடியற்காலையிலேயே ஐயர் வந்து பூசை முடித்துவிட்டு சென்றார் என்று அங்கு இருந்த ஒரு பாட்டி சொன்னார்கள். ஆவுடையப்பனுக்கு அழகான அலங்காரம். ஒரு இலையில் சிறிது களி வைத்திருந்தது.
இது அம்மன் சந்நிதி. அம்மனின் பெயர் தெரியவில்லை.
கோவிலின் மேற் கூரையில் அழகான சித்திரங்கள்
சுவரில் இரு கரம் கூப்பி நிற்கும் ஒரு அழகான அனுமன்.
வெளிச் சுற்றில் மரத்தடியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நாகர்கள்.
ஒரு காலத்தில் அழகான குளமாக இருந்திருக்க வேண்டும். இன்று நீர் தெரியாமல் பாசி.
கோவிலின் வரலாறு தெரியவில்லை. நான் சென்ற பொழுது கோவிலில் எங்களைப் போல் ஓரிருவர் இருந்தனர். அர்ச்சகர் யாரும் இல்லை. அடுத்த முறை செல்லும் பொழுது அர்ச்சகர் இருந்தால் கோவிலின் வரலாற்றைப் பற்றி கேட்டு எழுதுகிறேன்.
படங்களும் பதிவும் அருமை. ஹனுமன் படம் அழகோ அழகு.
ReplyDelete//அடுத்த முறை செல்லும் பொழுது அர்ச்சகர் இருந்தால் கோவிலின் வரலாற்றைப் பற்றி கேட்டு எழுதுகிறேன். //
ஆஹா, அவசியமாக எழுதுங்கோ. படிக்கக் காத்திருக்கிறோம். :)
பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.