Monday, January 12, 2015

ஆலய தரிசனம் – திருமயிலை - பகுதி 1


மைலாப்பூரில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, தினமும் கபாலி கோவிலே கதி என்று இருந்த  எனக்கு 30 வருடங்களில் 3, 4 முறைதான் செல்ல முடிந்தது என்பது எவ்வளவு பெரிய வருத்தத்தைக் கொடுக்கிறது.  என்ன செய்ய. எல்லாம் காலத்தின் கோலம்.

சமீபத்தில் ஒரு சனிக்கிழமை திடீரென்று மைலாப்பூர் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.  அப்படியே கபாலி கோவிலுக்குச் சென்றுவிட்டு வந்தேன்.  


இந்த வாசல் வழியாக எவ்வளவு முறை சென்றிருப்போம்.  எவ்வளவு திருவிழாக்கள், வசந்த உற்சவம், கச்சேரிகள் கண்டு களித்திருக்கிறோம்.  



உள்ளே அழகன் முருகன் சந்நிதியில் இருந்து நான் எடுத்த புகைப்படம்.   இடது பக்கம் முழு நிலவு.  


மகிழ மரம்.  இந்த மகிழ் மரத்தடியில் எவ்வளவு நாட்கள் விளையாடி இருப்போம் நாங்கள்.    கையில் நூலை வைத்துக் கொண்டு ஒரு, ஒரு பூவாக விழ, விழ போட்டி போட்டுக் கொண்டு எடுத்து, கோர்த்து மாலையாக்கி அங்கேயே சுவாமிக்கு போடக் கொடுத்து விட்டு வருவோம்.  அப்ப எல்லாம் இந்த மாதிரி தரை கிடையாது.  மணல் பரப்பி இருக்கும்.   


புன்னை மரத்தடியில் அன்னை உமையவள் சிவலிங்கத்தை பூஜிக்கிறாள்.  ஒரு காலத்தில் இந்த இடத்தில் மயில்கள் இருக்கும்.  மயிலின் அகவல் எங்க வீடு வரை கேட்கும்.  இப்ப ஒரு மயிலைக் கூட காணும்.  ஆனால் அங்கு கோசாலை நிறுவி இருக்கிறார்கள்.


 இந்த மண்டபத்தில் ஒவ்வொரு திருவிழாவின் போதும் எல்லா உற்சவர்களையும் நிறுத்தி இருப்பார்கள்.  அந்த வாத்திய கோஷங்கள் இப்பொழுதும் காதில் ஒலிக்கிறது. 



தேர் முட்டி.  முன்பெல்லாம் இது போல் தேரை மூடி வைத்திருக்க மாட்டார்கள்.   பள்ளிக்குப் போகும் போதும், வரும் போதும் தினமும் பார்த்துக் கொண்டே செல்வோம்.   இந்தப் படிக்கட்டுகளில் நின்றுதான் தேரில் இருக்கும், உமா மகேஸ்வரனையும், அன்னை உமையவளையும் தரிசிப்போம்.

மீண்டும் என்னை மலரும் நினைவுகளுக்கு அழைத்துச் சென்ற வாய்ப்புக்குக் கடவுளுக்கு நன்றி.   

அடுத்த பகுதியில் இருந்து திருமயிலையைப் பற்றி விரிவாக எழுதுகிறேன். 

*
***
*****
*******
*****
***
*


1 comment:

  1. மிக அழகான படங்களுடன் வெகு அற்புதமான பதிவாகக் கொடுத்துள்ளீர்கள். ‘ஜெ’ யின் மலரும் நினைவுகளைக் கேட்கவே ஆனந்தமாக உள்ளது.

    ஜெயா குட்டியூண்டு சின்னப்பெண்ணாக பாவாடை சட்டையுடன் தேரினைப்பார்த்த வண்ணம் பள்ளிக்குச்செல்வது போல கற்பனை செய்து பார்த்து மகிழ்ந்தேன். :) பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete