Saturday, December 20, 2014

அஞ்சனை மைந்தன் அவதரித்த நன்னாள்

அஞ்சிலே ஒன்று பெற்றான்

அஞ்சிலே ஒன்றை தாவி


அஞ்சிலே ஒன்று ஆறு ஆக


ஆருயிர் காக்க ஏகி


அஞ்சிலே  ஒன்று பெற்ற


அணங்கைகண்டு  ; அயலான் ஊரில


அஞ்சிலே ஒன்று வைத்தான்


அவன்  நம்மை அளித்து காப்பான் 



ந்து பூதங்களில் ஒன்றான வாயு பகவான் பெற்ற மைந்தனான அனுமன் ஐந்து பூதங்களில் ஒன்றான கடல் நீரைத் தாண்டி, ஐந்து பூதங்களில் ஒன்றான ஆகாயத்தை வழியாகக் கொண்டு ஸ்ரீ ராமனுக்காக ஐந்து பூதங்களில் ஒன்றான பூமி பெற்றெடுத்த புதல்வியான சீதையைக் கண்டு ஐந்து பூதங்களில் ஒன்றான தீயை அயல் தேசமான லங்கையில் வைத்தான். அவன் எம்மை அனைத்தும் அளித்துக் காப்பான்  என்பது இதன் பொருள். 



மார்கழி மாதம் அமாவாசை மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தவர் அனுமன்.
இவரது பெருமை ராமாயணத்தில் மட்டுமில்லை, பல புராணங்களிலும் உண்டு.
இதற்கு முக்கிய காரணம் வைணவத்தில் ராம பக்தனாகவும், சைவத்தில் சிவனின் அம்சமாகவும் இருப்பது தான்.எந்த இன்னலையும் எதிர்நோக்கும் அறிவையும், பலத்தையும், தைரியத்தையும், கொடுக்கிறவர் என்ற நம்பிக்கை நம் மக்களிடையே உண்டு. ஹயக்கிரீவர், சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி போன்று ஆஞ்சநேயரை வழிபட்டால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம். எல்லோரையும் கலங்கச்செய்யும் சனிபகவனையே ஒரு முறை இவர் கலங்கச் செய்தார்.
இதனால் சனி தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபடுவது சிறப்பு.
இவர் அவதரிக்க போவதான செய்தியை வாயுபகவானுக்கு, பரம்பொருள் அறிவித்த ஊர், மதுரைக்கு அருகிலுள்ள திருவாதவூர் ஆகும்.

இந்த ஊரில் தான் திருவாசகம் தந்த மாணிக்க வாசகர் அவதரித்தார். தமிழ்நாட்டில் திரும்பிய இடமெல்லாம் விநாயகர் கோயில் இருப்பதை போல், மேற்கு தொடர்ச்சி மலை தொடங்கும் கேரளா முதல் மகாராஷ்டிரம் வரை ஆஞ்சநேயருக்கு தனி கோயில்கள் அதிகம்.


பொதுவாக ஆஞ்சநேயர் விஷ்ணு கோயில்களில் தனி சன்னதியிலும், சிவன் கோயில்களில் தூணிலும் அருள்பாலிப்பது வழக்கம்.சொல் ஒன்று இருந்தால் அதற்கு ஒரு அர்த்தம் இருப்பது போல், "ராமா என சொல்லுகின்ற இடத்தில் எல்லாம் ஆஞ்சநேயர் இருப்பது நிச்சயம். இவரது வழிபாட்டில் ராமநாம பஜனையும், செந்தூரப்பூச்சும், வெற்றிலை மாலையும் நிச்சயம் இடம் பெறும். இவரது சன்னதியிலும் துளசியே பிரதான பிரசாதம். பாரதப்புண்ணிய பூமியில் தொண்டரையே தெய்வமாக போற்றப்படும், மேன்மையை ஆஞ்சநேயர் வரலாற்றில் காணலாம்.
ஆஞ்சநேயர் பெரியவனாக வளர்ந்த பிறகு பெரிய கடலை தாண்டினார் என்றாலும், சிறியவனாக இருந்த போது பூமியிலிருந்து ஒரே தாவலில் சூரியனை எட்டிப்பிடித்தவர்,. எனவே இவர் தனது பக்தர்களுக்கு அனைத்தையும் சாதிக்க இயலும் என்ற எண்ணத்தை அருளுகிறார். சிவனும் விஷ்ணுவும் விஸ்வரூபம் எடுத்திருந்தாலும், பொதுவாக ஆஞ்சநேயருக்கு மிகப்பெரிய உருவம் உடைய கோயில்கள் அதிகம் உள்ளது.தூத்துக்குடி அருகில் உள்ள தெய்வச் செயல்புரம் என்ற ஊரில் 75 அடி உயர ஆஞ்சநேயர் அருள்பாலிப்பது சிறப்பு. அனுமன் அவதார நாளில் அருகில் உள்ள ஆஞ்சநேயர் தலத்திற்கு சென்று
"ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
ராமதூதாய தீமஹி
தன்னோ அனுமன் பிரசோதயாத்


என்ற அனுமன் காயத்ரி சொல்லி அவரது அருள்பெறுவோம். அத்துடன் அனுமன் ஜெயந்தியன்று அவரது புகழ்பரப்பும் "அனுமன் சாலீஸா” பாராயணம் செய்தால் நினைத்த காரியம் நடக்கும்என்பது நம்பிக்கை.அனுமன் ராமனுக்கு தூதனாக இருந்தாலும், இவர் சிவனின் அம்சமாக தோன்றியவர்.


ராமாயணத்தில் ஒவ்வொருவரும் ஒரு வேடம் ஏற்றனர். அதில் மகாவிஷ்ணு ராமனாகவும், மகாலட்சுமி சீதாதேவியாகவும், ஆதிசேஷன் லட்சுமணனாகவும் பாத்திரமேற்றனர். இந்த ராமாயணத்தில் பங்குபெற எல்லாம் வல்ல சிவனுக்கும் ஆசை ஏற்பட்டது. அத்துடன் மகாவிஷ்ணுவுக்கு சேவை செய்யவேண்டும் என்ற எண்ணமும் இருந்து வந்தது. இதனால் சிவபெருமான் ஆஞ்சநேயராக அவதரித்து ராமாயணத்தில் ராமருக்கு சேவை செய்தார் என்பது முக்கியமான செய்தியாகும். ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். ஆஞ்சநேயனின் ஜெயந்தி, ஜெயந்திக்கெல்லாம் ஜெயந்தி. அந்த ஜெயந்தியை நாம் கொண்டாடுவதால் நமக்கு சகல மங்கலங்களும் உண்டாகும். நினைத்த காரியம் கைகூடும். துன்பம் விலகும்; குடும்பத்தில் இன்பம் பெருகும். ஆஞ்சநேயரை ராம நாமத்தால் சேவிப்பதோடு, வடைமாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சாத்தி, ஆராதிக்க வேண்டும்.
வாலில் குங்குமப்பொட்டு வைத்து தியானித்தும் பூஜிக்கலாம். ராமருக்கு அத்யந்த பக்தராகவும் அரிய தொண்டராகவும் பாத சேவை புரியும் பரம பக்தராகவும் விளங்குபவர் ஆஞ்சநேய மகாப்பிரபு! ராமாயணம் என்னும் மணிஹாரத்தில் நடுநாயகமாக விளங்குபவர் ஆஞ்சநேயர்! அவல், சர்க்கரை, தேன், பானகம், நீர்மோர், கதலிப்பழம், கடலை முதலிய நிவேதனப் பொருட்களை அவர் விரும்பி அமுது செய்து மகிழ்வார். இப்படி கண்ணனும், மாருதியும் ஒற்றுமையோடு இணைந்திருப்பதால் தான் வெண்ணெயை மாருதிக்கு சாத்தி வழிபடுகிறார்கள். ஸ்ரீராம நவமி உற்சவம் கொண்டாடும் இடங்களில் எல்லாம் ஆஞ்சநேயர் நேரில் வந்து அடியார்களுள் அடியாராய்-பக்தருள் பக்தராய் அமர்ந்து உபன்யாசத்தைப் பேரானந்தத்துடன் ரசித்து அனைவருக்கும் சலக சந்தோஷங்களையும் சுபிட்சங்களையும் வாரி வழங்கிப் பேரருள் புரிகிறார். இதனால் தான் துளசி தாசர் ராமாயண பிரவசனம் தொடங்கும் முன்னர் பக்தர்களை ப்ரதட்சணமாக வருவார். அந்த பக்தர்களோடு பக்தராக மாருதியும் எழுந்தருளி இருப்பார் என்பது அவருக்கு தெரியும்.

ராமாயண கதாநாயகன், ராமனின் வலது கையான அனுமான் மார்கழி மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தார். அனுமனுக்கு நாடெங்கும் பல கோயில்கள் உள்ளன. அனுமனைச் சிவபெருமானின் அவதாரம் என்றும் கூறுவதுண்டு. வாயுதேவனுக்கும் அஞ்சனாதேவிக்கும் பிறந்தவர் இவர். இவருக்கு பவனசுதன், மருத்சுதன், பவனகுமார், பஜ்ரங்கபலி, மகாவீரர் என்று பெயர்கள் உண்டு. ராமநாமத்தை தவிர வேறு எதுவும் அறியாத அவர் தன்னலமில்லாமல் வீரனாகத் திகழ்ந்தார். அவர் மிகச் சிறந்த ராமபக்தராகத் திகழ்ந்தார். சீதையை மீட்டுக் கொடுத்ததற்காக ராமபிரானிடம் எவ்வித பிரதி பலனையும் எதிர்பார்க்கவில்லை. ராமனுக்கு பணிவிடை செய்வதற்காகவே அவர் வாழ்ந்தார். அடக்கம், தைரியம், அறிவுக்கூர்மையுடன் திகழ்ந்தார். எல்லா தெய்வீககுணங்களும் அவரிடம் இருந்தன. பிறரால் செய்ய முடியாத, ராமநாமத்தை உச்சரித்துக் கொண்டு கடலைக்கடத்தல், இலங்கையை எரித்தல், சஞ்சீவினி மூலிகையை கொண்டுவந்து லட்சுமணனை எழுப்புதல் ஆகிய அரியசெயல்களைச் செய்தார்.அவர் தன் அறிவைப் பற்றியோ, தனது தொண்டைப் பற்றியோ பிறரிடம் தற்பெருமையாகச் சொன்னதேஇல்லை. நான் ராமனின் தூதன். அவர் இட்ட பணியை என் தலையால் செய்யக் காத்திருக்கிறேன். எனக்கு ராமனின் அருளால் அச்சமோ, மரணபயமோ கிடையாது. ராமனுக்கு தொண்டு செய்யும்போது, நான் மரணமடைய நேரிட்டாலும் அதை வரவேற்கிறேன் என்று சொன்னவர். ராமனுக்குத் தொண்டு செய்த சுக்ரீவனுக்கு அவனது ராஜ்யம் அனுமனால் கிடைத்தது. கண்டேன் சீதையை என்று சொல்லி ராமனுக்கு மகிழ்ச்சியளித்தவர். நல்ல செய்தியை ராமனுக்குச் சொன்னதால் சொல்லின் செல்வன் ஆனவர். இவராலேயே வாலியின் மகன் அங்கதனுக்கு முடிசூட்டப்பட்டது. ராவணனின் அழிவுக்குப்பின், அனுமனால் விபீஷணன் இலங்கையின் அரசனானான். ஆனால், மிகப்பெரிய சாதனைகளைச் செய்த அனுமனோ, ராமனிடம் எதுவும் கேட்கவே இல்லை. சீதை அவனுக்குக் கொடுத்த முத்துமாலையைக்கூட அவன் பரிசாக ஏற்றுக் கொள்ள மறுத்தான். இதைக் கண்டு நெகிழ்ந்த ராமன், உனது கடனை எப்படி நான் திரும்பச் செலுத்துவேன். எப்போதும் உனக்கு நான் கடன்பட்டவனாகவே இருப்பேன். என்னைப் போன்றே உன்னையும் மக்கள் போற்றி வழிபடுவர். எனது கோயில் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் உனக்கு சந்நிதி இருக்கும். முதலில் உன்னை வணங்கியபின்னரே, என்னை வழிபாடு செய்யவேண்டும் என்றெல்லாம் வரம் தந்து மகிழ்ந்தார். அனுமன் கடலைத் தாண்டியது பற்றி ராமன் ஓரிடத்தில் கேட்கிறான். நீ எப்படி கடலைத் தாண்டினாய்? என்று, அதற்கு அனுமன் மிகவும் அடக்கமாக, எம் பெருமானே! எல்லாம் உமது நாம மகிமையால் என்று பதில் சொன்னார். இதுதான் அனுமனின் பணிவான குணத்திற்கு எடுத்துக்காட்டு. சாதாரணச் செயலை செய்துவிட்டே தங்களைத் தாங்களே புகழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகில் அனுமன் பணத்தையோ, பதவியையோ எதிர்பார்க்காதது மட்டுமின்றி தற்புகழ்ச்சியாகக்கூட ஒரு வார்த்தை கூடச் சொன்னதில்லை. இப்படி பலவித பெருமைகள் கொண்ட அனுமனின் பிறந்த நாளில், துளசிதாசரின் அனுமன் சாலிஸா, ராமாயண சுந்தரகாண்டம் பாராயணம் செய்வதும், ஸ்ரீராம ஜெயம் என்று நாள் முழுவதும் ஜெபிப்பதும் நன்மை தரும். வெண்ணெய், உளுந்துவடை பிரசாதமாகப் படைத்து வழிபடவேண்டும். ராமநாமம் எங்கெல்லாம் ஒலிக்கிறதோ அந்த இடங்களில் எல்லாம் அனுமன் எழுந்தருளி அருள்புரிவார். அவரை ராமநாமம் சொல்லி வரவேற்போம். அவரது நல்லருள் பெறுவோம்.

குங்குமப் பொட்டு: வாலில் குங்குமம் வைத்து வழிபடுவதின் தாத்பர்யம் என்னவென்றால், அனுமாருக்கு வாலில் தான் சக்தி அதிகம். பக்தி சிரத்தையுடன் ராமநாமத்தை ஜபித்துக் கொண்டு இடுப்பில் வால் தோன்றும் திருவிடத்தில் இருந்து தினமும் சந்தனம் சாத்தி குங்குமத் திலகம் வைத்துக் கொண்டு வரவேண்டும். வாலின் நுனியை அடைந்ததும், கலைத்துவிட்டு மறுபடியும் பொட்டு வைக்க வேண்டும். வால்முனையில் பொட்டு பூர்த்தி பெறுகின்ற சுபதினத்தில், எம்பெருமானுக்கு வடைமாலை சாத்தி, உப்பிலியப்பனுக்கு நிவேதிப்பது போல் உப்பில்லா திருவமுது நிவேதிக்க வேண்டும்.காரியம் சித்தியாகும் வரை இவ்வண்ணம் பொட்டு வைத்துக் கொண்டே வர வேண்டும்.

அனுமன் ராமனுக்கு தூதனாக இருந்தாலும், இவர் சிவனின் அம்சமாக தோன்றியவர். ராமாயணத்தில் ஒவ்வொருவரும் ஒரு வேடம் ஏற்றனர். அதில் மகாவிஷ்ணு ராமனாகவும், மகாலட்சுமி சீதாதேவியாகவும், ஆதிசேஷன் லட்சுமணனாகவும் பாத்திரமேற்றனர். இந்த ராமாயணத்தில் பங்குபெற எல்லாம் வல்ல சிவனுக்கும் ஆசை ஏற்பட்டது. அத்துடன் மகாவிஷ்ணுவுக்கு சேவை செய்யவேண்டும் என்ற எண்ணமும் இருந்து வந்தது. இதனால் சிவபெருமான் ஆஞ்சநேயராக அவதரித்து ராமாயணத்தில் ராமருக்கு சேவை செய்தார் என்பது முக்கியமான செய்தியாகும். ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.

ராமபக்தி ஏற்படுவதற்கு ஒரு சுலோகம்

தீனஜனாவன ஸ்ரீராம, தானவஹரண ஸ்ரீராம

தீனாபிமான ஸ்ரீராம, மீனசரீர ஸ்ரீராம

நிர்மல ஹிருதய ஸ்ரீராம, கார்முகபாணே ஸ்ரீராம

கர்மபலப்ரத ஸ்ரீராம, கூர்மாவதார ஸ்ரீராம

ஸ்ரீகரஸுகுண ஸ்ரீராம, ஸ்ரீகரலாலித ஸ்ரீராம

ஸ்ரீகருணார்ணவ ஸ்ரீராம, ஸுகரரூப ஸ்ரீராம

ஸரஸிஜநயன ஸ்ரீராம, ஸுகரரூப ஸ்ரீராம

நரவரவேஷ ஸ்ரீராம, நரஹரிரூப ஸ்ரீராம

காமிதபலதா ஸ்ரீராம, பாமர தூர ஸ்ரீராம

ஸாமஜவரத ஸ்ரீராம, வாமனரூப ஸ்ரீராம

அகதிமிராதித்ய ஸ்ரீராம, விகளிதமோஹ ஸ்ரீராம

ரகுகுலதிலக ஸ்ரீராம, குசலத சதுர ஸ்ரீராம

குசலவனஜக ஸ்ரீராம, குசலத சதுர ஸ்ரீராம

தசமுகமார்த்தன ஸ்ரீராம, தசரததனய ஸ்ரீராம

கலிமல ஹரண ஸ்ரீராம, ஜலஜபவார்ச்சித ஸ்ரீராம

ஸலலித வசன ஸ்ரீராம, ஹலதரரூப

ஸித்தஜனப்ரிய ஸ்ரீராம, ப்ரஸித்த சரித்ர ஸ்ரீராம

பத்தஸுனப்ரிய ஸ்ரீராம, புத்தாவதார ஸ்ரீராம

ஜயகரநாம ஸ்ரீராம, விஜய ரத ஸாரதே ஸ்ரீராம

பயநாசன ஹரே ஸ்ரீராம, ஹயமுகரூப ஸ்ரீராம

பாகவதப்ரிய ஸ்ரீராம, ஆகமமூல ஸ்ரீராம

நாகஸுசயன ஸ்ரீராம, த்யாகராஜார்ச்சித ஸ்ரீராம



Thursday, August 28, 2014

தொப்பையப்பனை கும்பிடுவோம்.









கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷ?தம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்
பொருள் : யானை முகத்தை உடையவரும், பூத கணங்களால் வணங்கப்பட்டவரும், விளாம்பழம், நாவல்பழம் ஆகியவற்றின் சாரத்தை ரசிப்பவரும், உமையின் புத்திரனும், துக்கத்தைத் தீர்ப்பவரும் ஆகிய விக்னேஸ்வரரின் பாதங்களைப் பணிகிறேன் என்பதாகும்.

இந்து மதத்தில் விநாயகர் வழிபாடு என்பது முழு முதலானது. புதிய காரியங்கள் தொடங்கும் போது, மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைத்து ஆரம்பிப்பது  வழக்கம். தனக்கு மேல் யாருமில்லாத முழு முதல் நாயகனான விநாயகரை விரும்பி வணங்கினால் வேண்டும் வளங்களை அள்ளி தருவார். இதையே லலிதா  சகஸ்ரநாமத்தில் மஹா கணேச நிர்பின்ன விக்னமந்த்ர ப்ரஹர்ஷிதா என குறிப்பிட்டு உள்ளது. அத்தகைய சிறப்பு பெற்ற கணபதியை கொண்டாடும் விநாயகர்  சதுர்த்தி திருநாள் நாளை வருகிறது.

இந்நாளில் விநாயகரின் வடிவங்கள், அருகம்புல்லின் மகிமை, தோப்புக் கரணத்தின் மகத்துவத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும். விநாயகரின் வடிவங்கள்  யானைமுக கடவுளின் திருமேனி ஞானவடிவானது. அவருடைய ஒவ்வொரு அங்கங்களுக்கும் தனி சிறப்பு உண்டு. விநாயகரின் திருவுருவை களிமண்ணாலும்பசுஞ்சாணியாலும் உருவாக்கலாம். மேலும் கருங்கல், பளிங்கு கற்கள், மற்றும் தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை உள்ளிட்ட உலோக வடிவிலும் விநாயகர் காட்சி  தருகிறார். திபெத், நேபாளம் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் விநாயகர் நர்த்தனமாடும் யோக நிலையில் அருள்பாலிக்கிறார்.

பிள்ளையார் சுழியின் பெருமை எழுத்துக்கு எல்லாம் மூலம் பிரணவம். ஓம் என்பது பிரணவத்தின் வடிவம். பிரணவத்தின் பொருளை பிரம்மனின் தலையில்  குட்டி விநாயகர் எடுத்துரைத்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. ஒரு செயலை செய்வதற்கு முன் போடப்படும் பிள்ளையார் சுழிக்கு முதலில் ஒரு வட்டம்  எழுதி வட்டத்தின் முடிவை என்பதை போல் ஒரு நீள்கோட்டில் முடிக்க வேண்டும். மோதகத்தின் தத்துவம் விநாயகருக்கு மோதகம் எனும் கொழுக்கட்டை  மிகவும் பிடித்தமான நைவேத்தியம்.

வெள்ளை அரிசி மாவினுள் இனிப்பான தேங்காய் வெல்ல பூரணத்தை வைத்து படைப்பதன் மூலம் அவரது பரிபூரண பிரம்மத்தை காணும் பாக்கியத்தை  அடையலாம். மோதகத்தை மூடியிருக்கும் வெள்ளை மாவுப் பொருள் விநாயகரின் வெளித்தோற்றத்தையும் உள்ளே இருக்கும் வெல்ல பூரணம், விநாயகரின்  இனிய குணத்தையும் பிரதிபலிக்கிறது. விநாயகர் சதுர்த்தியன்று 21 மோதகங்களை விநாயகருக்கு படைக்க வேண்டும் என்பது நியதி.

அருகம்புல்லின் அருமை
அனலாசுரன் என்ற அரக்கன் ஏராளமான தவ வலிமைகளை பெற்று, தேவர்களை கொடுமைப்படுத்தி வந்தான். அவனது கொடுமை தாங்காமல் விநாயகரிடம்  அவர்கள் முறையிட்டனர். விநாயகரும் தேவகணங்களும் அனலாசுரனை எதிர்த்து போரிட்டனர். அனலாசுரனின் அக்னி பார்வையில் தேவகணங்கள் சிதறி ஓடினஇதனால் கோபம் கொண்ட விநாயகர், அனலாசுரனை அப்படியே வாய்க்குள் போட்டு விழுங்கினார். விநாயகரின் வயிற்றை அனலாசுரன் அக்னியால்  சுட்டெரித்தான். வயிற்றில் வெப்பம் தாளாமல் தவித்த விநாயகரின் தலையில் இரண்டு அருகம்புல்லை ஒரு முனிவர் வைத்தார். இதனால் விநாயகரின் உடல் சூடு  தணிந்து, அனலாசுரனும் எரிந்து சாம்பலானான். அருகம்புல்லால் ஓம் கணாத்யாய நம என்ற மந்திரத்தை கூறி விநாயகரை அர்ச்சித்து வருபவர்களுக்கு எல்லா  வளங்களையும் விநாயகர் அள்ளி தருவார்.
தோப்புக்கரணத்தின் மகிமை

கஜமுகன் என்ற அரக்கன், முனிவர்களும் தேவர்களும் நாள்தோறும் காதுகளை பிடித்து 1008 முறை தோப்புக்கரணம் போட வேண்டும் என்றும், தன்னை  பார்த்தபடி நெற்றியில் குட்டி கொள்ள வேண்டும் என்றும் தண்டனை விதித்தான். இதை அறிந்த விநாயகர் தன்னுடைய துதிக்கையில் கொம்பு ஒன்றை  உடைத்து, சிவனின் நினைத்து கஜமுகன் மீது ஏவினார். இதனால் கஜமுகனின் அசுர முகம் அழிந்து, பெரிய எலியாக உருமாறினான். பின்னர் விநாயகரின்  அருள்பார்வையால் அவரது வாகனமாக மாறினான்
அதன்பின், தோப்புக்கரணத்தையும் நெற்றியில் குட்டி கொள்வதையும் தேவர்களும் முனிவர்களும் விநாயகரிடம் விரும்பி செய்ய ஆரம்பித்தனர். இந்த வழிபாடே  இப்போதும் தொடர்கிறது. நெற்றி பொட்டில் இரண்டு கைகளால் குட்டி கொள்வதன் மூலம் நம் உடலில் உள்ள குண்டலினி சக்தி புத்துணர்வு பெற்றுஉடல்  இயக்கங்களும் சீராக நடைபெறுகின்றன. தோப்புக்கரணத்தின் மூலம் மனதை கட்டுப்படுத்தும் வலிமையும் கிடைக்கும் என்பது அறிவியல்பூர்வ உண்மை.

வழிபாட்டு முறை

விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலை எழுந்து குளித்து விநாயகரை வணங்க வேண்டும். பின்னர், களிமண் விநாயகர்  சிலையை விரிசல் எதுவும் இல்லாமல்  பார்த்து வாங்க வேண்டும். வீட்டின் பூஜையறையில் மரப்பலகையிட்டு அதில் கோலம் போட்டு, அதன்மேல் நுனி வாழை இலை வைக்க வேண்டும். அதில்  பச்சரிசியை பரப்பி, அதன்மேல் விநாயகர் சிலையை வைக்க வேண்டும். விநாயகருக்குப் பிடித்த அருகம்புல், எருக்கம் பூ மாலை மற்றும் பல்வேறு மலர் மாலை  களை சூட்ட வேண்டும். விநாயகரின் நெற்றியில் விபூதிகுங்கு மம், சந்தனம் இட வேண்டும். விநாயகரின் வயிற்றில் ஒரு ரூபாய் நாணயத்தை வைக்க  வேண்டும். அதன்மேல் துண்டு சாற்ற வேண்டும். பின்னர் விநாயகருக்கு பிடித்த மந்திரங்களை கூறி அர்ச்சனை செய்ய வேண்டும்.

பின்னர் கொழுக்கட்டை, பால், எள் உருண்டை, அப்பம், அவல், மா, பலா, வாழைப்பழம், தேங்காய் படைக்க வேண்டும். கற்பூர ஆரத்தியின் போது, ஓம் தத்புருஷாய  வித்மஹே, வக்ர துண்டாய தீமஹி, நந்தோ தந்தி ப்ரசோதயாத்எனும் கணேச காயத்ரி மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இம்மந்திரத்தை நாள்தோறும்  உச்சரித்தால், நமது உள்ளமும் உடலும் வலிமை பெறும். முன்வினைகள் தீரும்.   களிமண் விநாயகரை ஆறு, குளம், கிணறு, கடல் போன்ற  நீர்நிலைகளில் விட வேண்டும். எக்காரணம் கொண்டும் சிலையை உடைக்க கூடாது. சிறப்புமிக்க விநாயகர் சதுர்த்தியை நாம் அனைவரும் குடும்பத்துடன் கூடி  கொண்டாடி மகிழ்வோம். விரும்பி வணங்கினால், இளகிய மனம் படைத்த விநாயகர் வளங்களை அள்ளி தருவார்.


நன்றி: தினகரன்





Friday, August 8, 2014

ஆடி வெள்ளி.

இன்று வரலட்சுமி விரதம்.  

     


 வரகரிசி சர்க்கரைப் பொங்கல். 
இன்றைய நிவேதனம்.





Sunday, August 3, 2014

என்ன பொருத்தம்


இன்று நண்பர்கள் தினம்.

இன்று ‘தம்பிரான் தோழன்’ அதாவது சிவபெருமானின் தோழன் என்று பெயர் பெற்ற சுந்தர மூர்த்தி நாயனார் அவதரித்த தினம்.  
 


.


அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.