கஜானனம்
பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷ?தம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷ?தம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்
பொருள்
: யானை முகத்தை உடையவரும், பூத
கணங்களால் வணங்கப்பட்டவரும், விளாம்பழம், நாவல்பழம் ஆகியவற்றின் சாரத்தை ரசிப்பவரும், உமையின்
புத்திரனும், துக்கத்தைத் தீர்ப்பவரும் ஆகிய விக்னேஸ்வரரின் பாதங்களைப்
பணிகிறேன் என்பதாகும்.
இந்து மதத்தில் விநாயகர் வழிபாடு என்பது முழு
முதலானது. புதிய காரியங்கள் தொடங்கும்
போது, மஞ்சள் பிள்ளையாரை பிடித்து
வைத்து ஆரம்பிப்பது வழக்கம். தனக்கு மேல் யாருமில்லாத
முழு முதல் நாயகனான விநாயகரை
விரும்பி வணங்கினால் வேண்டும் வளங்களை அள்ளி தருவார்.
இதையே லலிதா சகஸ்ரநாமத்தில் மஹா கணேச நிர்பின்ன
விக்னமந்த்ர ப்ரஹர்ஷிதா என குறிப்பிட்டு உள்ளது.
அத்தகைய சிறப்பு பெற்ற கணபதியை
கொண்டாடும் விநாயகர் சதுர்த்தி திருநாள் நாளை வருகிறது.
இந்நாளில் விநாயகரின் வடிவங்கள், அருகம்புல்லின் மகிமை, தோப்புக் கரணத்தின் மகத்துவத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும். விநாயகரின் வடிவங்கள் யானைமுக கடவுளின் திருமேனி ஞானவடிவானது. அவருடைய ஒவ்வொரு அங்கங்களுக்கும் தனி சிறப்பு உண்டு. விநாயகரின் திருவுருவை களிமண்ணாலும், பசுஞ்சாணியாலும் உருவாக்கலாம். மேலும் கருங்கல், பளிங்கு கற்கள், மற்றும் தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை உள்ளிட்ட உலோக வடிவிலும் விநாயகர் காட்சி தருகிறார். திபெத், நேபாளம் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் விநாயகர் நர்த்தனமாடும் யோக நிலையில் அருள்பாலிக்கிறார்.
பிள்ளையார் சுழியின் பெருமை எழுத்துக்கு எல்லாம் மூலம் பிரணவம். ஓம் என்பது பிரணவத்தின் வடிவம். பிரணவத்தின் பொருளை பிரம்மனின் தலையில் குட்டி விநாயகர் எடுத்துரைத்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. ஒரு செயலை செய்வதற்கு முன் போடப்படும் பிள்ளையார் சுழிக்கு முதலில் ஒரு வட்டம் எழுதி வட்டத்தின் முடிவை உ என்பதை போல் ஒரு நீள்கோட்டில் முடிக்க வேண்டும். மோதகத்தின் தத்துவம் விநாயகருக்கு மோதகம் எனும் கொழுக்கட்டை மிகவும் பிடித்தமான நைவேத்தியம்.
வெள்ளை அரிசி மாவினுள் இனிப்பான தேங்காய் வெல்ல பூரணத்தை வைத்து படைப்பதன் மூலம் அவரது பரிபூரண பிரம்மத்தை காணும் பாக்கியத்தை அடையலாம். மோதகத்தை மூடியிருக்கும் வெள்ளை மாவுப் பொருள் விநாயகரின் வெளித்தோற்றத்தையும் உள்ளே இருக்கும் வெல்ல பூரணம், விநாயகரின் இனிய குணத்தையும் பிரதிபலிக்கிறது. விநாயகர் சதுர்த்தியன்று 21 மோதகங்களை விநாயகருக்கு படைக்க வேண்டும் என்பது நியதி.
அருகம்புல்லின் அருமை

அனலாசுரன்
என்ற அரக்கன் ஏராளமான தவ
வலிமைகளை பெற்று, தேவர்களை கொடுமைப்படுத்தி
வந்தான். அவனது கொடுமை தாங்காமல்
விநாயகரிடம் அவர்கள் முறையிட்டனர். விநாயகரும்
தேவகணங்களும் அனலாசுரனை எதிர்த்து போரிட்டனர். அனலாசுரனின் அக்னி பார்வையில் தேவகணங்கள்
சிதறி ஓடின. இதனால் கோபம் கொண்ட
விநாயகர், அனலாசுரனை அப்படியே வாய்க்குள் போட்டு விழுங்கினார். விநாயகரின்
வயிற்றை அனலாசுரன் அக்னியால் சுட்டெரித்தான். வயிற்றில் வெப்பம் தாளாமல் தவித்த
விநாயகரின் தலையில் இரண்டு அருகம்புல்லை
ஒரு முனிவர் வைத்தார். இதனால்
விநாயகரின் உடல் சூடு தணிந்து,
அனலாசுரனும் எரிந்து சாம்பலானான். அருகம்புல்லால்
ஓம் கணாத்யாய நம என்ற மந்திரத்தை
கூறி விநாயகரை அர்ச்சித்து வருபவர்களுக்கு எல்லா வளங்களையும் விநாயகர் அள்ளி தருவார்.
தோப்புக்கரணத்தின் மகிமை
கஜமுகன் என்ற அரக்கன், முனிவர்களும் தேவர்களும் நாள்தோறும் காதுகளை பிடித்து 1008 முறை தோப்புக்கரணம் போட வேண்டும் என்றும், தன்னை பார்த்தபடி நெற்றியில் குட்டி கொள்ள வேண்டும் என்றும் தண்டனை விதித்தான். இதை அறிந்த விநாயகர் தன்னுடைய துதிக்கையில் கொம்பு ஒன்றை உடைத்து, சிவனின் நினைத்து கஜமுகன் மீது ஏவினார். இதனால் கஜமுகனின் அசுர முகம் அழிந்து, பெரிய எலியாக உருமாறினான். பின்னர் விநாயகரின் அருள்பார்வையால் அவரது வாகனமாக மாறினான்.

அதன்பின்,
தோப்புக்கரணத்தையும் நெற்றியில் குட்டி கொள்வதையும் தேவர்களும்
முனிவர்களும் விநாயகரிடம் விரும்பி செய்ய ஆரம்பித்தனர். இந்த
வழிபாடே இப்போதும் தொடர்கிறது. நெற்றி பொட்டில் இரண்டு
கைகளால் குட்டி கொள்வதன் மூலம்
நம் உடலில் உள்ள குண்டலினி
சக்தி புத்துணர்வு பெற்று, உடல் இயக்கங்களும் சீராக நடைபெறுகின்றன. தோப்புக்கரணத்தின்
மூலம் மனதை கட்டுப்படுத்தும் வலிமையும்
கிடைக்கும் என்பது அறிவியல்பூர்வ உண்மை.
வழிபாட்டு முறை
விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலை எழுந்து குளித்து விநாயகரை வணங்க வேண்டும். பின்னர், களிமண் விநாயகர் சிலையை விரிசல் எதுவும் இல்லாமல் பார்த்து வாங்க வேண்டும். வீட்டின் பூஜையறையில் மரப்பலகையிட்டு அதில் கோலம் போட்டு, அதன்மேல் நுனி வாழை இலை வைக்க வேண்டும். அதில் பச்சரிசியை பரப்பி, அதன்மேல் விநாயகர் சிலையை வைக்க வேண்டும். விநாயகருக்குப் பிடித்த அருகம்புல், எருக்கம் பூ மாலை மற்றும் பல்வேறு மலர் மாலை களை சூட்ட வேண்டும். விநாயகரின் நெற்றியில் விபூதி, குங்கு மம், சந்தனம் இட வேண்டும். விநாயகரின் வயிற்றில் ஒரு ரூபாய் நாணயத்தை வைக்க வேண்டும். அதன்மேல் துண்டு சாற்ற வேண்டும். பின்னர் விநாயகருக்கு பிடித்த மந்திரங்களை கூறி அர்ச்சனை செய்ய வேண்டும்.
பின்னர் கொழுக்கட்டை, பால், எள் உருண்டை, அப்பம், அவல், மா, பலா, வாழைப்பழம், தேங்காய் படைக்க வேண்டும். கற்பூர ஆரத்தியின் போது, ஓம் தத்புருஷாய வித்மஹே, வக்ர துண்டாய தீமஹி, நந்தோ தந்தி ப்ரசோதயாத்‘ எனும் கணேச காயத்ரி மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இம்மந்திரத்தை நாள்தோறும் உச்சரித்தால், நமது உள்ளமும் உடலும் வலிமை பெறும். முன்வினைகள் தீரும். களிமண் விநாயகரை ஆறு, குளம், கிணறு, கடல் போன்ற நீர்நிலைகளில் விட வேண்டும். எக்காரணம் கொண்டும் சிலையை உடைக்க கூடாது. சிறப்புமிக்க விநாயகர் சதுர்த்தியை நாம் அனைவரும் குடும்பத்துடன் கூடி கொண்டாடி மகிழ்வோம். விரும்பி வணங்கினால், இளகிய மனம் படைத்த விநாயகர் வளங்களை அள்ளி தருவார்.

நன்றி: தினகரன்
No comments:
Post a Comment