பெரியவா சரணம்
....
..ஒரு முறை ஸ்ரீ மடத்தில் இரவில் எல்லாரும் தூங்கிக் கொண்டிருந்த பொழுது, ஸ்வாமிகள் திடுக்கிட்டு எழுந்து, தொண்டர்களை எழுப்பினார்!
அவர்களிடம், "ஓடு, ஓடு! சீக்கிரமாக யானை கட்டும் இடத்துக்குப் போ! யானை பயத்துடன் அலறும் சத்தம் கேட்கிறது!" என்றார்.
"இப்போதெல்லாம் ஸ்வாமிகளுக்குக் காது சரியாகக் கேட்பதில்லையே? அவருக்கு யானையின் சத்தம் கேட்டதா? அதுவும் நம் காதில் விழலேயே? " என்று நினைத்த படி அனைவரும் ஓடிச் சென்று பார்த்தனர்.
அங்கே மடத்து யானையின் முன்னே ஒரு நல்ல பாம்பு படமெடுத்துக் கொண்டு நின்றது! யானை கட்டிய தூணுக்குப் பின்னே அச்சத்தோடு 'பிளிறியது'.
பணியாளர் ஒருவர் ஒரு பெரிய கட்டையை எடுத்து அந்தப் பாம்பை ஓங்கி அடிக்க முயன்றார். ஸ்வாமிகள் அதைத் தடுத்தார். "ஒரு விளக்கேற்றி வை! போய் விடும்.. விட்டு விடு.." என்றார்கள்.
சற்று நேரம் நின்ற பாம்பு மெதுவாகத் திரும்பிப் போய் மறைந்தது. யானையின் துதிக்கையை அன்புடன் தடவிக் கொடுத்த பெரியவா, "எல்லாம் சரியாகி விட்டது, இனிமேல் பாம்பு வராது!" என்றார்.
"எல்லாரும் போய்ப் படுத்துக் கொள்ளலாம்! " என்று தூக்கக் கலக்கத்தில் யாரோ கூற, அனைவரும் யானைக் கொட்டகையிலிருந்து நகர்ந்தனர்.
" யானையை அவிழ்த்து வேறோரிடத்தில் கட்டுங்கள்.... அங்கேயே இருந்தால் யானைக்குப் பாம்பைக் கண்ட பயம் போகாது "என்ற ஸ்வாமிகளின் ஜீவ தயை அனைவரையும் நெகிழ வைத்தது.
காருண்ய ஸாகரம் பெரியவா சரணம் சரணம்....
ஆஹா, மிகவும் அருமையான பதிவு.
ReplyDeleteகஜேந்திர மோக்ஷத்தில் தன் ஸ்ரீசக்ரத்தால் முதலையைப் பிளந்து பகவான் யானையைக் காப்பாற்றி முதலைக்கும் காட்சிதந்து இருவருக்குமே சாபவிமோசனமாக மோக்ஷமளிக்கிறார்.
அதுபோல ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா யானையையும், பாம்பையும் பயமில்லாமல் அவரவர் வழியில் அனுப்பி வைத்துள்ளார்.
மஹான்கள் எப்போதும் மஹான்கள்தான். எல்லா ஜீவன்களையும் சமமாக பாவித்துக் காக்கும் அபூர்வ சக்தி கொண்டவர்கள்.
வழக்கம்போல எல்லாப்படங்களும் அழகோ அழகு. அதுவும் அந்த முதல் படம் சிவப்பழமாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.