"பைத்தியத்துக்கு மருந்து சொன்ன பெரியவா"
(ப்ராம்மி க்ருதம்,வல்லாரை நெய்யோடு வேப்பங்கொட்டையும் தேனும்)
வைத்தியம்,மருந்து, மந்திரம் எல்லாம் செய்து பார்த்தாயிற்று.கடுகளவு கூட குணம் தெரியவில்லை.
ஆட்டம்,பாட்டம்,கூச்சல் இல்லாமல் இருந்தாலே போதும் என்று நடு வயதுப் பையனான அந்தப் பைத்தியத்தின் தாயாருக்குத் தோன்றியது.பெரியவாளிடம் அப்பையனை அழைத்து வந்தாள்.பைத்தியத்தின் வாயில் எப்போதும் எச்சில் வழிந்து கொண்டிருந்தது.
பெரியவாள் அந்தப் பையனைப் பார்த்தார்கள்.
பெரியவாள் சொன்னார்கள்;
"நாக்கில் எச்சல் வந்தால் வாணி (சரஸ்வதி) என்று சொல்வார்கள்.கவலைப்பட வேண்டாம்.
பிராம்மி க்ருதம்னு ஒரு மருந்து..கேள்விப்பட்டிருக்கியோ
ஜபம் செய்துட்டு, இந்தப் பையனுக்குக் கொடு....
அப்புறம் வேப்பங்கொட்டை தெரியுமோன்னோ? ரெண்டு மூணு கொட்டையை வெழுமூண நசுக்கி. தேனில் குழைத்து, தினமும் இவன் நாக்கில் தடவிண்டு வா...."
இரண்டு மாதங்கள் கழித்து தாயாரும் பையனும் வந்தார்கள். பையனிடம் சேஷ்டை இல்லை.
மக்குக் கணக்காய், மலங்க மலங்க பார்த்துக் கொண்டிருந்தானே, தவிர வேறு தொந்தரவுகள் இல்லை.
"பையன் கொஞ்சம் கொஞ்சம் படிக்க ஆரம்பிச்சிருக்கான்" என்றாள் தாயார், நிம்மதிப் பெருமூச்சுடன்.
பெரியவாள் கையைத் தூக்கி ஆசீர்வதித்தார்கள்.
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா சொல்லியுள்ளது, மிகவும் அருமையான வைத்தியம்.
ReplyDelete>>>>>
இன்று வெளியிட்டுள்ள இரண்டு படங்களும் சூப்பர்.
ReplyDelete>>>>>
http://gopu1949.blogspot.in/2013/10/62.html
ReplyDeleteஎன் தொடரின் 62-வது பகுதியில் இதைப்பற்றியும் நான் கொஞ்சூண்டு சொல்லியுள்ள நினைவு எனக்கு உள்ளது.
இவற்றையெல்லாம் எத்தனை முறை கேட்டாலும், படித்தாலும் நமக்கு ஆனந்தமே.
பகிர்வுக்கு நன்றிகள்.