Thursday, December 1, 2016

பெரியவா சரணம்




""என்ன விஷயம்? யார் இவர்கள்? பெரியவாளே தன் கையால் மாலை கட்டிக் குடுத்திருக்காரே""

காஞ்சீபுரம் ஸ்ரீமடத்தில் ஒரு நாள் சாயங்காலம் பெரியவா தரிசனம் தந்து கொண்டிருந்தார்.

அப்போது ஒரு வயதான தம்பதி வந்து நமஸ்காரம் பண்ணினார்கள்.

அந்த மாமாவின் பஞ்சகச்சம், மாமியின்   மடிசார் ரெண்டுமே புது வஸ்த்ரங்களாக இருந்தன. நமஸ்காரம் பண்ணிவிட்டு எழுந்த அவர்களை புன்னகையோடு கடாக்ஷித்தார்.

"என்ன..... எல்லாம் நல்லபடி ஆச்சா?"

"பெரியவா ஆசீர்வாதத்துல எல்லாம் நன்னா நடந்துது....."

அந்த அம்மா, கண்ணில் வழிந்த நீரை கட்டுப்படுத்தமுடியாமல் தவித்தாள்.

"இங்கியே அப்டி ஒக்காந்துக்கோங்கோ.... ரெண்டுபேரும்"

கொஞ்சம் தள்ளி அவர்கள் அமர்ந்து கொண்டிருந்தனர். அதன் பிறகு பெரியவா இவர்களிடம் எதுவும் பேசவில்லை. கூட்டம் இருந்ததால், மற்றவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.

ஆனால் பெரியவாளுடைய கைகள் மட்டும், கிறுகிறுவென்று தன்னிச்சையாக ஒரு கார்யத்தை பண்ணிக் கொண்டிருந்தன.

தேனீக்களும், வண்ணத்துப் பூச்சிகளும் கிறுகிறுவென்று அங்குமிங்கும் பறந்து பறந்து மலர்களில் உள்ள மகரந்த தேனை சேகரிக்கும்.. 

நம்முடைய ஸ்ரீ சந்த்ரஶேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகளோ, தன்னுடைய கைகளால் தேனீக்கள், வண்ணத்துப்பூச்சிகள் போல பரபரவென்று சுற்றி இருந்த பூக்களை எல்லாம் திரட்டி திரட்டி, அழகான மாலைகளாக தொடுத்துக்கொண்டிருந்தார்! வருவோர் போவோரிடம் பேசுவதற்கும் இதற்கும்  சம்பந்தமேயில்லை என்பதுபோல்   அவர் கரங்கள் அற்புதமான மாலைகளை தொடுத்துக் கொண்டிருந்தன!

ஆஹா! ரெண்டு மாலைகள் தயார்!

யாருக்கு?

"இங்க வாங்கோ.. ரெண்டுபேரும் "

அந்த  வயதான   தம்பதிகளை அழைத்தார்.

"இந்தா..... இந்த ரெண்டு மாலையையும் அவாகிட்ட குடு"

ஸாக்ஷாத் பகவான் கையாலேயே தொடுத்த ரெண்டு மாலைகளும் அந்த  பாக்கியசாலி தம்பதி   கைக்கு போனது.

"ம்ம்...! மாலை மாத்திக்கோங்கோ!...."

அருகிலிருந்த குறிப்பறிந்த வேதபண்டிதர்கள், மந்த்ரங்களை ஓதினார்கள்.

அந்த அம்மாவோ, "ஸர்வேஶ்வரா! ஸர்வேஶ்வரா!" என்று அரற்றவே ஆரம்பித்து விட்டாள்!

பெரியவாளுடைய அனுக்ரஹமே பரமானந்தம்! அதிலும் இது எப்பேர்ப்பட்ட ஆனந்த அதிர்ச்சியான அநுக்ரஹம்!

ரெண்டு பேருடைய கண்களும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் கொட்டித் தீர்த்தன.

மறுபடியும் அவர்கள் நமஸ்காரம் பண்ணியதும், குங்கும ப்ரசாதம் தந்து ஆசீர்வதித்தார்.

சுற்றி இருந்தவர்களுக்கு உள்ளே ஒரே அரிப்பு!!

"என்ன விஷயம்? யார் இவர்கள்? பெரியவாளே தன் கையால் மாலை கட்டிக் குடுத்திருக்காரே?...."

ஆவலை அடக்க முடியாமல் ஒருத்தர், மெதுவாக அந்த அம்மாவிடமே விசாரித்தார்.

"எங்களுக்கு  சொந்த   ஊர் பெங்களூர்..! இன்னிக்கி இவரோட 70-வது பொறந்தநாள். எங்க பிள்ளை மெட்ராஸ்ல இருக்கான். காலேல பிள்ளையாத்ல பீமரதஶாந்தி பண்ணிண்டார். எங்களுக்கு எல்லாமே பெரியவாதான்! பிள்ளேட்ட "பெரியவாள எனக்கு இன்னிக்கி   தரிசனம்   பண்ணணும்-னு ரொம்ப ஆசையா இருக்குடா...."ன்னு சொன்னேன்.

அவனுக்கு நாளைக்கி பெங்களூர்ல ஏதோ  அவசர   வேலை இருக்குன்னுட்டு, "அம்மா....இன்னிக்கி முடியாதும்மா! நிச்சியமா இன்னொரு தரம் பெரியவா  தரிசனத்துக்கு 
 கூட்டிண்டு போறேன்"-ன்னு சொன்னான். வேற என்ன பண்றது? மானஸீகமா பெரியவாளையே நெனச்சிண்டு, எல்லோருமா... ரெண்டு கார்ல பெங்களூர் கெளம்பினோம்.

வேலூர் பைபாஸ் ரோடுல, அவாள்ளாம் வந்துண்டிருந்த காரோட "ஆக்ஸில்" ஒடஞ்சுபோச்சு ! எப்டியும் ரெண்டு மணி நேரமாவது ஆகுன்னுட்டா! ஒடனே நா....."காஞ்சிபுரம் பக்கத்லதான இருக்கு! அப்பாவும் நானும் இன்னொரு கார்ல போய், பெரியவாளை தர்ஶனம் பண்ணிட்டு வரோம்!"-ன்னு சொல்லிட்டு, ஒடனேயே கெளம்பி வந்துட்டோம்..! பெரியவாளோட க்ருபையை தாங்கவே முடியல! எனக்கு இதுக்கு மேல ஒண்ணுமே வேணாம்....."

அந்த அம்மா அடக்கமாட்டாமல், ஆனந்தம் பொங்க அழுதாள்.

பகவான் தன்னிடம் ஆத்மார்த்தமாக பக்தி பூண்டவர்களை எந்த நிலையிலும் தன்னிடம் அழைத்துக் கொள்வான் !

நாம் செய்யவேண்டியது அவனிடம் படாடோபமில்லாத உண்மையான அன்பு வைப்பது மட்டுமே!






4 comments:

  1. மிகவும் அழகான அருமையான சம்பவம். படிக்கும்போதே நமக்கும் ஆச்சர்யமாக உள்ளது. எப்பேர்ப்பட்ட பாக்யசாலி தம்பதியினர் அவர்கள் ! :)))))

    ReplyDelete
  2. மேலும் கீழும் உள்ள ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா படங்கள் வழக்கம்போல மிகவும் அருமை.

    ReplyDelete
  3. //ஸாக்ஷாத் பகவான் கையாலேயே தொடுத்த ரெண்டு மாலைகளும் அந்த பாக்கியசாலி தம்பதி கைக்கு போனது.

    "ம்ம்...! மாலை மாத்திக்கோங்கோ!...."

    அருகிலிருந்த குறிப்பறிந்த வேதபண்டிதர்கள், மந்த்ரங்களை ஓதினார்கள்.

    அந்த அம்மாவோ, "ஸர்வேஶ்வரா! ஸர்வேஶ்வரா!" என்று அரற்றவே ஆரம்பித்து விட்டாள்!

    பெரியவாளுடைய அனுக்ரஹமே பரமானந்தம்! அதிலும் இது எப்பேர்ப்பட்ட ஆனந்த அதிர்ச்சியான அநுக்ரஹம்!

    ரெண்டு பேருடைய கண்களும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் கொட்டித் தீர்த்தன.

    மறுபடியும் அவர்கள் நமஸ்காரம் பண்ணியதும், குங்கும ப்ரசாதம் தந்து ஆசீர்வதித்தார்.//

    ஏற்கனவே எதிலோ நான் இதனைப் படித்துள்ள போதிலும், இப்போ மீண்டும் ஜெயா மூலம் படித்ததில், மனதுக்கு மிகவும் திருப்தியாக உள்ளது.

    இன்னும் 3-4 வருஷத்துக்குள் பீமரத ஸாந்தி செய்துகொள்ளும் பாக்யம் எங்களுக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா அனுக்கிரஹத்தால் கிடைக்குமோ என்னவோ ?

    ReplyDelete
  4. //சுற்றி இருந்தவர்களுக்கு உள்ளே ஒரே அரிப்பு!!//

    ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

    அவர்களிடம் அரிப்புக்குச் சொரிந்துகொள்ள சீப்பு ஏதும் இல்லையோ என்னவோ ! :)

    ReplyDelete