Thursday, November 17, 2016

பெரியவா   சரணம் 



ஒரு   வயோதிக   பக்தர்    பெரியவா    தரிசனத்திற்கு    வந்திருந்தார்.    முகத்தில்  கவலைக் குறி.   தடுமாற்றம். 

"கோர்ட்டில்    கேஸ்    நடக்கிறது..  தீர்ப்பு    சாதகமா    வரணும். "

பெரியவா    கண் கொட்டாமல்    அவரைப்    பார்த்தார்கள்.  -   கொஞ்சம்   உக்ரமாய்.   கைங்கர்யபரர்களுக்கு    வயிற்றைக்   கலக்கியது,.  'காரசாரமாக    என்ன   சொல்லப்    போகிறார்களோ?'    என்ற தவிப்பு. 

" நான்    ஹை - கோர்ட்   ஜட்ஜ்  இல்லை,   உனக்குச்    சாதகமா   ஜட்ஜ்மெண்ட்   எழுதுவதற்கு.   போய்,   வேற   காரியங்களைப்   பார் "  என்று   கோபத்துடன் சொல்லி  விட்டு    உள்ளே   போய் விட்டார்கள்,  பெரியவா. 

சில   நிமிஷங்கள்    சென்றதும்    பெரியவா   வெளியே    வந்தார்.   வயோதிகர்    திக்பிரமை   பிடித்து    நின்று    கொண்டிருந்தார். 

" உன்    பையன்   போய் விட்டான்.   மாட்டுப் பெண்    ரொம்ப   துக்கத்தோடு     இருக்கா.   அவளுக்கும்    அவள்    குழந்தைகளுக்கும்   பணம்    கொடுக்க    மாட்டேன்   என்கிறாய்.   கேஸ்   போட்டு,   விதவையைக்    கோர்ட்டுக்கு  இழுத்துக்    கூண்டில்   நிற்க   வைக்கிறாய்.  இது   என்ன   நியாயம்?   உலகத்தில்    எதுவும்    யாருக்கும்    சொந்தமில்லே.    குந்துமணி    சொத்துக் கூட,    கூட   வராது.   பாப  - புண்ணியம்  தான்   வரும்.. "

மறுபடியும்    உள்ளே    போய் விட்டார்கள் பெரியவா. 






வயோதிகர்    சரசரவென்று    வெளியே   போனார். 

மறுநாளே    வழக்கில்   உடன்பாட்டுக்கு   ஏற்பாடு    செய்து   விட்டார்.   சொத்தில்,   நாட்டுப்   பெண்ணுக்கு    உரிய   பாகத்தைப்   பிரித்துக்    கொடுத்தார். 

பின்னர்   தான்   ஓர்   அதிசயம்   நடந்தது. 

வயோதிகரின்    மனைவி,   மூன்று   மாதங்களுக்குப்    பின்    சிவலோகம்   சென்று   விட்டாள்,   இவர்,   தனிமரமாக    நின்றார்.    நாட்டுப் பெண்  தான்,   தன்னோடு   வைத்துக்   கொண்டு    அவருடைய    கடைசி  மூச்சு   வரைப்    பாதுகாத்து    வந்தாள்.. 

பெரியவா சரணம்.....




1 comment:

  1. மெய் சிலிர்க்க வைக்கும் சம்பவமாக உள்ளது.

    திக்கற்ற அந்த நாட்டுப்பெண்ணுக்கும், அந்த வயோதிகருக்கும் எப்படியோ ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்கிரஹம் செய்து நியாயம் வழங்கி தீர்ப்பளித்து விட்டார்கள்.

    //உலகத்தில் எதுவும் யாருக்கும் சொந்தமில்லே. குந்துமணி சொத்துக் கூட, கூட வராது. பாப-புண்ணியம் தான் வரும்.."//

    இது மறுக்கவே முடியாததோர் உண்மைதானே.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete