Wednesday, December 23, 2015

தத்தாத்ரேய ஜெயந்தி


 

  1. சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய 

    ஒரு நாள் நாரதர் தன் கையில் சில இரும்பு 

    இதனைக் கேட்டு மூன்று தேவியர்களும்

    இல்லை தாயே! நிச்சயம் பதிவிரதைகளால்

    இதையடுத்து நாரதர் அந்த இரும்பு 
  2. குண்டுகளைக் கொண்டுபோய், அத்ரி முனிவரின்
  3. மனைவியான அனுசுயா தேவியிடம் 
  4. கொடுத்தார். அவர் அதனை பொரியாக்கி 
  5. நாரதரிடம் கொடுத்தார். இந்த அரிய செயலை 
  6. கேள்வியுற்ற முப்பெரும் தேவியர்களும்
  7. அனுசுயாவின் மீது பொறாமை கொண்டனர்
  8. தங்கள் கணவர்களிடம் கூறி அனுசுயாவின் 
  9. கற்பை சோதனை செய்யும்படி அனுப்பி 
  10. வைத்தனர்.
  11. இது சாத்தியமாகும் என்று மீண்டும் நாரதர் 
  12. வற்புறுத்தினார். இதனால் முப்பெரும் 
  13. தேவியர்களும் அந்த இரும்புக் குண்டை 
  14. தீயிலிட்டு பொரியாக்க முயன்றனர். ஆனால் 
  15. அவர்களால் அது இயலவில்லை. அவர்களின் 
  16. மனதில் இருந்த அகந்தையே அதற்கு காரணமாக
  17. அமைந்தது.
  18. நாரதரே! விளையாடுகிறீர்களா? இரும்பு
  19. குண்டுகள் எப்படி பொரியாகும்
  20. முட்டாள்தனமாக அல்லவா இருக்கிறது 
  21. என்றனர்.

  22. குண்டுகளை எடுத்துக்கொண்டு முப்பெரும் 
  23. தேவியர்களையும் சந்தித்தார். தேவியர்களுக்கு
  24. என் வணக்கம். தாயே இன்று இறைவன் எனக்கு
  25. அளித்த உணவு இது. இந்த இரும்பு குண்டை 
  26. பொரியாக்கி சாப்பிட வேண்டும் என்பது 
  27. இறைவனின் உத்தரவு. பதிவிரதைகளால்
  28. மட்டுமே இந்த இரும்பு குண்டுகளை, பொரியாக்க
  29. முடியும் என்பதால் உங்களைத் தேடி வந்தேன் 
  30. என்று தன் தந்திர வார்த்தைகளை உதிர்த்தார்.

  31. மும்மூர்த்திகளும் ஒரே மூர்த்தியாக 
  32. தோன்றியதே தத்தாத்ரேயர் அவதாரமாகும்
  33. மும்மூர்த்திகளின் மனைவியர்களான பார்வதி
  34. லட்சுமி, சரஸ்வதி ஆகியோருக்கு தாங்களே 
  35. உலகில் சிறந்த பதிவிரதைகள் என்பதில் கர்வம்
  36. இருந்தது. அந்த கர்வத்தைப் போக்க எண்ணம் 
  37. கொண்ட இறைவன், அதற்கு கருவியாக 
  38. நாரதரை தேர்வு செய்தார்.
   

அத்திரி மகரிஷியும், அவரது மனைவி அனுசூயாவும் காட்டில் வசித்தனர். கணவருக்கு பணிவிடை செய்வது மட்டுமே அனுசூயாவின் பணி. தினமும், தன் கணவருக்கு பாத பூஜை செய்த தீர்த்தத்தை, தலையில் தெளித்த பிறகே, பணிகளைத் துவக்குவாள். அந்த அளவுக்கு கணவர் மீது பாசம்


குழந்தை இல்லாத அவள், தனக்கு சிவன், விஷ்ணு, பிரம்மாவைப் போல தெய்வக் குழந்தைகள் பிறக்க வேண்டுமென விரும்பினாள்மும்மூர்த்திகளும் தங்கள் தேவியரிடம் ஆலோசனை கேட்டனர். அவளுக்கு, ஒரு சோதனை வைத்து, அதில் வெற்றி பெற்றால், அவளது குழந்தையாகப் பிறக்கலாம் என அவர்கள் யோசனை தெரிவித்தனர். எப்படியும், இந்த சோதனையில், அவள் தோற்று விடுவாள் என்பது அவர்களது கணிப்பு. அதன்படி, மூவரும் துறவி வடிவில் அவளது குடிசைக்கு வந்து, உணவிடும்படி கேட்டனர்.  




அவள் உணவிட வந்தபோது, ’பெண்ணே... நீ நிர்வாணமான நிலையில் உணவிட்டால் தான், அதை ஏற்போம்.’.. என்றனர்; அனுசூயா கலங்கவில்லை. அவளுக்கு, தன் கற்புத்திறன் மீதும், பதிவிரதா தன்மையின் மீதும் அதீத நம்பிக்கையுண்டு.


கணவருக்கு பாத பூஜை செய்த தீர்த்தத்தை எடுத்து, நான், என் கணவருக்கு செய்யும் பணிவிடை உண்மையானால், இந்த துறவிகள் குழந்தைகளாகட்டும்... எனச் சொல்லி, அவர்கள் மேல் தெளித்தாள்; மூன்று தெய்வங்களும் குழந்தைகளாகி விட்டனர். தனக்கு பால் சுரக்கட்டும் என, அடுத்த வேண்டுகோளை வைத்தாள். நிர்வாண நிலையில், குழந்தைகளுக்கு பாலூட்டினாள்.  




வெளியே சென்றிருந்த அத்திரி முனிவர், தன்  
ஞான திருஷ்டியால் நடந்ததை அறிந்தார். வீட்டுக்கு வந்த அவர், அந்தக் குழந்தைகளை ஒரு சேர அணைத்தார். ஒரு உடல், மூன்று தலை, இரண்டு கால்கள், ஆறு கைகளுடன் குழந்தை இணைந்தது. அதற்கு, தத்தாத்ரேயர் என்று பெயரிட்டார். தங்கள் கணவன்மாருக்கு ஏற்பட்ட கதியை அறிந்த முப்பெருந்தேவியரும், அனுசூயாவின் குடிசைக்கு வந்தனர். நடந்ததை கூறி, தங்கள் கணவன்மாரை சுயவடிவில் திருப்பித் தர கேட்டனர். அவர்களிடம், உங்கள் கணவன்மார் உங்களுக்கு திரும்ப கிடைக்க வேண்டும் என்பது போல், குழந்தையில்லாத எங்களுக்கு இந்தக் குழந்தையும் வேண்டும்... என்று கோரிக்கை வைத்தார் அத்திரி மகரிஷி. உடனே, மூன்று தெய்வங்களும் எழுந்தனர்.  ‘ரிஷியே... உங்கள் விருப்பப்படி இந்தக் குழந்தை இங்கேயே இருக்கும்; இவன் பெரிய ரிஷியாக விளங்குவான்’... என்று கூறி, மறைந்தனர்.

தத்தாத்ரேயர் சிறந்த ஞானியாக விளங்கினார். வேதாந்த உண்மைகளை விளக்கும் அவதூத கீதையை முருகப் பெருமானுக்கு கற்றுக் கொடுத்தார். எந்நேரமும் மகிழ்ச்சியாக இருப்பார். இயற்கையிடம் இருந்து, மகிழ்ச்சியாக வாழ்வதைக் கற்றுக் கொண்டார். பொறுமை யையும், பிறருக்கு நன்மை செய்வதையும் பூமியிடமிருந்து கற்றேன். தூய்மையை, தண்ணீரிடம் படித்தேன். பலருடன் பழகினாலும் அவர்களிடம் பற்று வைக்கக் கூடாது என்பதை, காற்றிடம் கற்றேன். உணவுக்காக அலையக் கூடாது என்பதை, ஒரே இடத்தில் கிடக்கும் மலைப்பாம்பிடம் படித்தேன். வேடனிடம் தாய்ப்புறா சிக்கியதைப் பார்த்து, தாங்களும் சிக்கிக் கொண்ட குஞ்சு புறாக்களைப் பார்த்து, பாசமே துன்பங்களுக்கு காரணம் என, புரிந்து கொண்டேன். நிலைகுலையாமல் இருக்க வேண்டும் என்பதை, நூற்றுக்கணக்கான நதிகள் பாய்ந்தாலும் கலங்காமல் இருக்கும் கடலைப் பார்த்து, புரிந்து கொண்டேன். சிறிது உணவே போதும் என்பதை, மலரில் தேன் குடிக்கும் வண்டிடம் கற்றேன். மீன் துண்டுடன் பறந்த பருந்தை, பிற பருந்துகள் துரத்தின. அந்தப் பருந்து, மீனை கீழே போடவே, விரட்டிய பருந்துகள் அதை விட்டு விட்டன. இதில் இருந்து உலகத்தின் மீது ஆசையை விட்டால், எல்லா துன்பமும் பறந்துவிடும் என்று உணர்ந்தேன்! இப்படி, வாழ்வுக்கு தேவையான அரிய கருத்துக்களை சொன்ன தத்தாத்ரேயரின் பிறந்தநாளான இன்று (12.05.2015) அவரை நினைவு கூர்வோம்.
 

7 comments:

  1. மிக அழகான புராணக்கதையை பதிவு செய்துள்ளீர்கள். ஆர்வமாகப் படித்து மகிழ்ந்தேன்.

    >>>>>

    ReplyDelete
  2. அத்திரி மகரிஷியின் மனைவி அனுசூயாவின் பதிபக்தியும், தன் மாசற்ற கற்பின் மேல் அவள் வைத்திருந்த நம்பிக்கையும் மெய் சிலிர்ப்பதாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  3. தன்னை சோதிக்க வந்த மும்மூர்த்திகளையும் சிறு சிறு குழந்தைகளாக்கி, தனக்கும் பால் சுரக்குமாறு செய்துகொண்டு, அவர்கள் விரும்பிய வண்ணமே பாலூட்டிய விதம் படிக்கப் பரவசமாக இருந்தது.

    எப்போதோ எங்கோ நான் கேள்விப்பட்ட படித்த கதை இது என்றாலும் எனக்கு சுத்தமாக நினைவில் இல்லை. இன்று ஜெயா மூலம் அதன் முழுவிபரம் அறிந்ததில் எனக்கும் மகிழ்ச்சியே :)

    >>>>>

    ReplyDelete
  4. //உங்கள் கணவன்மார் உங்களுக்கு திரும்ப கிடைக்க வேண்டும் என்பது போல், குழந்தையில்லாத எங்களுக்கு இந்தக் குழந்தையும் வேண்டும்... என்று கோரிக்கை வைத்தார் அத்திரி மகரிஷி.

    உடனே, மூன்று தெய்வங்களும் எழுந்தனர். ‘ரிஷியே... உங்கள் விருப்பப்படி இந்தக் குழந்தை இங்கேயே இருக்கும்; இவன் பெரிய ரிஷியாக விளங்குவான்’... என்று கூறி, மறைந்தனர்.//

    அப்பாடி, பெரிய நிம்மதியாப்போச்சு. இதற்கு இவ்வளவு ஆர்ப்பாட்டங்கள் செய்திருக்க வேண்டாம், அந்த மூன்று மூர்த்திகளும் ..... :)

    >>>>>

    ReplyDelete
  5. //இயற்கையிடம் இருந்து, மகிழ்ச்சியாக வாழ்வதைக் கற்றுக் கொண்டார். பொறுமை யையும், பிறருக்கு நன்மை செய்வதையும் பூமியிடமிருந்து கற்றேன். தூய்மையை, தண்ணீரிடம் படித்தேன். பலருடன் பழகினாலும் அவர்களிடம் பற்று வைக்கக் கூடாது என்பதை, காற்றிடம் கற்றேன். உணவுக்காக அலையக் கூடாது என்பதை, ஒரே இடத்தில் கிடக்கும் மலைப்பாம்பிடம் படித்தேன். வேடனிடம் தாய்ப்புறா சிக்கியதைப் பார்த்து, தாங்களும் சிக்கிக் கொண்ட குஞ்சு புறாக்களைப் பார்த்து, பாசமே துன்பங்களுக்கு காரணம் என, புரிந்து கொண்டேன். நிலைகுலையாமல் இருக்க வேண்டும் என்பதை, நூற்றுக்கணக்கான நதிகள் பாய்ந்தாலும் கலங்காமல் இருக்கும் கடலைப் பார்த்து, புரிந்து கொண்டேன். சிறிது உணவே போதும் என்பதை, மலரில் தேன் குடிக்கும் வண்டிடம் கற்றேன். மீன் துண்டுடன் பறந்த பருந்தை, பிற பருந்துகள் துரத்தின. அந்தப் பருந்து, மீனை கீழே போடவே, விரட்டிய பருந்துகள் அதை விட்டு விட்டன. இதில் இருந்து உலகத்தின் மீது ஆசையை விட்டால், எல்லா துன்பமும் பறந்துவிடும் என்று உணர்ந்தேன்! //

    ஆஹா அருமையான விஷயங்களாக பலவற்றிலிருந்து அவர் கற்றது அனைத்தையும் நான் ஒரு கோப்பை ஜூஸ் போல இன்று என் அன்புத்தங்கச்சி ஜெயா என்ற ஒருத்தி மூலம் சுலபமாக ... மிகச்சுலபமாகக் கற்றுக்கொண்டேன்.

    மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக, முழு நெய் அதிரஸம் சாப்பிட்டதுபோல உள்ளது, ஜெ.

    >>>>>

    ReplyDelete
  6. //இப்படி, வாழ்வுக்கு தேவையான அரிய கருத்துக்களை சொன்ன தத்தாத்ரேயரின் பிறந்தநாளான இன்று (24.12.2015) அவரை நினைவு கூர்வோம்.//

    அருமை. மிக அருமை. இந்த நாளுக்கேற்ற இனிமையான பதிவு. மனமார்ந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். பதிவுக்கும் பகிர்வுக்கும் அன்பான அழைப்பிற்கும் மிக்க நன்றி, ஜெயா.

    { நேற்று அதிகாலை முதல் உங்களைக்காணோமே என மிகவும் கவலையுடன் நான் உள்ளேனாக்கும் :( ...... }

    ReplyDelete
  7. //தனக்கு பால் சுரக்கட்டும் என, அடுத்த வேண்டுகோளை வைத்தாள். நிர்வாண நிலையில், குழந்தைகளுக்கு பாலூட்டினாள்.//

    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே :)

    http://gopu1949.blogspot.in/2012/03/1.html

    இதிலுள்ள மிகச்சிறிய முதல் 3-4 பாராக்களைப் படிக்கவும்.

    ReplyDelete