தீபாவளிக்கு பட்டாசு கட்டாயம் வெடிக்க வேண்டுமா?
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க வேண்டும் என்று சாஸ்திரத்தில்
ஏதாவது சொல்லப்பட்டுள்ளதா என்று பலருக்கும் சந்தேகம் இருக்கிறது. மற்ற வெடிகளை வெடிப்பது பற்றி சாஸ்திரத்தில் எதுவும்
இல்லாவிட்டாலும், அவசியம் மத்தாப்பு கொளுத்த வேண்டும் என்று சொல்கிறது.
’ஸ்மிருதி கௌஸ்’ என்ற ஸ்தோத்திரத்தில், இது பற்றி
சொல்லப்பட்டுள்ளது.
”துலா
ஹம்ஸ்தே ஸ்ஹஸ்ராம்சௌ ப்ரதோ ஷே பூத தர்ஸ்யோ:
உல்கா
ஹஸ்தா நரா:குர்யு:பித்ரூணாம் மார்க தர்சனம்’
என்ற
இந்த ஸ்லோகத்தில் ‘துலா மாசமான ஐப்பசியில், அதாவது தீபாவளியன்று ‘உல்கா’ எனப்படும்
நெருப்பை கையில் பிடியுங்கள் என்கிறது. அதாவது,
மத்தாப்பு கொளுத்த வேண்டும்.
இதில் வரும் ’பூத’ என்ற வார்த்தை சதுர்த்தசியைக்
குறிக்கும். அதாவது, நரக சதுர்த்தி எனப்படும்
தீபாவளி. ’தர்சம்’ என்ற வார்த்தை ‘அமாவாசை’யைக் குறிக்கும். ஐப்பசி மாத அமாவாசை, இந்த இரண்டு நாட்களும் நெருப்பைப்
பிடிப்பது கட்டாயம்.
காரணம் என்ன?
‘பித்ரூணாம்’ என்ற வார்த்தை இதை வெளிப்படுத்துகிறது. பித்ருக்கள் எனப்படும் நமது முன்னோர், நாம் காட்டும்
இந்த வெளிச்சத்தைப் பயன்படுத்தி தங்கள் வழியில் (சொர்க்கம் நோக்கி) முன்னேறிச் செல்வார்கள்.
இந்த வருடத்தில்
இருந்து, பட்டாசு வேண்டாம். மத்தாப்பு மட்டும்
வாங்கி கொளுத்துங்கள், நம் முன்னோர்களுக்காக.
நல்லதொரு பதிவு. தீபாவளி பண்டிகையன்று தாங்கள் சொல்வது போல அவஸ்யமாக மத்தாப்பூ கொளுத்தினாலே போதும்.
ReplyDeleteபட்டாஸ் வெடிக்க வேண்டியது இல்லை. இதனால் யாருக்கும் காது வலியோ, பயமோ, ஆபத்தோ அதிகம் ஏற்படாமல் இருக்கக்கூடும்.
பகிர்வுக்குப் பாராட்டுகள் நன்றிகள். இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
இன்று முதல் முறையாக உங்கள் பதிவு பக்கம் வந்திருக்கேன். கோபால் சார் பக்கம் வந்ததில் நிறைய பதிவர்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது.
ReplyDelete