Showing posts with label ஆலய தரிசனம். Show all posts
Showing posts with label ஆலய தரிசனம். Show all posts

Monday, May 1, 2017

சாந்த நாயகி சமேத ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர் கோவில், பள்ளிகரணை



இன்று எங்கள் 34வது திருமண நாளை முன்னிட்டு நானும் என் கணவரும் பள்ளிகரணையில் உள்ள சாந்த நாயகி சமேத ஆதிபூரீஸ்வரர் கோவிலுக்குச் சென்றோம்.

இத்திருக்கோவில் மிகவும் பழமையான வரலாற்றுப் பின்னணி கொண்டது.  கி.பி.1725ல் கிருஷ்ண தேவராயர் ஆட்சிக் காலத்தில் திருப்பணி செய்யப்பட்டதாக இங்கு காணப்படும் கல்வெட்டுகள் மூலம் தெரிய வருகிறது.  ஸ்ரீ (சிலந்திவலை), காள (நாகப்பாம்பு), கஸ்தி (யானை) இந்த மூன்று பெயரும் சேர்ந்து ஸ்ரீகாளகஸ்தி என்று பெயர் பெற்றது.  அந்தக் காலத்தில் ஸ்ரீகாளகஸ்திக்கு செல்ல முடியாதவர்கள் பரிகாரம் செய்ய சென்னை பள்ளிக்கரணையில் அமைந்துள்ள ஆதிபுரீஸ்வரர் ஸ்தலத்தில் “ராகு-கேது” பரிகாரத்தை செய்து வந்துள்ளனர்.  இங்கும் சிலந்தி வலை, நாகம் சிவபூஜை செய்தல், யானை பூஜை செய்தல், மயில் சிவபூஜை செய்தல், கண்ணப்பநாயனார், சிவபெருமானுக்கு இரு கண்களை கொடுத்தது போன்ற சிற்பங்கள் “ராகு-கேது” பரிகாரத்திற்காகவே அமைந்துள்ளது.  ஆதியும், அந்தமும் இல்லாத ஆதிபுரீஸ்வரர் இங்கு நவகிரக நாயகராக அமர்ந்துள்ளார்.  ஆகவே இங்கு “ராகு-கேது” பரிகாரம் செய்தல், ஸ்ரீகாளகஸ்தியில் கிடைக்கும் சிறப்பான பலனைப் போல் இங்கும், தோஷங்கள் நீங்கி சிறப்பான பலனைப் பெற்று நல் வாழ்வு பெறலாம் என்பது ஐதீகம்.




கோவிலின் பழைய தோற்றம். 







 



மாசி சிவராத்திரி அன்று காலை 655க்கு சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவலிங்கத்தை ஆராதனை செய்யும் காட்சி.

மாசி மாதம் 15 நாட்கள் (மாசி 15 முதல் 30 வரை) சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவலிங்கத்தை ஆராதனை செய்யுமாம்.









இத்திருத்தலம் ராகு கேது பரிகார ஸ்தலம்.






கோவிலைப் பற்றிய மற்ற விவரங்கள்.

கிழக்கு பார்த்த ராஜகோபுரம்.  திருக்குளம் கோவிலுக்கு எதிரே உள்ளது.  சமீபத்தில் செப்பனிடப்பட்டு அழகாக உள்ளது.

ராஜகோபுரத்தின் உள்ளே நுழைந்ததும் பலிபீடம், த்வஜஸ்தம்பம் மற்றும் நந்தி உள்ளது.  சூரியர், சந்திரன் இருபக்கமும் வீற்றிருக்கின்றனர்.

வெளிப் பிரகாரத்தில் சிவ ஆஞ்சநேயர், மகா கணபதி.   வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர்,  நவக்கிரகங்கள், சண்டிகேஸ்வரர், ராகு, கேது, சொர்ண ஆகர்ஷண பைரவை, சரபேஸ்வரர், வியாக்ரபரதர்  ஆகியோருக்கு தனி சன்னதிகள் உள்ளன.    

மையத்தில் ஆதிபுரீஸ்வரர் கிழக்கு நோக்கியும், சாந்த நாயகி அன்னை தெற்கு நோக்கியும் அமர்ந்து அருள் பாலிக்கின்றனர்.  காலபைரவர் சிலையும் சன்னதியில் அமைந்துள்ளது.

வியாக்ரபாதர் இந்த ஸ்தலத்திற்கு வந்து சிவனை வழிபட்டதால் இந்த இடம் சோழர் காலத்தில் புலியூர் கோட்டத்தின் கீழ் இருந்ததாக நம்பப்படுகிறது.

இந்தக் கோவில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

வேளச்சேரி - தாம்பரம் பிரதானசாலையில் பள்ளிகரணை உள்ளது.  

காலை 0700 மணி முதல் 1200 வரையிலும், மாலை 1630 முதல் 2030 வரையிலும் கோவில் திறந்திருக்கம்.

கைப்பேசியில் தொடர்பு கொள்ள   9840109495, 9444326057 மற்றும் 9884235555




Friday, January 8, 2016

தத்தாத்ரேயர் ஆலயம்



இரண்டு, மூன்று வருடங்களாக செல்ல வேண்டும் என்று நினைத்த வேளச்சேரி பேபி நகரில் இருக்கும் தத்தாத்ரேயர் ஆலயத்திற்கு 
25.12.2015 அன்று தான் செல்ல முடிந்தது.   அங்கு எடுத்த புகைப்படங்களை இங்கு மகிழ்ச்சியுடன் பகிர்கிறேன். 


Add caption
 வினை தீர்க்கும் விநாயகன்

Add ca

Add caption
Add caption 

மட்டைத்தேங்காய் கட்டி வேண்டிக் கொள்கிறார்கள்.  வேண்டுதல் நிறைவேறியதும் வந்து தேங்காயை எடுத்து அர்ச்சனை செய்வார்களாம்.

 
Add caption
Add caption
Add caption
 
செந்தூர அலங்காரத்தில் ஸ்ரீ கார்ய சித்தி அனுமான்
 
  
ஸ்ரீ ஹயக்ரீவர்
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி தாயாரும்., லிங்க ரூப சிவ பெருமானும்
 தல விருட்சம்
 


Monday, April 20, 2015

பிரப்பன் வலசை - பகுதி 2

அடுத்து நாங்கள் சென்றது பாம்பனில் உள்ள ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி கோவில்.   அங்கு எடுத்த புகைப்படங்கள் இதோ

இடது புறம் தும்பிக்கையான், நடுவில் அழகான குட்டி பாலசுப்பிரமணியர்.  முருகன் என்றாலே அழகு.  அதிலும் இந்த குட்டி முருகன் அழகோ அழகு.





ஸ்ரீ பாம்பன் சுவாமிகளுக்கு இரு முனிவர்களுடன் வந்து பால முருகன் ஆட்கொண்ட காட்சி புகைப்படமாக






 விநாயகப் பெருமானும், முருகன், வள்ளி, தெய்வானையுடன் அழகான அலங்காரத்துடன் உற்சவ மூர்த்திகள். 










எங்கள் அதிர்ஷ்டம் பைரவி அன்று இந்த கால பைரவரை தரிசிக்கும் பேறு பெற்றோம்.














ஸ்ரீ அகத்திய முனிவர், ஸ்ரீ அருணகிரிநாதர், ஸ்ரீ பாம்பன் சுவாமிகள்



முருகன் சந்நிதிக்கு மேல் உள்ள சிற்பம்




மயில் வாகனம்



 அழகான விநாயகர் 



கோவிலில் இருந்து கடலின் தோற்றம்








Tuesday, April 14, 2015

பிரப்பன் வலசை - பகுதி 1

பொதுவா ராமேஸ்வரம் செல்பவர்கள் ராமேஸ்வரம், தனுஷ்கோடி சென்று விட்டு திரும்பி விடுவார்கள்.   மூன்றாவது முறையாக ராமேஸ்வரம் சென்ற நான் இதுவரை பார்க்காத இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்று வலை உலகில் தேடி ஸ்ரீபாம்பன் சுவாமிகள் வாழ்ந்த இடம், சுவாமிகளுக்கு முருகப் பெருமான் அருள் பாலித்த இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்தேன்.

ராமேஸ்வரத்திலிருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது பிரப்பன் வலசை கிராமம். 


நாங்கள் முதலில் சென்றது சுவாமிகளுக்கு முருகப் பெருமான் அருள் பாலித்த இடம்



 **********

  
முருகன் மீது தீவிர பக்தி கொண்டவரான

சுவாமிகள் தான் வழிபடும் உருவங்களில் 

எல்லாம் முருகனையே காணவேண்டும் என 

எண்ணம் கொண்டவர்.



முருகப்பெருமான் தனக்கு காட்சி 

கொடுக்கவேண்டி முருகனிடம் 

உபதேசம்பெறவேண்டி மயானமாக இருந்த இந்த

இடத்தில் கடும் தவம் மேற்கொண்டார்

தவத்திற்கு கடும் இடையூறுகள் வந்தன. 


முருகனின் அருளால் அனைத்தையும் 

உடைத்தெறிந்தார்.


ஏழாம் நாள் இரவு இரண்டு முனிவர்களுடன் 

அடியார் உருவத்தில் முருகன் வந்தார்

சுவாமிகளிடம் ஒரு வார்த்தையை 

உபதேசித்துவிட்டு மறைந்தார். சுவாமிகள் அந்த

சொல்லை உச்சரித்தபடியே மீண்டும் தவத்தில் 

ஆழ்ந்தார். முப்பத்தைந்தாம் நாள் அவரை 

தவத்தில் இருந்து எழச்சொல்லி அசரீரி 

கேட்டது. எம்பெருமான் முருகன் சொன்ன 

பிறகே எழுவேன் என சுவாமிகள் கூறினார்.



இது முருகனின் உத்தரவு என அசரீரி 

கேட்டபிறகே சுவாமிகள் எழுந்தார். முருகன் 

மயில் மீது அமர்ந்த கோலத்தில் இந்த இடத்தில் 

இவருக்கு தரிசனம் கிடைத்தது. முருகன் காட்சி 

கொடுத்த இடமாதலால் இங்கு முருகனுக்கு 

ஆலயம் எழுப்பி வழிபாடு நடந்து வருகிறது.








.
கோவில் வளாகத்தில் இருந்த அழகிய ஆலமரம்




கோவிலை தூய்மையாக்கிக் கொண்டிருக்கும் அன்பர்.