Sunday, June 11, 2017

முக்திநாத் யாத்திரை - 4


பசுபதி நாதர் கோவில்



No automatic alt text available.


Image result for பசுபதிநாதர்

அடுத்து நாங்கள் சென்றது பசுபதிநாதர் ஆலயம்.       
இந்தக் கோவில் உலகிலுள்ள மிகப்பெரிய இந்துக் கோவில்களுள் ஒன்று நேபாளத் தலைநகரான காத்மண்டுவின் கிழக்குப் பகுதியில் ஓடும் பாக்மதி ஆற்றின்கரையில் உள்ளது.  இக்கோவிலில் உள்ள பசுபதிநாதர் நேபாளம் இந்து நாடாக இருந்து மதச்சார்பற்ற நாடாக மாறும் வரை அந்நாட்டின் தேசியக் கடவுளாக இருந்து வந்தார்.  இக்கோவில் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

பசுபதிநாதரின் பக்தர்கள் (பொதுவாக இந்துக்கள்) மட்டுமே கோவில் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்துக்கள் அல்லாதோர் பாக்மதி ஆற்றின் மற்றொரு கரையிலிருந்து மட்டுமே கோவிலைப் பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் தோல் ஆடை அணிந்து வருவோரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை.


Image may contain: outdoor

பாக்மதி நதி
தல சிறப்பு:
நான்கு திசைகளுக்கு நான்கு முகங்களும், உச்சியில் ஒன்றும் ஆக ஐந்து முகங்கள் அமைந்த சதாசிவமாக இங்கு சிவன் அருள் செய்கிறார். தென்னிந்திய ஆலயங்களில் உள்ளது போன்று, கர்ப்பகிரகம் இங்கு இல்லை. சிவனுக்கு எதிரில் பித்தளையால் செய்யப்பட்ட மிகப்பெரிய நந்திசிலை அமைந்துள்ளது. தமிழக கோயில்களில் உலோகத்தால் ஆன நந்தி சிலையைக் காண்பது அரிது. இந்த சிவபெருமானுக்கு தமிழர்கள் தான் பூஜை செய்கின்றனர் என்பது மற்றொரு சிறப்பு.
No automatic alt text available.

திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

பொது தகவல்:
பசுபதி நாதர் கோயிலின் இடப்புறம் 108 சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அதை வலம் வருவதற்காக அழகான வழிப்பாதையும் அமைந்துள்ளனர்.
No automatic alt text available.
பிரார்த்தனை
இங்கு இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
இறந்தவரின் அஸ்தியை இங்குள்ள பாக்மதி நதியில் கரைத்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
No automatic alt text available.

தலபெருமை:
நான்கு திசைகளுக்கு நான்கு முகங்களும், உச்சியில் ஒன்றும் ஆக ஐந்து முகங்கள் அமைந்த சதாசிவமாக இங்கு சிவன் அருள் செய்கிறார். பாசுமதி நதிக்கரையில் கோயில் அமைந்துள்ளது. சிவனின் நான்கு முகங்களுக்கு எதிரேயும் தனித்தனியாக நான்கு கதவுகள் கொண்ட நுழைவாயில் உள்ளது. ஒவ்வொன்றின் அருகிலும் பூஜை செய்யும் பண்டாக்கள் உள்ளனர். ஒரே சமயத்தில் நால்வரும் பக்தர்களுக்கான பூஜைகளை தனித்தனியாக செய்து தருகின்றனர். ஆலயத்தை வலம் வரும் வழியில் பக்தர்கள் ருத்ர ஜப பாராயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். பசுபதிநாதர் கோயிலின் பின்புறமாக சென்றால் பாசுமதி நதியை தரிசனம் செய்யலாம். இறங்கி நீராடுவதற்காக படிக்கட்டுகள் வசதியாக அமைந்துள்ளன. மற்றொரு புறம் படிக்கட்டின் மேலேயே, இறந்தவர்களின் உடலை தகனம் செய்து ஓடும் ஆற்று நீரில் அஸ்தியை தள்ளிவிடுகின்றனர். காசியில் கங்கை கரையில் உள்ள மணிகர்ணிகா கட்டத்தில் நடைபெறும் இறுதி யாத்திரை காரியங்கள் போன்று இங்கும் நடக்கிறது.
Related image

கயிலை மலையில் உறையும் சிவபெருமான் ஐப்பசி மாதத்தில் பனிமலையில் இருந்து வந்து மகா சிவராத்திரி காலம் வரை பசுபதிநாதர் கருவறையில் தங்கி அருள்பாலிப்பதாக ஐதீகம். திபெத் நாட்டின் வழியாக சீனாவின் எல்லையில் அமைந்துள்ள கயிலைமலைக்கு செல்வதற்கு காட்மாண்டு நுழைவாயிலாக உள்ளது.  
கயிலைமலை செல்ல இயலாதவர் பசுபதிநாதரை தரிசனம் செய்தால், கயிலைநாதனை தரிசனம் செய்த பலன் உண்டாகும்.
சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: நான்கு திசைகளுக்கு நான்கு முகங்களும், உச்சியில் ஒன்றும் ஆக ஐந்து முகங்கள் அமைந்த சதாசிவமாக இங்கு சிவன் அருள் செய்கிறார். தென்னிந்திய ஆலயங்களில் உள்ளது போன்று, கர்ப்பகிரகம் இங்கு இல்லை. சிவனுக்கு எதிரில் பித்தளையால் செய்யப்பட்ட மிகப்பெரிய நந்திசிலை அமைந்துள்ளது. தமிழக கோயில்களில் உலோகத்தால் ஆன நந்தி சிலையைக் காண்பது அரிது
Image result for Pasupathinathar  Nepal
இந்த சிவபெருமானுக்கு தமிழர்கள் தான் பூஜை செய்கின்றனர் என்பது மற்றொரு சிறப்பு.
பசுபதி நாதர் கோவிலுக்குள் நுழைந்ததும் எனக்கு வேறு ஒரு உலகத்திற்குள் நுழைந்தது போல் இருந்தது.  நம் தென்னிந்திய கோவில்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருந்தது இக்கோவில். கோவிலுக்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை.   அப்ப இங்க பதிந்த புகைப்படங்கள் (காதைக் குடுங்க ரகசியம் - சுட்டது தான்).  
நாங்கள் சென்னையில் இருந்தே ருத்ராபிஷேகம் செய்ய வேண்டும் என்று சொல்லி இருந்தோம்.  எங்கள் சின்ன பேத்தி தியாவின் ஆங்கிலப் பிறந்த நாள் என்பதால்.  
இரண்டு அழகிய நேபாள பெண்கள் (அங்கு முக்கால்வாசி பெண்களும் அழகாக இருக்கிறார்கள்.  அவர்கள் மிகுந்த உழைப்பாளிகளும் கூட). அவர்கள் எங்களை பசுபதி நாதரின் சன்னதிக்கு அழைத்துச் சென்றார்கள். நாங்கள் சென்னையில் இருந்தே தேன், சந்தனம், விபூதி எல்லாம் வாங்கிக் கொண்டு சென்றிருந்தோம்.  அபிஷேகம் செய்து பிரசாதங்கள் கொடுத்தனர்.  அபிஷேகம் செய்வது நம் தமிழ்நாட்டு பிராம்மணர்களே. அத்துடன் என் கணவருக்கு ஒரு ருத்ராட்ச மாலையும் அளித்தனர்.  நம் ஊரைப் போல் அங்கு விபூதி கிடைப்பதில்லை.  பிரசாத விபூதியை சிலர் ஆவலுடன் வாங்கிச் சென்றனர்.
எங்களுடன் வந்த இரண்டு நேபாளப் பெண்களில் ஒருவருக்கு பிறந்த நாள் என்பதால் அவருக்கு அதிகப் படியாக பிறந்த நாள் பரிசாக பணம் கொடுத்து விட்டு வந்தோம்.   
திவ்யமான சிவ தரிசனம் முடிந்து அடுத்த கோவிலுக்குச் செல்ல பேருந்தில் ஏறி அமர்ந்தோம். 

Related image


தொடரும்


28 comments:

  1. கீழிருந்து மூன்றாவது படம் அப்படியே கங்கைக்கரையில் உள்ள ’ஹரிச்சந்திரா காட்’ என்ற இடத்தினை நினைவூட்டுகிறது.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் கங்கையைப் போன்று அகண்டது அல்ல பாக்மதி. தண்ணீரும் கங்கையைப் போல் ஆர்ப்பரித்து பிரவாகிக்கவில்லை. மிகவும் குறுகலான நதி. தண்ணீரும் சாதுவாக நின்ற இடத்திலேயே இருக்கிறது. பல இடங்களில் தண்ணீரே இல்லை.

      Delete
    2. மேலிருந்து மூன்றாவது படத்தைப் பாருங்கள் பாக்மதி நதியின் குருகிய அமைப்பைப் பார்க்கலாம்.

      Delete
  2. //சிவனுக்கு எதிரில் பித்தளையால் செய்யப்பட்ட மிகப்பெரிய நந்திசிலை அமைந்துள்ளது.//

    நந்தி மிகவும் பிரும்மாண்டமாகவே உள்ளது. எப்படித்தான் அதனை முழுவதுமாக, தலைமுதல் வால் வரைக் கவர் செய்து படமெடுத்தீர்களோ? சூப்பர் !

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். அருமையான பெரிய நந்தி. அதன் முகத்தைப் பார்த்தீர்களா? பதிவில் ஒரு ரகசியம் சொல்லி இருக்கிறேனே பார்க்கவில்லையா?

      Delete
    2. //அதன் முகத்தைப் பார்த்தீர்களா?//

      அதன் முகத்தையே நீங்க எனக்குக் காட்டவில்லையே.
      எனக்கு மிகவும் பிடித்தமான, அந்த மிக முக்கியமான பின் பக்கத்தை மட்டுமே வாலுடன் காட்டியுள்ளீர்கள்.:)

      //பதிவில் ஒரு ரகசியம் சொல்லி இருக்கிறேனே பார்க்கவில்லையா?//

      அது என்ன இரகசியமோ. எனக்கு மட்டும் இரகசியமாகச் சொல்லுங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்.

      Delete
  3. கடைசியில் காட்டியுள்ள ஐந்துமுகங்கள் கொண்ட சிவன் படம் பஹூத் அச்சா ஹை !

    ReplyDelete
    Replies
    1. மெய் சிலிர்க்க வைத்தது அந்த சிவனின் உருவம். கோவிலுக்குள் நுழைந்ததுமே ஏதோ ஒரு உலகத்திற்குள் நுழைந்தது போல் இருந்தது.

      Delete
  4. //இறந்தவரின் அஸ்தியை இங்குள்ள பாசுமதி நதியில் கரைத்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.//

    பாசுமதி அரிசி போல பாசுமதி என்ற பெயரில் ஓர் நதியா? வெரி குட். எங்கெல்லாமோ போய் பல புண்ணிய நதிகளில் ஸ்நானம் செய்து .... பல தண்ணீ குடிச்சுட்டு வந்திருக்கேள். உங்களை தரிஸித்தாலே .... உங்கள் பதிவுகளை தரிஸித்தாலே போதும். எங்களுக்கும் கொஞ்சூண்டு புண்ணியம் கிடைத்து விடும்.

    ReplyDelete
    Replies
    1. அதான சாப்பாட்டுலயே இருங்கோ.

      பாக்மதி தான் சரி. நான் தான் தப்பாக போட்டுட்டேன்.

      அத்துடன் முக்திநாத்தில் 108 தீர்த்தத்தில் குளித்துவிட்டு வந்தோம். அடுத்தடுத்த பதிவுகளில் பாருங்கள்.

      Delete
  5. //பசுபதி நாதர் கோயிலின் இடப்புறம் 108 சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அதை வலம் வருவதற்காக அழகான வழிப்பாதையும் அமைந்துள்ளனர்.//

    அதெல்லாம் சரி ..... நீங்கள் பிரதக்ஷணம் செய்தீர்களா?

    காற்றாடி போல ஸ்லிம்மான சுறுசுறுப்பான உடம்பு ..... 108 பிரதக்ஷணம்கூட செய்திருப்பீர்கள். உங்களிடம் போய் நான் இந்தக் கேள்வியைக் கேட்கலாமோ? :)

    ReplyDelete
    Replies
    1. பிரதட்சணம் செய்ய முடியவில்லை. உச்சி வெய்யில் கொளுத்தியது. மேலும் அருமையான (!) ட்ராவல் ஏஜென்சி. சிவ தரிசனமும், காளி தரிசனமும் அருமையாக கிடைத்தது.

      Delete
  6. மேலே ஒரு இடத்தில்: ’பாக்மதி நதி’ என்று உள்ளது.

    கீழே இன்னொரு இடத்தில்: ’பாசுமதி நதி’ என்று உள்ளது.

    எது கரெக்டோ ?

    ReplyDelete
    Replies
    1. பாக்மதி தான் சரி. நான் தான் தப்பாக போட்டுட்டேன்.

      Delete
  7. //இக்கோவிலில் உள்ள பசுபதிநாதர் நேபாளம் இந்து நாடாக இருந்து மதச்சார்பற்ற நாடாக மாறும் வரை அந்நாட்டின் தேசியக் கடவுளாக இருந்து வந்தார். இக்கோவில் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.//

    கேள்விப்பட்டுள்ளேன். என் சொந்த அண்ணாக்கள் இருவரில் ஒருவர் இங்கெல்லாம் போய்விட்டு வந்தார்.

    அந்த நாட்டு நாணயங்கள் - நோட்டுக்கள் என்று ஏதேதோ என்னிடம் கொடுத்தார். அவற்றை எங்கேயோ வைத்தேன். காணாப்போச்சு. இது நடந்து ஒரு 30 வருடங்களுக்கு மேல் இருக்கும். :)

    அவைகள் கிடைத்திருந்தால் உங்களிடமாவது செலவுக்குக் கொடுத்திருக்கலாம். :)

    ReplyDelete
    Replies
    1. எடுத்து வையுங்கோ நோட்டுக்களையும், நாணயங்களையும். மீண்டும் செல்லும் எண்ணம் உள்ளது. ஆனா அங்க நம்ப ஊரு 500, 100 எல்லாம் வாங்கிக்கறா. அதனால பிரச்னையே இல்லை.

      Delete
  8. எல்லாப்படங்களும், விரிவான பதிவின் செய்திகளும் மிகவும் அருமையோ அருமை. நானே நேரில் போய் வந்தது போல, மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

    அதுவும் டாப்பில் காட்டியுள்ள முதல் படம் மிகவும் ’டாப்’பாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள், ஜெயா.

    ReplyDelete
    Replies
    1. ரொம்பவும் மகிழ்ச்சியாகவும், நிறைவாகவும் இருந்தது இந்தப் பயணம். வரவுக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி கோபு அண்ணா.

      Delete
  9. நான் இந்தப் பதிவை படித்தும் கூட பதில் எழுதவில்லை. அதாவது காட்மாண்டு பசுபதியைப் பற்றிப் படித்தாலே மனதில்துக்கம் வந்து விடுகிறது. அங்கேயே இருந்து26 வருஷகாலம் தரிசனம் செய்தது ஞாபகம் வந்து விடுகிறது. மனதை விட்டு பழைய ஞாபகங்கள் வந்து விடுகிறது. கோயிலில் பூஜை செய்பவர்கள் கன்னடக்காரர்கள்.மைசூரைச் சேர்ந்தவர்கள். இப்போதும் என் பெரிய பிள்ளை காட்மாண்டு வாசிதான். நன்றாக எழுதியுள்ளீர்கள். அருமை. அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. //அதாவது காட்மாண்டு பசுபதியைப் பற்றிப் படித்தாலே மனதில்துக்கம் வந்து விடுகிறது. அங்கேயே இருந்து26 வருஷகாலம் தரிசனம் செய்தது ஞாபகம் வந்து விடுகிறது.//

      என்ன காமாட்சி அம்மா, நீங்கள் ரொம்ப கொடுத்து வைத்தவர்கள் 26 வருடம் என்றால் பசுபதி நாதரை எவ்வளவு முறை தரிசித்திருப்பீர்கள். என்ன ஒரு கொடுப்பினை. துக்கம் எதற்கு. சந்தோஷப் படுகள். நீங்கள் கண்ணை மூடினாலே உங்கள் மனக்கண் முன் வந்து நிற்பாரே பசுபதி நாதர்.

      வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

      Delete
  10. நீங்க வெகு நாட்களாக அழைத்தும் இன்று தான் வர முடிந்தது. அதுவும் மோகன் ஜியின் பதிலைப் படித்ததால்! :) நாங்களும் 2006 ஆம் ஆண்டு கயிலை யாத்திரைக்கு முன்னர் பசுபதிநாத் கோயிலுக்கும் போனோம். படங்கள் எடுக்க அனுமதிக்கவில்லை. காமிராவையே கொண்டு போக முடியவில்லை. கூட்டம் வேறு நெருக்கிக் கொண்டிருந்தது.

    ReplyDelete
    Replies
    1. அதே கதைதான் எங்களுக்கும். முக்திநாத் யாத்திரை போகும் முன் உங்கள் பதிவுகளைப் படித்து விட்டுத்தான் கிளம்பினேன். இந்த ஒரு பதிவில் உள்ள படங்கள் மட்டும் சுட்டவை. கூகுளாண்டவரின் தயவு.

      Delete
    2. கயிலை யாத்திரையும் போனீங்களா?

      Delete
    3. கயிலை யாத்திரை இனிமேல் தான் போகணும். இதுவே திடீரென்று எங்காத்துக்காரர் போய்த்தான் ஆகணும்ன்னு சின்னக் குழந்தை மாதிரி அடம் பிடிச்சார். பிள்ளை, மாட்டுப் பெண், 2 பேத்திகள் எங்களுடன் இருக்கிறார்கள். அதனால் நிறைய நாட்கள் டூர் போவது கொஞ்சம் சிரமம் தான். ஒரு வாரம் வரை போகலாம். அவர்கள் போகத்தான் சொல்வார்கள். எங்களூக்குத் தான் மனம் வருவதில்லை.

      ஆனால் போகும் ஆசை இரண்டு பேருக்கும் இருக்கு.

      Delete
  11. 2008ல் சென்ற நினைவுகளை மீட்க உதவியது. நாங்கள் போனபோது, பாக்மதி நதியில் தண்ணீரே கிடையாது, கிட்டத்தட்ட சாக்கடையாகத்தான் இருந்தது. இப்போது பார்க்கவே நன்றாக இருக்கிறது.

    கோவில் உள்ளே இருந்த குரங்குக்கூட்டத்தைப் பற்றி எழுதவில்லையே.

    எனக்கென்னவோ, நதியில் சடலைத்தைப் போடுவது அவ்வளவு சரியான பழக்கமாகத் தெரியலை.

    ReplyDelete
    Replies
    1. இந்த ஒரு பதிவில் உள்ள படங்கள் மட்டும் சுட்டவை. கூகுளாண்டவரின் தயவு.

      மதியம் 12 மணி வெய்யில், மனிதக் கூட்டத்தைக் கண்டு குரங்குக் கூட்டம் பதுங்கி விட்டது. எங்கோ ஒன்றிரண்டு கண்ணில் பட்டத்ய். அவ்வளவு தான்.

      பாக்மதி நதியில் பாதி இடங்களில் தண்ணீரே இல்லை.

      //எனக்கென்னவோ, நதியில் சடலைத்தைப் போடுவது அவ்வளவு சரியான பழக்கமாகத் தெரியலை.//

      இந்த விஷயத்தில் நானும் உங்கள் கட்சி தான்.

      Delete
  12. ஆஹா மிக மிக அற்புதமான
    புகைப்படங்கள்
    தொழில் முறை புகைப்படக்காரரையும்
    மிஞ்சும் வண்ணம் உள்ளது
    படங்க்களுடன் பகிர்ந்த விதம் மிக மிக அருமை
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
    Replies
    1. இந்த ஒரு பதிவில் உள்ள படங்கள் மட்டும் சுட்டவை. கூகுளாண்டவரின் தயவு.

      அதனால் உங்கள் வாழ்த்துக்களை கூகுளாண்டவருக்கு சமர்ப்பிக்கிறேன்.

      Delete