Thursday, March 30, 2017



காஞ்சி மஹா பெரியவாள் சத்தமே இல்லாது பல அற்புதங்கள், அதிசயங்கள் ஆகியவற்றை செய்து இருக்கிறார். 

தனது சக்தியை அவர் எப்பொழுது வெளிப்படுத்த வேண்டுமோ அப்பொழுது வெளி படுத்துவார். 

உதாரணத்திற்கு ஒரு புகழ் பெற்ற துறவி ஒருவர் இவர் பாத யாத்திரை செய்யும் பொழுது எதிரில் காரில் வந்தார். 

காரிலிருந்து இறங்கி மஹா பெரியவாள் முன் கையை சுத்தி என்ன, என்னலாமோ செய்தார். மஹா பெரியவாள் பின்னால் இருந்தவர்கள் அனைவரும் சிரித்து விட்டனர். மஹா பெரியவாள் அதை பார்த்து. நீ என்ன பண்றனு கேட்டார். 

இல்லை. என் மந்திர சக்தியால் உங்களுக்கு ஒரு மாலை வரவழைத்து
போடலாம்னு பார்த்தேன். மஹா பெரியவாள் ஒரு மெல்லிய புன்னகையை உதிர்த்தவாறே. 
உன் மந்திர சக்தி என் முன்னால் எடுபடாது என்றாராம். 

பின்னர் அந்த துறவி மஹா பெரியவாளிடம் ஆசி வாங்கி அவர் காரில் ஏற பெரியவாள் தனது பயணத்தை தொடர்ந்தார். 


இதே போல் அஷ்டமா சித்திகளும் கைவரப்பெற்ற ஒருவர் மஹா பெரியவாளை சந்தித்து என்னால் வானில் பறவை போல் பறக்க முடியும், நடுக்கடலில் நடக்க முடியும், 

நெருப்பினில் என்னால் குளிக்கவும் முடியும். நினைத்த உருவத்தை என்னால் எடுக்கவும் முடியும். நான் வேண்டுமானால் இப்பவே ஒரு குரங்காய் மாறி காட்டட்டுமா அப்படின்னு மஹா பெரியவாளை பார்த்து அந்த நபர் கேட்டாராம். 

பெரியவாள்,” நீ அதுக்குதான் லாய்க்கு” என்று சொல்லி உள்ளே சென்று விட்டாராம். பின்னர் அந்த நபர் தனது தவறை உணர்ந்து மஹா பெரியவளிடம் மன்னிப்பு கேட்க்க நினைத்தார். 

முதலில் அந்த நபரை மஹா பெரியவாள் அனுமதிக்கவில்லை. ஒருநாள் முழுக்க அவர் வெளியிலேயே காத்து இருக்க அதன்பிறகு மனமிறங்கி அவரை மஹா பெரியவாள் பார்க்க அனுமதித்தார். 

எட்டு சித்திகளால் சித்தம் கலங்கிய அந்த சாதககரிடம் மஹா பெரியவாள் அறிவுரை கூறினார். இந்த சித்திகள் என்ன சர்வ சாதாரணமாக கிடைத்து விடுமா. உன்னால் எதுவெல்லாம் முடியுமோ அது என்னாலும் முடியும். ஆனால்? 

இந்த சக்திகள் எல்லாம் கிடைத்து விட்டால் நீ கடவுளாக ஆகி விட முடியுமா? ஐம்புலன்கள், மற்றும் உன் மனம் ஆகிய ஆறுக்கும் நீ அடிமையகாமல் அதை உனக்கு அடிமையாக்கி, கட்டு படுத்தியதால் தான் உனக்கு இந்த எட்டு கிடைத்து உள்ளது. 

ஆனால் இப்பொழுது நீ இந்த எட்டு சக்திகளுக்கு அடிமையாக இருக்கிறாய். ஆணவத்தால் இறைவனை கை தொழவே மறந்து விட்டாய். அந்த கடவுள் மனதில் நினைத்தால் ஏன். நான் நினைத்தாலே உனது சக்திகளை ஒரு நொடியில் பறிக்க முடியும். 

பரிணாம வளர்ச்சியில் நாம் குரங்கிலிருந்து மனிதன் ஆனோம். ஆனால் நீ மீண்டும் குரங்காக ஆக முயற்ச்சி செய்கிறாய். இது அறிவுள்ள ஒருவன் செய்யும் செயலா? என்று நபரை கேட்க அந்த நபர் தனது தவறுகளை உணர்ந்தவராய். ஆணவம் முழுவதும் அழிந்தவராய் மஹா பெரியவாளின் மலர் அடியை பணிந்தார்.



3 comments:

  1. வழக்கம்போல மூன்று படங்களிலும் திவ்ய தரிஸனம் கிடைத்து விட்டது.

    >>>>>

    ReplyDelete
  2. //மஹா பெரியவாள் ஒரு மெல்லிய புன்னகையை உதிர்த்தவாறே
    உன் மந்திர சக்தி என் முன்னால் எடுபடாது என்றாராம்.//

    ஆஹா .... மஹாபெரியவாளிடம்போய் இதெல்லாம் எப்படி எடுபடும்?

    அவ்வாறு சொன்னவரே பிறகு நன்கு உணர்ந்து கொண்டிருப்பார்.

    ஸ்ரீ மஹாபெரியவா ஒருமுறை, தன்னை போட்டோ பிடிக்க வேண்டாம் என்று குறிப்பிட்ட ஒரு போட்டோகிராபரிடம் சொல்லியும்கூட, அவர் ஏதோவொரு ஆசையில் ஒருசில போட்டோக்கள் எடுத்துக்கொண்டு போய் விட்டார். அப்போதெல்லாம் ஃபிலிம் போடும் அந்தக்கால கேமரா (தற்போதைய டிஜிடல் கேமரா இல்லை).

    இருட்டு ரூமுக்கு எடுத்துச் சென்று ஃபிலிமை கழுவியபோது அதில் எந்தவொரு உருவமுமே இல்லையாம். இத்தனைக்கும் அவர் மிகப்பிரபலமான புகைப்பட நிபுணராம். அவரிடம் இருந்ததும் மிகவும் ஒஸத்தியான கேமராவாம். அவருக்கே ஒரே ஆச்சர்யமாகிவிட்டது. அதன் பிறகுதான் ஸ்ரீ மஹாபெரியவா உத்தரவை மீறி தான் போட்டோ எடுத்தது தவறு என்பதை உணர்ந்துகொண்டாராம்.

    இது என்னிடம் வேறொருவர் சொல்லி நான் கேள்விப்பட்டது மட்டுமே.

    ReplyDelete
  3. //இந்த சக்திகள் எல்லாம் கிடைத்து விட்டால் நீ கடவுளாக ஆகி விட முடியுமா? ஐம்புலன்கள், மற்றும் உன் மனம் ஆகிய ஆறுக்கும் நீ அடிமையகாமல் அதை உனக்கு அடிமையாக்கி, கட்டு படுத்தியதால் தான் உனக்கு இந்த எட்டு கிடைத்து உள்ளது. //

    //பரிணாம வளர்ச்சியில் நாம் குரங்கிலிருந்து மனிதன் ஆனோம். ஆனால் நீ மீண்டும் குரங்காக ஆக முயற்சி செய்கிறாய். இது அறிவுள்ள ஒருவன் செய்யும் செயலா? என்று நபரை கேட்க அந்த நபர் தனது தவறுகளை உணர்ந்தவராய். ஆணவம் முழுவதும் அழிந்தவராய் மஹா பெரியவாளின் மலர் அடியை பணிந்தார்.//

    ஒவ்வொன்றையும் எவ்வளவு அழகாக எடுத்துச்சொல்லிப் புரிய வைத்துள்ளார்.

    ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளைப் போன்றதொரு மஹானை இனி நம்மால் நம் வாழ்நாளில் பார்க்க முடியுமா என்ன?

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete