Thursday, March 16, 2017

(பெரியவா என்று வாய்விட்டு அழுதேன். இந்த பதிவை படித்தவுடன். நாமெல்லாம் கால்தூசுக்கு கூட பிரயோஜனமில்லை.)



நீ நூறு வயசு இருப்பே, நாலு நக்ஷத்ரம் கொறையும். - மாதர் கற்புடை மங்கைக்கோர் மழை ...

முக்கூர் ஸ்ரீனிவாச வரதாச்சார்யார். மெட்ராஸ் ல அஷ்ட லக்ஷ்மி கோவில் கட்டினவர். ஸ்ரீவைஷ்ணவர். பெரியவா மேலே அஸாத்ய பக்தி. அவர் டைரி ல எழுதி வெச்சு இருக்கார். அவர் இருக்கறச்சே நடந்த விஷயம். அவர் காலத்துக்கு அப்புறம், அவர் க்ளோஸ் ஃப்ரெண்ட் ஒருத்தர், அவரோட டைரி ஜெராக்ஸ் பண்ணிண்டு வந்து கொடுத்தார். அதுல ஒரு நிகழ்ச்சி. ஆச்சிரியமா இருந்தது.

வித்வத் ஸதஸ் நடந்தது. பெரிய பெரிய வித்வான்கள் எல்லாம் வந்திருக்கா. பண்டிதாள் எல்லாம் வந்திருக்கா. அதிலே ஆந்திரால இருந்தும் நிறைய பேர். அதிலே ராஜமுந்திரி ல இருந்து ஒரு வித்வான் வந்திருக்கார்.

அந்த வித்வான்க்கு கால் கிடையாது. அவர் சம்சாரம் அழைச்சிண்டு வந்திருக்கா. அவரை கூடைல தூக்கி தலைல வெச்சி, கூட்டிண்டு வந்திருக்கா.

இது எக்ஷிபிஷன் மாதிரி எல்லோருக்கும். நளாயினி ன்னு கதை எல்லாம் வேணா கேக்கலாம். இந்த காலத்திலேயும் இருக்கும் போல இருக்கே. வித்வத் சதஸ் இவா தான் அட்ராக்ஷன் .

பெரியவாளுக்கும் ஆச்சிரியமா இருந்தது. 

கார்த்தால சதஸ் க்கு இவர் வரும்போது அந்த அம்மா கூடைல வெச்சு தூக்கிண்டு வர வேண்டியது. அப்புறம் முடிஞ்சாப்புறம் கூடைல வெச்சு தூக்கிண்டு போக வேண்டியது. இப்படியே பண்ணிண்டு இருக்கா.

சதஸ் முடிஞ்சது. அவாளை கூப்டு அப்டின்னா.
அந்த அம்மா வந்தா.

பெரியவா அவ கிட்டே சொன்னா.

நளாயினி ன்னு கதை எல்லாம் தான் சொல்லுவா. இந்த காலத்திலேயும், இந்த இருபதாம் நூற்றாண்டிலேயும் கால் இல்லாத புருஷனை கல்யாணம் பண்ணிண்டு, குடித்தனம் பண்ணினது மட்டும் இல்லே. அவர் இங்கே போகணும், அங்கே போகணும் ன்னா, தூக்கி தலைல வெச்சுண்டு வர்றா. எப்பேர்ப்பட்ட பதிவ்ரதை. இந்த காலத்திலேயே இருக்கேன்னா, அந்த காலத்திலே ஏன் இருந்திருக்க முடியாது? நீ வந்தது ரொம்ப ஆச்சரியமா இருக்கு. ரொம்ப சந்தோஷம்.
நிறைய சந்தோஷங்களை தெரிவித்த பின் மேலும் தொடர்ந்தார் பிரபு.

ஒன் வாயால ரெண்டு வார்த்தை என்னைப் பத்தி ஏதான சொல்லு. ஒன் வாயால கேக்கணும் போல இருக்கு.

நான் எப்பேர்ப்பட்டவன்?

இவர் இப்படி கேட்டவுடன் அந்த அம்மா சொன்னாள்.

ஒன்னை பத்தி நான் என்ன சொல்லறதுக்கு இருக்கு? நீ தான் ஈஸ்வரன். பெரிய அவதாரம். ஒன்னால தான் வேதமும் தர்மமும் இருக்கு.
ஹாங் ஹாங் என்று கேட்டுக்கொண்டிருந்தார் பெரியவா.

இதெல்லாம் என்ன? எல்லாரும் தான் இதை சொல்லிண்டு இருக்காளே, தெரிஞ்ச கதை, வேறே எதுவும் புதுசா சொல்லு என்றார்.

அந்த அம்மா சொன்னார்.
நீ நூறு வயசு இருப்பே, போ என்றாள் அவள், ஆசிர்வாதம் செய்வது போல.

தொடர்ந்தாள் அவள்,
நீ நூறு வருஷம் இருப்பே, ஆனா நாலு நக்ஷத்ரம் கொறையும்.

இதை சொன்ன ஒடனே பெரியவா முழிச்சிண்டுட்டா. இதுக்கு மேலே விட்டா இன்னும் எல்லா அவதார ரகசியம் எல்லாம் வெளிலே வரும். பிரசாதம் கொடுத்தா. அனுப்பிச்சு வெச்சா.

இதை முக்கூர் டைரில எழுதி இருக்கார்.
ஆச்சிரியம். நடந்தது என்ன?

1994 ஜனவரி 8 சித்தி ஆனா, பெரியவா. மே 1994 ல நூறு வயசு பூர்த்தி ஆகி, நூற்றி ஒன்று பிறக்க போறது.

அந்த பதிவிரதை சொன்னது என்ன?

நீ நூறு வருஷம் இருப்பே, ஆனா நாலு நக்ஷத்ரம் கொறையும்.

பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே - நாலு அனுஷம் நக்ஷத்ரம் கொறஞ்சுது.

ஜனவரி 8, அனுஷம், அன்னியோட அவதார பூர்த்தி.
அப்புறம் தான் தோணித்து.

இன்னும் ஒரு நாலு மாசம் இருந்திருக்கக் கூடாதா, நூறு வயசு பூர்த்தி. செஞ்சுரி போட்டிருக்கலாமே?
பதிவிரதை வாக்கியம். அது தப்பா ஆச்சுன்னா?
பதிவிரதை வாக்கியம் தப்பு ஆகக் கூடாதே!

ஆச்சிரியம். பெரியவா சரித்ரம் தோண்டத் தோண்ட இப்படி பல விஷயங்கள்..

.
நன்றி - ஸ்ரீ கணேச சர்மா, 
'தெய்வத்தின் குரல்' உபன்யாசத்தில்.







6 comments:

  1. வழக்கம்போல் மூன்று படங்களும் மிகவும் அருமை. திவ்ய தரிஸனம்.

    >>>>>

    ReplyDelete
  2. //பதிவிரதை வாக்கியம். அது தப்பா ஆச்சுன்னா?
    பதிவிரதை வாக்கியம் தப்பு ஆகக் கூடாதே!//

    மிகவும் அழகான வரிகள் இவை.

    படிக்கத் த்ரில்லிங் ஆக உள்ளது.

    ReplyDelete
  3. //ஒன்னை பத்தி நான் என்ன சொல்லறதுக்கு இருக்கு? நீ தான் ஈஸ்வரன். பெரிய அவதாரம். ஒன்னால தான் வேதமும் தர்மமும் இருக்கு.//

    ஸத்யமான வாக்கு. இதை அறிந்து புரிந்து அவரிடம் பக்தி கொண்டவர்களே பாக்கியசாலிகள்.

    >>>>>

    ReplyDelete
  4. http://gopu1949.blogspot.in/2013/04/8.html இதோ இந்த என் பதிவினில் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அவர்களின் அவதார தினம், ஸித்தியான தினம் முதலியனவும், வேதத்தை ரக்ஷிக்க அவர் தன் வாழ்நாளில் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளையும் பற்றி அடியேன் எழுதியுள்ளேன்.

    அதில் உள்ள 121 கமெண்ட்ஸ்களில் ஜெயா எழுதியுள்ளதும், அதற்கான என் பதிலும் இன்று மீண்டும் படித்து மகிழ்ந்து கொண்டேன். அவைகளை கீழே கொடுத்துள்ளேன் >>>>>

    ReplyDelete
  5. JAYANTHI RAMANI April 19, 2013 at 3:40 PM

    HAWKINS அப்படீன்னு சொன்னா என்னன்னு தெரியுமா? உங்க பதிலுக்கு அப்புறம் சொல்றேன்.

    என் கணவருக்கும் பெரியவாளிடம் ஒரு (ஒரே ஒரு) அனுபவம் ஏற்பட்டது. அதையும் பிறகு பதிகிறேன்.

    //என் மனத்தில் ஒன்றைப்பற்றி ....... ....... நான் நினைத்ததெல்லாம் வெற்றி//

    அது உங்களுக்கு கிடைக்காட்டாதான் எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.

    உங்களது பொக்கிஷங்களை கண்ணாரக் கண்டு களிக்கவே ஒரு முறை திருச்சிக்கு வரணும்.

    பெரியவாளைப் பத்தி பேசற அளவுக்கு எனக்கு அனுபவம், அறிவு, தகுதி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

    ஏன் இப்ப உங்களப் பார்த்தாலே பயம் கலந்த மரியாதை ரொம்ப அதிகமாகறது.

    >>>>>

    ReplyDelete
  6. வை.கோபாலகிருஷ்ணன் April 19, 2013 at 5:42 PM

    JAYANTHI RAMANIApril 19, 2013 at 3:10 AM

    வாங்கோ, வாங்கோ வணக்கம். இந்தத்தொடரின் முதல் எட்டு பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக வருகை தந்து கருத்தளித்துள்ளவர்கள் பட்டியலில் தாங்கள் 21ம் இடத்தைப்பிடித்து விட்டீர்கள். மிக்க நன்றி. அதற்கு முதலில் என் அன்பான வாழ்த்துகள்.

    //HAWKINS அப்படீன்னு சொன்னா என்னன்னு தெரியுமா?//

    எனக்குத் தெரியவில்லை. நான் ஒன்று நினைக்கிறேன். அதுவா என சந்தேகமும் உள்ளது. தாங்கள் எழுதியுள்ள வார்த்தையில் கொஞ்சம் Spelling Mistake உள்ளது எனவும் நினைக்கிறேன். Dictionary யிலேயே இல்லாத வார்த்தையாகப் போட்டுள்ளீர்கள். அதனால் அது என்னவென்று தாங்களே திருவாய் மலர்ந்தருளவும்.

    //உங்க பதிலுக்கு அப்புறம் சொல்றேன்.//

    அப்புறம் என்றாலே அது விழுப்புரம் தான் ! ;)

    //என் கணவருக்கும் பெரியவாளிடம் ஒரு (ஒரே ஒரு) அனுபவம் ஏற்பட்டது. அதையும் பிறகு பதிகிறேன்.//

    அதைச்செய்யுங்கோ, புண்ணியம் உண்டு.

    *****என் மனத்தில் ஒன்றைப்பற்றி ....... ....... நான் நினைத்ததெல்லாம் வெற்றி*****

    //அது உங்களுக்கு கிடைக்காட்டாதான் எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.//

    அடடா, அடிக்கும் வெயிலுக்கு ஜில்லுன்னு இருக்கு, உங்களின் இந்த வார்த்தைகள்.

    //உங்களது பொக்கிஷங்களை கண்ணாரக் கண்டு களிக்கவே ஒரு முறை திருச்சிக்கு வரணும்.//

    அவசியம் வாங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்.

    வழிமேல் விழிவைத்து வரவேற்கக் காத்திருப்பான் உங்கள் கோபு அண்ணா.

    //பெரியவாளைப் பத்தி பேசற அளவுக்கு எனக்கு அனுபவம், அறிவு, தகுதி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. //

    எனக்கும் அதே தான். யாருக்குமே அவர்களைப்பற்றி பேச யோக்யதையே கிடையாது என்று நினைப்பவன் நான்.

    //ஏன் இப்ப உங்களப் பார்த்தாலே பயம் கலந்த மரியாதை ரொம்ப அதிகமாகிறது.//

    சும்மா ஏதாவது சொல்லித் தப்பிக்க நினைக்காதீங்கோ. நான் மிகச் சாதாரணமானவன் மட்டுமே.

    என்னைப்பொறுத்தவரை நான் ஒரு அல்பமான மானிடப்பிறவி எடுத்துள்ளவன் தான். எல்லா ஆசாபாசங்களும் எக்கச்சக்கமாக நிரம்பி வழியும் மனம் என்னுடையது.

    எவ்வளவு வயதானாலும் ஞானமும், வைராக்யமும், மனப்பக்குவமும், கட்டுப்பாடுகளும் எல்லோருக்குமே வந்து விடாது.

    சும்மா நாம் ஏதாவது பேசலாம், எழுதலாம். பேசுவது, எழுதுவது எல்லாம் உண்மையாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

    எழுத்துலக தர்மப்படி, ஒரு எழுத்தாளரின் எழுத்துக்கள் பிறர் மனதில் நல்ல எண்ணங்களையும், நல்ல சிந்தனைகளையும் விதைப்பதாக இருக்க வேண்டும். அவ்வளவு தான்.

    அதனால் என்னிடம் எந்த பயமோ, மரியாதையோ தங்களுக்குத் தேவையில்லை. எப்போதும் போலவே, கலகலப்பாக, ஜாலியாக, நகைச்சுவை + தங்களுக்கே உள்ள குறும்பு + வால் தனத்துடன் பழகி வாருங்கள்.

    ReplyDelete