Wednesday, January 11, 2017







ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?*



*பிறப்பே எடுக்காத ( ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளுக்கு) சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை* என்கிறார்களே எப்படி 

*ஆர்த்ரா = திருவாதிரை*

*ஆஸ்லேஷா = ஆயில்யம்*

*அனுராதா = அனுஷம்*

*ஜேஷ்டா = கேட்டை*

*தனிஷ்டா = அவிட்டம்*

*புனர்வஸு = புனர் பூசம்*

*பூர்வ பல்குனி = பூரம்*

*உத்திர பல்குனி = உத்திரம்*

*பூர்வா ஷாடா = பூராடம்*

*பூர்வ பத்ரா = பூரட்டாதி*

*உத்ர பத்ரா = உத்திரட்டாதி*

இவைகள் எல்லாம் தமிழ் நட்சத்திரங்களுக்கு சொல்லப்படும் வட மொழிப் பெயர்களாகும்.

தமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்திற்கு வடமொழியில் ஆர்த்ரா என்று பெயர். இதுவே ஆருத்ரா எனப்படுகிறது.

மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில், எல்லா  சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும்.

*ராமனுக்கு ஜென்ம நட்சத்திரம் - புனர்பூசம்;*

*பரதனுக்கு - பூசம்;*

*லட்சுமணனுக்கு -ஆயில்யம்;*

*சத்ருக்னனுக்கு- மகம்;*

*கிருஷ்ணனுக்கு - ரோகிணி;*

*முருகனுக்கு - விசாகம்.*

இவையாவும் இவர்கள் பிறந்த நட்சத்திரங்கள்.

ஆனால் பிறப்பே எடுக்காத சிவபெருமானுக்கு பிறந்த நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே ?

*பிறவா யாக்கைப் பெற்றோன்  பெரியோன்*
என்று சங்க இலக்கியமான சிலப்பதிகாரம்
சிவபெருமானைக் குறிக்கிறது.

சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனது பற்றி புராணச் செய்திகள் உள்ளன.

சேந்தனார் வீட்டுக்கு களி யுண்ண நடராஜப் பெருமான் வந்த அந்த தினம்,ஒரு மார்கழி மாத திருவாதிரை நாள் இதை உணர்த்தும் வகையில், இன்றும் ஆதிரை நாளில் தில்லை நடராஜப் பெருமானுக்கு களி படைக்கப்படுகிறது. இதனால் சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனது.

ஒரு காலத்தில், திரேதாயுகா என்ற பெண் பார்வதி தேவியின் தீவிர பக்தையாக இருந்தாள். திரேதாயுகா வுக்குத் திருமணம் நடந்தது. அக்காலத்தில் திருமணமான நான்காவது நாளில் தான் சாந்தி முகூர்த்தம் நடக்கும்

ஆனால் திருமணமான மூன்றாவது நாளிலேயே திரேதாயுகாவின் கணவன் இறந்து விட்டான்.

திரேதாயுகா அலறித் துடித்து பார்வதி தேவியே உன் பக்தையான என்னை இப்படி சோதிக்கலாமா, உன்னை இவ்வளவு காலம் வணங்கி என்ன பயன் என்று கூறிக் கதறி அழுதாள்.

அப்போது கயிலாயத்தில் சிவன் அருகில் அமர்ந்திருந்த பார்வதி ,திரேதாயுகாவின் அலறலைக் கேட்டு அவள் கணவனுக்கு உயிர்ப் பிச்சையளிக்க சபதம் செய்தாள். அவளது சபதத்தைக் கேட்டு அதிர்ந்துபோன சிவன் உடனே எமலோகத்தை ஒரு பார்வை பார்த்தார். இதைக் கண்டு பதறிப்போன எமன் திரேதாயுகாவின் கணவனுக்கு மீண்டும் உயிர் கொடுத்தார்.

அதன்பின் பார்வதியும் பரமசிவனும் திரேதாயுகாவுக்கும் அவள் கணவனுக்கும் தரிசனகாட்சி கொடுத்து ஆசீர்வதித்தார்கள்

இந்த நிகழ்ச்சி ஒரு மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் நடந்தது. இந்த தரிசனத்துக்கு ஆருத்ரா தரிசனம் என்று பெயர் ஏற்பட்டது.

சேந்தனாருக்கும்  திரேதாயுகாவுக்கும் நேரில் தோன்றி தரிசனம் தந்த அந்த திருவாதிரை நட்சத்திர நாளையே சிவபெருமானாரின் நட்சத்திரமாக அதாவது ஆருத்ரா தரிசனமாக  கொண்டாடப்படுகிறது.






 



சிவபெருமான் நெருப்பு உருவமாக தன்னை வெளிப்படுத்திக் காட்டியது சிவராத்திரி நன்னாள்.
சுவாமி தான் இப்பூமியில் ஆவிர்பரித்து நின்ற (தோற்றுவித்த) நாள் ஆருத்ரா நன்னாள்.
சிவராத்திரியன்று அவரை வழிபட்டால் பலன். ஆருத்ராவன்று தரிசித்தாலே பலன் ஆகும்.




6 comments:

  1. ஆஹா, இந்தப்பதிவு என் கவனத்திற்கே கொண்டு வரப்படவில்லை. :( கொண்டு வந்திருந்தால் நான் சாப்பிட சுடச்சுட களி+கூட்டு கேட்பேனோ என்ற பயம் இந்த ஜெயாவுக்கு.

    >>>>>

    ReplyDelete
  2. படங்கள் அனைத்தும் அழகோ அழகு !

    நான் சுடச்சுட களி + கூட்டு சாப்பிட்டு விட்டு நேற்று பகலில் ஓர் தூக்கம் போட்டுள்ளதால், இதனை நானாகவும் கவனிக்கத் தவறியுள்ளேன்.

    அதனால் ஜெயா வீட்டுக் களி + கூட்டினை, கேட்டு வாங்கி டேஸ்ட் செய்ய முடியாமல் போய் விட்டது. :(

    [அடடா .... எனக்கு இப்படி அநியாயமாக வடை போச்சே]

    >>>>>

    ReplyDelete
  3. //*ராமனுக்கு ஜென்ம நட்சத்திரம் - புனர்பூசம்;*//

    அதே .... அதே ..... புனர்பூசம்தான் எனக்குமாக்கும் !

    எங்காத்தில் எங்க அப்பா, பெரிய அண்ணா, என் பெரிய அத்திம்பேர், என் பெரிய அண்ணாவின் பேத்தி ஒருவள் + நான் என ஐவரும் புனர்பூசமே.

    என் பெரிய அக்கா, என் ஆத்துக்காரி, என் இரண்டாவது நாட்டுப்பெண், என் பெரிய அண்ணாவின் மூத்த நாட்டுப்பெண் முதலிய பலரும் உத்திராட நக்ஷத்திரம்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. மறந்தே போயிட்டேன் ....

      என் மூத்த பிள்ளை .... சீமந்த புத்ரன் (இப்போது துபாயில் இருப்பவன்) பிறந்ததும் உத்திராட நக்ஷத்திரத்தில் தான்

      என் மூன்றாம் பிள்ளையின் சீமந்த புத்ரனான, என் பேரன் ‘அநிருத்’தும் உத்திராட நக்ஷத்திரம்தான்

      இப்படியாக புனர்பூசத்திற்கும், உத்திராடத்திற்கும் எங்கள் குடும்பத்தில் பஞ்சமே இல்லை. :)

      Delete
  4. //அக்காலத்தில் திருமணமான நான்காவது நாளில் தான் சாந்தி முகூர்த்தம் நடக்கும்//

    எங்களுக்கும் சாஸ்திரப்படி நான்கு நாட்கள் கல்யாணம். இரு வேளையும் ஒளபாஸனங்கள், நடந்து ஐந்தாம் நாள் தான் நல்ல நேரம் பார்த்து நள்ளிரவு வரை ஏதேதோ மந்திரங்கள் ஜபித்து, தலையில் கலச ஜலங்களை ஊற்றி, ஒருவழியாக ஜோடனை ரூமுக்குள் அனுப்பி வைத்தார்கள். என்னவள் உள்ளே போனதும் உடனடியாகத் தூங்கியே போய் விட்டாள். :(

    >>>>>

    ReplyDelete
  5. ஆருத்ரா தரிஸனம் பற்றிய அனைத்துக் கதைகளையும் அழகாகத் தங்கள் மூலம் அறிய முடிந்தது. மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    உங்களுக்கும் உங்கள் ஆத்திலுள்ள அனைவருக்கு என் இனிய மகர சங்க்ராந்திப் பொங்கல் திருநாள் + கணுப்பொடி நல்வாழ்த்துகள்.

    அன்புடன் கோபு அண்ணா

    ReplyDelete