Monday, October 17, 2016


மஹாலட்சுமியை வழிபட்டு அவள் அருளைப் பெறுங்கள் 





பத்மப்ரியே பத்மிநி பத்மஹஸ்தே
பத்மாலயே பத்மதளாய தாக்ஷி
விஸ்வப்ரியே விஷ்ணுமநோ நுகூலே
த்வத் பாத பத்மம் மயிஸந்நிதத்ஸ்வ




பொருள் : தாமரையில் பிரியம் உள்ளவளே. தாமரைக்குச் சொந்தக்காரியே. தாமரையைக் கையில் தரித்தவளே. தாமரையில் வசிப்பவளே. தாமரை போல் நீண்ட கண்களை உடையவளே. உலகத்து மக்களால் விரும்பப்படுபவளே. விஷ்ணுவின் மனத்திற்குப் ப்ரியமானவளே. உன்னுடைய தாமரை மலர் போன்ற திருவடியை என் தலைமேல் எப்போதும் இருக்கச் செய்வாயாக.




10 comments:

  1. பத்மப்ரியே பத்மிநி பத்மஹஸ்தே
    பத்மாலயே பத்மதளாய தாக்ஷி
    விஸ்வப்ரியே விஷ்ணுமநோ நுகூலே
    த்வத் பாத பத்மம் மயிஸந்நிதத்ஸ்வ

    ஆஹா ... எவ்வளவு அருமையான அர்த்தங்கள் கொடுக்கும் ஒரு ஸ்லோகம் !

    இன்று மங்கள வாரமாம் செவ்வாய்க்கிழமையில் படிக்கக் கொடுத்து வைத்திருக்கிறோம். :)

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோபு அண்ணா. நன்றி, நன்றி, நன்றி.

      Delete
  2. படங்கள் அத்தனையுமே ஜெயாவின் மனஸு போலவே மிகவும் அழகோ அழகாக உள்ளன.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. கருணை வடிவான அந்த மஹாலட்சுமி அழகி அல்லவா. அப்புறம் எப்படி அழகில்லாமல் இருக்கும்.

      Delete
  3. முதல் படத்தில் சுப லாபங்கள் கொடுக்கும் கஜலக்ஷ்மியின் தோற்றம் ... சூப்பர்.

    இரண்டாம் படத்தில் அதே கஜலக்ஷ்மி சகல ஐஸ்வர்யங்களையும் அள்ளிக்கொடுத்து நிதிகோஷத்தையே திரண்டு வருமாறு செய்து அனுக்கிரஹிப்பது .... சூப்பரோ சூப்பர் !!

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. அவள் கடைக்கண் பார்வை நமக்கு ஐஸ்வர்யத்தை கிள்ளிக் கொடுக்காது, அள்ளித்தான் கொடுக்கும்.

      Delete
  4. ஸ்லோகத்தின் பொருள் கொடுத்துள்ள ’ஜெ’க்கு ஓர் ஜே போட்டுக் கொள்கிறேன்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ‘ஜே’க்கு ஒரு நமஸ்காரம்.

      என்னிடம் சிலர் எங்களுக்கும் சமஸ்கிருதம் தெரியாது. எப்படி ஸ்லோகங்களை படிப்பது. தப்பாகிவிட்டால் அர்த்தம் அனர்த்தம் ஆகிவிடுமே என்று கேட்டனர். அதனால் இனி நிறைய சமஸ்கிருத ஸ்லோகங்களை பொருளுடன் கொடுக்கலாம் என்று இருக்கிறேன். எந்த மொழியில் சொன்னாலும் அந்தத்துதிகள் தெய்வங்களின் சரணங்களை சென்று அடைந்து விடும் அல்லவா.

      Delete
  5. மனதுக்கு மிகவும் நிறைவாக, கடைசி படத்தில் அஷ்ட லக்ஷ்மிகளையும் காண்பித்து அசத்தியுள்ள ஜெயாவுக்குப் பாராட்டுகள், நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    அன்புடன் கோபு அண்ணா

    ReplyDelete
  6. கஷ்டம் ஏற்படும் நேரங்களில் கை கொடுப்பவள் அவள்தானே. அவள் முகம் காணக் காண கஷ்டங்கள் சூரியனைக் கண்ட பனி போல் விலகி விடுமே.

    பாராட்டுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள் கோபு அண்ணா.

    ReplyDelete